சட்ட திட்டங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று தானே மண முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள்?
வந்த மாட்டை கட்டுறதும் கிடையாது…போற மாட்டை தேடுறதும் கிடையாது!
இருந்தாலும் அதிலும் வரக்கூடிய சட்டச் சிக்கல்கள் என்ன என்று தெரிந்துக் கொள்ள நம்ம தலைவர்கள் எல்லாம் ஆர்வமாக இருப்பதால்…புரியுது..புரியுது…இருங்க…சொல்லிடறேன்.
சேர்ந்து வாழறது ஏன் பிரபலமாகிட்டு வர்றது?
காரணம் நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை.
- ஒரு திருமனம்ங்கிறது நிறைய உரிமைகளை கொடுக்குற அதே நேரத்திலே கடமைகளையும் கொடுக்குது.
- பெரிய சக்கரமும் சின்ன சக்கரமும் சேர்ந்து ஓடமுடியலைனாலும் கழட்டிட்டு போக முடியலை…
- விவாகத்தை ரத்து பண்ணலாம்னா ரொம்ப நீளமான நீதிமன்ற நடைமுறைகள்.
- திருமணம் புனிதமானதுன்னு அதசி முடிவுக்கு கொண்டு வர விடாம தடுக்கிற ரெண்டு பேரு குடும்பமும் .
ஆனா இது மாதிரி "சேர்ந்து வாழற உறவு:களில் எழும் பிரச்சினைகள் ஏராளம்..முதலே சில சமூகப் பிரச்சினைகளை பார்ப்போம்.
- திடீருன்னு லிவ் இன் பார்ட்னருக்கு உடம்பு முடியலை, பேச்சு மூச்சு இல்லைன்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் பன்றார்ன்னு வையுங்க.ஒரு அறுவை சிகிச்சை பண்ணனும்னாலும், இவர் எந்த பேப்பரிலேயும் கையெழுத்து போட்டு ஒப்புதல் கொடுக்க முடியாது. அதுக்கு அவரோட இரத்த சொந்தங்கள் தான் வரணும்.
- சரி ஒருத்தர் இன்னொருத்தரோட பண வசதி கொண்டு சேர்ந்து வாழும் போது, முந்தியவருக்கு ஏதேனும் உடல் நலம் கெட்டு, அதே சமயம் அவர் பொருளாதாரம் அடிவாங்கும்போது, கடன் கொடுத்த வங்கிகள் அவரோட கணக்கை முடக்கி விடும். ஒரு கணவன்/மனைவிக்கு இருக்கிற உரிமை கூட இருக்காது.
- எத்தனை வருஷம் கூட இருந்தாலும் அவர் இல்லாதப்ப, அவர் சொத்துக்கள் அவர் இரத்த சம்பந்தமான வாரிசுக்கு தான் போகுமே தவிர, இவருக்கு வராது.ஒரு மனைவிக்கு கணவனுடன் வாழ்ந்த வீட்டில தன் வாழ்நாள் முழுதும் இருக்கிற உரிமை இருக்கு.அது கூட இவருக்கு கிடையாது.
- இதெல்லாம் விடுங்க......இந்த சமயத்திலே குழந்தைகள் எதுவும் தத்து எடுத்துக்க முடியாது.
இதெல்லாத்திலேயும் வர்ற பிரச்சினைகள் தவிர்க்க ரொம்ப உஷாரா நல்லா இருக்கும் போதே, ஒரு ஒப்பந்தம் போட்டு, இது எல்லாத்திலேயும் எந்த இடைஞ்சலும் இல்லாத் மாதிரி பண்ணிக்கலாம்.
சரி ரெண்டு பேருக்கும் இதிலே ஒத்துப் போகும் வரைக்கும் பிரச்சினையில்ல. ஆனால் வந்துட்டா?
அவங்களுக்குன்னு எந்த சட்டத் திட்டம்னு இல்லைன்னு தானே போனாங்க? அதுவே அவங்க கழுத்தை நெறிக்க ஆரம்பிச்சுரும். பல வருஷமா சேர்ந்துவாழ்தவங்களை, ஒண்ணுமே இல்லாம திடீருன்னு ஒரு நாள், " உணக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுருச்சு"ன்னு ஜூட் விட்ட ஆட்கள ஏராளம்.
நம்மோட சமூகக் கண்ணோட்டம் தான், சேர்ந்து வாழறதை ஒத்துக்கலை. ஆனால் சட்டம் அதை ஏற்றுக் கொள்ளத் தான் செய்யுது. தனி சட்டம்ன்னு எதுவும் அவங்களுக்கு எதுவும் இல்லைனாலும், நீதிமன்றம் இது போல பாதிக்கப்பட்டவங்களை பார்த்து விட்டு சும்மா இருக்குமா?…
(அடப்பாவமே…இது வந்துரக்கூடாதுன்னு தானே கல்யாணமே பண்ணலை.. அப்பவுமுமா?கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது)
சட்டம் இது சம்பந்தமான உறவுகள் பத்தி தெளிவில்லாம இருந்தாலும், முதன் முதலா குடும்ப வன்முறை சட்டம், 2005லே, இது போல திருமணம் செய்யாமல், ஒரு ஆணுடன் மனைவியை போன்ற உறவில் (ஆனால் மனைவி கிடையாது) இருக்கும் பெண்ணிற்கு உரிமையும் பாதுகாப்பும் கொடுக்கிறது
அது குடும்ப உறவுன்னா என்னன்னு விளக்கம் குடுக்கிற இடத்திலே, "ஒரே வீட்டில் சேர்ந்து திருமணம் போன்ற தன்மையுள்ள உறவில் வாழும் இருவர்" என்கிறது.
"சேர்ந்து வாழும் உறவு" என்று வெளிப்படையாக சொல்லாம இதை கோர்ட்டே விளக்கம் கொடுத்துக்கட்டும்னு விட்ருச்சு..கோர்ட்டும்.. திருமனத் தன்மை உள்ள உறவு என்பது "லிவ் -இன்" உறவை குறிக்கிறது என்று, இந்த உறவில் பாதிப்படைந்த பெண்கள், மோசடி திருமணங்கள், முதல் திருமணத்தை மறைத்து செய்யப்பட்ட திருமணம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
முன்னாலேலாம் குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 125 படி சட்டப்படி திருமணம் ஆன மனைவிக்கு மட்டும் தான் ஜீவனாம்சம் கொடுக்க முடியும்ன்னு இருந்தது.
ஆனா 2003ல் உருவாக்கப்பட்ட மாலி\மத் கமிட்டி பெண்களுக்கு எதிரான குற்றஙகள் பத்தி தாக்கல் செஞ்ச அறிக்கையில் 'மனைவி'ங்கிற வார்த்தைக்கு இன்னும் விரிவான விளக்கம் வேனும்னு கொடுத்ததன் அடிப்படையில் இப்ப சட்டத் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்பூர்வமான மனைவிக்கு உள்ள உரிமை, சேர்ந்து வாழ்ந்து பின்னர் கைவிடப்பட்ட பெண்ணுக்கும் ஜீவனாம்சம் கோரும் உரிமை கொண்டு வரப்பட்டது.
இது எப்படி சரியானதுன்னு கேட்கறவங்களுக்கு…
இந்திய சாட்சியவியல் சட்டப்படி, ஒரு ஆணும் பெண்ணும் ரொம்ப காலம் ஒரே இடத்தில் ஒரு கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தாங்கனா , எதிரா எந்த ஆதாரமும் இல்லாத போது, அவங்களுக்குள்ளே சட்டம் அங்கீகரிக்கும் திருமணம் நடந்ததாகத்தான் நினைக்க முடியும்.
சேர்ந்து வாழ்தல் குறித்த நீதிமன்றப் பார்வை
மாறிக் கொண்டே இருக்கும் இந்த சமுக சூழலில் நேற்று சட்ட விரோதமாக இருந்தது இன்று சட்டப் பூர்வமாக ஆகி விடுகிறது என்றார் நீதியரசர் கங்குலி(1) ..
"சமூகத்தின் பாரவையில் ஒழுங்கீனமாகத் தெரியும் இதை நீதிமன்றம் ஒத்துக் கொள்வதாக அர்த்தமில்லை. இந்த சேர்நது வாழ்தல் குறித்த சட்டம் இல்லாத நிலையில் அந்தப் பள்ளத்தை சரி செய்யவே நீதிமன்றம் முனைந்தது. .ஏனெனில் சட்டத்தின் பார்வையில் அது விரோதமானது அல்ல. அதற்காக நீதித்துறை இது போன்ற உறவுகளை ஊக்கப்படுத்துவதும் கிடையாது.தடுப்பதும் கிடையாது. எந்த இடத்திலும் நீதி பிறழ்ந்து விடக் கூடாது என்பது மட்டுமே அதன் நோக்கம்."
இது போல சேர்ந்து வாழும் தம்பதிகள் சட்டம் ஏத்துக்கக்கூடிய திருமணம் ஆனவர்கள் தான்னு கருதப்பட ஆரம்பிச்சது இன்னிக்கு நேத்திக்கு இல்லீங்க.பிரிட்டிஷ் காலத்திலேயிருந்து தான். அதே போல 50 வருஷம் சேர்ந்த வாழ்ந்த ஒரு தம்பதிக்கு சட்ட அங்கீகாரம் குடுத்தது உச்ச நீதிமன்றம் .
அதே போல 2005ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டமும் இவங்களுக்கு கைக் கொடுக்குது. இந்த சட்டப்படி கல்யாணமான தம்பதி மட்டும் தான் இல்லே... கல்யாணம் போன்ற தன்மை உள்ள உறவுகளுக்கும் பொருந்தும்ன்னு சொல்லுது.
அதே போல இந்த உறவில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் சட்டப் பூர்வ அந்தஸ்து பெற்றதாகத்தான் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்து வாரிசு உரிமை சட்டப்படி திருமண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்கும் பரம்பரை மற்றும் சுய சம்பாத்திய சொத்திலும் வாரிசூரிமை உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனாலே "லிவ் -இன் " உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது.
ஒரே குறை என்னவென்றால் மற்ற உறவினரின் சொத்தில் இந்த குழந்தை ,உரிமை கொண்டாட முடியாது.
ஆனால் அதே சமயம் திருமணமான ஒருவர் இன்னொருவருடன் லிவ்- இன் உறவில் இருந்து அவரின் சொத்தில் தன் குழந்தைகளுக்கு வாரிசு உரிமை கேட்க முடியாது.
1.ராவனஸித்தப்பா எதிர் மல்லிகார்ஜுனா 2011(11)SCC 1
2.அன்ரஹேன்னெடிக் டினோஹேமீ எதிர் விஜேதுங் லியானப்பட்டபென்டிக் ப்ளாகாமில் 1927 SCC Online PC 51
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக