ஒரு சேவையில் குறைபாடு என்னும் போது, நுகர்வோர் யாரும் நிச்சயமாக அது சம்பந்த புகாரை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 படி தாக்கல் செய்யலாம்.
ஆனால் …சேவை என்றால் என்ன? என்பது குறித்து அந்த சட்டத்தில் என்ன சொல்லியுருக்குன்னு பார்க்கணும்.
அரசின் செயல்கள் இரண்டு பிரிவா பிரிக்கப்படும.
- ஒண்ணு அதனோட இறையாண்மை செயல்கள் ..அதாவது soverign function ன்னு சொல்லப்படுவது..அது பத்தி எந்த நீதிமன்றத்திலேயும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால்
- நிர்வாக ரீதியா செய்யப்படுபவையிலே ஏதும் குறை இருந்தா கேள்வி கேட்கலாம்.
- அரசு அதிகாரிகள் ரெண்டு பணியையும் சேர்ந்து செய்யும்போது எது அவங்க செயல்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற இறையாண்மை செயல்கள், எதுலாம் இல்லைன்னு அடிக்கடி குழப்பம் ஏற்படும்.ஏன்னா அது இரண்டுக்கும் நடுவுல மெலிசான இடைவெளி தான் இருக்கு.
- அரசு செய்யும் சேவை பொதுவா இலவசமா தான் இருக்கும்.அது போல செய்யப்படுவது இந்த சட்டத்தின் கீழ் வராது.
- ஆனால்..சில சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயிச்சு வசூல் பண்ணிட்டு தான் அரசு செய்யுது. அது போன்ற சமயயத்தில் சேவைக்குறைபாடு இருந்தால் அதை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிரா கேஸ் போடலாம்.
நம்ம விக்ரமாதித்தன் பேரு டாக்டர் சவந்த்.😃
- 2007 ஏப்ரலில் தன்னோட நிலத்தை அளக்கணும்னு மஹாராஷ்டிராவில் உள்ள மால்வன் நில அளவியல் துறையில் அவசர மனு கொடுக்கிறார். அதுக்காக ரூபாய் 2000 பீஸ் கட்ட சொல்ல, அதையும் செய்றார்.
- ஜூலை 18ன்னு தேதி குறிக்கிறங்க. ஆனால் மழை காரணமா தள்ளிப்போகுது. கடைசியா பிப்ரவரி 2008லே நிலத்தை அளக்கும் பணி முடியுது.
- 15 நாள் கழிச்சு வரைபடம் வாங்கிக்க சொல்றாங்க.ஆனால் எவ்வளோ தடவை கேட்டும் அது அவருக்கு கிடைக்கவேயில்லை.
- திரும்பவும் ஒரு மனு மே 2008ல் கொடுக்கிறார்.
- அதுக்கு பதில் ரொம்ப லேட்டா ஜூலை 16லே வருது.என்னன்னு…முந்தின நாளே அளக்கும் வேலை செஞ்சுட்டதா சொல்லி. 😯
- எரிச்சலாயி, அந்த கண்காணிப்பாளர் கிட்டே புகார் செய்றார்.
- அதுக்கு பிறகு ஆகஸ்ட் 2008லே தேதி குறிக்கிறங்க. திரும்பவும் கான்சலாயிடுது. இப்ப சொல்ற காரணம்..அவர் மனுவே கான்சலாயிடுச்சுன்னு..😃 இப்போதைக்கு நிலத்தை பிரிக்கும் வேலை செய்யலன்னு சொல்லிட்டாங்க!!
- அவர் விடாம, தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ் தகவல் சேகரிக்க முயற்சி எடுக்குறார். பலன். 0…😄
- அதுக்கப்புரம் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில், அந்த குறிப்பிட்ட RI மற்றும் சர்வே அதிகாரி மேலேயும் புகார் கொடுக்கிறார்.
- ஆனா நுகர்வோர் மன்றத்தில் வழக்கு போடமுடியாது, சிவில் நீதிமன்றம் போங்கன்னு மனு தள்ளுபடி ஆகுது
- நம்ம விக்ரமாதித்தன்…சாரி..சவந்த், மாநில நுகர்வோர் மன்றத்தில் முறையிடுறாரு…
- அது நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு கோர்ட்டு சொல்லி, வரைபடத்தை குடுத்துடுறாங்க..அப்புறம் என்ன ..வேலை முடிஞ்சுருச்சுன்னு மனு தள்ளுபடி ஆகுது.
நாமன்னா…கோர்ட்டையும் நாட்டையும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு மத்த வேலையை பார்க்க போவோம்…
அங்கே தான் அவர் வித்யாசப்படுறார்..
13. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லிலே இருக்கிற தேசிய நுகர்வோர் மன்றத்தில் அப்பீல் செய்றார்.
அவரோட இந்த விடாமுயற்சி தான் இன்னிக்கும் அவர் பெயர் சொல்ற மாதிரியும், அவர் வழக்கு மத்தவங்களுக்கு வழிகாட்டியாவும் இருக்கு..
- வழக்கை விசாரிச்ச தேசிய மன்றம், 2013ல் தீர்ப்பளித்தது. அதில், ஒரு முக்கிய சட்ட பிரச்சினையான நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறவேண்டும் எனில், அரசின் நில அளவியல் துறை செய்வது இறையாண்மை பணியா நிர்வாக பணியா என்பதை மாநில நுகர்வோர் மன்றம் முடிவு செய்யவில்லை என்று கருத்து தெரிவித்தது.
- அதோடு, தன்னுடைய முந்தைய வழக்கான பிரபாகர் வியங்கோபா ஆந்தோன் எதிர் நகல் கண்காணிப்பாளர், சிவில் நீதிமன்றம் 1986 2004 Consumer 7211 (NS) என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
- அது நீதிமன்றத்தில் சான்றிட்ட நகல் பெறுவதில் இருந்த காலதாமதம் ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு கோரி போடப்பட்ட வழக்கு. நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது தான் இறையாண்மை செயல் என்றும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் பெற்று சான்றிட்ட உத்தரவு நகல் வழங்குவது நிர்வாகப் பணியென்றும் அதனால் அந்த சேவையில் குறைபாடு என்றால் நுகர்வோர் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
- அதை குறிப்பிட்ட மன்றம், இந்த வழக்கிலும் கட்டணம் பெற்றுக்கொண்டு நில அவியல்…சே..😂அளவியல் மேற்கொள்வதால் அது நிர்வாக பணி தான் என்று தீர்ப்பளித்தது.
- அதே சமயம் அந்த துறை அதிகாரிகள், அவர்கள் பணியில் எந்த தாமதமும் ஏற்படவில்லை, பக்கத்து நிலத்து சொந்தக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தாமதம் ஆனது என்பதை நிரூபித்ததால், நஷ்ட ஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை.
வடை போச்சே..😑
- அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயருடன் வழக்கு போடப்பட்டதை சுட்டிக்காட்டி, அதை தவிற்குமாறும் அவர்கள் செய்யும் பணியின் பெயர் மட்டும் குறிப்பிட் சொன்னது..
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும்..😃