சமீபத்தில் ஒரு சுவாரசியமான வழக்கு ஒன்றை படித்தேன்.
புட்டபர்த்தி சாயிபாபா தன் பக்தர்களுக்கு விபூதி காற்றில் இருந்து பெற்று தருவார் என்பதை அறிவோம். அதே போல சில உயரிய பக்தர்களுக்கு ......தங்க , வைர ஆபரணஙகளை
அதை தொடர்ந்து வழக்கு போட்டார் ஒரு பகுத்தறிவாளர்.. என்னவென்று?
லைசென்ஸ் இல்லாமல் அவர் தங்கம் உற்பத்தி செய்கிறார், அது தங்க கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக உள்ளது.அது குறித்து மனு செய்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் தான் உத்தரவிடவேண்டும் என்று.. !!
இது போன்ற விலைமதிப்பில்லாதவை எவ்வளவு அவர் வைத்துள்ளார் என்று சாயீபாபா ஒரு உறுதியும் கொடுக்கவேண்டும் என்றார்..
வழக்கு என்னவாயிற்று என்று தெரிந்திருக்கும்.
அதற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கொடுத்த சில காரணங்கள்
- தங்கம் தயாரிப்பது என்பது பல படிநிலைகளை கொண்டது. அது போல பாபா செய்யவில்லை. அவர் தன் தெய்வீக சக்தியால் தான், காற்றில் இருந்து பெற்று கொடுக்கிறார்.
- தங்கக் கட்டுப்பாடு சட்டம், வணிக ரீதியாக நடைபெறுவதை கட்டுப்படுத்த..ஆனால் பாபா அவ்வாறு செய்யவில்லை.அதனால் அந்த சட்டம் பொருந்தாது.
- பாபா தான் அவ்வாறு பெறும் பொருட்களை பக்தர்களுக்கு தானே கொடுத்து விடுகிறார்? அதனால் தன்னிடம் அதை வைத்துக்கொள்ளாத காரணத்தினால் உறுதி கொடுக்க சொல்லக் கேட்பது சரியல்ல!!
https://indiankanoon.org/doc/1497702/விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் போய் வழக்கின் முழு விவரம் படிக்கலாம்.
இப்படி மாயவித்தை காட்டிய சாமியார்களில் "போலி"யுமுண்டு.
நமமூரிலும் இருந்தார்கள்.. இருக்கிறார்கள்!!
எங்கே நிம்மதி..எங்கே நிம்மதி என்று தானே எல்லோரும் தேடிக் கொண்டிக்கிறார்கள்?
ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஊர் முழுதும் தேடிய கதையாய்..
``நம்மிடம் முன்பு இருந்தது, ஆனால் இப்போது தொலைந்து போனது, அந்த நிம்மதியை ஒரு சாமியார் காண்பிக்கிறார் என்றால் …
நம்மிடம் தொலைந்து போளதை நமக்கே காட்டுகிறாரா?
ஆனால் ஒரு நிமிடம்...........
ஒவ்வொருவருக்கும் நிம்மதி தேடுவதில் /கிடைப்பதில் வேறுபாடு உண்டே
சிலருக்கு கோயிலுக்கு போனால் நிம்மதி..
சிலருக்கு டாஸ்மாக்கிற்கு போனால நிம்மதி..
இரண்டுமே ஒரு விதமான போதை தானே..
ஆன்மீகத்துக்கு போகும் பாதையை குருவும் காட்டுகிறார்..சனியும் !!
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துக்கொண்டே இருங்கள்..பின்னால் சொல்கிறேன்..😬
அப்படி ஒவ்வொருவருக்கும் வேண்டிய நிம்மதியை ஒருவரே தரக்கூடியவர் என்றால் பரம்பொருளால் மட்டுமே முடியக்கூடியது.
சாமியார் மூலம் 'சாமி"யை தேட முடியுமா?
தெய்வீகம் என்பதே மறைந்த தன்மை கொண்டதல்லவா?
அதை வெளியே எங்கே போய் தேடுவது?
அதை தேடும் நானும் மறைந்து தானே போக வேண்டும்?
மறைந்து போவது என்றால்? என்னை மறந்து போதல்..
உயர்ந்த சமாதி நிலையை அடைவதற்கு இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை , தியானம், சமாதி எனும் எட்டு படிகளில் சாதனை செய்திருக்க வேண்டுமாமே?!
எனக்கு அவ்வளவு கூட வேண்டாம்..நிம்மதி தரும் படிநிலைகளை கற்றுக் கொண்டால் போதும்.
ஆனால் அதை கற்றுக் கொடுக்கும் குருவாக இருக்கக்கூடியவர் அதையே இடைவிடாமல் பயிற்சி செய்து,, நிர்விகல்ப சமாதியின் மூலம் பிரம்ம அனுபவத்தை நேரடியாக பெற்றிருப்பார் தானே?!
அப்படிப்பட்டவர் மறைவாகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால் அவரோ தான் மறைந்து போக விரும்பாமல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டால்?
காணும் இடத்திலெல்லாம் கேளிக்கை, கண்கட்டு வித்தை காட்டுபவராக இருந்தால்?
ஒரு கார்ப்பரேட் ஆரவாரத்துடன் நடப்பதில் தியானம் தொலைந்து அல்லவா போகிறது?
சாதாரண மனிதர் அதை முயற்சி செய்யத் தடை செய்பவர்களாகததான் இந்த சாமியார்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.ஏன்?
"நீ த்யானத்தில் நுழைந்து இறைவனை தரிசித்து விட்டால், மத குருமர்களுக்கு வெளி இல்லாமல் போய் விடுமே.அதனால் தான் அவர்கள் அதை போதிப்பதில்லை" என்கிறார் ஓஷோ..
"இல்லையே முறையான தியானத்தை நான் அவரிடம் தான் கற்றேன்" என்கிறீர்களா?
இறைவனையே கண்டுணர்ந்து பின்பு மனது தன் வசமாகாதா? பிறகு எதுதான் தன் வசமில்லை? ஆனால் அதை பெற்றவர் பற்றற்ற சாமியாராக தானே இருக்க முடியும்?.
எனக்குள் உள்ளதை எனக்கு காட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவேண்டும என்பவர்கள்
அதை பற்றிக் கொண்டு இருப்பதென்ன??😢
உடல் பிணியை போக்கி நிம்மதி தருகிறேன் என்பவர்கள் தனக்கு என்று வரும்போது செய்வது வேறொன்றாகத் தானே இருக்கிறது?
சுபத்துவமான சனி, ஆன்மிகத்தில் ஒருவரை ஈடுபாடு கொள்ள வைப்பார்..ஆனால் அவர் ஆன்மிகத்தின் பெயரில் செய்வது எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே இருக்கும்.
குருவின் மூலம் ஆன்மீகப் பாதைக்கு போகும் ஒருவர் "எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்" என்று வேண்டினால், சனி ஆதிக்கம் உள்ளவர் ஆன்மிகம் என்ற பெயரில் தன்னை முன்னிலைப்படுத்தி, "தான் நன்றாக வாழவேண்டும்" என்ற முனைப்போடு தான் இருப்பார்!!
ஆனாலும் அங்கே கூட்டம் கூடிக் கொண்டு தான் போகிறது.
ஏன் ..எல்லாம் அவசரம்.எனக்கு எல்லாம் வேண்டும்..நிம்மதி உட்பட.!!
அதற்கு ஒரு பாக்கேஜ் போல போட்டு விட்டால், பணம் கட்டிவிடுகிறேன்.நீங்கள் எனக்கு வேண்டியதை தாருங்கள்!!
டீலா .......நோ டீலா..
நாம் தான் கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவே தட்டுமுட்டு சாமான் இலவசமாக கேட்டவர்களாயிற்றே!!
அதற்கேற்ப தானே நமக்கு கிடைக்கும் குருவும் இருப்பார் !!
மாயவித்தை செய்யும் சாமியார் என்றால், தெய்வத்தோடு இவருக்கு டைரக்ட் கனெக்சன் இருக்குன்னு நம்பிவிடுவது!!
இந்த படத்தில் உடன் இருப்பவர் சட்டமேதை எனப்படும் நானா பல்கிவாளா..அவரிடம், "உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் இது போன்ற வித்தை காட்டும் சாமியார்களை எப்படி நம்புகிறீர்கள்?" என்று கேட்டபோது,
அவர் ஒரே வார்த்தையில் சொன்னது "நம்பிக்கை"
இது தான் நம்பிககையின் சிறப்பு..
தனக்கு ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால், அவரின் எந்த மாபாதகத்தையும் சகித்துக்கொண்டு அவருக்காக முட்டுக் கொடுத்து கொண்டு இருப்போம்!!
ஆஸ்கர் வயில்ட் சொன்னது போல "ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு .ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு."
சரி.......எப்போது நமக்கு நிம்மதி தொலைகிறது?
எண்ணம், சொல், செயல் இவற்றை நாமோ மற்றவர் நமக்கு செய்தாலோ, ஏற்படுவது..
அதற்கு மனம் குறுகுறுத்து, குற்றவாளியாய் நிம்மதி தேடி வெளியே அலையத் தேவையில்லை..
உலகையே வென்ற அலெக்ஸ்சாண்டர் கூட நிம்மதி கிடைக்காமல் தன் 33 வயதிலேயே நிம்மதியை குடியில் தேடி, அந்த குடிப்பழக்கத்தால் இறந்து போனான்.
ஆனால் அனைத்தையும் துறந்து நிம்மதியை தனக்குள் தேடிய புத்தர் பரவச நிலையை பெற்று பரவசமாக வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.
என் மனம் என் ஆளுகைக்கு உட்பட்டது. நான் அதை பழக்கக் கூடிய கமாண்டராக தான் இருக்கிறேனே தவிர, .ஒரு சிப்பாயாக, இன்னொருவரை கமான்டராக நிறுத்தும் எண்ணமுமில்லை..
இன்னொன்றும சொல்ல வேண்டுமே.......
சிறுவர்கள் சந்நியாசம் கொள்வது சட்டப்பூர்வமானது தான் என்று நேற்று ஒரு தீர்ப்பு வந்துள்ளது..
அவர்களால் முடிவது என்னால் முடியாதா? முயற்சித்து தான் பார்ப்போமே!!
அப்படியே "கைலாசா"வில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்!!😢