சனி, 12 ஜூன், 2021

வக்கீல் நோட்டீஸ் என்றால் என்ன? இதை அனுப்புவதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு?

 2வது கேள்வியின் பதில், 1ம் கேள்வியிலேயே உள்ளதே😀. வக்கீல் நோட்டீஸ், வக்கீல் தான் அனுப்பனும். ..

நம்ம எல்லோர் வீட்டிலேயும் ஒரு வக்கீல் இருப்பார். ஏன் நமக்குள்ளேயே இருக்கத்தானே செய்றார்.. உண்மை தானே நாம செய்யுறதுக்கெல்லாம் மத்தவங்க கிட்டே நியாயம் கற்பிப்பதாகட்டும், அறிவுரைன்னு குடுக்க குதிச்சுக்கிட்டு முன் வர்றதாகட்டும் நம்மை போல வருமா?

  1. நான். :கண்ணம்மா ..! 
  2. என்னோட M. V.கம்ம்னு கிட..(சம்சாரம் அது மின்சாரம் கமலா காமேஷ், மனோரமா டயலாக்கை நினைவுபடுத்திக்கோங்க) 

அதனால்.சாதாரனமாக இந்த லீகல் நோட்டீசை யாரும் அனுப்ப அதிகாரம் உண்டு..(நமக்கு இல்லாததா..☺)

வக்கீல் நோட்டீசுக்கும் நாமே அனுப்பும் லீகல் நோட்டீஸுக்கும் வித்யாசம் என்ன?

  • வக்கீல் அதை ரெடி பண்ணாவிட்டாலும்,☺ அதிலே அவர் கையொப்பம் இருக்கனும்
  • அது அவர் முகவரியுடைய கடிதத்தாளில் (லெட்டர் பேட்) இருக்கும்.

நாமே அனுப்புவதை விட வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதே ஏன் சரியானது?

  • ஒரு முறை இதை அனுப்பிவிட்டால், திரும்ப வாங்கி, மாற்றங்கள் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • அதனால் தான் லீகல் நோட்டீசு தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லைனா, வழக்கறிஞரைக் கொண்டு அனுப்புவது நல்லது.

சட்டப்பூர்வ அறிவிப்பு ஏன் அனுப்பவேண்டும்?

  • இந்த அறிவிப்புங்கிறதை இறுதிக்கட்ட எச்சரிக்கைன்னு சொல்லலாம்.ஒரு நபரோ அல்லது நிறுவனத்தினுடைய தொடர்பையோ முழுசா துண்டிக்கிறதுக்கு முன் அவங்களால் ஏற்பட்ட மனக்குறைகளை தீர்ப்பதற்கு பேசித் தீர்ப்பதற்கு ஒரு கடைசி வாய்ப்பு அது.
  • ஒருவரின் உரிமை, இன்னொருவரால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியும் அவர் சரி செய்யவில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். அவர் அது குறித்து தனக்கு தெரியாது என்று சொல்லக் கூடாது என்பதற்கு தான் இந்த அறிவிப்பு அனுப்பப்படுகிறது.
  • அதனாலே இதை முதல் கட்ட சட்டநடவடிக்கைன்னும் சொல்லலாம். இதோட அடிப்படை நோக்கம், சம்பந்தப்பட்ட பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு, காரணமான நபர் பாதிக்கப்பட்ட நபரிடம் பிரச்சினை குறித்துப் பேசித்தீர்த்து இழப்பீடு அளித்து பிரச்சினையை சுமூகமாக முடிக்க அளிக்கும் கடைசி வாய்ப்பு.
  • வழக்கு தொடர்வதாக தீர்மானித்தால், அதற்கு முன்பு இந்த அறிவிப்பு அனுப்புவது நல்ல தொடக்கம். Start the music…
  • இதுலேயிருந்து அனுப்பினவரோட தெளிவான நோக்கம் என்னவென்று தெரிந்துச்சுக்கலாம்.
  • நீதிமன்றத்தின் தலையீடின்றி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இரு தரப்பினருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இது.
  • ஒருவருடைய தவறான செயல்பாடு அதை தெரிந்து செய்திருந்தாலோஅல்லது தெரியாமல் செய்திருந்தாலோ அவர்களால் ஏற்பட்ட சேதங்களை அவர்களுக்கு நினைவூட்டவும இது பயன்படுது.

ஒருவர் எந்த சூழ்நிலையில் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பலாம் ?

  • சம்பளம் வழங்குதல், பணி ஒப்பந்தத்தை மீறுதல், நியாயமான காரணமின்றி பணியில் இருந்து நீக்கப்படும் போது
  • வேலை ஒப்பந்தப்படி குறிப்பிட்டுள்ள விதிமுறை மீறுதல், மனிதவள கொள்கைகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு அனுப்பி பணியில் இருந்து நீக்கலாம்.
  • தனிப்பட்டவர் மீது வழக்கு போடும் போது, இந்த அறிவிப்பு அனுப்புவது நல்லது. முக்கியமாக காசோலை மோசடி வழக்குகளில் இது முக்கியமான ஆவணங்களில் ஒன்று. காசோலை திரும்ப வந்தால், அந்த தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் இதை அனுப்பனும். அறிவிப்பு அனுப்பி 15 நாட்களுக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் வழக்கு தொடரலாம்.
  • உரிமை கொண்டாடுவதில் மோதல், சொத்து , அடமானம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் போன்ற சொத்து பிரச்சினைளுக்கு
  • குடும்ப சண்டை, குழந்தைகளை வீட்டுச்சிறை பிடிப்பு, விவாகரத்து போன்ற பிரச்சினைக்கு காரணமான குடும்ப உறுப்பினர்களுக்கு
  • தவறான தயாரிப்புகளை விநியோகம் செய்யும், தவறான சேவைகளை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது
  • இந்த அறிவிப்பு, நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளிலும் முக்கியமானது.

எப்படி அனுப்புவது?

நமக்கு இன்னொருவரால் ஏற்படும் சட்ட ரீதியான குற்றங்ங்களை சுட்டிக் காட்டி, அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் (பொதுவாக 15 நாட்கள்)சரி செய்யுமாறும், தவறும்போது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்துவதே இந்த அறிவிப்பு..அதை பதிவு தபாலில் தான் அனுப்ப வேண்டும்.

வக்கீல் நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு போடமுடியாதா?

  • அரசாங்கத்திற்கு எதிராக போடும் வழக்குகளில் இந்த அறிவிப்பு அனுப்பப்படுவது கட்டாயம். .சிவில் நடைமுறை விதியின் 1908 பிரிவு 80ன் கீழ் பொது மக்களோ அல்லது அரசு அதிகாரியோ யார் தங்களின் பணியின் போது சட்டஉரிமைகளை மீறுகிறார்களோ அவர்களுக்கு இது அனுப்பப்படும்.ஆனால், சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குள் அனுப்பிவிட வேண்டும் .
  • ஆனால் அவசரம் கருதி, அந்த நோட்டீஸ் அனுப்பாமேலே வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். பெரும்பாலும் அந்த அனுமதி கொடுத்து விடுவர்.

15 நாட்கள் காலக்கெடு கணடிப்பானதா?

ஆமாம். வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, அதை அவர் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 15 நாட்கள் பொறுத்தே எந்த நடவடிக்கையும் அவருக்கு எதிராக எடுக்க வேண்டும். சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக அவர் கட்சிக்காரர் போட்ட வழக்கில்(இந்த வழக்கைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்), அனுப்பட்ட வக்கீல் நோட்டீஸில் வழங்கப்பட்ட 7 நாட்கள் சரியானதல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது

குற்ற வழக்குகளில் இந்த அறிவிப்பு தேவையா?

  • சிவில் சார்ந்த வழக்குகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • குற்றவாளிக்கு எதிராக மாநிலத்தால் எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைக்கு செல்லுபடி ஆகாது. அதனால், அதுக்கு Legal Notice) அவசியமற்றது

அனைத்து வழக்குகளுக்கும் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற அவசியமில்

  • சட்டரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க. அறிவிப்பு பெற்றவர்கள் வேறுவழியின்றி அனுப்புனரின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது போல அறிவிப்பு இருந்தால் நல்லது
  • பெறுநர் மறுக்க முடியாத மாதிரி உண்மைகளையும், எதிர்பார்க்கிற தீர்வுகளையும் அதிலே சொல்லியிருக்கணும். எந்த சட்டத்தின் கீழ் தீர்வு வருதுங்கிறதையும் தெளிவுப்படுத்தறது வேண்டும்.

அப்புறம் என்னங்க ..

பஞ்சாயத்து முடுஞ்சுருச்சு! ..😀

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...