சனி, 12 ஜூன், 2021

என் கணவர் என்னை பிரிந்து 3 மாதங்கள் ஆகிறது. கோர்ட்டில் கேஸ் உள்ளது.இந்த நிலையில் தினமும் அவரிடம் கெஞ்சி என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்ற கனவு வருகிறது. தினமும் அதே கனவு வேறு வேறு இடங்களில் நிகழ்வது போன்று வருகிறது. என்ன காரணம்?

 


அன்பை பிச்சையாக கேட்பது போன்ற கொடுமை உலகில் எதுவும் இல்லை.நீங்கள் அவர் வாழ்க்கையில் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலையில் இருப்பவரிடம் அன்பை இரந்து பெற முயலாதீர்கள். நாம் விரும்புவரால் நிராகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஒரு ஆட்கொல்லி. தயவு செய்து அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் கவனத்தை திருப்பி, உங்கள் கல்வி தகுதியை உயர்த்தும் வழி தேடுங்கள். உங்கள் நிலைக்கேற்ப வேலை தேடுங்கள். இவை இரண்டிலும் சிறப்பாக முடிக்க முனைப்பு காட்டுங்கள்.உங்கள் மீது பிரியம் இருந்தால் அவரே உங்களை தேடி வருவார்.வாழத்துக்கள்.💪

கனவு ஏன் வருகிறது என்று நமக்குத் தெரியும் தானே..நம் அடி மனதில் பதிந்துள்ள ஆசைகள், ஏக்கங்கள் தான் கனவாக வருவது.

தன்னை தன் கணவன் எப்படியாவது ஏற்றுக கொள்ள வேண்டும் , நிராகரித்து விடக் கூடாது என்ற அடிமனத்தின் ஆசையே இந்த கனவுகள்.

ஆனால் அன்பு என்பதன் அடிப்படையே அது பிரதிபலிக்க வேண்டும் என்பதே. நீங்கள் கொடுத்த அன்பு அங்கு பிரதிபலிக்கவில்லை என்னும்போது, அது கணவணா கல்லா ?

அந்த காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று… புல்லில் என்ன இருக்கிறது? ஒன்றுமே கிடையாது. கல்லும் அதே நிலைதான்.அந்த பொருளில் தான் அந்த சொல்வடையும் வந்திருக்கும்..

அந்த ஒன்றுமேயில்லாத கணவனுக்கு சமூகத்தில் அங்கீகாரம் ஏற்படுத்தி கொடுப்பவள் இல்லாள் தான். இல்லாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவர் தான்.

மாடு பிடிப்பவர்களை பார்த்திரூக்கிறீர்களா?ஜல்லிக்கட்டில் பார்க்கலாம்.அது ஓடும்போது பிடிக்கமாட்டார்கள்.அது கொஞ்ச தூரம் ஓட விட்டு, அதனோடு ஓடி, பிறகு பிடிப்பார்கள்.கல்யாணம் செய்வதை மூக்கனாங்கயிரு என்று சொல்வது அந்த அர்த்தத்தில் தான்.

அதே போல தான் கணவனை சிறிது காலம் விட்டு பிடியுங்கள்.அந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் தகுதியை உயர்த்துங்கள். எத்தனை சினிமாவில் வந்துள்ளது…கோபுரங்கள் சாய்வதில்லை..போல

.நம் நிலை உயரும்போது, தரமும் கூடும். அங்கே எதிரொலியும் தெரியும்….. முடிவு எடுப்பது உங்கள் கையில் வரும்.

முயலுங்கள்.வானம் வசப்படும்!!💐💐

இன்னொரு முக்கிய விஷயமும் சொல்லியாக வேண்டும்..அறிவுரை என சொல்ல ஆயிரம் பேர் வரலாம். நான் வாழ்ந்தவன், வயது முதிர்ந்தவன் எனலாம்.ஆனால் அவர் மனைவியே அவர் குறித்து அதுவும் அவர் இளமையாக இருந்தபோது எவ்வளவு கேவலமான கருத்துக் கொண்டிருந்தார் என்ற வாக்குமூலத்தையும் பார்க்க வேண்டும். தன் மீது தன் மனைவியே மதிப்பு வைக்கவில்லை என்னும் போது, அதுவும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள சொல்வது உசுப்பி விடுவது என்றும், மன்னிப்பை கேள் என்றும் ஊருக்கு உபதேசம் செய்வது…..

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...