நியாயமான விலைக்கு?
நொண்டி சாக்கு?
நாட்டை கெடுப்பதில்?
பட உபயம் கூகிள்
கேள்வியாலருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை, கீழ்கண்ட விவரங்கள்
- ஓவ்வொரு இடத்திற்கும் அரசே வழிகாட்டும் மதிப்பு அதாவது guide line value நிர்ணயித்துள்ளது.
- அந்த இடத்தின் நியாயமான மதிப்பு என்று வல்லுநர் குழுவிண் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழிகாட்டும் மதிப்பு முடிவு செய்ய்யபடுகிறது.
- சொத்தை எந்த விலைக்கு வாங்கினாலும் கிரயம் பெற பதிவு செய்யும்போது, அந்த வழிகாட்டும் மதிப்பிற்கோ. அல்லது அதற்கு கூடுதலான மதிப்பிற்கு தான் பதிய வேண்டும்.
- சில இடங்களில் வழிகாட்டும் மதிப்பு சந்தை விலையை விடக் கூட இருக்கும்.
இப்போது சொல்லுங்கள் நியாயமில்லாத விலைக்கு பதிவு செய்வது என்பது எப்படி நடக்கும்?
வேண்டுமென்றால் குறைந்த விலைக்கு வாங்கி விட்டு அதிகமான வழிகாட்டு மதிப்பிற்கு பதிவு செய்வதை வேண்டுமானாலும் நியாயமில்லாதது என்று சொல்லலாம். ஆனாலும் நாட்டிற்காகத் தானே கொடுக்கிறோம் என்று செய்கிறோம்.
கிரயதிற்கு அதிகப் பணம் கொடுத்து அதை விடக் குறைவான வழிகாட்டி மதிப்பை வைத்து கிரயம் செய்வதை சொல்கிறீர்களா?
அப்படியாயினும் அது சட்ட விரோதம் இல்லையே… .அந்த பகுதியின் சந்தை மதிப்பு தெரியாமலா வழிகாட்டி மதிப்பு குறைவாக வைக்கப்பட்டுள்ளது? வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதில் அதுவும் ஒரு காரணி மட்டுமே.
ஒருவர் அதை விட க் கூடுதலாக கிரயத்திற்கு பணம் கொடுக்கிறார் என்றால் அது டிமாண்ட் மற்றும் சப்ளை பொறுத்தது. அதில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.அரசு அப்படி வழிகாட்டி மதிப்பை மாற்றி கொண்டு இருக்க முடியாது.
இன்னொன்று வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக கிரயம் பதிவு செய்தால், அந்த மதிப்பே அந்தப் பகுதிக்கு அடுத்து வரும் பதிவுசுளுக்கு செலுத்த நேரிடும்.இது ஒருவரால் ஊருக்கே ஏற்படும் கேடு. சமூகத்திற்கு கேடு.அதைக் தான் யாரும் செய்யாமல் நாட்டை காப்பதில் உறுதுணையாக இருக்கின்றனர்.😀
இதில் நொண்டி சாக்கு எங்கு இருக்கிறது?
அப்படியும் சிலர் செய்து, ஊரிலே இருக்கிற எல்லோர் வாயிலும் விழுந்து வருவர்🤣
சரி கேள்வியாளர் தான் ஊருக்கு புதிது..கேட்கிறார்.😆
இந்தக் கேள்வியை பார்வையிடும் நல்லோர் எல்லாம் , ஒரு கிரயமும் செய்யாதவர்களா …இநத விவரம் தெரியாதவர்களா?
ஏன் யாரும் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
ஒரு சம்பவம். திருஞான சம்பந்தர் திருவையாறு போகிறார். அங்கு இருக்கும் இறைவனை பார்த்து "ஐம்புலன்களும் மயங்கும்போது அஞ்சேல் என்னும் நாதனே" என்று ஈசனைப் பார்த்து உள்ளம் உருகி பாடுவார் தேவாரம்.
திருவையாறு கோயிலின் வெளி அழகைப் பற்றி பாடும்போது சொல்லுவார்…கோயிலின் உள்ளேயிருந்து கேட்கும் மத்து ஒலியை, வெளியே மரத்தில் இருக்கும் சில மந்திகள் இடியோசையோ என்று எண்ணி மரத்தின் உச்சிக்கு சென்று வானத்தை பார்க்குமாம்.
ஏன் சில மந்திகள் என்று அவர குறிப்பிட்டார் என்றால் மற்ற மந்திகள் எல்லாம் உள்ளூர் மந்திகள் என்பதால் அவற்றிற்கு அந்த ஓசை மத்தோசை என்று தெரியுமாம்😂வெளியூரில் இருந்து வந்த இந்த சில மந்திகள் தான்…
அந்த சில மந்திகளில் நானும் ஒன்று போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக