சட்டம் என்பதை நடத்தை விதி மற்றும் சமூகத்தின் சரியான ஒழுங்குமுறைக்கான நடவடிக்கை என்று பொருள் கொள்ளலாம். வணிகத்தைக் குறிக்கும் சட்டம் என்பதால், வணிகம் தொடர்பான பரிவர்த்தனைகளில் இருந்து எழும் வணிகத்தின் சரியான ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு என்று இதை கூறலாம்.
சட்ட அறியாமை என்பதை மன்னிக்க முடியாது/ . ஒவ்வொருவரும் அவர் எந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதுவும் வணிகம் என்று வரும் போது அதோடு தொடர்புடைய சட்டங்களை பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். வணிகத்துக்கு தொடர்புச்டைய சட்டங்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவை என்றால்

1. இந்திய ஒப்பந்த சட்டம், 1872
2. சரக்கு விற்பனை சட்டம் ,1930
3. மாற்றுமுறை ஆவண சட்டம், 1881
4. நிறுவனங்கள் சட்டம், 2013
5. தொழிற்சாலைகள் சட்டம், 1948
6. ஊதியம் வழங்குதல் சட்டம்
7. போனஸ் வழங்குதல் சட்டம்
8. குறைந்த பட்ச ஊதிய சட்டம்
9. தொழிற்துறை தகராறுகள் சட்டம்
10. பேறுகால பலன்கள் சட்டம்
11. வருங்கால வைப்பு நிதி சட்டம்
12. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
13. போட்டிகள் சட்டம்
14. வலைதள குற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம்
15. அறிவுசார் சொத்துரிமை சட்டம்
16. காப்புரிமை சட்டம்
17. வணிக முத்திரை சட்டம்
இந்த சட்டங்களுக்கெல்லாம் தலையானதும் ஒப்பந்த சட்டத்தின்
அடிப்படையானதும் ஆன இந்திய ஒப்பந்த சட்டத்தைப் பற்றி
தெரிந்துக் கொள்வோம்
இந்திய ஒப்பந்த சட்டம்,
1872.
ஒரு கண்ணோட்டம்: :
ஒப்பந்தம்' என்ற சொல்லுக்கு, சாதாரண
அர்த்தத்தில், சொல்ல வேண்டுமானால் எந்த இரு நபர்களுக்கிடையேயான எந்த ஒரு உடன்படிக்கையும் என்று பொருள்
கொள்ளலாம் வணிக நபர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களுடன் ஒப்பந்தங்கள் போடுவது என்பது அவர்களின் வணிகத்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மிக முக்கியமான செயல்முறையாகும். ஒப்பந்தங்கள்
எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன
என்பதால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
என்று ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த ஒப்பந்தச் சட்டம், ஒப்பந்தங்களைப் போடும் நபர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த முற்படுகிறது, இதன் மூலம் இவர்களுக்கு இடையே பின்னாளில் எழும் எந்த முரண்பாடுகளையும் நீதித்துறை மேற்பார்வையின் கீழ் இணக்கமாக அல்லது நியாயமான முறையில் தீர்க்கப்படும்
மறுபயன் இல்லாத ஒப்பந்தம் செல்லாது. இந்த பாடம் செல்லுபடியாகக்கூடிய மறுபயன் மற்றும் அது தொடர்பான விதிகளை பற்றியும் மாணவர்கள் புரிந்துக் கொள்ள உதவுகிறது
கற்றல் நோக்கங்கள்:
இந்த பாடத்தை முடித்தபின்,
உங்களால்
·
ஒப்பந்த சட்டத்தை
விளக்கவும்
·
பல்வேறு ஒப்பந்தங்களை
வகைப்படுத்தவும்
·
ஒப்பந்தத்தின் முக்கிய
கூறுகளை விவாதிக்கவும்
·
ஒப்பந்தத்தின்
செயல்திறன்களை விவரிக்கவும்
·
ஒப்பந்தத்தில் உள்ள
மறுபயனின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்
·
மறுபயன் குறித்த விதிகளை
விளக்கவும் மற்றும் ------------------முன்னிலைப்படுத்தவும்
·
ஒப்பந்தத்திற்கு அன்னியர் குறித்த
விதிகளை வரிசைப்படுத்தவும்
· ஒப்புதல் சுதந்திரமானதாக இல்லாத சூழ்நிலைகளை விளக்கவும்
வலுக்கட்டாயப்படுத்தல் மற்றும் தகாத செல்வாக்கு தொடர்பான விதிகளையும், செல்லுபடியாகக்கூடிய ஒரு ஒப்பந்தத்தில் அவற்றின் தாக்கங்கள் குறித்து எண்ணிப் பார்க்கவும் .
· திரித்துக் கூறுதல் மற்றும் மோசடிக்கும் இடையில் உள்ள
வித்தியாசத்தை அடையாளப்படுத்தல்
போன்றவை செய்ய முடிய வேண்டும்.
1.1 அறிமுகம்
இந்திய ஒப்பந்த சட்டம்,
செப்டம்பர் 1, 1872 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும்
பொருந்தும். இது ஆங்கிலேய ஒப்பந்த
சட்டத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
'ஒப்பந்தம்' குறித்த விளக்கம்:
ஒப்பந்தம் என்பது இரண்டு தரப்பினரிடையே போடப்பட்ட, சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய உடன்படிக்கையாகும். இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 2 (h) , "சட்டத்தால் செயல்படுத்தக்கூடிய உடன்படிக்கை" என ஒப்பந்தத்தை வரையறுக்கிறது சட்ட வல்லுநர் பொல்லாக், 'சட்டத்தால் செயல்படுத்தக் கூடிய ஒவ்வொரு உடன்படிக்கையும், வாக்குறுதியும் ஒரு ஒப்பந்தமாகும்" என்கிறார்.
• பிரிவு 2(e) இன் படி ஒரு உடன்படிக்கை என்பது ―ஒவ்வொரு வாக்குறுதியும் மற்றும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் தொகுப்பும், ஒன்றுக்கொன்று மறுபயனாகும் .
- பிரிவு 2(b) இன் படி, வாக்குறுதி யார் முன்னாள் முன்மொழியப்பட்டதோ, அந்த நபர் அதற்கு தனது ஒப்புதலை தரும் போது, முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது ஒரு வாக்குறுதியாக மாறும்.
உடன்படிக்கை = முனைதல் + ஏற்றல்
கருத்தொருமை ( Consensus ad idem) - ஒப்பந்தத்தின் தரப்பினர், ஒப்பந்தத்தின் விஷயத்தைப் பற்றி அதே அர்த்தத்தில் மற்றும் அதே நேரத்தில் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லா விட்டால், எந்த ஒப்பந்தமும் இருக்க முடியாது
ஒப்பந்தம் = உடன்படிக்கை + சட்டத்தில் அமலாக்கம்
அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலே உள்ள வரையறைகளின் பகுப்பாய்வு, ஒரு ஒப்பந்தம் என்பது
பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது:
• ஏதாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க
ஒரு உடன்படிக்கை
• சட்டத்தில் அமலாக்கம்
இனி ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை பற்றி காண்போம்.