இந்த கேள்வி தான் கேட்கப்பட்டது அவரிடத்தில்
"மாநிலத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகமாக என்ன காரணம்? அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் படுகிறது?
அதற்கு கிடைத்த பதில்
"பெண் பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாது. அதில் பையன்களுடன் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பின் ஓடிப்போய் விடுகிறார்கள்.."
Girls talk with boys and later run away with them. I appeal to parents not to give mobile phones to their daughters. And if they do, their phones should be checked regularly. All this happens due to negligence by mother: UP women's commission member Meena Kumari (9.6)
இந்த அரிய கண்டுபிடிப்பின் சொந்தக்காரர் உத்தர பிரதேச மகளிர் ஆணையத்தின் தலைவர் மீனா குமாரி..
நல்லவேளையாக இவரின் வீடியோ துணுக்குகள் ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்ட போது, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், அதை மறுத்து, அவர் செய்த மறு ட்வீட் இது·
."இல்லை மேடம், ஒரு பெண்ணின் கையில் ஒரு தொலைபேசி இருப்பது, கற்பழிப்புக்கு ஒரு காரணம் அல்ல. கற்பழிப்புக்கான காரணம் குற்றவாளிகளின் மனநிலையை பாதிக்கும் ஒரு மோசமான சமூக அமைப்பு. மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அனைவரையும் இது குறித்து, புரியவைக் குமாறு பிரதமர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்..."
கடும் விமர்சனம் எழுந்த பிறகு, , தான் அது போன்ற வார்த்தைகளை சொல்லவில்லை என்றும் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவர் பின்வாங்கி விட்டார் ஆனால் அவர் பேசியதற்கான ஆதாரங்கள் வலைத்தளத்தில் உள்ளன
இது முதல் முறை அல்ல. இதற்கு சில மாதங்களுக்கு முன்பே, நாட்டின் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, உத்தர பிரதேசத்தில், 50 வயது ஆன ஒரு பெண்மணி, கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளானதற்கு காரணமே அவர் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றது தான் என்று விமர்சனம் செய்திருந்தார் . இது குறித்து கடும் விமர்சனம் செய்தவர்களில் பிரியங்கா காந்தியும் உண்டு.
கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை, எதிர்த்து அவர் கடும் விமர்சனம் செய்ததை அடுத்து, "சந்திரமுகி "அது போலத்தான் சொல்லவில்லை என்று பின்வாங்கினார்.
பின்னே பேரிலேயே தெரிஞ்சிருக்கும்!!
மகளிர் நலன் காக்க வேண்டிய இவர்களின் கண்ணோட்டமே இவ்வளவு மோசமா என்று நினைக்கும் அதே சமயம், டெல்லி ஆணைய தலைவியின் கருத்தை கொஞ்ச்ம ஊன்றி பாரப்போமே....
"கற்பழிப்புக்கான காரணம் குற்றவாளிகளின் மனநிலையை பாதிக்கும் ஒரு மோசமான சமூக அமைப்பு."
அப்படியானால்..கற்பழிக்க தூண்டுகிறதா சமூகம்?
அது. அவ்வளவு மோசமாகவா இருக்கிறது ?
சமூகத்தின் அங்கம் தானே நாம்..அப்படியானால், தெரிந்தோ தெரியாமலோ, நாமும் இதற்கு உடந்தையா?
ஒத்துக்கொள்ளாது மனது..
நாம் தானே கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை குடுக்கணும்னு சொல்றது? அவர்கள் எல்லாம் மிருகம், அவங்களை போலீஸ் என்கவுண்டரில் போடணும்னு சொன்னது?
பொய் சொல்றாங்கன்னு கூவுவோம்.
அப்ப ..மீனா குமாரியின் பேச்சு உண்மையா? அந்த மொபைல் போன் விவகாரத்துக்கே வருவோம். பயன்பாடு, இளம் பெண்கலின் மோசமான நடத்தைக்கும்‘ கற்பழிப்புகளுக்கும் ’ அது தானா காரணம்?
ஆனா, இந்த புள்ளிவிவரம் ஓத்து வரலையே?
- கற்பழிப்புக்கு ஆளானவர்களில் 15.43 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்று 2019 ஆம் ஆண்டின் தேசிய குற்ற பதிவு தரவு காட்டுகிறது,
- அதுவும் நாட்டின் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில்… குழந்தைக்கு எதிரான குற்றங்கள் அதிகம் இருக்கும் இடத்தில், எப்படி பெண்குழந்தைகள் கற்பழிப்புக்கு தொலைபேசிகள் துணை போகும்?
இந்தியாவில், குற்றவாளியை தவிர ஒவ்வொரு அற்பமான விஷயமும் கற்பழிப்புக்கு பொறுப்பாளிகள் என்பார்கள்.அதன் எதிரொலி தான் உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், "பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம், அவர்கள் ஜீன்ஸ் அணிவது" என்றது.சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் “ஆண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளாக தான் இருப்பார்கள், அவர்கள் தவறு செய்வார்கள் தான் .”என்று நியாயப்படுத்தியது இல்லையா?.
என்ன ..மேலே சொன்ன மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர், ஒரு படி மேலே போய் சொல்லியிருக்கிறார்கள்..வருத்தம் என்னன்னா, இவர்கள் தான் பெண்கள் நலன் காக்கும் இடத்தில் இருக்கும் "பெண்கள்'"!!
நாளிதழகளில் வரும் செய்திகளை பாருங்கள்!!
.தினமும் தான் நாட்டின் ஏதேனும் ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது.. எல்லா செய்தியையும் மீடியா போடுவதில்லை..
அப்படியே வந்தாலும், கற்பழிப்பு செய்திகள் நம்முள் எந்த வித தாக்கமும் ஏற்படாமல் கடந்துப் போகப் பழகிக் கொண்டிருக்கிறோம்..
சிலவற்றிற்கு மட்டும் தான் "கவன ஈர்ப்பு'. கிடைக்கும்.
அந்த வித்யாசம் அந்த செய்திலேயே தெரிந்து விடும்..
பாதிக்கப்பட்டவர் சிறு குழந்தையாகவோ, மூதாட்டியாகவோ, எரிக்கப்பட்டோ, பயங்கரமாக தாக்கப்பட்டு இருக்க வேண்டும்.!! அல்லது அது கூட்டு கற்பழிப்பு என்று இருக்க வேண்டும்!!
அதன் பிறகு ஊடகத்தின் டி ஆர்.பிக்கு அது துணை நிற்கும்.!!
கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த குற்றம் சாட்டுகைகளையும், கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சில நேரங்களில் பெண்கள் குழுக்கள் இவற்றி ன் தொடரும் கற்பழிப்பு கட்டுக்கதைகளை எதிர்கொள்வது அவசியமாகிறது ..
இந்த காலம்காலமாக உள்ள மனநிலையை தீவிரமாக மறுத்து, சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களை பொறுப்பு என்னும்போது, நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
- சில கற்பழிப்பு வழக்குகள் மட்டும் தான், நெருப்பு போல புறப்படும்..நிர்பயா, ஹைதராபாத் டாக்டர், ஹத்ராஸ் பெண் குழந்தை இப்படி…ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், கொடூரமாக "முடிக்கப்பட்டவசர்கள்"
ஒவ்வொரு கற்பழிப்பு செய்தி மக்களை உசுப்பி விடும்போதெல்லாம், , தப்பு செய்தவரை முச்சந்தியில் நிறுத்தி சுடுமையான தண்டனை கொடுக்கனும்னு கூக்குரல் இட்டதே
ஏன் ஹைதராபாத் வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதை மக்கள் கொண்டாடினார்களே?
அப்படியானால் சமூகம், குற்றவாளியை தண்டிக்க தானே சொல்கிறது..அதுவும் கடுமையாய்ன்னு கேட்கலாம்..
உண்மை தான்..
இந்த சமூகம், மற்ற வகையான வன்முறைகளை விட கற்பழிப்பை தான் மிகவும் கொடூரமானதாக கருதுகிறது..பெண்கள் தங்கள் பாலுறுப்பை மறைத்து வைப்பது, அவள் அதை புனிதமாக கருத வைப்பது, அதில் எந்த இடைஞ்சல் ஏற்படின், அதை அவளுடைய மானத்திற்கு ஏற்பட்ட பங்கமாக உணரவைப்பது, கலாச்சாரம், பண்பாடு, என்று பேரில், அதை பாதுக்காப்பதே அவள் அடையாளமாக கொள்வது என்று…இது பெண்களின் பாலுணர்வை கடுமையாக காக்கவேண்டும் என்பதும், "இயற்கைக்கு மாறான" பாலுணர்வை குற்றமாக ஆக்குவதற்கும், பிறப்புறுப்பு மற்றும் பாலுணர்வை நம் வாழ்வின் "தனிபட்ட அம்சங்களாக பாதுகாப்பதற்கும் சமூகம் முன்னின்று பிரச்சாரம் செய்கிறது..
இது நல்லது தானே என்போம்?
பெண்ணின் உடல் பாதுகாக்கப்படாவிட்டால், அவள் குடும்பத்தின் மீது ‘அவமதிப்பை’ ஏற்படுத்தக்கூடியவை என்று சமூகம் நம்புகிறது.அவள் செயல்கள், நிதி , சுதந்திரம் தவிர. பெண்களின் உடல்கள் தங்கள் வாழ்க்கையில் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய மிகவும் மதிப்புமிக்க உடைமையாகக் கருதப்படுகின்றன.
இதற்கு சற்று உளவியல் ரீதியாக பார்த்தோமானால், இந்தியா ஆணாதிக்கத்தின் பிடியில் தான் இன்னும் இருக்கிறது..என்ன தான் சமத்துவம் பேசினாலும், கற்பழிப்பு இன்னமும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது.
எனவே தான் பெண்கள் குறைவான ஆத்திரமூட்டும் விதமாக ஆடை அணியக் கூடாது, மது அருந்தக்கூடாது, பாலியல் பலாத்காரத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில் தங்களைத் தாங்களே தவிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். என்று தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளும்படி கூறுகிறார்கள். அது தான் கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்ட வைக்கிறது. இந்த குற்றம் சாட்டுவதற்கான கலாச்சாரம் ஆணாதிக்கத்தின் விரிவாக்கம் என்பதை நியாய உணர்வாளர்கள் ஒத்துக்கொள்வர்கள்.
இதில், என்ன வசதி என்றால், பெண்களிடம் மாற்றத்தை விட அவற்றைக் கட்டுப்படுத்துவது ஆணுக்கு எளிது.அந்த ஆணாதிக்கம் தான், பெண்ணின் உடல் மற்றும் பாலுணர்வைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது -
பெண்ணின் உடல் மீது ஆண் கொண்ட ஆதிக்கம்,நீண்ட வரலாறு உடையது. அதனால் தான் படையெடுப்பு நடத்தும் எதிரிகள், வெற்றி பெற்றவுடன், அந்த நாட்டு பெண்களை கற்பழிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது. அந்த சமூக மனப்பான்மை தான்,கற்பழிப்பில் ஈடுபடும் ஆணைக் குற்றம் சுமத்தாமல் இருப்பது…
அதனால் தான், இன்னொருவன் மனைவியுடன் தொடர்பு கொள்வது குற்றம் என்று இருந்தும்,, .இன்னொருத்தியின் கணவன் செய்வது குற்றமாக பார்க்கப்படவில்லை. இப்போது, பெண், தன் கணவன் தவிர்த்து இன்னொரு ஆணுடன் உறவு வைப்பது குற்றமல்ல என்ற போது கூக்குரல் எழுந்தது அதனாலேயே!!
நாம் கேட்கலாம் ..கற்பழிப்பு குற்றவாளிகளை உடனே தண்டித்தார்கள் என்று என்கவுண்டர் செய்த போலீசை கொண்டாடவில்லையா என்போம்..
ஆனால் இதே போலீஸ் காவலில் குற்றவாளி இறந்ததற்கு எதிராக சுடும் கண்டனங்கள் எழவில்லையா?
என்கவுண்டருக்கும், லாக்கப் இறப்பிற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றை ஏற்றுக்கொண்டு, இன்னொன்றிற்கு எப்படி எதிர்ப்பு குரல் கொடுப்பது?
அடுத்து கற்பழிப்பு நிகழ்ந்ததும், அவள் போலீசை உடன் நெருங்க முடியுமா? பெண்களுக்கு காவல் நிலையங்களில் மீது இருக்கும் பயம் என்றுமே தீராதது
அந்த அளவிற்கு சம்பவங்கள் நடக்கவில்லை? உடனே "பதமினி" தான் நினைவுக்கு வருகிறாள்.
அப்படியே போனாலும், ஏரியா தகராறு!!
சரி கற்பழித்தவனுக்கு உடனடி தண்டனை என்று என்கவுண்டரை நியாயப்படுத்துவது?
காவல்துறையினர் காவலில் இருக்கும் போது கொல்லப்படும்போது நாம் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது ஏன் புரிய வில்லை?
இது ஜனநாயக பொறுப்புணர்வைத் தகர்த்தெறியும் ஒரு சிக்கலான முன்னுதாரணம். சட்ட அமலாக்கம் என்பது சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே தவிற, அதுவே சட்டம் கிடையாது. அவர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்ளும்போது அது ஜனநாயகத்தின் தோல்வி என்பதை உணரவேண்டும்.
மற்ற வன்முறைகளை விட பாலியல் பலாத்காரத்திற்கு அதிக நீதி வேண்டும் என்று நாம் நிர்பந்திப்பதே, மற்ற வன்முறைகளும் இவையும் சமமில்லை என்பதால் தானே. இதனால்தான் கற்பழிப்பவர்களை கொல்லவேண்டும், முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும் என்று நாம் கேட்பது.. பாலியல் இல்லாத உடல்ரீதியான தாக்குதல் குற்றத்தில் இப்படி கேட்பதில்லையே?
39 ஏ திட்டம்லிங்க்
இந்த ஆய்வில் ஒரு கைதி சொல்வதாக, "என்னைப் போல யாராவது சித்திரவதை செய்யப்படுகையில், நீங்கள் அதைச் செய்தீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல, சித்திரவதையை நிறுத்த நீங்கள் எதையும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று சொன்னதாக கூறுகிறது.
மேலும், இந்த திட்டம், தங்கள் ஆய்வில், 80% கைதிகள் "உடல் மற்றும் மன ரீதியாக காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டுகிறது. கற்பழிப்பாளர்களை சித்திரவதை செய்வது, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கோருவது, சட்டவிரோதமாக அவர்களைக் கொல்வது ஆகியவை தெளிவான மனித உரிமை மீறல்கள். ஆனால் கற்பழிப்பாளர்களுக்கு இத்தகைய மனிதாபிமானமற்ற முறையில் நடத்த கோருகிறோம். ஏனெனில் கற்பழிப்பாளர்கள் மனிதாபிமானமற்ற அரக்கர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்கள். "கற்பழிப்பாளர்களுக்கு கருணை இல்லை" என்பது உரத்த எதிர்ப்பு முழக்கமாக இருந்து வருகிறது.
கடுமையான தண்டணை கொடுத்தால், குற்றம் குறையுமா?
கற்பழிப்பு தொடர்பான இத்தகைய ஆணாதிக்க மனப்பான்மைகளை கடுமையான தண்டனைகளுக்கான கோரிக்கைகள் மூலம் சட்டபூர்வமாக்குவதன் மூலம் நாம் ஜெயிக்க முடியாது. இவை எலலாம் குற்றத்தின் தீவிரத்தன்மையிலிருந்து விலகிச் செல்வது போன்றது.
ஒரு பிரச்சினைக்கான நமது அணுகுமுறை தான் , அதற்கான தீர்வுகளை தீர்மானிக்கிறது கற்பழிப்புக்கான நம் அணுகுமுறை ஆணாதிக்க நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால், தான் மரணதண்டனைக்காண நம் கோரிக்கை, ஆணாதிக்க மனப்பான்மையால் பாதிக்கப்படுகின்றன
பெண்கள் பொதுவாக வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பு என்று நினைக்கிறோம்..இரவு ஷிப்டுக்கு பெண்கள் வேண்டாம் எனப்படுவதற்கு காரணம் அது தான் ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 98% காரணம் தெரிந்த நபர்கள் என்கிறது தேசிய குற்ற பதிவேட்டு பீரோGood laws, bad implementation
திருமண கற்பழிப்பு என்பது இந்தியாவில் ஒரு கிரிமினல் குற்றமாக இல்லாததால், வீடு மற்றும் குடும்பம் தான் பெரும்பாலும் பெண்களுக்கு மிகவும் வன்முறை இடங்களாக இருக்கின்றன. மரண தண்டனை வழங்குவது, பெண்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக புகாரளிப்பதை கடினமாக்கும். கற்பழிப்பை பற்றி முதலில் புகாரளிப்பது, தடை மற்றும் களங்கம். என்னும்போது, இது, கற்பழிப்பாளர்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் புகார் செய்யலாம் என்ற அச்சம் காரணமாக. பெண்களை கொலை செய்ய தூண்டக்கூடும்,
மரணதண்டனை, அதன் செயல்பாட்டில் பாரபட்சமானதயிருக்கக்கூடும் விகிதாச்சாரத்தில், தரமான சட்ட ஆலோசனையை வாங்க முடியாத ஏழை, ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது . திட்டம் 39 ஏ லிங்க் இன் அறிக்கை.
"இந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எப்போதுமே ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்" தான் என்று கண்டறிந்துள்ளது. அவர்கள ஆய்வுப்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 74.1% பேர் "பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள்" (அவர்களின் தொழில் மற்றும் நில உரிமையின் அடிப்படையில்), 76% பின்தங்கிய வர்க்கங்கள் மற்றும் மத சிறுபான்மை மதத்த்தை சேர்ந்தவர்கள் என்று மரண தண்டனையின் அனுபவம் ஒரு நியாயமான வழக்குக்கு இணக்கமாக இல்லை" என்கிறது ப்ராஜெக்ட்
கற்பழிப்பாளர்கள் அரக்கர்களாக சித்தரிப்பதற்கு, போலீசின் மிருகத்தனத்திற்கும் மரணதண்டனைக்கான கோரிக்கைக்கும் முக்கியமானது.
ஏனெனில் கற்பழிப்பாளர்கள் மனிதர்களாக கருதப்பட்டால், அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்துவது கடினம். இருப்பினும், கற்பழிப்பாளர்கள் மனிதர்கள். யாரும் கற்பழிப்பாளராக பிறக்கவில்லை. கற்பழிப்பாளர்கள் நாம் வாழும் அதே ஆணாதிக்க சமுதாயத்திலிருந்தே வடிவமைக்கப்படுகிறார்கள். கற்பழிப்பு பிரச்சினையை தீர்க்க விரும்பினால், நாம் இங்கிருந்து தொடங்க வேண்டும். பிரச்சினையை அதன் வேரில் இருந்து தான் நாம் தீர்க்க வேண்டும்.
சட்ட அமலாக்கத்துறை, கற்பழிப்பாளர்களைக் கொன்று, அவர்களை முதலில் உருவாக்கும் ஆணாதிக்க சமூக நிலைமையை தடையின்றி விட்டுவிட முயற்சிக்கின்றன. ஆனால், கற்பழிப்பு கலாச்சாரம் அன்றாட செயல்களின் மூலம் நிலைத்திருக்கிறது.
திரைப்படங்கள் மூலம் (பெண்களுக்கு எதிரான வன்முறையை முறையான காதலின் வடிவமாக ஊக்குவித்தல்). சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களில் கூட - பெண்களுக்கு அச்சுறுத்தல் தான் விடுகிறது
இதற்கு உதாரணமாக எத்தனையோ படங்களை சொல்லலாம்..
அடுத்து, செய்துதாளுக்கு வருவோம்.
.தலைப்புச் செய்திகளைப் பாருங்கள்லிங்க்.
"இளம் பெண் கற்பழிப்பு!!"
"தனியாக இருந்த மூதாட்டி கற்பழிக்கப்பட்டார்!!"
இங்கு குற்றம் செய்தவர் தலைப்பு செய்தியில் வர மாட்டார்..
பாதிக்கப்பட்ட பெண் தான் செய்தியாகிறாள்..
ஏன்?
இந்திரா காந்தி சுடப்பட்டார் என்பது தான். தலைப்பு செய்தி என்று வைத்துக்கொள்ளுங்கள்.இங்கு சுட்டவர் அவரின் பாதுகாப்பு வீரர் என்றாலும், செய்தியின் தலைப்பு அது ஆகாது..எதற்கு முக்கியத்துவம் என்பது முக்கியம்.
அதே தான் இந்த கற்பழிப்பு செய்திகளிலும்.. செய்தவன் ஒரு ஆண். அது சாதாரணமானது.ஆனால் கற்பு .இழப்பது என்பது தான் முக்கிய செய்தி..அது கூட, கொஞ்சம் வன்முறை இருந்தால் ஓகே .இல்லையென்றால் பத்தோடு பதினொன்று..
இவை அனைத்தும் எதை காட்டுகிறது?
ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அவமதிப்பும், அது அவளது உடலின் மற்ற பகுதிகளை அவமதிப்பதை விட வெட்கக்கேடு, அப்படி தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தவில்லையா?
சட்ட புத்தகங்களும், இதையே பிரதிபலிக்கவில்லையா?
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அவளின் அடையாளம்,, கவுரவம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட அவமானமாக தானே காட்டுகிறது?. அதனால் தானே அவளின் பெயர், முகம் மறைக்கப்படுகிறது?
அப்படியாயின் மற்ற குற்றங்களின் பாதிப்பாளர்களுக்கு என் இப்படி இல்லா? அவை அத்தனை அவமானதாக இல்லை என்றா?
2017 ஆம் ஆண்டில், நிர்பயாவின் கற்பழிப்பாளர்களுக்கு மரண தண்டனையை உறுதிசெய்த இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூட இது தானே சொல்லப்பட்டது?
"அவரது அடையாளம் மற்றும் கண்ணியத்துடன் அவர்கள் போட்ட பேயாட்டம், மனித ரீதியாக நினைத்துக் கூட பார்க்க முடியாதது" .
நிர்பயா போய் விட்டாள்…
அப்படியானால், கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு வாழும் பெண்களின் நிலை? அவர்களின் அடையாளம் தொலைந்து விட்டதா? அவர்களுக்கு இனி சமூகத்தில் மதிப்பில்லையா? அவர்கள் சம்பவங்கள் குறித்து சொல்வது ஏன் கேள்வி கேட்கப்படுகிறது? அவளின் மெல்லிய தடுக்கும் குரல் சம்மதம் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று இன்னொரு வழக்கில் சொல்லவில்லை?
ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது - அவளுடைய மதிப்பு , மரியாதை, அடையாளம் -எல்லாம் போய் விட்டது எனப்படுகிறது.
இதில் இன்னொரு ஆச்ச்ரியம் என்னவென்றால், மக்கள் கோபத்தை தூண்டிய பெரும்பான்மையான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்..
எப்படி?
கற்பழிப்பு குறித்த சமூகத்தின், சட்டத்தின் பார்வை!!
கொஞ்சம் பின்நோக்கி பாருங்க…போலீஸ் காவலில் இருந்த ஆதிவாசி பெண்ணை இரண்டு போலீஸ்காரர்கள் கற்பழித்த 1972 மதுரா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை!!
இப்போது கடைசி கடைசியாய்..மாண்புமிகு பம்பாய் உயர் நீதிமன்றம் லிங்க்
பாதிப்பிற்குள்ளான பெண்ணின் வாக்குமூலம் இன்னமும் சந்தேகத்தோடு தான் பார்க்கப்படுகிறது.
இந்த ஆணாதிக்க அணுகுமுறைகள் பெண்கள் மீதான ஆண்களின் உரிமையை ஊக்குவிக்கின்றன. கற்பழிப்பு தவிர, இந்த ஆண்பெண் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மூலம் வெளிப்படுகிறது.
பெண்களின் மீதான அடக்குமுறை (அது எந்த வடிவத்திலும் இருந்தாலும்) அவ்வளவு பரவலாக இல்லாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் செல்லக்கூடிய ஒரே வழி, பெண்கள் மீதான சமூக அணுகுமுறைகளை மாற்றுவதே.
- தினமும் நடக்கும் கற்பழிப்புகளைப் வெளியிடுவதில் ஊடகங்களின் மவுனம் மணமகனை மணமகனுக்கு "கொடுக்கும்" பாரம்பரியம், "பலவீனமான" இல்லை " என்பது சம்மதத்தைப் பற்றிய கதைகளை ஆதரிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மூலம்" ஆம் "என்று பொருள்படும மவுனம்" இவற்றில் மாற்றம் வேண்டும்.
- அனைத்து பள்ளிகளிலும் அவுட்ரீச் திட்டங்கள் மற்றும் அர்த்தமுள்ள பாலியல் கல்வி மூலம் பெண் குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு ஒப்புதல் பற்றி கற்பித்தல்
- சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சட்டத்தின் நோக்கத்தை உணர்த்துதல்
- பெண்களின் சாட்சியங்களை நம்புதல்
- ஒரு பெண்ணின் கவுரவம் அவரது அந்தரங்க உறுப்பில் உள்ளது என்ற கருத்தை நிராகரித்தல்
இவையெல்லாம் கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு நாம் ஒவ்வொருவரும் சில (அறியப்பட்ட அல்லது அறியப்படாத) வழியில் பங்களிப்பு செய்கிறோம்.என்பதை உணரவேண்டும்.
அதேசமயம், கற்பழிப்பு குற்றங்களை விரைவாக முடிக்க கட்டமைப்பு மாற்றங்கள் தேவை -
- தண்டனையின் தீவிரம், மற்றும் உறுதி, . குற்றத்தைத் தடுக்கும் .
- திருமண கற்பழிப்பு குற்றமாக வேண்டும்.
- கற்பழிப்பின் விளைவுகள் மீளக்கூடியவை என்பதை உணர கற்பழிப்பிலிருந்து தப்பியவர்களுக்கு மறுவாழ்வு தேவைப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கை போதுமானதாக இல்லை. .2013 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட, நிர்பயா நிதியத்தின் பயன்பாடு இருபது சதவீதத்திற்கும் குறைவாக மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது
- காவல்துறை என்கவுண்டருக்கு ஆதாரளிக்கும் போது, பாலியல் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கான அனைத்து தார்மீக அடிப்படையையும் இழக்கிறோம்.
இவற்றில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அக்கறை எடுத்து செயல்படும் போது, நிச்சயம் சமூக மாற்றம் நடந்தே தீரும்.
Kill Rape Culture, Not Rapists
Headlines on rapes need to change. Before we point at people blaming phones, chow, jeans