புதன், 23 ஜூன், 2021

மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம். இம்மூன்று நீதிமன்றங்களுக்கும் சட்டங்கள் மாறுபாடு உள்ளதா. ஏன் இப்படி மூன்றாக பிரித்தனர்?

 குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்களே. நம்முடைய குற்றவியல்/சிவில் விசாரணை நடைமுறை சட்டப்படி நீதிமன்றங்கள் மூன்று அடுக்கு கொண்டவை. வழக்குகளை குற்றவியல் நீதிமன்றம் அல்லது உரிமையியல் நீதிமன்றம் விசாரித்தால், அதற்கான மேல்முறையீடு அடுத்த கட்டமாக சார்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்த கட்ட மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும் நடக்கும். அதுவே சார்பு நீதிமன்றமோ அல்லது தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தினால், அதற்கான மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும், அடுத்து உயர் நீதிமன்றத்திலும் நடக்கும். ஆனால், மாவட்ட நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாக இருக்கும்போது, அதற்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடக்கும். அனைத்து கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் சீராய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாண்பிமிகு உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. அனைத்து மாநில நீதிமன்றங்களுக்கு தலைமையாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உள்ளது.

எந்த நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாகும் என்பது குற்றம்/வழக்கின் தன்மையை பொறுத்து குற்ற விசாரணை சட்டத்திலும், சிவில் விசாரணை நடைமுறை சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது. . சட்டம் அனைத்து நீதிமன்றத்திற்கும் பொதுதான்.

மேலும் நமது அரசியலமைப்புச் சட்டம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றங்களையும் தான் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கியுள்ள/உறுதிபபடுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாவலனாக காட்டியுள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு அந்த சட்டத்தின் உறுப்பு ௨௨6 படியும் உச்ச நீதிமன்றத்திற்கு உறுப்பு 3௨படியும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளோடு பொருத்தப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தே, அதாவது அவை வழக்கு சம்பவங்களோடு சரியாகத்தான் பொருததபபட்டுள்ளனவா இல்லையா, அந்த சட்டங்களும் அரசிய லமைப்பு சட்டத்துடன் பொருந்தி உள்ளதா இல்லையா என்பது குறித்துத் தான் உச்ச நீதிமன்றம் பொதுவாக விசாரிக்கும்.

குற்றவியல் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் என்றால் என்ன?

குற்றவியல் நீதிமன்றம் (மாஜிஸ்திரேட் கோர்ட்) என்பது தான் இந்திய நீதித் துறையில் உள்ள கடைநிலை நீதிமன்றமாகும். அந்த நீதிமன்றம் தலைமை நீதித்துறை நடுவர் கட்டுப்பாட்டிலும் ஒட்டுமொத்தமாக அந்த மாவட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

மேலும் எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை, வழக்கு ஆவணங்கள் மற்றும் குற்றவாளியும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தான் தாக்கல்/ஆஜர் செய்யப்பட வேண்டும். நீதித்துறை நடுவர் வழக்குகளை விசாரித்து ரூபாய் பத்தாயிரம் அபராதத்திற்கு மிகாமலும், மூன்று வருட சிறை தண்டனையும் அளிக்க அதிகாரம் பெற்றவர்.

உரிமையில் நீதிமன்றம் என்கிற முன்சீப் கோர்ட் பெரும்பாலான சிவில் வழக்குகளை விசாரிக்கும். அது ரூபாய் ஒரு லட்சம் வரை யிலான பணவியல் அதிகார வரம்பு கொண்டது. அதற்க்கு மேலும் ரூபாய் பத்து லட்சம் வரையிலான அதிகாரம் கொண்டது சார்பு நீதிமன்றம் என்கிற சப் கோர்ட். இங்கு முன்சீப் நீதிமன்றம் வழங்கிய தீர்பிற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும். மேலும் குடும நல நீதிமன்றங்கள் இல்லாத மாவட்டங்களில் விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும். மேலும் சார்பு நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை விசாரித்து ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனையும் அளிக்கக் கூடிய அதிகாரம் கொண்டது.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்கு என்று வழக்குகளை ஏன் இரண்டாகப் பிரிக்கிறார்கள்?

நீதிமன்ற ந்களில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறைகளை சொல்லும் இரண்டு சட்டங்கள் தான் குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் சிவில் விசாரணை நடைமுறை சட்டம். இவற்றின் படி தான் விசாரணை நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது.

எனவே தான் சிவில் கிரிமினல் என இரண்டு பிரிவாக வழக்குகள் பிரிக்கப்பட்டு அந்த சட்ட நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.


இந்திய நீதிமன்றங்களில் ஏன் ஆங்கிலம் மொழியில் வழக்குகள் நடக்கின்றன. இதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா?

ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் கொண்டுவரபட்டது. அதன் பின்னர் அந்தந்த மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிராந்திய மொழியே நீதிமன்ற மொழியாக தொடர்ந்தாலும் ஆங்கிலமும் நீதிமன்ற மொழிகளில் ஒன்றாக உள்ளது. மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டது ஞாபகத்தில் இருக்கும். உயர் நீதிமன்றங்களில் பல மாநிலத்திலிருந்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பார்கள். எனவே பிராந்திய மொழியை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்றங்கள் தமிழில் தீர்ப்பு வழங்கும்போது, அது கட்சிதாரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அந்த வழக்கு மேல்முறையிட்டிற்காக உயர் நீதிமன்றம் போகும்போது, வழக்கு ஆவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...