பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

மகன் அல்லது மகளுக்கு தானமாக எழுதிக் கொடுத்த சொத்தை திருப்பிப்பெற முடியுமா?

 பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் பாதுகாப்பு சட்டம், 2007’ ல் சட்டப் பிரிவு 23 படி பராமரிக்கிறது குறித்த நிபந்தனை அந்த பத்திரத்தில் எழுதப்பட்டு அத மீறும்போது அந்த தானம் ரத்து செய்யப்படும்ன்னு இருக்கு.. அப்ப நிபந்தனை இல்லைனா திரும்ப அப்பா, அம்மா சொத்தை திரும்ப வாங்க முடியாது இல்லையா? கேள்வி உள்ளுக்குள்ளே ரகஸியமா எழும்பும்.

கேள்விக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன பின்னணி..

2007 நவம்பர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருது. அசோகன் என்பவர் போட்டது .சாராம்சம் இது தான்.

அவர் அம்மா கிட்டே தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணும் பொறுப்பேத்துகிறேன் ன்னு சொல்லி வீட்டை எழுதி வாங்குறார். கல்யாணத்துக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்த தோட, கடமை முடிஞ்சதுன்னு அம்மாவுக்கு பணம் எதுவும் தர்றதில்லை.அவங்க கேஸ் போடுறாங்க. உச்ச நீதிமன்றம் , சட்டப் படி தானம் குடுத்துட்டு, அதை சம்பந்தப்பட்டவங்க ஏத்துக்கொண்ட பின்பு, அதை திரும்ப வாங்க முடியாதுன்னு வழக்கை தள்ளுபடி செய்யுது.

இது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கும்போது, 2007 டிசம்பர் இந்த சட்டம் அமுலுக்கு வருது.

நிறைய பேர் நினைக்றது என்னன்னா. மனைவிக்கு பராமரிப்பு தொகைன்னு குடும்ப நல நீதிமன்றத்தில் கொடுக்கிறது மாதிரி இந்த சட்டத்திலேயும் பெத்தவங்களுக்கும் ஓரு குறிப்பிட்ட தொகை கொடுக்கிறதுன்னு…

பெற்றோர் பராமரிப்புன்னா பாக்கெட் மணி மட்டுமில்லை.அவங்க உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செல்வு, பாதுகாப்பு இப்படி எல்லாமே இதில் அடக்கம்.

கோர்ட்டுக்கு தான் போகனும்ன்னு இல்லை..சமூக நலத்துறை மூலமாகவும், சொத்தை வாங்கிட்டு சரியா கவனிக்காத பிள்ளைகள் கிட்டேயிருந்து கொடுத்த சொத்தை மீட்கலாம்.

அந்த சட்டத்திலே சொன்ன மாதிரி நல்லா கவனுச்சுக்கிறேன்னு நிபந்தனை எதுவும் அந்த தான பத்திரத்தில் எழுதலே. அதுனாலே திரும்ப வாங்க முடியாதுன்னு வாதிட்டாங்க பிள்ளைகள்.(எவ்ளோ நல்ல மனசு)

ஆனால் உயர்நீதிமன்றங்கள் அதையெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னுட்டங்க. தான பத்திரத்தில் வர்ற வாசகம் "உன் மேல இருக்கிற அன்பினால் ன்னு" இருந்தாலே போதும், அவங்க தானம் கொடுத்ததுக்கு காரணம் நல்லா பிள்ளைகள் கவனிச்சுப்பாங்கன்னு எதிர்பார்த்து கொடுத்தது தெரியுதுன்னுட்டாங்க.

ஒரு நிமிஷம் இந்த இடத்தில் நிற்போம். சட்டத்தை கொஞ்சம் தள்ளி வச்சி பேசுவோம்.

பெத்தவங்க சொத்தை பிள்ளைக்கு குடுக்கணும்ன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் அதுல என்ன வார்தைகள் போட்டு பத்திரம் எழுதிறதுன்னு எல்லாமா யோசிக்கறாங்க? 99% அந்த பத்திரத்தை தயாரிச்சு கொண்டு வர்றதே புள்ளைங்க தானே? கையெழுத்து போட மட்டும் தான் பத்திர ஆபீசுக்கு வருவாங்க..அப்படியிருக்கும்போது வார்த்தை ஜாலத்தை வச்சி பெத்தவங்களை ஏமாத்தறது?

அதுவும் கோர்ட்டு படியேறி பிள்ளைங்க கிட்டேயிருந்து சொத்தை வாங்கி குடுங்கன்னு கேட்டு பெத்தவங்க வர்றதே பெரிசு..அதிலே இப்படியும் சில பிள்ளைகள்…

இந்த சட்டம் போடப்படுவதே சில சமூக ஒழுங்குகள் மாறி போறதுனால தானே..

எங்கே தடம் மாறி போகுது?

அருமை பெருமையா பெத்து வளர்த்தவங்களை, மனசிலே நெருக்கம் காட்டாம எப்படி இப்படி நடத்த துணியிறோம்?

தன்னோட அப்பாவை பத்தி எழுத்தாளர் சுஜாதா ஏழுதியதுண்னு நான் படிச்சதிலே இந்த கட்டுரைகள் கண்ணை குளமாக்கிரும்.

படித்ததில் பிடித்தது ........ எழுத்தாளர் சுஜாதா

வந்த மணி ஆர்டரலே my son ன்னு டைப் பண்றதுக்கு பதிலா my sin ன்னு இருந்ததை பார்த்து, திருப்பி அனுப்பினதும், பின்னாடியே பணத்தை எடுத்துக்கிட்டு ஓடி வந்த அப்பா….

தனக்கு எப்பவும் நண்பனாயிருந்த அப்பான்னு..

அவருடைய இறுதி காலத்தில் அவரை பத்தி நினைவு கூறும்போது.இப்படி சொல்கிறார்..

"…..இவர் அவஸ்தைப் பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபநதத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?சுஜாதா சிறுகதைகள்

எத்தனையோ தலை மகன்கள் தன் நெஞ்சுக்குள்ளேயே பெத்தவங்களை சுமந்துக்கிட்டு இருக்கிறாங்க தான். தூரத்தில் இருந்தாலும், அவர்களுடனே மனசுக்குள் நெருக்கமா…இந்த கோராவிலேயே அப்படி இருக்கரவங்க இருக்காங்க தான்.

ஆனால் ஒரு துளி விஷம் போதுமே....... ஒரு பானை பாலை வீணடிக்க…

நாம நம்ம அப்பாவோட சட்டை பாக்கெட்டில் பணம் எடுத்த மாதிரியோ, இப்ப நம்ம பிள்ளைங்க நம்ம ATM  கார்டிலே பணம் எடுத்து செலவு பன்ற மாதிரி உரிமை …

ஏன் எந்த அப்பா, அம்மாக்களுக்கும் தன் பிள்ளைங்க கிட்டே இருந்ததில்லை?

ஏன்னா…அது தான் அவங்க சிறப்பே…

வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படின்னு கற்றுக் குடுத்த அவங்க கிட்டேயே நம்ம புத்திசாலித்தனத்தை காட்றதா?

சில இடங்கள்லே தோத்து போனா தான் வாழ்க்கையிலே ஜெயிக்க முடியும்.

அது போல தோற்க வேண்டிய முதல் இடம் நம்ம பெத்தவங்க கிட்டே தான்….

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...