"மனைவி" என்ற ஸ்தானத்தை அடைபவளுக்கு தான் எத்தனை பெயர்கள்..
கிரிஹினி இல்லத்தரசி, மதி மந்திரி,, சகி [அவரது கணவரின் தோழி]., கிரிஹ லக்ஷ்மி, அர்தாங்கினி (அவனது பாதி) ,சமராஜி என்று. ..
அவள் தான் தர்மம், அர்த்த மற்றும் காம சாஸ்திரத்தின் ஆதாரம் மட்டுமல்ல, மோட்சத்தின் மூலமும் கூட என்கிறது . மகாபாரதம்.
அவள் தான், தனது கணவரின் ஆத்மா என்கிறது இராமாயணம்.
எல்லாம் சரி தான்…ஒரு குடும்பத் தேரின் இரண்டு சக்கரங்களான கணவனும் மனைவியும், காலப்போக்கில் ஒரு கருத்து வேறுபாட்டிற்குள் நுழைந்தால்? .
அது ஊடல் என்றில்லாமல், தீர்க்க முடியா சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் போது,?
அந்த விவாகம், ரத்தாகிறதோ இ8ல்லையோ, தன்னைத் தானேபராமரிக்க முடியாத அவளையும் அவன் குழந்தைகளையும் பராமரிப்பதற்கான சட்டபூர்வமான உரிமைகளை இந்து திருமணம் பாதுகாக்கிறது என்று சட்டம் சொல்கிறது.
இந்து திருமண சட்டம்1955, இந்து வாரிசு சட்டம் 1956, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் இந்து பாதுகாவலர் மற்றும் வார்டு சட்டம் 1956 என்று ஏகப்பட்ட சட்டங்கள், பெண்ணிற்கான பராமரிப்பைப் பற்றி தான் பேசுகிறது
எது பராமரிப்பு?
இந்திரா காந்தி சொன்னது போல, கானா, "கப்டா அவுர் மகான்"( உணவு, உடை, உறையுள்) இத்தோடு, மருத்துவச் செலவு,, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணமாகாத மகளின் திருமணத்திற்கான செலவுகள்,.. இப்படி பட்டியல் இடுகிறது இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 பிரிவு 3
இந்த சட்டங்களின் நோக்கம் தான் என்ன?
"கணவனால் பிரிந்து, தனித்து வாழும், மனைவி மற்றும் அவள் குழந்தைகளை வறுமையிலிருந்து பாதுகாப்பது தான், பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை பொருள்" என்று 2020ல் தங்கள் முன் வந்த ஒரு வழக்கில், விளக்குகிறார்கள் நீதிபதி மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் தங்கள் 67 பக்க தீர்ப்பில்..
இந்த பராமரிப்புக்கான உரிமையே ஒரு பிரிக்கப்படாத குடும்பத்தின் கருத்திலிருந்து தான் வருகிறது.
இன்று வரை ஒரு "இந்துக் குடும்பம்" என்பது ஒரு கூட்டு குடும்பமாகத் தான் பார்க்கப்படுகிறது.ஒரு பெண்ணை தங்கள் வீட்டுப் பையனுக்கு பார்த்து, நிச்சயம் செய்து, மணமுடித்து கூட்டி வரும் போது, அவளை பராமரிக்கும் கடமையும் அவர்களுடையது தானே?..
வரும் பெண், . புகுந்த வீட்டினருக்காக உழைக்கக் வேண்டும்.. ஆனால், தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடியாத மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் கணவன் இறந்தால், அவளுடைய புகுந்த வீடு அவளை பராமரிக்க கடன்பட்டதா?
இதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
திருமணம் ஆன தருணத்தில் இருந்து, பிரம்மச்சாரி நிலையிலிருந்து, கிரகச்சாரி ஆகிறானே..அவன் கடமை என்ன?
"வயதான தாயும் தந்தை, கற்புள்ள மனைவி, குழந்தையையும் , நூறு தவறான செயல்களைச் செய்தாலும் பராமரிக்கப்பட வேண்டும்" என்கிறார் மனு.
தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம், 1956ன் பிரிவு 18, இது பற்றி பேசுகிறது..ஒருவன் தன் மனைவியை அவள் வாழ்நாள் வரை பராமரிக்க வேண்டும்.." என்று.
ஆனால் கருத்து வேற்றுமை ஏற்பட்டால், பெண் தான் தன் குழந்தைகளுடன் பராமரிப்பு ஏதுமின்றி போகிறாள்..
விவாகமே ரத்து ஆனபிறகும் ஏன் மனைவியை பராமரிக்க வேண்டும்? ..இது நிறைய ஆண்களின் கேள்வி…
இந்து திருமணங்கள் ஒரு ஒப்பந்தம் என்ற முறையில் இல்லாமல் ஒரு புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது…
பஞ்சபூதங்களையும், அழைத்து, தேவர்கள் சாட்சியாக, அக்கினியை வலம் வந்து, உன் சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வேன் என்று வாக்கு கொடுத்தது மறந்ததோ?
நிறைய சம்பந்தங்களில், வீட்டிற்கு ஒரே பிள்ளை..சொத்து உண்டு"என்று திருமணம் செய்து வைப்பார்கள்..பிரச்சினை வந்த போது, "இது என் பெயரில் உள்ள வீடு.இதில் உனக்கு உரிமையில்லை" என்பார் மாமனார். குடியிருக்க வீடு கூட இல்லாத நிலை வரும் அவளுக்கு..இப்போது தான், , புகுந்த வீட்டில் குடியிருக்கும் உரிமை வந்து விட்டது!!
அதே போல, இந்த கணவன் "தனக்கு வேலை எதற்கும் போகவில்லை..தன்னையே பராமரிக்க முடியாத போது, இவர்களை எப்படி? "என்பார்..
"கணவருக்கு எந்தவொரு வருமான ஆதாரமும் இல்லை என்ற வேண்டுகோள், வைக்கப்பட்டது. மனைவியைப் பராமரிப்பது தார்மீகக் கடமையாகும், உடல் மற்றும் கல்வித் தகுதிகளுடன் அவர் இருக்கும்போது, இந்த கடமையிலிருந்து அவரை விடுவிப்பதில்லை ”என்று சொன்ன உச்ச நீதிமன்றம் ."பிச்சை எடுத்தாவது காப்பாற்ற வேண்டும்" என்று , இறுதியாக சொல்லிவிட்டது..
.கணவனுடன் சேர்ந்து வாழும்போது தான் அவளை அவன் பராமரிக்க வேண்டும்.அதுவும் குடித்தனம் நடத்த கூப்பிடும் போது, கண்டிப்பாக மறுக்க கூடாது, அப்படி செய்தால், பராமரிப்பதற்கான கடமை கணவனுக்கு இல்லை என்னும் சட்டம், சில விதி விலக்குகளை சொல்கிறது..
- அவன் அவளை விட்டு இரண்டு ஆண்டு காலமாக பிரிந்து விட்டான்.
- அவனோடு சேர்ந்து வாழ்ந்தால், அவளுக்கு காயம் ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சும் அளவிற்கு, அவன் கொடுமை செய்துள்ளான்
- அவனுக்கு தொழுநோய் உண்டு.
- இன்னொரு மனைவி உள்ளாள்.
- இன்னொரு பெண்ணுடன் சேர்த்து ஒரே வீட்டிலோ அல்லது தனியாகவோ வசிக்கிறான்.
- .இன்னொரு மதத்திற்கு மாறிவிட்டான்.
- வேறு ஏதேனும் நியாயமான காரணங்களால் பிரிந்து வாழல்
மேற்சொன்ன காரணங்களால், மனைவி தன் பராமரிப்பு உரிமையை விட்டுக் கொடுக்காமல், தனித்து வாழலாம்.அது போன்ற சமயங்களில், அந்த ஆணுக்கு அவளை பராமரிக்கும் கடமை உண்டு1
மேலே சொன்ன காரணங்களில் ஏதேனும் ஒன்றை சொல்லிவிட்டு, அதை அவள் நிரூபிக்கவில்லை என்று ஜீவனாம்சம் கொடுக்க மறுக்க முடியாது. ஏனென்றால் எதிலும் வரவில்லை என்றாலும், "எல்லா குண்டாவும் அண்டாவுக்குள் அடங்கிவிடும்" என்பது போல, கடைசி காரணத்திற்குள் அடங்கிவிடும்..!!
அதே சமயம், மனைவி, ஒழுக்கம் தவறி வாழ்ந்தாலோ, அல்லது வேறு மதம் மாறினாலோ, மறுமணம் புரிந்தாலோ அவளை பராமரிக்கும் கடமை கணவனுக்கு இல்லை.பிரிவு 3
மனைவி பராமரிப்பு தொகை கேட்டு நீதிமன்றத்தில், மனு போட்டால், கணவனின் அந்தஸ்து, வருமானம் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு, மனுவில் இறுதி முடிவு எடுக்கும் முன்பே, இடைக்காலமாகவும் பராமரிப்பு உத்தரவு போடுவர்.
இப்பொதெல்லாம் நிறைய திருமணங்கள் குறைத்த காலமே நீடிக்கிறது என்பதால், அந்த காலக்கட்டத்தை மட்டும் கணக்கில் கொண்டு, நிரந்தர ஜீவனாம்சம் என்று ஒரு தொகை நிரணயம் செய்து கொடுக்கப்படுகிறது.அவள் புகுந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை தரம் கொண்டு இது முடிவு செய்யப்படுகிறது..
இந்த உத்தரவின் படி, ஜீவனாம்சம் கொடுக்க வில்லை என்று கணவனின் தனிப்பட்ட சொத்து எதையும் வைத்துக் கொள்ள முடியாது
இது முஸ்லீம் சட்டத்தில் உள்ளதற்கு எதிரானது
மனைவியுடன் சேர்ந்து வாழாததால், விவாகரத்து கிடைத்தால், தன் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.
ஆனால் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டாள் என்பதற்காக, விவாகம் ரத்து ஆகும்போதும், ஏன் அந்த முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தானே நிறைய பேரின் ஆதங்கம்…?
இந்து திருமண சட்டத்தின் படி, "மனைவி" என்பது, "விவாகரத்தான மனைவி"யையும் குறிக்கும்.
புகைப்பட உதவி: கெட்டி இமேஜஸ் / ஐஸ்டாக்ஃபோட்டோ
விவாகரத்தான மனைவிக்கு , கணவருடன் சேர்ந்து வாழும் கடமை கிடையாது.
அவள் தனியாக குடியிருக்கிறாள்..என்னோடு சேர்ந்து வாழ மறுக்கிறாள்..அதனால் நான் பராமரிக்க முடியாது" என்று ஆண் வாதிடுவது உண்டு
தகுந்த காரணம் இன்றி, குடித்தனம் செய்ய மனைவி மறுத்தாள் என்பதால் தான், விவாகரத்து கிடைத்தது என்றால், அதை நிரூபித்து, ஜீவனாம்சம் கொடுக்க விலக்கு பெறலாம்.3
ஒரு வழக்கில், கணவரிடம் பிரிந்து செல்கிறார் மனைவி.. தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உத்தரவு பெறுகிறார் கணவர்.மனைவி அதை மதிக்காமல் இருக்கிறார். அதே சமயம், அவர் கு.வி.மு.ச.125 கீழ், மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு மனு செய்கிறார். இந்த காலத்தில், கணவர், விவகாரத்து கேட்டு மஸ்ன்னு செய்கிறார்..மனைவி ஆஜராகததால், அவர் கேட்டது கிடைக்கிறது.. இதை காரணம் காட்டி, மாஜிஸ்திரேட்டும் மனுவை தள்ளுபடி செய்கிறார்.மேல்கோர்ட்டில், "மனைவி" என்பது விவாகரததான மனைவியும் தான், ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவு ஆகிறது.இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம்.வருகிறார் கணவர்..கு.வி.மு.ச.125(4) படி தகுந்த காரணம் இன்றி, குடித்தனம் செய்ய மறுத்த மனைவிக்கு அந்த உரிமை இல்லை என்பதை சொல்லி, அதனால் தானே விவாகரத்து உத்தரவே ஆகியுள்ளது, என்பதால், மனுதாரருக்கு ஜீவனாம்சம் கிடையாது என்று தீர்ப்பு அளித்தது!!
ஒன்றிரண்டு இது போல நடப்பது உண்டு!!
ஆனால், இந்து திருமண சட்டம்1955, இந்து வாரிசு சட்டம் 1956, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் இந்து பாதுகாவலர் மற்றும் வார்டு சட்டம் 1956 இப்படி ஏராளமான ஜீவனாம்ச சட்டங்கள் ஏராளமாக இருந்தபோதிலும், பொதுவாக, 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய ஜீவனாம்ச வழக்குகள், வருடக்கணக்கில் நடப்பதையும்., பெண்கள் மோசமான திருமணத்திற்குப் பிறகு வழக்கு முடிவடையாமல் திணறி, .பல ஆண்டுகளாக வெறுங்கையுடன் இருப்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்..4
இது தான் நிதர்சனம்..இந்தியாவின் ஆண் ஆதிக்க சமுதாயம், ஒரு திருமணமான பெண்ணின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு அளவைக் கூட அனுமதிக்காது. என்பதையும், அரசியலமைப்பு சட்டத்தில் கட்டளையிடப்பட்ட "சமத்துவம்" என்பது, மேடைப்பேச்சுசுளில் மட்டுமே உல்ளது..என்றும் தோன்றுகிறது தானே?
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக