மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை எனபது இப்போதும் சட்டத்தில் இருக்கிறது. என்ன...அதற்க்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது.
மனைவி திருமண உறவை தாண்டிய உறவில் உள்ளார் என்று அவள் கள்ளத்தொடர்பு கொள்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோத்து, பொங்கி எழுந்த ஆண் குலம், அதற்க்கு முன்னர் தாங்கள் அதை அனுபவித்து வருவதை வசதியாக மறந்து போனார்கள்!! ஆனாலும் ஒன்று அந்த காலத்திலிருந்து ஒரு ஆணை இகழ்வாக பேச வேண்டும் என்றால் அவன் வீட்டில் உள்ள பெண்ணின் ஒழுக்கத்தை தான் தரக்குறைவாக பேசுவது இன்றும் நடக்கிறது. திருமண உறவில் விரிசல் தொடங்கும் பொத்து ஆண் உபயோகப்படுத்தும் முதல் அஸ்திரமே இது தான்.... பெரும்பான்மையான பெண்கள் இந்த அடியிலேயே 'விழுந்து'விடுவார்கள்!1 இன்னொன்றும் கூட..இந்த திருமணத்திற்கு வெளியேயான இந்த உறவை நிரூபிப்பதும் சற்று கடினம்...
தன் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்னும்போது
வாழ்க்கை துன்னை இன்னொரு திருமணம் செய்தது கொள்ளும் போது.
ஜீவனாமச உத்தரவு போட்ட பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தால், அதாவது வேலையை இழப்பது, நொடித்து போவத்து போன்ற நிலையில், அதனை தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவில் மாற்றம் கோரலாம். அடகே போல மனைவியும், இந்த நிரந்தர வாழ்க்கை பராமரிப்பு தொகை உத்தரவு போட்டபின்பு, கணவரின் ஊதியத்தில் உயர்வு ஏற்பட்டால், தனக்கு உள்ள பரமாரிப்பு சிக்கலை விவரித்து, ஏற்கனவே நிர்ணயத்த தொகையை உயர்த்த கோரலாம்.
ஒரு மனைவி மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும் போது, அதிக வருமானம் ஈட்டும் மனைவி மற்றவருக்கு நிதிப் பொறுப்பாக இருப்பார்.உதாரணமாக, அவள் வாழ்வதற்கு மட்டுமே போதுமான பணம் சம்பாதிப்பாள், ஆனால் திருமணத்தின் போது சிறந்த வாழ்க்கை முறையை வழிநடத்துகிறாள் என்றால், அந்த வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்காக அவளுடைய சம்பாதிப்பிற்கு கூடுதலாக பணம் செலுத்துமாறு கணவனை நீதிமன்றம் கேட்கலாம்.
ஜீவனாம்சத் தொகையைப் பெறும் முன்னாள் மனைவி மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இறக்கும் வரை அல்லது பணம் செலுத்தும் மனைவி மறையும் வரை கொடுப்பனவுகள் தொடரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் செலுத்துபவர் அவர்களின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் செலுத்த முடியும். பணம் பெறுபவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாத குறிப்பிடத்தக்க மற்றவருடன் வாழ்ந்தாலும், அவர்கள் தொடர்ந்து பணம் பெறலாம். இது அதிகமாக நடக்கும் ஒன்று.குறிப்பாக அந்த ஊனம் முன்னாள் மனைவி வேலையிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்கிறது அல்லது வேலை செய்யும் திறன் குறைவாக இருந்தால்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் மதத்திர்கேற்ப அவர்களின் சட்டங்களும் மாறுகின்றன
எப்போதும் கணவர் மட்டுமே நிரந்தர வாழ்க்கை படி கொடுக்க வேண்டுமா?
பொதுவாக, கணவன் தன் மனைவியை அவள் வாழ்நாள் வரை பராமரிக்க வேண்டும் என்றாலும் இந்து திருமண சட்டத்தின் படி, கணவனோ மனைவியோயருவரில் யார் வேண்டுமானாலும், தன்னை தானே பாதுகாத்து கொள்ள இயலா
சமீபத்தில் பாக்யஸ்ரீ v ஜகதீஷ் மேற்கோள் : 2022 லைவ் லா (போம்) 112 என்ற வழக்கில் , கணவர் தன மனைவி மாதம் பதினைதாயிரம் ரூஒபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று இந்த சட்டபிரிவின் கீச்ழ் வழக்கு தொடர்ந்தார். தன மனைவி கலூரி பெராரிசிரியராக இருப்பாதாக சினார். கணவருக்கு ஒரு மளிகை கடை வைத்திரோதாகவும், ஆட்டோ வைத்து இதன் மூலம் வருமானம் ஈடுவதாக மனைவி தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தனைக்கும் விவாகரத்து பெறப்பட்ட்ட 23 வருடங்கள் கழித்து இந்த மனுவை தைகள் செய்தார்.
த பொது, மற்றவரிடம் இருந்து இந்த தொகையை கோரி பெறலாம்..இதுவே இருவரும் மனமொத்து விவாகரத்தி கோரும்போது, இருவருக்கும் இடையில் ஏற்படும் ஒப்பந்தப்படி யாருக்கு யார் கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும்.
இதுவே இரண்டு தரப்பும் எதிர்த்து வழக்கு நடத்தும்போது, நீதிமன்றம் இந்த தொகையை முடிவு செய்யும்.
அப்போது என்னவெல்லாம் கணக்கில் கொள்ளும் தெரியுமா?
கணவரின் நிலை அவரது வருமானம், அவரது சொத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறை
மனைவியின் நியாயமான தேவைகள்\
நீதிமன்றம் கணவரின் நிலை மட்டுமல்ல, மனைவியின் நிலை மற்றும் சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். மனைவி வேலை செய்து நல்ல சம்பளம் வாங்கும் பட்சத்தில், நீதிமன்றம் அதை கணவரின் வருமானத்துடன் கருத்தில் கொண்டு, வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும்.
ஆனால்.....சிறப்பு திருமண சட்டம் . 1954 படி மனைவி மட்டுமே இத கோரி பெறலாம்.\\
இதுவே ஜீவனாம்சம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றியதும், துணை வாழ்க்கைத் துணைக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், விளைவுகள் உள்ளன; தண்டனைகள் போன்ற மனைவிக்கு எதிராக நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்
திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யமுடியாத நிலையில் விரிசல் ஏற்படும் போது அதை தவிர்த்துவிட்டு இன்னொரு துணை வைத்துக் கொள்ளலாமா?
"முடியாது" என்று நமக்கு தெரியும்..அதை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்த பின்னரேயே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடியும் தானே?!!.
அப்படி செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்துக் கொண்டால், அது இருதார மணச் செயல் என்று தண்டிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 494..
அதுவும், அந்த குற்றம் செய்ததாக முதல் கணவனோ அல்லது மனைவியோ போலீசில் புகார் கொடுக்கும்போது தான், அந்த குற்ற நடவடிக்கை தொடங்குகிறது.
முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், சிலர் மறைத்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, அந்த மனைவியை அழைத்து வந்து காட்டும்போது தான் முதல் மனைவிக்கு விவரம் தெரியும்.கணவனை பொருளாராத ரீதியாக சார்ந்திருக்கும் போது கையறு நிலையில், கள்வனாலும் கணவன்…இல்லையில்லை…கல்லானாலும் கணவன்” என்று ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் அவன் இருக்க, அந்த கணவன்மார்கள் அந்த குற்றத்திலிருந்து தப்பித்து வந்தனர்!!.
இப்போது பெண்களுக்கு சிறப்பு சட்டங்கள், சமஉரிமை என்று வந்துவிட,, போதாதற்கு ஒரு குடும்பத்தையே நடத்த திண்டாடும் நிலையில், இரண்டாவது குடும்பமா என்று யோசிக்கும் நிலைக்கு போயினர் ஆண்கள்.!!.
இதில், அந்த திருமணமும் தோற்று போகும் போது, விவாகரத்து கோரி, உரிய காலத்தில் தாக்கல் செய்தாலும், அவருடைய துணை அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு நீண்டுக் கொண்டே போய் உரிய காலத்தில் விவகாரத்து கிடைக்காமல், இன்னொரு திருமண அமைப்பே ஏற்பட முடியாமல் காலம் தாழ்ந்து விடுகிறது.
இதுவே இருவரும் மணமொத்து சேர்ந்து தாக்கல் செய்தால், ஆறு மாதத்தில் மணவிலக்கு பெற்று விடலாம்..
இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்தாலும் "இரு மணம் செய்த குற்ற"த்திற்கு உள்ளக நேரிடும்!!.
இப்படி ஒரு கடுமையான அமைப்பு இருப்பதன் காரணம், திருமண உறவை சீர்குலையாமல் நீடிக்க வைக்க செய்யும் முயற்சியே…
அப்படியே விவாகரத்து கேட்டு மனு செய்தாலும், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கப்படும்.இதில் தோல்வியுற்ற பின்னரே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
இது முடிந்து தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டவர மேல்முறையீடு போய்…
முடிவே இல்லாத தொடர்கதையாகி இளமையை தொலைக்கின்றனர்…அநேகர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருக்கு தனி சட்டமும், அதில் விவாகத்தை ரத்து செய்வது எளிது மட்டுமல்லாமல் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் (இப்போது இங்கு யாரும் அதை பின்பற்றுவதில்லை) அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு பிரச்சினை இல்லை..இதில் பாதிப்படைவது அந்த பெண்கன் மட்டுமே.!!
கிறித்துவ மதத்தில் அப்போதிருந்தே, விவாகரத்து ஒரு கடினமான நடைமுறை..
விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கினாலும், அதை மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் செல்லும்..நல்லவேளை..இது போன்ற விதி இந்து திருமணத்திற்கு இல்லை.
ஆனாலும் இந்த இரு துணை குற்ற சட்டபிரிவு இருக்கிறதே..
இதை குறித்து சில வினாக்கள்..உங்களிடம் கேட்கவா? விடையை மனதில் குறித்து கொண்டே வாருங்கள்.. கடைசியில் பார்க்கலாம்..
இந்திய தண்டனை சட்டம் என்பது சாதி, மதம், பாலினம், , இனம் மற்றும் தேசியம் போன்ற வித்யாசம் இல்லாமல், , 3, 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு உட்பட்டு, எல்லோருக்கும், பொருந்தக் கூடிய மதச்சார்பற்ற சட்டம் என்னும்போது, . ஒரு செயல் சில பிரிவினருக்குக் குற்றமாகவும் மற்றவர்களுக்கு குற்றம் இல்லாமலும் இருக்க முடியாது இல்லையா?
ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 இந்து மக்களை மட்டும் தானே தண்டிக்கிறது? இது, அவர்களின் தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணத்தின் செயலைத் குற்றமாக்குகிறது. அப்படியானால் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே அது பாகுபாடு காட்டுகிறதே?."
இது, குடிமக்களுக்கு சம உரிமை கொடுக்கும் அரசியலமைப்பபு சட்டப்பிரிவு 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது தானே?.
பிரிவு 494, கிரிமினல் நோக்கம் இல்லாத குற்றம் தானே?. இது கடுமையான பொறுப்புக் குற்றங்களின் வகைக்குள் எப்படி வரும்?..
"ஒரு குற்றமிழைக்கக்கூடிய மன நிலை இல்லாத குற்றத்திற்காக ஒருவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுபவது, தேவையில்லாதது, நியாயமற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா?
அந்த குற்ற வழக்குக்கு விதிவிலக்காக தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் செய்யும் இன்னோரு திருமணத்தின் செல்லுபடியை அங்கீகரிக்கிற. அளவிற்கு, சட்டப்பிரிவு 494, இந்து, கிறிஸ்தவம் அல்லது பிற சமூகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது..இது சமத்துவத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது தானே?.
இந்த குற்றம் உலகளாவியதும் அல்ல என்னும்போது, இருதாரமணச் செயல் குற்றமாக்கப்படக் கூடாத ஒன்று என்பதைத் தானே குறிக்கிறது?.
சுருக்கமாக, குற்றம் எண்ணம் இல்லாததும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு இருதார மணம் குற்றமல்ல என்பது, இருதார மணத்தின் செயலில் உள்ளார்ந்த குற்றவியல் எதுவும் இல்லை என்பதை தானே சுட்டிக்காட்டுகிறது ?
இருதார மணம் என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாக அல்ல.. இருதார மணம் என்பது திருமண வாழ்க்கை தொடர்பான தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதை குற்றமாக்குவது திருமண வாழ்க்கையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கு உதவாது தானே?
திருமணமான ஒருவர் மற்றொருவருடன் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்னும்போது, , திருமணம் போன்ற முறையான ஏற்பாட்டிற்குப் பிறகு இதுபோன்ற கூட்டுவாழ்வு ஏற்பட்டால், அந்தச் செயல் எப்படி குற்றமாகும்.?
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இருதார மணம் ஒரு குற்றமாக தொடர அனுமதிப்பது காலத்துக்கு மாறானது மட்டுமல்ல, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது தானே?
என்ன,..இப்படியெல்லாம் கேட்க முடியுமா? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?
இந்த வினாக்களை எல்லாம் நான் கேட்கவில்லை…
தங்கள்.தரப்பு வாதங்களாக வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளத்தின் மாண்புமிகு உய்ரநீதிமன்றத்தில்.!!
என்னவென்று?
"இந்த இரு தார மணம் என்பது குற்றச்செயல் என்னும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494, குடிமக்களுக்கு சமஉரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
அதுவும் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஒரு பெண்னின் தந்தை என்று தெரிந்தால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்
ஆண்களுக்கு கூட இல்லாத அவசரம் அவசியம் அவருக்கு என்ன என்றால், ..இருக்கிறதே..!!
அவரும், அவரது மகள் மற்றும் பிற உறவினர்கள் ஐபிசியின் பிரிவு 34 , பிரிவு 494 இன் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக கிரிமினல் வழக்கை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் மீதான குற்றம் தான் என்ன? என்கிறீர்களா?
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் தனது மகளுக்கு இன்னோரு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தான்.!!.
இந்த மனுவை சமீபத்தில் விசாரணைகு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..
நாமும் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்போம!!
முத்தலாக்கை முஸ்லிம் சமுதாயம் எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதையும் அது குறித்த சமூக பார்வையையும் இந்த படம் சொல்லும்.
ஹைதரும் நிலோபரும் ஒரே பல்கலை கழகத்தில் படிக்கிறார்கள். நிலபார் மீது ஹைதருக்கு காதல் ஏற்பட்ட பின்பு தான் தெரிகிறது அவளுக்கு ஏற்கெனவே வாசிமுடன் நிச்சயம் ஆகி விட்டதென்று. தன்னுள்ளே அதை புதைததுக் கொள்பவன் பின்னாளில் புகழ் பெற்ற கவிஞராகிறான். ஒரு இதழையும் நடத்தி வருகிறான். இதற்கிடையே நிலோபாருக்கும் வாசிமிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் வேலையில் மிகுந்த நாட்டம் கொண்ட வாசிமின் நடத்தையால் அவர்களின் இல் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகின்றது. முதல் திருமண நாளன்று ஏற்பாடு செய்த பார்ட்டிக்குக் கூட வாசிம், வராததால்; இரண்டு பேருக்கும் சண்டை முற்றுகிறது. இதில் கோபத்தில் வாசிம் நிலோபரை பார்த்து மூன்று முறை "தலாக் தலாக் தலாக்" என்று சொல்கிறான்.(இது தான் முத்தலாக்). அதன்படி அவர்களுக்குள் விவாகரத் தானபடியால் நிலாபர் அவள் தாய் வீடு திரும்புகிறாள். மனமாற்றம் வேண்டி வேலை போகத தீர்மானிக்கும் போது, ஹைதரின் அலுவலகத்தில் அவள் வேலைக்கு சேர நேரிடுகிறது. அவன் தன பால் கொண்ட ஒரு தலைக் காதல் இன்றும் இருப்பதை அறிந்த நிலாபர் அவனை திருமண செய்து கொள்ள சம்மதிக்கிறாள். அவர்களின் திருமனமும் நடக்கிறது. அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் அதே சமயத்தில், தான் நடந்து கொண்டதனால் நிலாபரை இழந்த வாசிம், மீண்டும் அவளுடன் சேர துடிக்கிறான். இது சம்பந்தமாக மத குருவிடம் கேட்கும்போது, அவர் சொல்கிறார்.. "அவள் மீண்டும் ஒரு திருமணம் செய்து அவனுடன் வாழந்த பிறகு அவனை விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவனை மறுமணம் அவள செய்ய முடியும்" என்று (இது முத்தல்லாக் ஆன தம்பதிகள் மீண்டும் சேர உள்ள நிபந்தனை. இவ்வளவு மோசமான நிபந்தனை விதிக்கப்பட்ட காரணமே யாரும் முததலாக் செயல் படுத்தக கூடாது என்பதற்குத் தான்)
எனவே நிலாபருக்கு வாசிம் ஒரு கடிதம் அனுப்புகிறான், சீக்கிரமே ஹைதரை அவள் விவாகரத்து செய்து விட்டு வரும் படி. இந்த கடிதம் படித்த ஹைதர் இருவருக்கும் இடையே இன்னும் காதல் உள்ளது என்று நினைத்து, வாசிமையும் கூடி வந்து நிலாபருக்கு தான் விவாகரத்து கொடுக்க சம்மதம் கொடுப்பதாக தெரிவிக்கிறான். இது கேட்டு நொந்து போன நிலபர் பேசும் வசனம் தான் படத்தின் ஹை லைட்.
முஸ்லிம் பெண்கள் இந்த சட்டத்தினால் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவள் அழகாக படம் பிடித்து காட்டுவாள். தான் தொடர்ந்து ஹைதருடனேயே வாழ விரும்புவதாக சொல்ல, வாசிம் அவர்களை வாழ்த்தி விட்டு விடை பெறுகிறான்.
அந்த காலத்தில் மிகப பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் இது.
பின்னாளில் இந்த விவாகரத்தை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், இந்த முததலாக் சட்ட விரோதமானது என்றும், அவ்வாறு உச்சரிப்பதாலேயே திருமணம் முடிவுக்கு வராது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்பபளித்தது. அதன்பிறகு ௨௦19ல் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 19.9.௨௦19 லிருந்து அது தண்டனைக்குரிய குற்றமாகியது.
என்றாலும் இன்றும் தலாக்கை மூன்று முறை ஒவ்வொன்றுக்கும் இடையே இரண்டு கால இடைவெளியிலும் ஓவ்வொரு இடைவெளியும் மூன்று மாத கால அவகாசம் கொண்டதாகவும் இருந்து சொல்லும்போது அது செல்லும். அதன்படி செய்யும் போது, விவாகத்தை ரத்து செய்து விடும்.
முதன் முதலில் முஸ்லிம் பெண்களுக்கு இருந்த, திருமணத்தின் பிடிமானத்தின் மீதிருந்த அச்சம் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த சமூக அவலத்திற்கு ஒரு தீர்வு காண இந்த திரைப படம் பெரிதும் காரணமாகும்.
"கல்யாணம்"ன்னு பேசினால், முன்னாடியெல்லாம் பொண்ணுங்க தான் வெக்கப்படுவாங்க..ஆனால், இப்பலலாம் இந்த பசங்க வெட்கப்படுறதைப் பார்த்தா சிரிப்பு தான் வருது…
கல்யாணம் என்றாலே."தாம்பத்யம்" மட்டும் தான்னு நினைக்க வக்கிறமாதிரி தானே சினிமாவும் காட்டுது!!
கிராமப்புறங்களில் இருக்கிறவங்க, அங்கேயிருந்து வந்தவர்களுக்கு தெரியும் .அங்கே இருக்கும் குடும்பங்களை இத்தனை "தலைக்கட்டு"ன்னு கணக்கு வச்சிரூப்பாங்க. ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆணுக்கு கல்யாணம் ஆச்சுன்னா, அவன் தனியா ஒரு "தலைக்கட்டு"ன்னு பிரிப்பாங்க…
கல்யாணம் ஆகும் போது தான் அவனுக்கு ஒரு மரியாதையும் அந்தஸ்தும் சமூகத்திலே கிடைக்குது. ஏன்?. திருமணம் செய்து, அந்த பெண்ணோடு அவன் இல்லறம் நடத்தி, அதன் மூலம், தான் "அறம்" செய்ய ஆரம்பிக்கிறான் என்பதால் தான் அந்த மரியாதை….
"மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஒருவருக்கு தருவது அன்பா அறமா"ன்னு சமீபத்தில் ஒரு பட்டிமன்றம் பார்த்துக்கொண்டிருந்தேன். இலங்கை ஜெயராஜ் அவர்கள் தலைமையிலானது.
என்ன தீர்ப்பு சொல்லியிருப்பார்ன்னு நினைக்குறீங்க?
இது "முட்டையில் இருந்து கோழி வந்ததா ..இல்லே கோழியிலேயிருந்து முட்டை வந்ததான்னு கேட்கும் முடிவில்லா கேள்வி…"என்றுவிட்டு, திருவள்ளுவர் சொன்னதை மேற்கோள் காட்டி, " அறம்" இல்வாழ்க்கையின் பயன் என்றால், அதற்கு இருக்க வேண்டிய "பண்பு" தான் "அன்பு " என்றார்.
அப்ப. இல்லறம் நடத்த தேவையானது ரெண்டு பேருக்கும் நடுவிலே இருக்க வேண்டிய அன்பு..தான் இல்லையா..?
அது காதல் திருமணமோ நிச்சயித்த ஒன்றோ…எதுவானாலும்.
காதலின் அடிப்படை அன்பு தானே என்றால், நிச்சயித்த திருமணத்தில், எப்படி எங்கியோ பிறந்து வளர்ந்த இரண்டு பேருக்கும் நடுவிலே திடீர்னு அன்பு வரும்?
இப்பலாம் நிச்சயம் செய்தா, கல்யாணம் நடக்கிறதுக்கு ஆறு மாசமாவது ஆகுது.அதுல அன்பு செய்தல் கூடும்!!
ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இயற்கை ஏற்படுத்தி வைத்த ஈர்ப்பு தான், அந்த அன்பை வளர்த்துக் கொண்டே போகக் கூடியது.
அந்த உணர்வு பூர்வமானதை உணர்ச்சிப் பூர்வமானதாக மாற்ற வைப்பது தான் இந்த "சாந்தி முகூர்த்தம்.."
கரு உருவாகி, மூன்று மாதத்தில், தான் ஆணா பெண்ணா என்று நிர்ணயித்து கொண்டு அதற்கேற்றாற்போல பின்னர் வளர்ந்து வெளியே வந்தாலும், தான் விட்ட அந்த மறு பாதியை தேடிக்கொண்டே இருந்து, அதனை மீண்டும் அடைந்து அதன் தேடல் நிறைவு பெறுவதால் தான் அதை "சாந்தி"முகூர்த்தம் என்று சொல்கிறார்கள்..
இயற்கையாகவே அவர்களுக்குள் ஏற்படும் கலவியால் தான், தன்னுடையது என்று பெரிசா நினைச்சு வச்சிருக்கும் .கற்பை அவனுக்காக அவள் துறக்க, அவன் தன்னுடைய வலிமையை, உயிர் சக்தியை இழக்கிறான்.. இதற்கு இயற்கையை காரணமா சொன்னாலும், பெண்ணிற்கு மற்ற ஆணிடம் ஏற்படாத ஈர்ப்பு, இவன் பால் ஏற்படும் போதே இது சாத்தியம்…
ஒவ்வையார் சொல்கிறார்…
"இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவு
நைந்த உடலாள் நலமேவு மன்மதன்ற
ஐந்துகணை யால்வாடி னாள்.
கட்டழகைக் காமம் தொலைத்துவிடும்"
அவள் பேணிக் காக்கும் அழகை, அந்த கலவி கெடுத்தாலும், அதை அவள் ஆவலுடன் ஏற்றுக்கொள்வதும் அவன் மீது கொண்ட காதலால் தான்....
தன் அழகு தொலைத்த அவனுடன் கொண்ட கலவி தான் அழகு என்று மாறிப் போகிறாள்..
சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபி ராமம்.
தலைவனோடு கூடிய கலவியால் களைத்த பெண்மயிலாள்
தான் "அழகு" என்கிறாள் அவ்வையார்.
அதற்கு.அவள் வெட்கப்பட்டாள், என்றால், அவள் வாழ்வு தான் கெட்டுவிடும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்:..
வேசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய வேசியும் கெட்டு விடும்
இப்படியே தன்னையே விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஒரு பெண் உந்தப்படுவதற்கு அவன் மீது கொண்ட காதல் தான்..
அதனால் தான், வள்ளுவர் கூட, திருக்குறளில் முதலில் வரும் அறத்துப்பாலில், அன்பை தூக்கி முதலில் வைத்தார் .
கணவனுக்கு மட்டும் தானா தேவை இது?!
பெண்ணுக்குள்ள இயல்பான கூச்சம் காரணமா, அவள் அதை வேண்டும் போது, தன் கணவனிடம் வெளிப்படுத்துவது கூட மறைமுகமாக தான் இருக்கும்..
இந்த தாலாட்டையே கேளுங்களேன்...குழந்தை அழுவதை சமாதானப்படுத்துவது போல, அங்கிருக்கும் கணவனுக்கு குறிப்பால் உணர்த்துவாள்
என்கிறார் . "இல்லறம் நடத்த முடியா நிலைமை வரும்போது அதை துறக்க சொல்கிறார் அவ்வையார்…
அது தான் தாலி கட்டும் முன்பு காசியாத்திரைக்கு போற சான்ஸ் கிடைக்குதே.. அதை விட்டா இப்படி தான்!!🤣
ஆனால் சட்டம் சற்று மாற்றி, அந்த இல்லறத்திற்கு காரணமான, செல்லாமல் போன அந்த திருமணத்தை ரத்து செய்ய ஒத்துக்கொள்கிறது.
"எந்த வித சரியான காரணமும் இல்லாமல், தாம்பத்தியம் கொள்ள கணவன்/ மனைவி வெகு காலம் மறுக்கும் போது, அது "மனரீதியான கொடுமை" என்ற அடிப்படையில், மனைவி/கணவர் விவாகரத்து கேட்கலாம் என்கிறது இந்து திருமணச் சட்டம்..
இப்படித் தான் லண்டனில் வேலை செய்யும் கேஷவ்க்கும் கல்யாணம் ஆச்சு. மனைவி சவிதா கூட லண்டனலே 8 மாசம் இருந்துட்டுத் திரும்பி வந்து, கொஞ்ச நாள் கழிச்சு கிளம்பலாம்னு பார்த்தா சவிதா வரமாட்டேன்னு சொல்றார்.இத்தனைக்கும் பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சு..
நல்லாயிருக்கே..டிக்கெட் எடுத்தாச்சுன்னுகிறதுக்காக போக முடியுமானு கேட்கக்கூடாது…😀
இப்படித் தான் ஒரு நண்பர் வீட்டுக்கு போய் பேசிட்டு கிளம்பும் போது அவர் கேட்டார்..சாப்பிட்டுட்டு போறீங்களா..சாப்பாடு நிறைய செஞ்சாச்சு.வீணாகிடும்"ன்னு..அவர் கவலை, நான் சாப்பிடறதா இல்லை சாப்பாடு வீணாகிடக்கூடாதான்னு தெரியல!!😃😄
மூணு வருஷம் பொறுத்து பார்த்துட்டு, விவகாரத்து கேட்டு கேஸ் போட்டார்..ஆனா சவிதா அதை ஒத்துக்கலை..என் கணவர் தான், ரெண்டு வருஷம் கழிச்சி குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னார்., நான் சேர்ந்து வாழத் தான் விரும்புறேன்னு சொன்னாங்க..
கேசவ் போட்ட கேஸ் டிஸ்மிஸ் ஆச்சு!!
திரும்ப உயர்நீதிமன்றம்..மேல் முறையீடு..
ஸ்காட்லாண்டுக்கு ஹனிமூனுக்கு போனபோது கூட, சவிதா எப்படி விருப்பமே இல்லாதது போல நடந்துகிட்டார்னும், லண்டனில் குடித்தனம் செய்யும் போது அவர் உணர்ச்சியற்ற தன்மையோட நடந்துக்கிட்டார்னு கேசவ் விலாவாரியா சொன்னதை விவரித்த நீதிமன்றம், அவர் பொய் சொன்ன மாதிரி தெரியலை.உண்மையில் கேசவ் குழந்தை வேண்டாம்னு சொல்லியிருந்தாலும், அதுக்கு தடுப்பு முறைகளை கடைபிடிச்சுருக்கலாம்.. ஆனால் அப்படி செய்யாமல், தாம்பத்யத்துக்கு மறுப்பது, மனரீதியான கொடுமை. இது, உடல் ரீதியான கொடுமையை விட அதிக பாதிப்பை கொடுக்கக் கூடியது"ன்னு சொல்லி கேஷ்வ்க்கு விவாகரத்து குடுத்துருச்சு.
அதுவும் அந்த தீர்ப்பு சரி தான்னு சொல்லிடுச்சு[1][2]
சில தம்பதிகளுக்கு தாம்பத்யம் என்பது தேவையில்லாம பரஸ்பர புரிதலோட வாழ்றாங்க.
ஆனால் சிலரையெல்லாம் பார்க்கும் போது ரெண்டு பேருக்கும் நடுவிலே, வயசு வித்யாசம் அதிகம் இருக்கும்..
மலைக்கும் மடுவுக்கும் போல..
நான் ரேடியோ ஸ்டேசன்லே வேலை செய்தப்ப, இந்த ஆடியன்ஸ் சர்வே பண்ணப் போவோம். அப்டி தான், ஒரு வீட்டிற்கு போய் கதவை தட்டினேன்.ஒரு பெண் திறந்தார். ஒரு 20..21 வயசு தான் இருக்கும். கூட ஒரு சிறுவன் இருந்தான்..எல்லாக் கேள்வியையும் கேட்டுவிட்டு திரும்பினால், ஒரு பெரியவர் வந்தார்..
"என்ன வேணும்?"
நானும் சர்வேவை பற்றி சொல்லிட்டு, "உங்க பொண்ணுக்கிட்டே கேட்டுட்டேன்"னு சொன்னேன்.
அவர என்னை ஒரு பார்வை பார்த்துக்கிட்டே "அது என் மனைவி"னார்.
அதுக்கு பிறகு அவசரப்பட்டு உறவுமுறையை நானா முடிவு செய்றதில்லை!!☺️
எனக்கு அவரை பார்க்கவே விசித்திரமா இருந்தது..இவர் ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிச்சதோட இல்லாம, இதிலே என்ன பெருமை வேண்டியிருக்கு?!!
அதுக்கப்புறம் அது போன்ற சில தம்பதியை பார்த்திருக்கிறேன். இவங்களாம்…😡
பெண்ணுக்கு அந்த ஆசை, இருக்காதுன்னோ, அது கிடைகலைன்னு கோர்ட்டு படியேற மாட்டாங்கன்னு இருக்கிற தைரியம் தானே காரணம்??
பின்னாளில் இந்தப் பாடலை படிக்கும் போது,, அவ்வையாருக்கும் அதே கோபம் கூட இல்லை. அதை விட அதிகம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..!!
அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்
பரமனை யானுக்கிந்த மானைவகுத் திட்ட
பிரமனையான் காணப் பெறின்
இதோட விளக்கம்;
"மானைப் போன்ற இவளைப் பரமனைப் போன்ற இந்த முனிவனுக்கு மனைவியாக்கி வைத்திருக்கும் பிரமனை நான் நேரில் கண்டால், குற்றம் இழைத்தமைக்காக அன்று ஐந்தாம் தலை கிள்ளி எறியப்பட்டது போக எஞ்சியுள்ள நான்கு தலையையும் அறுத்தெறிந்துவிடுவேன்"👌👌