சிவில் நடைமுறை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவில் நடைமுறை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

நீதிமன்றம் வாய்தா தேதியை நேரடியாக எனக்கு தெரிவிக்காமல் எனது வக்கீலுக்கு மட்டுமே தெரியப்படுத்துவது ஏன்?

 உங்கள் சார்பாக ஆஜராவார் என்று நீங்கள் தானே வக்காலத்தில் கையெழுத்து இடுகிறீர்கள்.. உங்கள் , வழக்கிலும் அது சம்பந்தப்பட்ட எந்த அறிவிப்பும் உங்கள் வழக்கரிஞர் விலாசத்துக்கு போக வேண்டும் என்றும் சொல்கிறீர்களே. …

அதனாலேயே நீதிமன்றம் வாய்தா தேதியை நேரடியாக உங்கள் வக்கீலுக்கு தெரியப்படுத்துகிறது.

அதுவே குற்ற வழக்காக இருந்தால், ஆஜராகும் குற்றவாளிகளிடம் நீதிபதியை வாய்தா தேதியை சொல்லிவிடுவார்.

சிவில் வழக்குகளின் படிநிலைகள் என்ன?

 சிவில் வழக்குகளில் கீழ்கண்ட படிநிலைகள் உண்டு..


  1. முதல் விசாரணை.அன்று வழக்கு போட்டவர் மற்றும் எதிர் தரப்பு இரண்டு பேரின் வழக்கறிஞர்கள் ஆஜராவர்
  2. எழுத்துமூல எதிருரை
  3. பிரச்சினைகள் வரைவு
  4. வழக்கு தாரர் தரப்பு சாட்சி விசாரணை
  5. எதிர் தரப்பு சாட்சி விசாரணை
  6. இரண்டு தரப்பு வாதுரைகள்
  7. தீர்ப்பு.

அவ்வளவே தான்.ஆனாவ் ஓவ்வொரு நிலையையும் இரண்டு தரப்பும் லேசில் கடக்க விடுவதில்லை ஒன்று மாற்றி ஒன்று, இடைக்கால மனுக்கள் போடுவது, சாட்சிகள் விசாரணையை தள்ளி போடுவது, எதிருரை, வாதுரை குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாமல், வழக்கை ஒத்தி வைக்க வேண்டுவது என்று…காலம் ஓடிக் கொண்டே இருக்கும் . இதில் கட்சிதாரர்கள் அதிகம் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் ஒவ்வொரு நிலையை முடித்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு வழக்கு நகரும்

ஏதாவது ஒரு கட்சிதாரர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுகள் சேர்ப்பதில் விசாரணை முடித்து சேர்க்கவும் காலதாமதம் ஆகும்.அவர்கள் தரப்பு எதிர் உரை போட்டு சாட்சி விசாரணை செய்ய அனுமதி கொடுத்து என்று…போகும்.

வழக்கு நடக்கும் போது, அனைத்து தரப்புக்கும் போதிய சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதே அடிப்படை நியதி. அதனால் தான் இந்த தவிர்க்க முடியாத தாமதம் சில சமயம் நேரிடலாம்.


யாராவது சிவில் சட்டத்தை பற்றி கூற முடியுமா? எத்தனை சிவில் சட்டங்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது?

மற்றவரின் உடல் மற்றும் உடைமைக்கு தீங்கு ஏற்படுத்தும் கெட்ட எண்ணத்துடன் செயல்படுவது குற்றம் என வரையறுக்கப்படும்போது, மற்ற எதுவும் சிவில் சட்டத்தின் எல்லைக்குள் வரும்.. அதாவது வீடு, வாசல், நிலம் தொழில், படிப்பு, குறித்த அனைத்திற்கும் சிவில் சட்டமே வழிகாட்டி..

திருமணம், குழந்தைகள், பிறப்பு, இறப்பு போன்ற தனிப்பட்ட உரிமைகள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்து, தனி தனி சட்டங்களாக உள்ளன.

மத்திய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் தேவைக்கேற்ப, சிவில் சட்டங்கள் வகுத்துள்ளன. இவற்றை எண்ணிக்கை படுத்துவது கடினம். மேலும் சட்டம் என்னும் பெரும் சமுத்திரத்தில் உள்ள அனைத்தையும் அளக்கவும் முடியாது.அது தேவையும் அல்ல.

நாம் சார்ந்திருக்கும் நிலை குறித்த சட்டங்களை தெளிவாக அறிந்திருத்தலே போதுமானது.

"அகல உழுவதை விட ஆழ உழு"


சராசரியாக சிவில் வழக்குகளில், வழக்கு முடிய எத்தனை வருடங்கள் ஆகும்? ஒரு வேளை தீர்ப்பு வந்த பிறகும் எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் பழையபடி நிலைமை தொடருமா?

குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கிற்கு பதில் போட வேண்டும், தேவையில்லாத வாய்தா வாங்கக்கூடாது என்று சட்டத் திருத்தமே வந்துவிட்டது. பிறகும் வாய்தா வாங்குவது ஏதாவது ஒரு தரப்பு தான். எனவே நம் தரப்பில் வாய்தா வாங்காமலும், எதிர் தரப்பு வாயதா கேட்கும்போது கடுமையாக எதிர்த்து வந்தால், வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வரும்.மேல்முறையீட்டை பொறுத்து வழக்கறிஞர் வாதம் மட்டுமே கேட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான வழக்கில் அதை செய்யாததால் வழக்கு தள்ளிப்போகும். எழுத்து மூலமான் வாதத்தையும் வைத்தால், தீர்ப்பு தான்.

முயற்சி திருவினை ஆக்கும்.!!




நாம் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு பதிவு செய்யும்பொழுது நமது ஒரிஜினல் ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டுமா? ஆம் என்றால்நமது ஆவணங்களை எப்பொழுது திரும்ப பெறலாம்?

 வழக்குப் பதிவு செய்யும் போது அசல் பத்திரங்கள் தாக்கல் செய்ய தேவையில்லை. நகல் மட்டும் போதும். ..


சாட்சி விசாரணையின் போது மட்டுமே அசல் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதனை தீர்ப்பு சொல்லிய பிறகு, மனு போட்டு, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கு இடையிலும் தேவை எனில், மனு போட்டு அவசர தேவை குறித்து சொல்லி வாங்கி கொள்ளலாம்..

பெரும்பாலும் அசல் பத்திரத்தை விட சான்றிட்ட நகலை தான் தாக்கல் செய்கின்றனர்.

பத்திரத்தில் உள்ள கையெழுத்து குறித்து பிரச்சினை என்றால் மட்டுமே அசல் தாக்கல் செய்வர்.

அசல் கிரைய ஆவணம் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து திரும்ப பெறாமல் இருந்தால், எப்படி கிரைய ஆவணம் பதிய வேண்டும்?

 வழக்கு முடிந்தும் ஏன் திரும்ப பெறவில்லை?வழக்கறிஞரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது சரியான காரணமாக இருக்க முடியாது.

அசல் ஆவணங்கள் வாங்கி தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்வதை இப்பொதெல்லாம் நீதிமன்றம்.பெரும்பாலும் தவிர்த்து விடுவது தான் உண்மை. அது தொலைந்து போனால், நீதிமன்றத்தின் பொறுப்பு ஆகிவிடுகிறதே.

அதனால் சான்றிட்ட நகலை வாங்கிக்கொண்டு விசாரணையின் போது, அசல் ஆவணம் தாக்கல் செய்யவும் ஒத்துக்கொள்கின்றனர்.

அசல் ஆவணம், நீதிமன்றத்தில் சான்றாக குறியீடு செய்யப்பட்டாலும், பின்னர் ஒரு மனு அளித்து , அது தேவைப்படும் காரணத்தை சொல்லி, அதற்கு ஈடாக சான்றிட்ட நகலை இணைத்து, அசல் ஆவனத்தை எப்போதும் கேட்டாலும் நீதிமன்றத்தில்,,(ஏனெனில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தேவைப்படும்) ஒப்படைக்கிறேன் என்று ஒரு உறுதியையும் கொடுத்தால், ஒத்துக் கொண்டு திருப்பி அளிக்கின்றன.

அவர்கள் பாரம் நீங்கியதே!!

அதே தான் வழக்கு சொத்துகளாக வண்டிகள் இருக்கும்போது. உரிய உறுதி மொழி பெற்றுக் கண்டு, வண்டி, உரிமையாளரிடமே ஒப்படைக்கப்படுகின்றன

முன்னர் நீதிமன்றம் பெற்று, அதன் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேர்ந்த கதி தான் தெரிந்ததே!!

அப்படியிருக்கும் போது, வழக்கு முடிந்தும் திரும்ப பெறாமல் இருந்தால், அது உங்கள் தவறே.

இந்த லஞ்ச வழக்குகளில், பெரும்பாலும் அசல் ஆவணங்கள் நீதிமன்ற கோப்புசுளுடனேயே இருப்பதை பார்த்திருக்கிறேன். அவற்றை பாதுகாக்க நீதிமன்றம் எவ்வளவு சிரமம் கொள்ளும் தெரியுமா?.

சம்பந்தப்பட்டவர் மனு கொடுத்து திரும்ப கோரினால் தானே, அவர்களால் ஒப்படைக்க முடியும்..அப்படி ஏதும் இல்லாததால் இப்படி .

…அது எப்படி நிறைய வழக்குகள், பத்து வருடங்களுக்குட்பட்டவையாக இருக்கின்றதே..ஒருத்தருக்கு கூடவா அவற்றின் தேவை ஏற்படவில்லை..ஏன் திரும்ப கோருவதில்லை தெரியுமா ?

புகார்தாரர், பதிவு அலுவலகத்திலோ அல்லது இன்னொரு அரசு அலுவலகத்தில் ஒரு ஆவணம் பெறவோ /பதிவு செய்யவோ முயற்சி செய்த போது, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது இந்த வழக்கு பதியப்பட்டிருக்கும்.

எனவே இந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தியிருப்பர். எங்கே ஆவணத்தை திருப்பி வாங்கி கொடுத்தால், புகார்தாரர் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வராமல் விட்டுவிடுவாரோ என்று அதனை அவர்களுக்கு வாங்கி கொடுக்க மாட்டர்.அதே போல சாட்சி சொல்லி முடித்தும், செய்ய மாட்டர்.

மேல்முறையீடு இருக்குமே.

சம்பந்தட்ட புகார்தார், போலீஸிடம் கேட்க பயந்து.அப்படியே விட்டு வைத்திருப்பர்.

அதே போல தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பணமும், புகார்தாரின் சொந்த பணமாக இருக்கும். வழக்கு முடிந்து, அது அவருக்கே திரும்ப கொடுக்க உத்தரவாகி இருந்தும், அதற்கான நடவடிக்கையையே புகார்தாரர் எடுக்க மாட்டர்.

இப்படி குறிப்பிட்ட காலம் நீதிமன்ற வைப்பில் இருந்து, சம்பந்தப்பட்டவருக்கு நீதிமண்றமே நோட்டீஸ் அனுப்பி பெற்றுத் கொள்ள சொல்லியும் பெறாதவர்கள், நோட்டீஸ் "ஆள் இல்லை" என திரும்ப வந்தவை, ஆகியவற்றை அரசுக் கருவூலத்தில் செலுத்தி விடுவர்.

யார் நிலமாக இருந்தாலும் புதையல் கிடைத்தால் அரசுக்கு சொந்தம் என்பது போல☺️.

இதில் நீங்கள் வேறு…அசல் கிரைய ஆவணம் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து திரும்ப பெறாமல் இருந்தால், எப்படி கிரைய ஆவணம் பதிய வேண்டும்? என்கிறீர்கள்.

அப்படி பதிய முடியாது என்பது ஒரு புறமிருக்க, அந்த ஆவணத்தை திரும்ப பெறுவது..விடுங்கள்..அதை கண்ணால் பார்க்கும் நோக்கமே உங்களுக்கு இல்லையா? 😃

படித்தமைக்கு நன்றி

உரிமையில் நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கில் எதிரி சமர்ப்பித்த ஆவணங்களின் பிரதிகளை பெறுவது எப்படி?

 எதிர் தரப்பு தாக்கல் செய்யும் அனைத்து ஆவணங்கள் மற்றும் மனுக்கள், எதுர் உரைகள் ஆகியவற்றின் நகல்கள், உங்கள் வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டு விடும்.

ஒன்று அது அவரிடம் இருக்கக்கூடும்,

அவர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தால்.

இல்லையெனில் உங்கள் தரப்பு கொடுப்பதற்கான நகல், நீதிமன்ற வழக்கு கோப்பினோடோ அல்லது எதிர் தரப்பு வழக்கறிஞரிடமோ இருக்கும். கேட்டு வாங்கி கொள்ளலாம்.

இது இன்னமும் உங்களுக்கு தெரியவில்லை எனில்…

எதற்கும் உங்கள் வழக்கறிஞர் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிறாரா என்று பாருங்கள்..

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...