தாய் தந்தை இறந்த பின், அவரின் சொத்தை விற்க இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
அவர் வாரிசுகள் என்ற முறையில், அந்த நிலத்தில், அவர்களுக்கு பிரிக்கப்படாத பங்கு உள்ளது.
நம்ம flat வாங்கும்போது சொல்வார்களே UDS என்று…undivided share என்று…பிரிக்கப்படாத பங்கு….அதே தான் நிலத்திலும் உண்டு.
ஒரு வாரிசு மறுத்தாலும் நிலத்தை அவரை விட்டு விட்டு பதிய வேண்டும் என்றால், அவருக்கு உள்ள பிரிக்கப்படாத பங்கை பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அது பணமாகவும் இருக்கலாம்.
அவர் நிலம் தான் வேண்டும் என்று கேட்டால், வாரிசுகளுக்குக் இடையில் செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி, அவருக்கு உண்டான பங்கு நிலத்திற்கு பதிய வேண்டும்.
பின்னர் சர்வேயரை வைத்து அளந்து நிலத்தில் உள்ள அவர் பங்கு நிலத்தை வரையறை செய்து, சர்வே உள் ஒதுக்கீடு செய்து, அவருக்கு ஒப்படைக்க வேண்டும்,
இது தாசில்தார் அலுவலகத்தில் செய்ய வேண்டிய நடைமுறை.
இதன் பின்னர் மீதமுள்ள வாரிசுகள் அந்த பிரித்த நிலத்தை விற்பனை செய்யலாம்.
இதில் நடைமுறை சிக்கல்கள், அலைச்சல் உள்ளதால், முடிந்தவரை மறுக்கும் வாரிசை சம்மதிக்க வையுங்கள்.
அல்லது கூடுதலாக பணம் கொடுத்தாவது அவரை சரி செய்ய பாருங்கள்
இதில் நீதிமன்றத்தில் எல்லாம் வேலை இல்லை. தவறாக அங்கும் போய் அலைய வேண்டாம்.
அரசு அலுவலங்களில் அலைந்து பணம் கொடுத்து அவஸ்தைப்படுவதை விட, சொந்த சகோதரர்/சகோதரிக்கு கூடக் கொஞ்சம் பணம் கொடுத்து முடிப்பது சிறப்பு..
உறவும் நீடிக்கும்.
மனமும் உடலும் மகிழும் 👌
சில வாரிசுகள் வெளிநாட்டில் இருப்பதாலும், இது குறித்த ஆர்வம் காட்டாததாலும், சொத்து பிரிவினை செய்ய முடியவில்லை என தெரிவிக்கப் பட்டிருந்தது.
அவர்களுக்கு உண்மையில் சொத்தில் பங்கு பெறுவதில் ஆரவம் இல்லையெனில், தன் பங்கை விட்டுத் கொடுக்கும் விடுதலை பத்திரத்தை எழுதி அங்குள்ள சட்ட நடைமுறைப்படி அதற்கு சான்று பெற்று அதனைக் கொண்டு மற்ற வாரிசுகள் சொத்தினை தங்களுக்குள் பிரித்துக்கொள்ளலாம்.