ரொம்ப முக்கியமான கேள்வி.!!
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 (அ) இன் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை செய்பவற்கு முதல் குற்றம் எனில், 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்கப்படும். இதுவே இரண்டாவது முறை என்றால், 2 வருடங்கள் வேளை சிறை தண்டனையோ அல்லது பதினைந்தாயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ…வசதி எப்படி?☺️
இப்படித்தான் குடிபோதையில் இருந்ததாக போலீசார் பிடித்து மருத்துவரிடம் கொண்டு போய், அவர் மூச்சுக்காற்றில் சாராயநெடி உள்ளது என்று கருத்தும் வாங்கி கேஸ் போட்டு விட்டனர்.
அரசு தரப்பு வழக்கு என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது காரை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததோடு, அதை மற்றொரு காரில் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் மற்றும் "மனுதாரர் மது வாசனை என்று மருத்துவர் கருதியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்ட மருத்துவ பரிசோதனை கருத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 ன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் மூச்சு பகுப்பாய்வி சோதனை மூலம் ஆல்கஹால் உள்ளடக்கம் கண்டறியப்பட்டால் மட்டுமே பிரிவு 185 ஈர்க்கப்படும் என்பதும் வெறும் மருத்துவரின் கருத்தை கோபடு குற்றம் சுமத்தி முடியாது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் வாதம்
உண்மை தான்.
நேற்று முன் தினம் வழங்கப்பட்ட தீர்ப்பு தான் இப்போ ஹைலைட்!!
மோட்டார் வாகனச் சட்டத்தில் 2019ல் திருத்தம் செய்வதற்கு முன்பு தான் அது போல மருத்துவரின் கருத்து மட்டும் போதுமானது. ஆனால் சட்டத் திருதத்திற்கு பிறகு, பிரிவு 185 (அ) இன் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஈர்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மூச்சு பகுப்பாய்வி அல்லது ஆய்வக சோதனை உட்பட வேறு ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவரது இரத்தம் இருப்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் அவரது ரத்தத்தில், 100 மில்லி ரத்தத்திற்கு 30 மி.கி. ஆல்கஹால் அளவு இருப்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
அதனால் கணவான்களே!! போலீஸ் பிடிக்கும்போது, இதை சொல்லி தப்பிக்கலாம் என்று எண்ணாமல், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் இதோ பாருங்கள்!!
அது மட்டுமல்ல குடிபோதையில் வண்டி ஒட்டி இறந்தால், விபத்துக்கு அவரும் காரணம் என்று அவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் தொகை குறைக்கப்படும்.இதோ உதாரனத்துக்கு இந்த வழக்கு
Family loses 20% relief as accident victim was drunk, without helmet | Chennai News - Times of India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக