சனி, 12 ஜூன், 2021

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதியரசர் கர்ணனுக்கும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கும் வேறுபாடு காட்டப்பட்டதா?

 நீதியரசர் கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக, ஆறு மாத சிறைத்ததண்டனை முடித்து சிறையிலிருந்து வெளிவரும் காட்சி


நன்றி PTI.

தற்போது நீதிமன்ற அவமதிப்புக்காக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக தனிச்சையாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நாடெங்கும், இதே போன்ற வழக்கில் முன்னாள் நீதியரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்ட தண்டனையோடு பொருத்தி பார்த்து விவாதங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து போவதற்குள், இந்த நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் வரலாறை சுருக்கமாக பார்ப்போம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில், அவர்கள் நாட்டு சட்டத்தின் அடிப்படையில் 1926ல் இயற்றப்பட்டது தான் இது. அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு, இறுதியில், தற்போதுள்ள சட்டம் 1971ல் இயற்றப்பட்டது.

இங்கிலாந்திலே இந்த நீதிமன்ற அவமதிப்பு என்பது குற்றமாக பார்க்கப்படுவது வெகு காலத்திற்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்று வரை நாம் நாட்டில் இந்த சட்டம் உள்ளது. என்ன காரணம்?

நம் நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், எதற்கெடுத்தாலும் இன்னொருவர் மீது குற்றம், குறை காண்பது தான் பொதுவான மக்கள் இயல்பாக உள்ளது. வெளிநாட்டை போல அன்றி, எதிலும் ஒரு ஒழுங்கு இன்றி, விதி மீறல்களை எந்த வித குற்ற மனப்பான்மையும் இல்லாமல் மக்கள் செய்வதை காணலாம். கடைசியாக நீதிமன்ற அவமதிப்பு என்று 1931ல் தான் இங்கிலாந்தில் ஒரு வழக்கு இருந்தது. அதன் பிறகு அது போன்ற அவமதிப்புகளில், அதாவது குற்றம் சாட்டக் கூடியவாறு மக்கள் ஈடுபடுவதில்லை. அவர்கள் அரசக் குடும்பத்தை மதிக்கும் விதம் ஒன்றே போதுமே!! அதே போல் தங்கள் மக்கள் பிரதிநிதி கறை படியாத நபராக இருப்பதில் கவனம் செலுத்துகின்றனசர்.

ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழ்.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தான் அரசின் கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் நாட்டின் பல பகுதியிலும் உள்ளனர் என்று அறிக்கைகள் வருகின்றன. இது தடுக்கப்பட்டு இந்த அமைப்பே சுத்தப்படுத்தபட வேண்டும் அரசியல் கட்சிகளின் தலைமை பொறுப்பில் உள்ள தலைவர்கள் தான் இது போன்ற குற்றவாளிகளை தங்கள் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணியில்லாத அரசியல் அமைக்கும் தொலைநோக்கு பார்வை அவர்களுக்கு வேண்டும் " என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு சமீபத்தில் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.

2௦19 வருடத்திய ஜனநாயக சீரமைப்பு சங்கத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், அதபடி MP களில் 43 % குற்ற வழக்கை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், அதில் 29% பேர் மீது கடுமையான குற்ற வழக்கு உள்ளது என்றும் அதனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் போடியிடாதவறு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அரசியல் சம்மந்தமான வழக்குகளில் ஏன் தீர்ப்பு தாமதமாகின்றன?

அதேபோல 2018ல் அறிக்கை தாக்கல் செய்த சட்டத் கமிஷன், அன்றைய தேதியில் நாட்டில் ஒட்டுமொத்தமாக நிலுவையில் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, நீதிமன்ற அவமதிப்பு சட்டம் தொடர்ந்து இருக்க வேணடிய அவசியத்தை சுட்டிக்காட்டியது.

ஆச்சரியமாக, 2017ல் நீதியரசர் கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தபோது, அதை பிரஷாந்த் பூஷ்ன் வரவேற்றார்.

Prashant Bhushan

@pbhushan1

அப்படியெனில் அவரே நீதிம்ன்ற அவமதிப்பு செய்யலாமா? உச்ச நீதிமன்றத்தின் மாண்பை காக்கவே நான் அந்த டீவீட்களை செய்தேன் என்கிறார். அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, உச்சநீதிமன்ற தலை நீதிபதிகளும் உச்ச நீதிமன்றமும் வேறல்ல என்று தெரிவித்து, பூஷனின் கருத்துக்கள் நீதித்துறை நிர்வாகத்தில் தலையீடாகவும், மக்கள் நீதிம்ன்றத்தின் மீது வைத்த நம்பிக்கையையும் குலைப்பதாகவும் உள்ளது என்றும் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

சரி இரண்டும் நீதிமன்ற அவமதிப்பு தானே யென் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை, இவருக்கு ஒரு ரூபாய் அபராதம் இது பாரபட்சமில்லையா என்பவர்களுக்கு…

நீதியரசர் கரணன், 20 உயர்நீதிமன்ற நீதிபதிசுளின் மீது குற்றம் சுமத்தி பிரதமருக்கு நேரிடையாக கடிதம் எழுதினார். விதிகளின் படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கோ, அல்லது உச்ச் நீதிமன்றத்திற்கோ தான் எழுத வேண்டும். அந்த விதியை மீறினார்.உச்ச நீதிமன்றம் அது குறித்து நடவடிக்கை எடுத்த போது உச்ச நீதிமண்ற நீதிபதிகளுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தார் . உயர் நீதிமன்ற மாண்பை குலைத்து விட்டதாக உச்சநீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து சிறைத் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் திரு பூஷன் இரண்டு டீவீட்களை போட்டார் என்பதே. அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கும் ஆனால் அவர மறுத்து விட்டார். அதோடு நில்லாமல் அது குறித்து பிரஸ் மீட்டும் நடத்தினார். உச்சநீதிமன்றம் சுதந்திரமாக முடிவு எடுப்பதில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினார். எனவேதான் அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சரி அப்படி யெனில் அவருக்கு அதே. போன்ற ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கவில்லை என்று கேட்கலாம். வழசுகறிஞர் தன்னுடைய அடிப்படை உரிமையான பேச்சு உரிமையின்படியே செயல்பட்டதாக கூறி நாட்டில் விவாதப் பொருளாக இதை மாற்றினார்.முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள சிலர் அவர் கருத்துக்கு ஆதரவு கொடுத்தனர். மேலும் அரசு அட்டர்னி ஜெனரல் திரு வேணுகோபால் பூஷனுக்கு சிறை தண்டனை அளிக்க வேண்டாம் என்று உசசநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். தான் அரசின் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்றும் தெளிவுபடூத்தினார்.எனவே பிஜேபி அரசுக்கும் இந்த வழக்கிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அட்டர்னி ஜெனரல் கருத்தை கேட்டே நீதிமன்றம் முடிவு செய்யும்.எனவே இந்த வழக்கிலும் அவ்வாறு கேட்டபோது, மன்னித்து விடுமாறு கேட்டார். ஆனால் திரு பூஷன் மன்னிப்பு கேட்காததால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர். மேலும் நீதியரசர் செய்தது போன்ற பெரிய தவறை இவர் செய்யவில்லை. எனவே தான் அனைத்தையும் பரிசீலனை செய்து ஒரு ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனையும் 3 வருட நீதிமன்றத்தில் ஆஜராகத் தடையும் விதித்தது.

ஒரு ரூபாய் ஆனாலும் ஆயிர்ம் ரூபாய் ஆனாலும் அது அபராதம் தான். அதை கட்டியதாலேயே நீதிமன்றத்தின் கட்டளைக்கு கீழ்படிந்து குற்றத்தை பிரசாந்த் பூஷன் ஒப்புக் கொண்டார் என அர்த்தமாகிறது..

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், பேச்சு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்றாலும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றுப் குறிப்பிட்டதோடல்லாமல். திரு பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்ததையும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது செய்தியாளர் கூட்டம் கூட்டி இதுபற்றி விவாதித்ததை வருத்தத்துடன் பதிவு செயது, இதுவே கடைசி முறை என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் இந்த மெனமையான அணுகுமுறை, அபிராமி அந்தாதியில் வரும் கீழ்கண்ட வரிகளையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே…


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...