சட்டம், நீதிமன்றம் என்றாலே ஒரு வறட்சியானதாக பார்க்கும் மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலும் உண்டு..ஆனால் இங்கே இலக்கியத்தில் வித்தகர்கள் எல்லாம் இருந்துள்ளனர்...இருக்கின்றனர்..
எனக்கு தெரிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அழகு சேர்த்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் கம்பன் கழகத்தின் தீவிர பங்களிப்பாளர். அத்தோடு நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ராம சுப்ரமணியம் அவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள் நிறையக் கேட்டிருக்கிறேன்..
இலக்கியமும் சட்டமும் வெவ்வேறு பாதையாக எண்ணாமல் இரண்டையும் ஒன்றிணைத்து தங்கள் தீர்ப்புகளிலேயே தங்கள் இலக்கிய ஆளுமையை காட்டியுள்ளவர் பல நீதிபதிகள் .
அவர்கள் தங்கள் தீர்ப்புகளை எழுதும்போது, கவிதை வசனங்கள் /பிரபலமானவர்களின் மேற்கோள்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்..
நீதிமன்றத் தீர்ப்புகளில் இத்தகைய இலக்கியக் குறிப்புகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமா என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேற்றுமை இருக்கலாம்.
ஆனால் அவை பெரும்பாலும் தீர்ப்பினை படிப்பவர்களுக்கு நீதிபதியின் உணர்வோடு சார்ந்து இருக்க வைக்ககின்றன,
அதை கொடுத்த நீதிபதிகள் பிரபல வழக்கை விசாரணை செய்யாததால் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். ஆனால் இந்த இலக்கிய நயம் மிகுந்த தீர்ப்புகள், படிப்பவரை "யார் இந்த நீதிபதி?" என்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
அதில் சிலவற்றை மட்டும் இங்கு கோடிட்டு காட்டுகிறேன். முடிந்தவரை அந்த கவிதைகளை மொழிபெயர்க்க முயற்சித்துள்ளேன்.
சமீபத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுஜ் அகர்வால், சுவாமி விவேகானந்தரின் மேற்கோளுடன் தனது தீர்ப்பைத் தொடங்கினார்.
நீதிபதி விவேகானந்தரை மேற்கோள் காட்டி,
“நம் எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகிறது. நாம்தான்; எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். சொற்கள் இரண்டாம் நிலை தான்.. எண்ணங்கள் தான் வாழ்கின்றன; அவை வெகுதூரம் பயணிக்கின்றன."
"பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்" என்ற அடிப்படை உரிமை பற்றிய தன் கருத்தை சொல்ல முனைந்த நீதிபதியை, பிரிட்டிஷ் கவிஞர் ஜான் மில்டனை மேற்கோள் காட்டத் தூண்டியது.
"எல்லா சுதந்திரங்களுக்கும் மேலாக, தெரிந்துக் கொள்ளவும், சுதந்திரமாக வாதிடவும், மனசாட்சிப்படி பேசவும் எனக்கு சுதந்திரம் கொடுங்கள்."
தீர்ப்பின் இறுதியில், இமாமின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது, அவரது பேச்சு ஒரு கும்பலை கலவரத்தில் ஈடுபடத் தூண்டவில்லை என்று முதல் பார்வையில் தெரிந்தாலும், வகுப்புவாதம் மற்றும் பிளவுபடுத்தும் வகையில்" இருந்தது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மற்றொரு தில்லி நீதிபதி அஜய் கோயல், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் சொன்னதை, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு வழக்கில் , ஜூன் 6, 2021 அன்று, தீர்ப்பளித்தார்.
ஜெயலால் பேச்சு, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு.. இந்த உத்தரவில், கவிஞர் முஹம்மது இக்பாலின் புகழ்பெற்ற வரிகளான "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எடுத்தாளப்பட்டது.
"மதங்கள் நமக்கிடையே பகைமை கொள்ள கற்றுதரவில்லை. நாம் எல்லோரும் ஹிந்துஸ்தானிகள். ஹிந்துஸ்தான் நம் தாய்நாடு.
உலகம் முழுவதையும் விட சிறந்தது, நமது ஹிந்துஸ்தான்"
நம் நாட்டில் காலங்காலமாக நிலைத்திருக்கும் "நம்முடைய நம்பிக்கை மற்றும் மதச்சார்பின்மைக்கு வலிமை" கொடுத்தது எப்படி என்பதை நீதிபதி கோயல் இந்த கவிதை மூலம் விளக்குகிறார்..
"ஒரு முஸ்லீம் கவிஞரால் எழுதப்பட்ட இந்த கவிதையில் "இந்தி" என்ற வார்த்தை இந்துக்களைக் குறிக்கவில்லை, ஆனால் மதச்சார்பின்மைக்கு அழகான சாதி, நிறம் மற்றும் மதம் வேற்றுமை இல்லாத அனைத்து ஹிந்துஸ்தானிகளையும் குறிக்கிறது" என்று அவர் உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இறுதியில் ஜெயலால் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை எச்சரிக்கவும் செய்தது..
'
நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்'
இவையெல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது தன் தீர்ப்பையே கவிதை நடையில் எழுதிய, நவம்பர் 7, 2020 டெல்லி கலவரம் தொடர்பான ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத். .
அந்த கவிதை இப்படி போகிறது:
“பாபு தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடுமையாக எதிர்க்கும் மாநில அரசு.
கோடை காலம் கடந்துவிட்டது, குளிர்காலம் வந்துவிட்டது;
ஆனால் நீங்கள் செய்த குற்றம், ராகுல் அழுதார்.
நான் ஒருவனல்ல, நான் ஒருவனல்ல;
மிகக் கடுமையான குற்றச்சாட்டு, நடிக்க வேண்டாம்.
நான் யாரைத் தாக்கினேன், அவன் எங்கே;
ஓ! நமக்குத் தெரியும், விசாரணையில் பார்ப்போம்.
நீங்கள் நான் முதலிலிருந்து மறுக்கிறேன் என்று சொல்கிறீர்கள்;
ராகுல் இன்னும் போயிருக்கலாம் என்றார் சதீஷ்.
நாங்கள் சொன்னோம் அல்லவா; அவசரப்பட வேண்டாம்;
என்னை விடுங்கள், நான் போகவேண்டும். இம்ரான் கூட ஜாமீனில் இருக்கிறார்.
அப்போதும், அப்போதும்;
இது ஒரு மென்மையான பயணம் அல்ல.
நிறுத்து! நிறுத்து! நிறுத்து! நிறுத்து;
நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.
மனம் தெளிவானது, உயரமான கூற்றுகளுடன்;
நான் அழைப்பை எடுக்க வேண்டிய நேரம் இது.
பாபுவுக்கு ஒரு மோசமான கடந்த காலம் உண்டு; ஆதாரம் மிகக் குறைவு, அது நீடிக்காது.
அவரது சர்வ வல்லமை கருத முடியாது;
மறைந்த ராகுலுக்கு ஏற்பட்ட ஆபத்தில், சட்டரீதியாக கோபம்.
நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்;
விசாரணை முடியும் வரை அரசே ஆட்சியில் இருக்கும்.
அரசுக்கு அறிவிக்கப்படுகிறது; கேக்கை வைத்துக்கொள்ளலாம் உண்ணவும் செய்யலாம் ;
நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது ; கேக் சாப்பிடுவதற்கு முன், அதையும் சுடவும் வேண்டும்."
ஒரு வழக்கின் சம்பவங்களும் வாதாடுதலும் வசன நடையில் வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம், அதுவும் ஒரு சீரியஸான வழக்கில்.!!
இறுதியில் பெயில் கொடுத்தும் விட்டார்! காரணம்…புகார்தாரர் காணவில்லை!!
அடுத்து வரிசையில் உள்ள மூன்று கவிஞர்கள் ஓப்ரா வின்ஃப்ரே, மெரில் ஸ்டீப் மற்றும் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ்
இந்த மூன்று பிரபலங்களின் மேற்கோள்கள், 2019 இல் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமத ஃபரூக்கின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை, மகப்பேறு விடுப்பை நீட்டித்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வழக்கில் தான் நீதிபதியின் தீர்ப்பில் வந்தது.
பழம்பெரும் நடிகர் மெரில் ஸ்ட்ரீப் கூறியது:
"
தாய்மை மிகவும் மனிதாபிமான விளைவைக் கொண்டுள்ளது. அனைத்தும் அத்தியாவசியமானவையாகக் குறைக்கப்படுகின்றன."
இந்த உத்தரவு, டாக் ஷோ தொகுப்பாளரும் பரோபகாரியுமான ஓப்ரா வின்ஃப்ரேயின் மேற்கோளையும் சுட்டிக் காட்டியது,
"ஒரு தாயாக மாறுவதற்கான தேர்வு, என்பது மிகப்பெரிய ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராக மாறுவதற்கான தேர்வாகும்."
நீதிபதி, ஹாலிவுட் நட்சத்திரம் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் கூறியதையம் மேற்கோள் காட்டினார்.
"உங்கள் கர்ப்பம் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டதா, மருத்துவ ரீதியாக திட்டமிடப்பட்டதா அல்லது ஆச்சரியமாக நடந்தாலும் ஒன்று நிச்சயம், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இனி ஒரே மாதிரியாக இருக்காது."
மகப்பேறு நலனுக்கான உரிமை ஒன்றும் பொதுநல சேவை போல "போனால் போகிறது "என்று கொடுக்கும் விஷயம் அல்ல" என்பதைக் குறிப்பிட நீதிபதி ஒருவேளை இவ்வாறு முயற்சித்திருக்கலாம்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிபதி எஸ் முரளிதர் அவர்களின் தீர்ப்புகள் புகழ்பெற்றது.
நீதியரசர் எஸ் முரளிதர்
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கின் 207 பக்க தீர்ப்பு, அவருடையது. அதில், 1947 பிரிவினையின் போது நடந்த சோகமான காட்சிகளை உள்ளடக்கியது. அது, புகழ்பெற்ற கவிஞர் அமிர்தா ப்ரீதமின் பயணத்தின் குறிப்புடன் தொடங்கும்..
புகழபெற்ற கவிஞர் அம்ரிதா ப்ரீதமின் 'ஓட் டு வாரிஸ் ஷா'வில் இருந்து பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட பகுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் எழுதியிருந்தார்
"
முளைத்த நச்சுக் களைகள் தூரத்திலும் அருகாமையிலும், வெறுப்பின் விதைகள் அதிகமாக வளர்ந்த இடங்களிலும்,
எங்கும் இரத்தம் சிந்துகிறது/காட்டில் நச்சுத் தென்றல் மூங்கில் புல்லாங்குழல்களை பாம்புகளாக மாற்றியது/அவற்றின் விஷம் பிரகாசமான மற்றும் ரோஜா போன்ற பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டது."
பிரித்தம் லாகூரிலிருந்து தனது குழந்தைகளுடன் தப்பி ஓடியபோது, அவரது பயணத்தின் போது கண்டதில் உள்ள சோகத்தை நீதிபதி கண்டார் போல..
1984-ல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, 37 ஆண்டுகளுக்குப் பிறகும், ப்ரீதம் சந்தித்ததற்கும், அதற்குப் பிறகு நடந்ததை போலவே இருந்தது.என்று இந்தத் தீர்ப்பில் சொல்கிறார்.,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இதே வரிசையில் வருகிறார், நீதிபதி முரளிதரின் பாராட்டலுக்கு உள்ளாகிய முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான பாரத் சுக்
இரயில்வே மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய பிறகு டெல்லி ஜூடிசியல் அகாடமியில் ஒரு கவிதையை எழுதியதற்காக நீதிபதி சுக்கை நீதிபதி முரளிதர், 2018 இல் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையில் குறிப்பிட்டு பாராட்டினார்.
தீர்ப்புகளில் கவிதையை புகுத்தலாமா?" என்பதற்கு,
"தீர்ப்புகளை எழுத சட்டம் ஒரு கட்டமைப்பை மட்டுமே வழங்கியுள்ளது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் இலக்கியக் குறிப்புகளைச் செய்வதைத் தடுக்கவில்லை "என்கிறார்..
"நீங்கள் அதை எப்படி எழுதுகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். நீங்கள் ஒரு கவிதையை நுழைப்பதோ அல்லது ஒரு வரலாற்று சூழலை அல்லது தத்துவத்தை அல்லது இலக்கியத்தை கையாள்வதையோ சட்டம் தடுக்கவில்லை. உங்கள் எண்ணங்களை முன்வைக்கும் வரை அனைத்தையும் செய்ய முடியும், அது சிவில் வழக்குகளில் கூட தான்,”.
அவர் எழுதிய "தேநீர் விற்பவர் மற்றும் நீதிபதி என்ற தலைப்பில் ஒரு கவிதை, , லைசென்ஸ் இல்லாமல் ரயில்களில் டீ விற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பதின்ம வயது சிறுவனால் ஈர்க்கப்பட்டது
“
இரவும் பகலும்; முடியாமல் யோசித்த பிறகு,
ஒரு சிறுவன் என் முன் ஆஜர் படுத்தப்பட்டான்.
அவனுடைய கொடிய வறுமை எல்லோருக்கும் தெரியும்படி இருந்தது.
ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,
ஏழையாக இருப்பது அவன் குற்றம்.
அவன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ முடிவு செய்தது.
ரயிலில் உரிமம் இல்லாமல், 'டீ' விற்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவன் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவன்.
அவனுடைய வலியைக் காண முடிந்தது;
அவரது தந்தை தூக்கில் தொங்கினார்.
விதைகள் மீது பெருகிவரும் கடன்களிலிருந்து, அவர் விடுபட விரும்பினார்.
அந்த கிழிந்த சட்டையுடன் அடக்கம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்பது போல,
சட்டமா அல்லது நீதியா?, முதலில், எதை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை;
நீங்கள் ஏன் நீதி கேட்கிறீர்கள்?
இது சட்டத்தை பார்க்கும் நீதிமன்றம் -
அவனிடம் சொல்லிவிட்டு இன்னும் நான் நானாக இருக்க முடியவில்லை;
ஒரு ‘முடிவு’ சட்டம் ஆனது, ஏன்?
நீதியின் அளவை மீண்டும் அளவீடு செய்ய முடியவில்லையா, நாம் முயற்சி செய்ய வேண்டுமா?
சட்டம் அவனை தண்டிக்க வேண்டும் என்றது.
இது வறட்சியான, கண்மூடித்தனமான கட்டளை மற்றும் தன்னிச்சையான விருப்பம்;
நான் அவரை விடுவிக்கத் முடிவு செய்தேன்., ஆனால் எதுவும் சொல்லவில்லை;
அவனுடைய ரொட்டியை சம்பாதிக்காதே என்று நான் எப்படி அவனிடம் கேட்க முடியும்?.
அரசால் கொண்டுவர முடியாத போது;
இதைவிட கௌரவமான வழியை நான் நினைக்க முடியுமா,
இந்த பையன் ஒரு வாழ்க்கையை சம்பாதித்திருக்கலாம் -
நேர்மையான தேநீர் விற்பனை - நியாயமான கட்டணத்துடன்.
நான் சட்டத்தின் கடுமையான எழுத்தின் படி நன்றாக செய்தால்,
ஏற்கனவே கொதித்த மனசாட்சியுடன் உள்ள என்னால் தூங்க முடியாது.
சட்ட அதிகாரம் இருந்தது; ஆனால் தார்மீக அதிகாரம் என்னிடம் இல்லை,
என் தேசத்தின் சட்டம் ஓரளவு தோல்வியடைந்தது, வறுமை வென்றது.
அப்போது, ரயிலில் தேநீர் விற்று வாழ்க்கையைச் சந்திக்க முயன்ற பல இளைஞர்களை குற்றமற்றவர். என்று நீதிபதி சுக விடுதலை அளித்தார்.
அவர் வழக்கமாக வசனங்களில் தனது தீர்ப்புகளை எழுதவில்லை என்றாலும், அந்த கவிதை அவருடைய கோபத்தின் வெளிப்பாடாகவும், சூழ்நிலையை உணர்த்தும் வழியாகவும் மாறியது.
அவர் சொல்கிறார்,
"அன்றைய தினம் நான் எழுதிய கவிதையில், ஒரு கடினமான வழக்கில் என் உணர்வுகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதைப் பற்றி அதிகமாக இருந்தது, சட்டம் 'x' என்று கூறும் போது நீதி 'y' என்று கூறுகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தது. ' நீங்கள் எப்படி அந்த இடைவெளியைக் குறைப்பீர்கள் ? ஒரு வழியைக் கண்டறிந்து சட்டத்தைப் பற்றிய உங்கள் புரிதலை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?"
ஆனால் தீர்ப்புகளில் கவிதையைப் பயன்படுத்துவதில் அவர் தனிப்பட்ட முறையில் முரண்படுகிறார்.
"இது ஒரு கற்பனைப் படைப்பாக இருக்கக் முடியாது. ஒரு நீதிபதியாக நீங்கள் உண்மைகளை சுதந்திரமாக எடுக்க முடியாதே!!
கவிதையின் முழுப் புள்ளியும் சில சமயங்களில் சுருக்கமாகவும், விஷயங்களை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவும் வேண்டும் ஆனால் "நீங்கள் தெளிவாக இருக்க வேண்டிய ஒரு தீர்ப்பில் அது நன்றாக வேலை செய்யாது."
"எப்படி இருந்தாலும்,, ஒரு வழக்கைப் புரிந்துக் கொள்வதற்காக ஒரு கருத்தை வெளிப்படுத்தவும், தீர்ப்பை "உயிருடன் வெளியே கொண்டு வரவும்" ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவதை நான் பொருட்படுத்தவில்லை"
"அது ஏற்கத்தக்கது என்றாலும், மக்கள் கடக்கக்கூடிய மெல்லிய கோடு. உதாரணத்திற்கு முழு தீர்ப்பையும் வசனத்தில் எழுதினால்…, உலகின் பிற இடங்களில் உள்ள நீதிபதிகள் அதை சிறந்த பாணியுடன் முயற்சித்திருந்தாலும் கூட,…அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல." என்கிறார்.
2011 ஆம் ஆண்டு கருணைக் கொலை தொடர்பான முக்கிய தீர்ப்பை எழுதிய நீதிபதி மார்கண்டேய கட்ஜு, புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப்பின் இரட்டை வசனத்துடன் தான் அதைத் தொடங்கினார்.
"மர்தே ஹைன் ஆர்ஸூ மே மர்னே கி, மௌத் ஆத்தி ஹை பர் நஹின் ஆத்தி" (ஒருவர் மரணத்திற்காக ஏங்கி இறக்கிறார், ஆனால் மரணம், தணிந்தாலும், மழுப்பலாக இருக்கிறது).
இதை பற்றி கருத்து கேட்கையில்,
"அது அழகாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது, மேலும் இதனால் தீர்ப்புகளை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும இது வெகுஜனங்களுக்காக எழுதப்பட்டது தானே - அவர்கள் தானே நீதியின் நுகர்வோர்." என்கிறார்.
உண்மை தான்.அத்தகைய ஆர்வத்தை மிகைப்படுத்தாமல், தீர்ப்புகளில் வகுக்கப்பட்ட சட்டத்தின் தெளிவை சமரசம் செய்யாமல் இருக்கும் வரை, அத்தகைய கவிதைகள் தீர்ப்பில் இடம்பெறுவது படிக்கும் நமக்கு சுவாரஸ்யத்தை தரும் தான்..அது எவ்வளவு சீரியஸான வழக்கு என்றாலும்!!
Poetic Justice: When judges referred to literary works and famous quotes in their verdicts