சனி, 12 ஜூன், 2021

பாகப்பிரிவினையில் நிலத்தை/வீட்டினை பிரிக்கும் போது கடைசி மகனுக்கு இந்த திசையும் மூத்த மகனுக்கு இந்த திசையும் பிரிக்கப்பட வேண்டுமென சட்டத்தில் ஏதேனும் திட்டவட்டமான வரையறை உள்ளதா? அப்படி பிரிக்கப்பட்ட சொத்தில் ஆட்சேபனை தெரிவிக்க நமக்கு உரிமை உள்ளதா?

 


அது போன்று சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை. அது சமூக வழக்கத்தின் அடிப்படையில் செய்வதுண்டு. ஒரு வீட்டின் தலை மகனுக்கு என்று சமூகம் சில கடமைகளை எதிர்பார்ப்பதுபோல, அவனுக்கு சில சலுகைகளை வழங்குகிறது. சொத்தில் பங்கு பிரிக்கும் போது தலைப்பங்கை கொடுப்பது, கூடுதலாக சில அடிகள் ஒதுக்குவது போன்றவற்றை இப்படி சொல்லலாம்.

ஒரு குடும்பத்தை தாய் தந்தைக்கு பிறகு அரவணைத்து செல்வது அவரே என்பதால், அப்படி எதிர்பார்க்கப்படுவதால் இவை செய்வதில் தவறில்லையே. எல்லாவற்றிற்கும் சட்ட அங்கீகாரம் எதிர்பார்க்கக்கூடாது. சமூக மரபுகள் சில காரணங்களுக்காக பின்பற்றப்படத் தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...