திங்கள், 7 ஜூன், 2021

முதல் தகவல் அறிக்கையும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் அவருக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

 

முதல் தகவல் அறிக்கை

 ஒருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், காவல்துறை எத்தனை நாட்களுக்குள் அவரை கைது செய்ய வேண்டும்?

FIR பதிவு செய்தாலே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டது புலன்விசாரனை செய்ய வேண்டிய ஒன்றாகவோ, அல்லது குற்றவாளி அதே போன்ற ஒரு குற்றம் செய்ய இருக்கிறார் என்று தெரிந்தாலோ அல்லது அவர்  தப்பித்துப்  போக வாய்ப்புள்ளது என்றாலோ புலன் விசாரனை அதிகாரி கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவரை .கைது செய்யலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அதிகாரம் அந்த அதிகாரிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் அவர் அவ்வாறு கைது செய்யும் போது அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரலாம்.  அல்லது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக வழக்கு போட்டு நஷ்டஈடும் தண்டனையும் கோரலாம்.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு டிரக் ஓட்டுனரை பீஹார் போலீசார் எந்தவித சட்ட நடைமுறையும் பின்பற்றாமல் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு பாட்னா உயர் நீதிமன்றம், மேற்படி மனுதாரரின் 35 நாள் சட்டவிரோத காவலால் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மாநில அரசு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Truck Driver Illegally Detained By Police: Patna High Court Asks Govt To Give 5L CompensationM For Violation Of Fundamental Right

என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டன?

  1. வண்டியை போலீசார் பிடித்தவுடன் ஏன் முதல் தகவல் அறிக்கை போடவில்லை?

அது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது[1]

  1. சட்டவிரோதம் என்றால் ஏன் வண்டியை போலீசார் கைப்பற்றவில்லை?
  2. கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ஏன் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?
  3. புகாரெதுவும் இல்லாமல் , கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலம் இல்லாமலேயே எப்படி போலீசார் நடந்த சம்பவம் இன்னினது என்று ஒரு குற்றம் நடந்ததாக அறிய முடிந்தது?
  4. அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவர் நண்பருக்கோ குடும்ப உறுப்பினருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

5. கைதியிடம் அவர் கைது செய்யப்பட்ட காரணம் கூறாததால் அவர் பிணை மனு செய்ய முடியவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

இவையெல்லாம் குடிமகனுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் என்பதால் அரசு அதை சரி செய்யும் கடமைக்குள்ளானது.

6.கைது நமூணாவில் சரியான விவரங்கள் இன்றி,சாட்சிகள் விவரம் இன்றி தயாரிக்கப்பட்டது.

7.வண்டியின் உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கவில்லை.

இவையெல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளுக்கு எதிரானது.

8.கைது செய்யும்போது உச்சநீதிமன்றம் வகுத்த விதிகள் மீறப்பட்டுள்ளன[2]

இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், லாரி ஓட்டுனர்கள் நீண்ட தொலைவுக்கு குறுகிய காலத்திற்குள் பொருட்களை கொண்டு போய் சேரக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், சரியான உணவு, தூக்கம், சுகாதாரம் இன்றி தங்கள் குடும்பங்களை பிரிந்து வேலை செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் போலீஸாராலும் அரசு தரப்பாலும் நடக்கும் பகல் கொள்ளையிலிருந்து அவர்களை காப்பாற்றவேண்டும்" என்று சுளீர் உத்தரவு போட்டுள்ளது.

நஷ்டஈடு வழங்க உத்தரவு போட்டதோடு அல்லாமல்

  1. தனிப்பட்ட முறையில் மனுதாரருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நீதிமன்றம் அணுகலாம்
  2. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை நடவடிக்கை மூன்று மாதத்திற்குள் எடுத்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
  3. ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை அதன் விவரங்களை மாநில டி ஜி பி.தன் பிரமாண பத்திரத்தின் மூலம் திமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சூப்பரான தீர்ப்பு இல்லே.💪💪💪🙏🙏🙏

  

அடிக்குறிப்புகள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...