மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜூன், 2021

பொது நல வழக்குகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

 பொது நலன் வழக்கு, நம் நாட்டின் உதவியற்ற நபர்களுக்கு ஒரு சிறந்த வரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

பெரும்பான்மையான நீதிபதிகள் ஊக்குவித்துள்ளனர். அத்தகைய மனுக்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் பயனடைந்துள்ளனர்

பெரிய அளவில். அதிகார வர்க்கத்தினர் தமது கடமையை சரியான கண்ணோட்டத்தில் செய்யத் தவறும் போது பொது நலன் வழக்கு தான் மக்களை மீட்பதற்கு வருகிறது, நீதிமன்றங்களும் உண்மையான வழக்குகளில் போதுமான நிவாரணம். செய்கின்றன. அதே சமயம், சில அற்பமான மனுக்களும் தாக்கல் செய்யப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் நீதிமன்றங்கள் அத்தகைய மனுக்களை தள்ளுபடி செய்ய போதுமானவை

  பெருமளவில், பொது நல வழக்குகளின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மிகவும் பயனுள்ள, மலிவான மற்றும் விரைவான தீர்வாக பொது நல வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்பது ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றன. வேதனை அடைந்த தரப்பினருக்கு தானே முன்வந்து, உடனடி நிவாரணம் வழங்குகின்றன நீதிமன்றங்கள்..

அத்தகைய டைனமிக் வகை அணுகுமுறை சமூகத்தில் ஒரு நேர்மறையான சமிக்ஞையை அளிக்கிறது. இது மட்டுமல்ல ஒரு சாதாரண கடிதம் யார் அனுப்பினாலும், ​​மாண்புமிகு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், தேவையான சமயங்களில் உடனடியாக அந்த கடிதத்தை ரிட் மனுவாக மாற்றி விசாரணைக்கு எடுத்து கொள்கின்றனர்.

அரசாங்கமோ அல்லது எந்தவொரு பொது அதிகார நிறுவனமோ, அதன் கடமையில் தோல்வியுற்றால், நீதிமன்றங்கள் தான் மீட்புக்கு வருகின்றன

ஆனால் துரதிர்ஷ்டமாக, பொதுநல வழக்குகள் என்ற போர்வையில், தன்னை முன்னிலைப்படுத்தி, பிரபலமாகிக்கொள்ள அதை ஒரு வாய்ப்பாக பயன்படூத்தும் போக்கு அதிகரித்து உள்ளது..அதனால், நீதிமன்றங்களும் அது போன்ற வழக்குகளில், நீதிமன்றத்தின் நேரத்தை வீனடித்ததாக சொல்லி, செலவு தொகை கட்ட சொல்லி தள்ளுபடி செய்கின்றனர்.

தொற்றுநோய் இருக்கும் போதிலும் மத்திய விஸ்டா திட்டம் முழு வேகத்தில் தொடர்கிறது. புகைப்படம்: ட்விட்டர்

சமீபத்தில், மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்றம், மத்திய விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணிகளை கொரானா காலத்தில் நிறுத்தி வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி ஆனதோடு, ரூபாய் 1 லட்சம் அபராதம் கட்ட சொல்லி உத்தரவானது.

இந்த முடிவை எதிர்த்து மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சோஹைல் ஹாஷ்மி மற்றும் அன்யா மல்ஹோத்ரா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ரூ .1 லட்சம் செலவு விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை கேட்டுள்ளனர்,

மான்புமிகு உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அளித்த மேல் முறையீட்டில், "அரசாங்கத்தை கேள்வி கேட்க விரும்பும் குடிமக்கள் மீது, இது போன்ற உத்தரவுகள் போடப்படுவது , உண்மையான கவலைகளை எழுப்ப விரும்பும் குடிமகளை உறைய செய்யும்" என்றுள்ளனர்.

தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை கட்டுமானத்தை நிறுத்துமாறு மட்டுமே கோரியதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.   ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்றமோ, இந்த விஷயத்தை "திட்டத்தையே நிறுத்த" விரும்புவதைப் போலவே நடத்தியது என்றும். உயர்நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் ஆதாரமற்றவை, அதன் அவதானிப்புகள் பாதகமானவை, என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு விரைவிலேயே விசாரணைக்கு வரவுள்ளது.


பொது நல வழக்குகளால் ஏற்பட்ட சட்டத்திருத்தங்கள்

  1. மக்கள் பிரநிதித்துவ சட்டம், 1951

இந்த சட்டம் இயற்றப்பட்ட சமயம், ஒருவர் எத்தனை தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தான் இருந்தது.

இதை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கில், ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என கேட்க, அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், நீதிமன்ற உத்தரவு கேட்டது.. அப்போதைய டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால் பெஞ்ச், ரெண்டு தொகுதியில் போட்டியிட அனுமதிக்கலாம் என்று உத்தரவு இட்டார்.அதன்படியே சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.

2. தொழிலாளர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம்

இந்த நீதிமன்றங்கள் முதலில், சம்பந்தப்பட்ட செயலகத்தின் கீழ் தான் செயல்பட்டு வந்தது. இங்கு பணிபுரியும் நீதிபதிகளின் வருடாந்திர் ரகசிய அறிக்கையை, தொழிலாளர் துறை மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்களும் தான் எழுத வேண்டியிருந்தது. அந்த நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட துறை வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, நீதிபதியின் பணி குறித்து அவர்கள் அறிக்கை தயார் செய்வது, வெகு கால நெருக்கடியாக நீதிபதிகளுக்கு இருந்தது. அது பொது நல வழக்கினால் மாற்றப்பட்டு, அந்த நீதிமன்றங்கள் உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

அதே போல திஹார் ஜெயில் சீர்திருத்தங்கள் என்று பொது நல வழக்குகளின் நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் பொய்யான தகவலின் அடிப்படையிலோ அல்லது பொது நன்மை ஏதும் இல்லாத போது, போடப்படும் வழக்குகளில் அபரத்தம் மட்டுமல்ல, அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு அது போன்ற மனு போட தடை விதித்தும் சமீபத்தில் மான்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் நினைவில் இருக்கலாம்..

சனி, 12 ஜூன், 2021

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சாதிய வகுப்புவாத துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை தடுக்கும் சட்டங்கள் என்ன?

 இந்த சம்பவத்தை தானே சொல்றீங்க?

கடலூரிலுள்ள தீர்க்கு திட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரியை பஞ்சாயத்து கூட்டம் நடக்கும்போது தரையில் உட்கார வைத்தது சம்பந்தமாக செய்தி வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக புவனகிரி போலீசார் அந்த பஞ்சாயத்து செயலாளர் சிந்துஜாவின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக வார்டு மெம்பர் சுகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு பணியாளரான சிந்துஜா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே போல பஞ்சாயத் துணை தலைவர் மோகன் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

இது சம்பந்தமாக கிடைத்த தகவலின் படி, பஞ்சாயத் கூட்டங்களை பெரும்பாலும், துணை தலைவர் தான் நடத்தி உள்ளார் என்பதும், சுதந்திர தினத்தன்று கூட கொடி ஏற்றவிடாமல் பஞ்சாயத் தலைவர பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே தடுக்கப்பட்டுள்ளார் என்றும் தற்போது ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமையை செய்ய மற்றவர் தடுக்கும்போது, அதற்குண்டான தீர்வு காண வேண்டி அந்த மாவட்ட ஆட்சியரை அணுகி இருக்கலாம். இதற்கென்று ய்ர்கெனவே உள்ள சட்டங்கள் இருந்தும், அதனை நம்மவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெண் அல்லது பட்டியல் சாதியை சேர்ந்தவர் அந்த பஞ்சாயத்தின் தலைவராக தேர்ந்தேடுக்கப்படவேண்டும் என்பதால் தான், அது ரிசர்வ தொகுதியாக அறிவிக்கபடுகிறது. அப்படியிருந்தும், நிறைய இடங்களில் பெண்கள், தலைவராக தேர்ந்தேடுக்கபட்டாலும், தங்கள் கணவர், அல்லது குடும்ப உறுப்பினரை தன பணியை செய்ய அனுமதிப்பது என்று தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். அதே போலே, சாதியின் அடிப்படையில், தங்கள் பணி செய்ய மற்றவர் தடுக்கும்போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், அதை மேலிட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கவேண்டும்.

ஆனால், அதை செய்வதை விடுத்து, வாய் மூடி மவுனியாக இருப்பது, அவர் ஏற்று கொண்ட பணிக்கு நாணயமாக நடக்க வில்லை என்றே காட்டுகிறது. இனியாவது பொதுப் பணிக்கு வந்த பின், அதனை குடும்ப பணியாக மற்றவர் மாற்ற அனுமதிப்பதை தடுப்போம்…

வியாழன், 10 ஜூன், 2021

எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது ஊழலும் செய்யாமல் மக்களுக்கு இலவசமாக சேவை செய்பவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் எனும் சட்டம் வந்தால் இந்திய அரசியல் கட்சிகளின் நிலை என்னவாகும்? இந்திய நாட்டின் நிலை என்னவாகும்?

 உங்கள் கேள்வியிலேயே முரண் இருக்கிறதே?!

எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது மக்களுக்கு இலவசமாக சேவை செய்பவர்கள் ….

அப்படினா அவர்கள் வசதி படைத்தவர்களாகத் தான் இருக்கணும்…

பின்னே…

தன்னையும் தன் குடும்பத்தையும் பார்த்துக்கிற அளவிற்கு, வேற வேலைக்கும் போக வேண்டியில்லாத அளவிற்கு பணம் வேணுமே?

அப்ப வசதியில்லாதவன் தேர்தலில் நிற்க முடியாது..இது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துமே..இது சரியா?…

அப்புறம் வசதியிருந்தா மட்டும் போதுமா…ஊழல் செய்யாமல் இருக்கனும்கிறீங்க..

எந்த பணக்காரர் கருப்பு பணம் வச்சுக்காம, பொய் கணக்கு எழுதாம, பினாமி பெயரை சொத்து வச்சுக்காம, இருக்காங்க? அப்படியிருந்தா அவங்க பணக்காரரா இருக்கமுடியாது…😆

இப்ப சொல்லுங்க..இவ்ளோ முரண்பாட்டோட ஒரு சட்டம் எப்படி?

அதுக்காக எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது ஊழலும் செய்யாமல் மக்களுக்கு இலவசமாக சேவை செய்தவர்கள் இல்லாமல் இல்லை..

காந்திஜி, கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இப்படி சொல்லலாம்.அது பழைய கதை…

ஆனால் இப்போ அவங்களுக்கும் சாதி சாயம் பூசிட்டாங்க…

சட்டத்தை விடுங்கள்..

தனி மனித ஒழுக்கத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சுயமாக ஒருவர் முனவந்தால் தான் உண்டு…

ஒருவர் இருவராக..குழுவாக ..கூட்டாக..சேர சேரத் தான்..எந்த மாற்றமும் நடக்கும்..

இல்லையெனில்….

நல்லவர் ஒதுங்கி போக....நாடாள முன்வருபவர் மீதியுள்ளவர் தானே?

திங்கள், 7 ஜூன், 2021

ஊழல் வழக்கில் சிக்கிக்கொண்டு சிறை தண்டணை முடிந்த பின் தேர்தலில் நிற்க அரசியல் சட்டத்தில் இடம் உள்ளதா?

         மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை அடைந்த நபர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் நிற்க தடை உண்டு. ஆனால், நம் மனைவியையோ குடும்ப உறவினரையோ தேர்தலில் நிற்க வைத்து அவர்கள் பெயரில் நாம் ஆட்சி செய்வது என்பது நம் வரலாறு     இது தான் சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருவது என்பது.

படிமப்புரவு கூகிள்

        அதனால் இதில் சட்டத்தின் துணை கொண்டு தடுப்பதை விடுங்கள்.யார் நின்றாலும் அவர்கள் பின்னணி தெரிந்தும் இந்த கையை நீட்டிக்கொண்டு, அந்த கையால் ஓட்டுப  போடும் நம்மவர்களை என்ன சொல்வது?

        மேல் நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையே வேறு. ஒரு கட்டுப்பாடற்றது. வாழ்க்கை துணையை மாற்றுவது அங்கு சர்வ சாதாரணம். மற்ற ஒழுங்கு குறித்துக் கேட்கவே வேண்டாம். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு கொண்டவர்கள்.

        ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது எந்த ஒழுங்கீனத்தையும் ஏற்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு தெரியும்.

"மன்னன் எவ்வழியோ மக்களும் வழியே என்று.."

        அனபாய சோழன் சீவக சிந்தாமணி என்னும் சமண நூலை படிக்கிறான்..அதனால் மனம் மயங்கி, ஆடல் பாடல்களிலேயே நேரத்தை கழிக்கிறான்..இதன் காரணமாக நாட்டு மக்களும் கேளிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள் என்பதால், அவரின் முதல் மந்திரி வேண்டுகோளுக்கு இணங்க அதை நிறுத்தினான் என்றும் அப்படியாயின் அறநெறி கற்பிக்கக்கூடிய நூல் எழுத அவன் வேண்ட, அவ்வாறு பின்னால் சேக்கிழார் எனப்பட்ட அந்த மந்திரியும் எழுதியது தான் பெரியபுராணம் என்று சொல்கிறது சேக்கிழார் புராணம்..இப்போதெல்லாம் முதல் மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?😁

        இன்றைய ட்ரெண்டிங்கா, எதிரில் யாரை பார்த்தாலும் கேட்கும் கேள்வி "யாருக்கு ஒட்டு போடுவது?"

        எனக்கு அரசியல் பிடிக்காது என்றாலும் ஓட்டு போடும் ஜனநாயக கடமையை ஆத்த வேணுமே…இதிலே இருக்கிற கஷ்டமும் நஷ்டமும் நமக்கே என்பதால்…😀

நாம என்ன ஹாயா எங்கியோ உட்கார்ந்துக் கிட்டு, இருக்கிற நாட்டிற்கு விசுவாசமாக இருந்துக்கிட்டு , இங்கேயிருக்கிற அரசியலை கிண்டல் பண்றவங்களா 😁

  1. ..….அங்கேயிருந்து வெளிவரும் வெளிநாட்டு இதழ்களில், இந்த என்.ஆர்.ஐக்கள் .எழுதும் கட்டுரைகளை படிச்சா தெரியும்..அப்படியே ஆங்கிலத்தில்… .இங்கேயிருக்கிற அரசியலை கிண்டல் பண்ணிக்கிட்டு இந்தியாவில் இருக்கும்போது, ஏதோ மூச்சு முட்டி போய் கிடந்த மாதிரி எழுதுவாஙக…படிக்கிறப்பவே கஷ்டமா இருக்கும்.  

        ரொம்ப காலம் முன்னாலே "ஹிந்து"வில் "யாருக்கு ஒட்டு போடுவது?" என்ற இந்த தலைப்பில் புஷ்பா பார்கவான்னு ஒருத்தர் எழுதினார்.அது அன்னிக்கு மட்டுமில்லே இன்னிக்கும் பொருந்தும்ங்கிறதுனாலே அதை சுருக்கமா சொல்றேன்.

        நம்ம கிட்டே வோட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் முப்பது தகுதிகள் இருக்கானு பார்த்து, யார் அதில் அதிக மார்க் எடுக்கிறங்களோ அவர்களுக்கு வோட்டு போடுங்கன்னு சொல்றார்.

        என்னென்ன தகுதிகள்?

  1. இரண்டு மொழிகளாவது எழுதப் படிக்கத் தெரிந்தவராக.
  2. சுய சம்பாத்யம் கொண்டவராக.
  3. கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யாதவராக
  4. சம்பாதித்த சொத்து எப்படி வந்தது என்கிற தெளிவுடன்
  5. சேர்த்திருக்கும் சொத்து சமபாத்தியத்துக்கு பொருத்தமாக
  6. 10 முறையாவது தனக்கென்று இல்லாமல் பிறருக்கு உதவி செய்தவராக
  7. மரியாதை, அடக்கம், சிநேகம்(சினேகா இல்லே ..😁), நவீன சிந்தனை, பாரம்பரியத்தில் நம்பிக்கையுடன்
  8. ஜனநாயகம், சோஷலிசம், மத சார்பின்மை, விஞ்ஞான முறையில் அணுகுமுறை இதிலெல்லாம் நம்பிக்கை கொண்டவராக
  9. மனைவி குழந்தைகளை அடிக்காதவராக
  10. வரதட்சனை கேட்காதவராக, வாங்காதவராக,
  11. லஞ்சமே வாங்காதவராக
  12. நல்ல கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் தைரியம் உள்ளவராக
  13. தன்மானம் உள்ளவராக, மற்றவர் காலில் விழாதவராக
  14. சக மனிதர்கள் மேல் மரியாதை உள்ளவராக
  15. அணுகுவதற்கு எளியவராக
  16. தொகுதியில் பத்து குடும்பமாவது தெரிந்தவராக
  17. அரசு கொடுத்த வீட்டை பதவி போனவுடன் காலி செய்பவராக
  18. அளிக்கப்படும் சலுகைகளுக்கு பணம் கொடுப்பவராக, அவருடைய பில்களை ஒழுங்காக கட்டுபவராக
  19. தொகுதியில் உள்ள சில பிரச்சினைகளையாவது முழுதும் புரிந்து வைத்திருப்பவராக
  20. நன்றாக பேசக்கூடியவராக, மக்களுக்கு பதில் சொல்லாக கூடியவராக
  21. நேரத்திற்கு கூட்டத்திற்கு வருபவராக😀
  22. மற்ற புத்திசாலி மனிதர்களை பார்த்து பயப்படாதவராக
  23. புகழ்ச்சிக்கு மயங்காதவராக
  24. சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ மைக், புத்தகம், பெஞ்ச், நாற்காலியை தூக்கி எறியாதவராக😆, சண்டை போடாதவராக
  25. பினாமி சொத்து இல்லாதவராக
  26. சும்மா ஷாப்பிங்கிற்காக வெளிநாடு செல்லாதவராக, தன் வேலைகளை தானே செய்பவராக
  27. இட ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதை ஆதரிப்பவராக
  28. ஜோசியர்கள், சாமியார்கள் பேச்சை கேட்டுச் செயல்படாதவராக
  29. இந்திய அரசியல் சாசனத்தை நன்றாக அறிந்தவராக
  30. மரியாதையை கேட்டு வாங்குபவராக இல்லாமல் தானாக பெறக் கூடியவராக

இருக்க வேண்டும்.

        இந்த 30 தொகுதிகளில் எந்த வேட்பாளருக்கு அதிக மார்க் போடுகிறோமோ அவருக்கு வோட்டு போடலாம் என்கிறார்.

        இது ஒனறில் கூட தேருமானு தெரியலைன்னு சொன்னா…😁

        நம்மை கடவுளாலே கூட காப்பாற்ற முடியாது😆


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...