சனி, 12 ஜூன், 2021

நம் ஜனநாயக நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவரை விமர்சனம் செய்ய முடிகிறது, ஆனால் நீதிபதகளை விமர்சித்தால் மட்டும் நீதிமன்ற அவமதிப்பு என்று தண்டனை வழங்குவது ஏன்?

 இவரை தெரியும் தானே?

சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி, நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டனை பெற்றார்.

அவர் செய்த குற்றம் என்ன?

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்நாள் தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி, அவருக்கு தண்டனை வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் நீதிமண்ரத்தின் மாண்பை குலைத்தார் என்று குற்றம் சாட்டி, அவர் மன்னிப்பு கேட்டால், விட்டுவிடுவதாக கூறியது. ஆனால் தான் நீதிபதிகளை மட்டும விமர்சனம் செய்ததாகவும் நீதிமன்றத்தை செய்யவில்லை எனக் கூறி அவருக்கு பரிந்து பேசியவர்கள் கொடுத்த தைரியத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்தார் தான் இதற்காக சிறை செல்லவும் தயார் என அறிவித்து தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்புக்கு காரணமான டீவீட்களை பரப்ப செய்தார்.

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு நிறுவனத் தலைவரின் செயல்பாடுகளை, நம்பகத்தன்மையை விமர்சிப்போம், ஆனால் அந்த நிறுவனம் நன்றாக இருக்க விரும்புவோம் என்பது. இது அந்த நிறுவனத்தை குறித்த மாண்பை குலைத்து விடாதா?

இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் வேறு, அதன் தலைமை நீதிபதி வேறு என்பதை ஏற்றுக கொள்ளவில்ல. மாறாக, இது மக்களின் மனதில் நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் மாண்பைக் குலைததது என்று முடிவு செய்து, கடைசியாக அவருக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாததால், அவரைக் குற்றவாளி என முடிவு செய்து, தண்டனை குறித்து தீர்ப்பு சொல்ல ஒத்தி வைத்தது. அப்போதும் அவர் மன்னிப்புக் கேட்காததால், அவருக்காக பரிந்து பேசிய அரசு வழக்கறிஞர் திரு வேணுகோபால் அவர்களின் கோரிக்கையை ஏற்று திரு பூஷனுக்கு சிறை தண்டனை அளிக்காமல், ஒரு ரூபாய் அபராதமும் கட்டத தவறினால் 3 மாத சிறைத் தண்டனையும், 3 வருடம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தடையும் விதித்து உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், பேச்சுரிமை எல்லோருக்கும் உள்ள அடிப்படை உரிமை என்றாலும் மற்றவர் உரிமையும் மதிக்கப்படவேண்டும் என்றும் அவதூறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபரின் நடத்தையையும் பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.

திரு பூஷனின் செயலுக்காக அதிக பட்சமாக 6 மாதம் சிறைத் தண்டனை கூட விதித்திருக்கலாம். ஏற்கெனவே உயரநீதிம்ன்ற நீதிபதி ஒருவரே நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகி, சிறை தண்டனை அனுபவித்தார்.

இருந்தாலும், உச்ச நீதிமன்றம் இறங்கி வந்து, சிறைத் தண்டனை வழங்காமல் விட்டது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த லாக் டவுன் காலத்திலும் எப்படி உச்ச நீதிமன்றம் காணொளி மூலமாக வழக்குகளை விசாரிக்கிறது என்பதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தூண்கள். சட்டத்தை பாதுகாத்து, மக்களை சட்டமீறல்களில் இருந்து பாதுகாத்து, அரசு இயந்திரங்களினால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் தடுத்து, மக்களின் கடைசி நம்பிக்கையான புகலிடம் அது தான். அந்தப் பணியை செய்யும் நீதிபதிகளின் மீது அவதூறு பரப்புவது என்பது, நமக்கு நாமே குழியை தோண்டி கொளவது போல.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொது அறிவோடு விமர்சனம் செய்வது வேறு. அது குற்றமில்லை. ஆனால் அதை வழங்கிய நீதிபதிகளை, உள்நோக்கம் கொண்டதாகக் கூறி விமர்சிப்பது நீதிமன்றயத்தையே அவமதிப்பு செய்ததாகும்.இவை இரண்டிற்கும் இடையே உள்ளது மெல்லிய கோடு தான். அதை பாமரன் வேண்டுமானால் புரிந்துக் கொள்ளாமல் போகலாம். ஆனால் அறிவார்ந்த வழக்கறிஞர்களே செய்யும்போது? மன்ணிக்க முடியாத குற்றம்.

இருந்தும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் சிறிய அளவில் அபராதம் மட்டுமே விதித்தது, அதன் மாண்பையே காட்டுகிறது!!

பெரியோர்கள் என்றும் பெரியோர்களே!!I

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...