பெயர் மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2021

சட்டபூர்வமாக பெயர் மாற்றம் செய்வது எப்படி?

 ஒரு நாளிதழில் பெயர் மாற்றத்திற்கான விளம்பரம் கொடுத்து அதன் நகலுடன், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் அலுவலகத்தில் உரிய படிவம் நிரப்பி, வேண்டிய ஆவணங்கள் இணைத்து உரிய கட்டணம் செலுத்தினால், பெயர் மாற்றம் பற்றியது அரசு கெசட்டில் வரும். அதன் பிரதிகளை நாம் பெற்று கொள்ளலாம். அது மட்டும் தான் பெயர் மாற்றத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட சட்ட நடைமுறை.

ஆனால் நீதிமன்றத்தில் பொதுவாக சட்டப் பூர்வ பெயர் மாற்றம் செய்வது கிடையாது.

தன்னுடைய பெயர் மாறிவிட்டதாக பிரமான பத்திரம் ஒன்றை தயார் செய்து அதில் நோட்டரியிடமோ நீதித்துறை நடுவரிடமோ அத்தாட்சி பெறுவதும் உண்டு. ஆனால் அது நீதிமன்ற உத்தரவு ஆகிவிடாது. சில இடங்களில் மட்டுமே அது போன்ற பிரமாண பத்திரங்கள் செல்லுபடியாகும்

பெயர் மாற்றம் செய்த பிறகு அதை தன்னுடைய கல்வி சான்றிதழ்களில் மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடுவதும் உண்டு. ஆனால் அந்த பெயர் மாற்றம் அந்த கல்வி ஆண்டிற்கு பிறகு நடந்த ஒன்று என்பதால் அந்த கோரிக்கையை கல்வி நிறுவன ங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பெயர் மாற்றத்தை குறிக்கும் அரசு கெஜட்டின் பிரதியை உடன் இணைத்தாலே போதுமானது.

ஆனால் ஒருவருக்கு இரண்டு பெயர்கள் இருந்து வேவ்வேறு ஆவணங்களில் அந்த இரண்டு பெயர்களும் இடம் பெற்று, ஆனால் அது அவரை தான் குறிக்கிறதா என்ற குழப்பம் ஏற்படும்போது நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு தொடர்ந்து விளம்புகை பரிகாரம் பெற முடியும். அதாவது அந்த இரண்டு பெயரும் ஒருவரையே குறிக்கும் என்ற விளம்புகை பரிகாரம் பெறலாம். 

 அது பொதுவாக குறுகிய காலத்திலேயே முடிந்து விடக்கூடிய வழக்கு .தான்..ஏன்? அதை கடைசியில் சொல்கிறேன்…

பொதுவாக பல பெயர்கள் வைத்துக கொண்டு ஏமாற்ற முனைபவர் தான் இருப்பர்.

ஆனால் அந்த வேறுபட்ட பெயர்களும் தன்னையே குறிக்கும் என்று ஒருவர் விளம்புகை கேட்டால், அதற்கு பெரிதான எதிர்ப்பு இருக்காது.. அதாவது எதிர்கட்சிக்காரிடம் இருந்து!!யார் அந்த எதிர்க்கட்சிக்காரர்??   வழக்கு தொடுக்க ஏதாவது ஒரு காரணம் இருந்தாக வேண்டுமே.. அதாவது மூலம். அது இருந்தால் தான் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

பாண்டிச்சேரியில் வாரிசு சான்றிதழை இங்குள்ளது போல தாசில்தார் வழங்குவது கிடையாது. அதனால் இன்னாரின் சட்டப் பூர்வ வாரிசு தான் தான் என்று விளம்புகை பிரகாரம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தான் உத்தரவு பெறுவார்கள்.. பெறுகிறார்கள். அதற்கு எதிர்கட்சியாக அவர்கள் பெரும்பாலும் சேர்ப்பது தங்கள் நண்பர்களையோ அல்லது பக்கத்து வீட்டுககாரரையோ ஏன் சிலர் தங்கள் மனைவியை எதிர்க்கட்சியாக சேர்ககிறார்கள்!!… "நீ யாருக்கு பிறந்தாய்?" என்று என் மனைவி ஒரு சண்டையில் திட்டிவிட்டாள். அதனால் இந்த விளம்புகை பரிகாரம் வேண்டும் என்று!!…… 

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...