அரைகுறையான தகவல்கள் எப்போதும் ஆபத்து!!
நம்மை உணர்ச்சிபூர்வமாக தூண்டி விட நினைப்பவரும் இப்படி அரைகுறை தக்வலை கொடுத்து உசுப்பேற்றி விடுவர்!!
எனவே விவரம் முக்கியம்!!
டெல்லியில் உள்ள அதிகார மையங்களை ஒன்றிணைக்கும் திட்டம் இது..
ரைசினா மலையுச்சியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கும் இந்தியா கேட்டிற்கும் இடைப்பட்ட நிலத்தை உள்ளடக்கியது இந்த திட்டம்..இதில் நான்கு பகுதிகள் உண்டு.
- முதலாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது.
- இரண்டாவதாக, தற்போதுள்ள கிட்டத்தட்ட ஒரு டஜன் கட்டிடங்களை இடிப்பது, அவற்றில் சில தேசிய அருங்காட்சியகம் போன்ற முக்கிய கட்டிடங்கள்.
- மூன்றாவதாக, இன்று டெல்லியின் குடியிருப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் பரந்த பசுமையான இடமான ராஜ்பாத்தின் மூன்று கி.மீ நீள இடத்தில், ஏழு மாடி உயர் அரசு அலுவலகங்களை நிர்மாணித்தல்,
- நான்காவதாக, பிரதமர் மற்றும் துணை பிரதமருக்கு புதிய குடியிருப்பு மற்றும் அலுவலகத் தொகுதி அமைத்தல்.
முக்கியமாக தற்போதைய பாராளுமன்றக் கட்டடத்தை ‘ஜனநாயகத்தின் அருங்காட்சியகமாக’ மாற்றுவது,!!
வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, "அருங்காட்சியகங்கள் இறந்த அல்லது அழிந்துபோன விஷயங்களுக்கு மிகவும் பொருத்தமானவை. தானே" என்கிறார்.
- இந்தத் திட்டத்தில் ,தற்போது பாதுகாப்பு, நிதி, வீட்டு மற்றும் வெளிவிவகார அமைச்சகங்களை கொண்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக் - இடத்தை- அருங்காட்சியகங்களாக மாற்றுவதும் அடங்கும்,
- அதே நேரத்தில் அந்த அமைச்சகங்கள் மத்திய விஸ்டாவில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத் தொகுதிகளுக்கு மாறுகின்றன
- .2019 ஆம் ஆண்டில் இந்த திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, அழகியல், கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் நிதி அடிப்படையில் இந்த திட்டம் தவறு எனப்பட்டது..அதுவும் ஒரு நூற்றாண்டு பழமையான பாரம்பரிய மண்டலத்தின் தன்மையை சீர்குலைப்பதைத் தவிர, இந்த திட்டம் நகர்ப்புற திட்டமிடலுக்கு எதிரானது எனப்பட்டது...ஏனென்றால், - சுமார் 80 ஏக்கர் - பொது பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு சுற்றுசூழல் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது.எனவே அதை பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை..
மத்திய விஸ்டா திட்டம் "உலகத் தரம் வாய்ந்த" ஒரு நகரத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது, இன்று உலகின் மிக அற்புதமான நகர மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கலை மற்றும் கட்டிடக்கலை என்பது உயரடுக்கு விவகாரங்களாக இருக்கும் இந்தியாவில், பொது மக்கள் அதை பற்றி பொதுவாக பேசுவதில்லை. ஆனால் இன்று இது ஒரு விவாதத்திற்குரிய ஒன்றாகிவிட்டது. இது ரொம்ப அபூர்வமானது.
ஏன்?.
இது நடக்கும் நேரம்..
- ஏப்ரல் முதல், 11 மில்லியனுக்கும் அதிகமான புதிய கோரானா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
- மேலும் COVID-19 காரணமாக 94,000 பேர் இறந்துள்ளனர்.
- மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் உள்ளன.
- நாட்டில் உள்ள தகனங்களும் கல்லறைகளும் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.
- ஆனால் இந்த நெருக்கடியின் நடுவில், இந்த ஒரு ‘அத்தியாவசிய சேவை’ இன்னும் தொடர்கிறது.
இது தான் எல்லோரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது..
சரி..இதற்கு செலவிட ஒதுக்கிவைத்த 20,000 கோடி நிதியை, தொற்றுநோயை நோக்கி திருப்பிவிடப்படலாம் என்று வாதிடப்படுகிறதே. அது சரியா?
இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே நேரத்தில் செலவிடப்படுவதில்லை, ஆனால் ஒவ்வொரு கட்டங்களாக செய்யப்படும். அதனால், இந்த திட்டத்தை முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் ரூ .20000 கோடி இப்போது கிடைக்கிறது என்றும் நமது சுகாதார உள்கட்டமைப்பை நோக்கி அதை திருப்பிவிடலாம் என்றும் எண்ணமுடியாது.
ஆனால் மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கில் இருக்க, இந்த பணிகள் மட்டும் நடக்க இது அத்தியாவசிய தேவையா? என்பதே கேள்வி.
டெல்லிவாசிகள் இருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் , தொற்றுநோயின் இந்த உச்ச கட்டத்தின் போது, வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளபோது, நடக்கும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் நிறுத்த கோரினர்.
ராஜ்பாத் மற்றும் இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான சுற்றியுள்ள புல்வெளிகளில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய விஸ்டா அவென்யூ மறு அபிவிருத்தி திட்டத்தில் கட்டுமான நடவடிக்கைகளால் ஏற்படும்/ பரவக்கூடிய அச்சுறுத்தலால், தில்லி மற்றும் அதற்கு அப்பால் உள்ள குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் உல்ளது என்றும், திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிர்கள் உட்பட, திட்டத்தை முன்னெடுக்கும் இடைவிடாத, கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற செயலை எதிர்த்து வாதிட்டனர்.
வழக்கு போட்டவர்களும், மத்திய அரசும் வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக சுகாதாரத்திற்கான உரிமையை அங்கீகரித்திருந்தாலும், தொற்றுநோய்களின் போது கட்டுமானத்தைத் தொடர்வதில் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயங்களை ஒப்புக் கொள்ள மத்திய அரசு மறுத்துவிட்டது.
கடந்த சில வாரங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் இந்தியா பேரழிவிற்கு உட்பட்டது.. ஆனாலும் கட்டுமான பணி நிற்கவில்லை.
இந்த வழக்கில் வாதாடுதல் முடிந்து, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு சுற்று வழக்குகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதே உண்மை!!.
மருத்துவமனையில் இடம் இல்லாமலும், மருந்து கிடைக்காமல் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் இந்த நேரம் இந்த கட்டுமான பணி மட்டும் அவசர அவசரமாக நடக்க காரணம்?
- இந்த பிரமாண்டமான திட்டத்தின் கட்டிடக் கலைஞர் பிமல் படேல் இதை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மால் போன்றவற்றுடன் ஒப்பிட்டுள்ளார். நேஷனல் மால் சில வழிகளில் இந்தியாவில் ராஜ்பாத் போன்றது, இது அதிகாரத்தின் நடைபாதை.
- பல ஆண்டுகளாக, நேஷனல் மால் தன்மையிலிருந்து, மத்திய விஸ்டா திட்டம் புறக்கணிக்கப்பட்டதாகத் தோன்றும் அளவுக்கு அதிகமான ‘விளம்பரம்’ கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்..
- மத்திய விஸ்டா திட்டம் முடிந்ததும், அதன் கட்டிடங்கள் எல்லாவற்றிலும் , திறம்பட வேலி போடப்பட்டு, அதிக பாதுகாப்பு பகுதியாக மாறும்.இது சாதாரணமாக மக்கள் நுழைய முடியாத அதிகார கோட்டையாக மாறும்...இதுவும் நேஷனல் மால் லிருந்து வேறுபட்டது.
ஒவ்வொரு ஆட்சியும் அதன் அடையாளங்களை விட்டுச்செல்கின்றன. ராஜராஜ சோழரின் பிருஹதேஸ்வரர் கோயில், அல்லது அக்பரின் ஃபதேபூர் சிக்ரி, அல்லது நேருவின் சண்டிகர். அது போன்ற எண்ணத்தினால்..இந்த அரசு ஒரு அடையாளத்தை ஏற்படுத்த விரும்பலாம்.அது ஒன்றும் தவறில்லை..
இந்த கட்டிடம் காலம்காலமாக நிலைத்து இருக்கும்போது, அதனுடன் இனிமையான நினைவுகளையே தக்க வைக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி, இந்த பெருந்தொற்று காலத்தில், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைப்பதே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக