ஞாயிறு, 6 ஜூன், 2021

மாமனாருக்கு சொந்தமான வீட்டில், கணவருடன் வசிக்கும் போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேர்ந்தாலும், அந்த வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமை அந்த பெண்ணிற்கு உள்ளதா?

 பொதுவாக நாம் வீட்டு பெண்ணிற்கு வரன் தேடும்போது, மணமகன் குடும்பத்திற்கு சொந்த வீடு உள்ளது என்றால் ஒரு திருப்தியுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைய்கள் தொடரும்..இது பெண் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஆனால் பெருவாரியாக நடப்பதென்ன?

அப்பா பெயரில் அல்லது அம்மா பெயரில் உள்ள வீட்டில் தான் மாப்பிள்ளை குடும்பம் நடத்துவான்.நாமும் பின்னாளில் அவனுக்கு தானே சொத்து வரப்போகிறது என்று அவர்கள் எதிர்பார்த்த எல்லாவற்றையும், திருமணத்தின் போது கொடுத்திருப்போம்.

ஓட ஆரம்பித்த வண்டி திடீரென மக்கர் பண்ணி நின்று விடுவது போல, பிரச்சினை தலை தூக்கும். மாப்பிள்ளை தனிக்குடித்ணம் வைக்க வசதி இல்லை என்பான்.அல்லது அவனுக்கும் அவளுக்கும் இடையேயே பிரச்சினை ஏற்பட்டிருக்கும் புகுந்த வீட்டினரோ இனி உன்னுடன் எங்களுக்கு ஒத்து வராது.. என் வீடு வெளியேறு என்பர்..

அப்படியெனில்..இத்தனை நாளும், புகுந்த வீடு என்று அவள் நாள் முழுதும் அந்த சமையக் கட்டில் நின்று, வீட்டிலுள்ள எல்லோருக்கும் சமையல் செய்தாளே.. ஒவ்வொருவரின் தேவை அறிந்து பணிவிடை செய்து…அது தானே இனி தன் வீடு என்று நினைத்ததில், எந்த அதிகாரமும் இல்லையா…திருமணமானதும், பிறந்த வீடு வேறு தானே…அவள் வாழ வந்த வீட்டில், அவளுக்கு ஒரு பற்றுக்கோடும் இல்லையா? பெண்ணின் தர்ம சங்கடமான நிலை அது..

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தில், பகிர்ந்து வாழும் வீட்டில், வசிக்க பெண்ணிற்கு உரிமை உண்டு என்கிறது..

இந்த "பகிர்ந்து வாழும் வீடு" என்பது என்ன என்பதில் தான் அக்கப்போரே..கணவனுக்கு மட்டுமே சொந்தமான வீடா, அல்லது அவனுக்கு அதில் பங்கு இருந்தால் போதுமா இல்லை…மாமனார் மாமியார் பெயரில் இருந்தாலும் சரி, குடித்தனம் பண்ணியதாலேயே, அவளுக்கு அதில் வசிக்கும் உரிமை உள்ளதா? இதில் ஏகப்பட்ட மாறுபட்ட சட்ட கருத்துக்கள்..!!

இதற்கு முன்பு வரை இருந்த நிலை என்ன? மாமனார் மாமியார் பெயரில் அந்த வீடு இருந்தால், அவள் அதில் வசிக்கும் உரிமை கோர முடியாது இந்த நிலை தான் 2007 வரை இருந்தது [1] ஆனால் இந்த தீர்ப்பை மாண்புமிகு உச்ச நீதிமண்றம் வழங்கிய போது, ஒரு விதிவிலக்கு சொன்னது…

புகுந்த வீட்டில், பெண் வசிக்கும் உரிமை கோரலாம்…அது கூட்டு குடும்ப சொத்தாக இருந்து, அதில் அவள் கணவனுக்கு பங்கு இருந்தால் என்றது.!!

இது குறித்து மாற்று கருத்துகள் உடன் எழத் தொடங்கின..ஏனென்றால் குடும்ப வன்முறை சட்டத்தை 2006 அக்டோபரில் கொண்டு வந்ததே பெண் நலம் பேண. ஆனால் இந்த தீர்ப்பு அதற்கு குறுகிய கண்ணோட்டத்தையல்லவா கொடுக்கிறது?!

ஏற்கெனவே அந்த சட்டம், ஒரு குற்றவியல் சட்டம் போல இல்லாமல் சிவில் சட்டம் போல இருக்கிறது, தீர்வு கிடைக்க கால தாமதம் ஆகும் என்ற குறை இருக்கும்போது!!

அஹுஜா வழக்கின் தீர்ப்பு சற்று கடுமையாக இருக்கிறது என்று நினைத்தனர்..அதனால் சில உயர் நீதிமன்றங்கள், இந்த தீர்ப்பிற்கு பின்னரும் கூட, "சொத்தின் உரிமையை கொண்டு தீர்மானிப்பதில். அது சேர்ந்து வாழ்ந்த வீட்டையே குறிக்கும்" என்றன!!

ஆனாலும் டெல்லி உயர் நீதிமன்றம் சில வழக்குகளில், கணவன் தான் அவன் மனைவிக்கு வசிக்கும் ஏற்பாடு செய்து தரும் கடமை உள்ளவன், என்றும் அதுவரை அவள் புகுந்த வீட்டிலேயே தொடர்ந்து தங்கலாம் என்றது..ஆனால் அந்த வீட்டிற்கு கணவனால் வாடகை செலுத்தாமல் போனால், யார் பொறுப்பேற்பது..மாமனாரா என்ற கேள்வியெல்லாம் எழுந்தது!!

பின்னே அவரை கேட்டு தானே பொண்ணு கொடுத்தாங்க!!

கடைசியில், தற்போது, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில்[2] வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது!!

இனி பெண் தன் புகுந்த வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமை உள்ளவள்…அவள் கணவனுக்கு அதில் உரிமையோ பங்கோ இல்லையெண்றாலும்!!

  1. அது வாடகை வீடாக இருந்தாலும் 
  2. ஒரே நிபந்தனை..அவர்களுக்குள் குடும்ப உறவுடன் வெகு காலத்திற்கு அந்த வீட்டில் வசித்திருக்க வேண்டும்!! 

இது தான் அந்த சட்டத்தின் நோக்கத்தை பறைசாற்றுகிறது!!

ஆணால் எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை நீடிக்கும், வாடகை வீடென்றால் , வாடகை செலுத்த கணவன் மறுக்கும் பட்சத்தில், மேற்கொண்ட நிலை என்ன, வயதான மாமனார் மாமியார் சொத்து எனில் சீனியர் சிட்டிசென் என்ற முறையில், அவர்களின் நலனும் காக்கப்படவேண்டும் என்னும் போது, மாற்று வசிப்பிடம் ஏற்பாடு செய்து தர வேண்டிய கடமை உள்ள கணவனிடம் எந்த கால அளவிற்குள், அதை பெறலாம் என்ற கேள்விகளுக்கான விடைகளும் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்..

இன்றைய நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாந்ததே!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...