உங்கள் மீது அனுதாபம் தான். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணம் நடத்த வேண்டும் என்பார்கள். அது போல உங்கள் காது கேட்கும் குறைபாட்டை மறைத்து திருமணம் நடந்திருக்கும் என்று உங்கள் கேள்வியை பார்க்கும்போது தோன்றுகிறது.
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடக்கும்போது, நீங்கள் காது கேட்கும் கருவி பயன்படுத்தினால், அந்த குறை குறித்து மற்றவருக்கு தெரிய வாய்ப்பு உண்டு. இப்போது அதற்கான கருவி என்ற தெரியாத அளவில் நவீனமாக வந்துள்ளது. அதை பயன்படுத்தவும்.
அவரே விவாகரத்து கேட்கிறார்.இந்த குறை தெரிந்தால் தான் என்ன என்கிறீர்களா? கீழே உள்ளச் செய்தி படியுங்கள்.
சமீபத்தில் கேரளா நீதிமன்றம், ஒரு விவாகரத்து வழக்கில், திருமணத்திற்கு முன்பே தனக்கு இருந்த இதய நோயை மறைத்து திருமணம் செய்த மனைவியின் செயல் ஒரு ஏமாற்று வேலை என்று தீர்ப்பளித்து குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்தது.
திருமனத்திற்கு சம்மதம் பெறும்போது தவறான தகவல்களை அளித்து, உண்மையை மறைத்து, அதனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியா நிலை உருவாக்கியதற்கு, "Fraud " நடந்துள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது..
அதோடு விடாமல், மனைவி கணவனுக்கு ரூபாய் 10,000யை திருமணம் நடந்த நாள் முதலாக வட்டியுடன் சேர்த்து கொடுக்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளது.
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இது இரண்டு தரப்பிற்கும் பொருந்தும் .உண்மையை மறைத்து செய்யும் செயல்கள் அனைத்தும் Fraud தான். எனவே…
defective product sold.. will not be taken back என்பதெல்லாம் இனி இல்லை. வட்டியோடு வசூலிக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக