அரசு வேளையில் ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு வேளையில் ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகள், டி.என்.பி.எஸ்.சி-யிலும் இதே நிலைதான் என்று அரசு உத்தரவு பிறப்பித்தால் எப்படி இருக்கும்?

 அந்த உத்தரவு வந்துருச்சுங்க..வந்துருச்சு…😁😂

இதனால சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்

இனிமே ஒண்ணாப்புலேயிருந்து படிப்பு முடிக்கிறவரை தமிழ் வழியிலே படிச்சவங்களுக்கு

அது வேற எங்க சொல்லித்தராங்க அரசு பள்ளி, கல்லூரியை விட்டா…😀

இனி தமிழ்நாடு அரசு பணி தேர்வில், அந்த பணிக்கான கல்விதகுதியை, தமிழ்வழியில் மட்டுமே முடித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடுங்கோய்ய்…,😂

7 டிசம்பர் 2020 …அன்னிக்கு தான் நம்ம கவர்னர் அந்த அறிவிப்பாணையிலே ஆட்டோகிராப் போட்ட நாள்.

தமிழ் வழி பயின்ற நபர்கள் நிலை சட்டம், 2010ல் திருத்தம் செய்யப்பட்டு இ ந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

  • இது அடுத்து நடக்கும் டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கும் பொருந்தும்.
  • அடிப்படை கல்வியிலிருந்து தமிழ் வழியாக படித்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
  • இதில் யாரும் தகுதி பெறவில்லையென்றால், மற்ற தகுதியானாவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இது போன மார்ச் 2020லே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இத்தனை நாள் கிடப்பில் கிடந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், பொதுநல வழக்கு போடப்பட்ட பின்பு தான் விடிவுக்காலம் பொறந்திருக்கு…

படிமப்புரவு கூகிள்

இத்தனைக்கும் 2500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை செம்மொழின்னு மத்திய அரசு 2004-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி அறிவிச்சதுக்குப் பிறகு 2010ல் தமிழக அரசு ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தியது ஞாபகம் இருக்கா?

  • உலகம் முழுவதும் உள்ள சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் செம்மை, இலக்கியம், இலக்கணம் போன்றவை குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர்.
  • மாநாட்டின் நிறைவு விழாவான 27-ந் தேதி நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் ஒன்று.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே😂

தமிழ் எங்கள் உயிர்ன்னு சொன்னா மட்டும் போதுமா?

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலையிலோ, மற்ற மாநில அரசுகளின் வேலையிலோ, தனியார் துறையிலோ மிகக் குறைவான வாய்ப்பு என்ன …வாய்ப்பே இல்லைராஜா🤣

அதனால் மாநில அரசுப் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது.

இல்லையா பின்ன.?

சோ. ..(தமிழுங்க 😂) தமிழக அரசு அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் தமிழில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆய்வு செய்தது.

அதில், உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்(அரசு நடத்துவது தான்) பாடங்கள் தமிழ் வழியில் தான் நடத்தப்படுவது உறுதியானதால், மாநில அரசின் கீழ் உள்ள காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும்போது அதில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கணும்னு தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.

2010லேயும் இதே போல ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தாங்க இல்லையா?

மாநில அரசின் நிர்வாகம் ஒளிவுமறை இல்லாம வெளிப்படையாக நடைபெறவும், சாதாரண மக்களும் அரசு நடக்கும் முறையை தெரிஞ்சுக்கனும்ன்னு நடைமுறைகள், தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த சட்டம் இயற்றப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், மற்ற சட்டங்களுக்கும் உட்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...