லோக் அதாலத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லோக் அதாலத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் என்றால் என்ன? மற்ற முறைகளைவிட இது எந்த வகையில் வேறுபடுகிறது?

 

மக்களால் மாக்கள்ளே தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்த்து கொள்ள அறிய சந்தர்ப்பமாக இந்த மக்கள் நீதிமன்றங்கள் அமைகின்றன. இதனைப்  பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்றே சொல்லலாம்.  அதன் பயன்கள்:

  1. சமரசம் ஏற்படுமாயின் கட்டிய நீதிமன்ற கட்டணம் திருப்பி அளிக்கப்படுகின்றது
  2. மற்ற நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கை முடிப்பதால் நமது நேரம், பணம் மிச்சப்படுத்தப்படுகின்றது.
  3. இரண்டு தரப்பினருக்கும் இடையே சமரச தீர்வை அதுவும் அவர்களே எடுப்பதால் (அங்கிருக்கும் நீதிபதி அவர்களுக்கு தீர்வு ஏற்பட உதவி மட்டுமே செய்ய வேண்டும்) இரண்டு தரப்புமே வெற்றி பெற்ற நிலை ஏற்படுகின்றது.
  4. எனவே மேல்முறையீடு தடுக்கப்படுகின்றது.
மனதில் பதியுமாறு சொல்லவேண்டுமாயின், எப்படி பட்டாம்பூச்சி மலரில் தேனை குடிக்கும் போது மலருக்கு வலிக்காமல் குடிக்கின்றது அது போன்று தான் மக்கள் நீதிமன்றத்தில் பங்கு கொள்வதன் பலனாக இருக்கும். 

தேனை குடிப்பதால் பட்டாம்பூச்சிக்கு நன்மை உண்டு பூவுக்கு? என்பீர்கள். ஒரே இடத்தில் இருக்கும் மலர் செடிக்கு மகரந்த சேர்க்கை நடக்க,  பட்டாம் பூச்சிதானே உதவுகின்றது. அது போல தான் இரண்டு தரப்பினருக்கும் நன்மையே கிடைக்கின்றது.

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...