இவர தான் கேரள திரைப்பட நடிகர் அனுப் மேனன். ."தாத்ரி தலை முடி க்ரீம் " விளம்பரத்தில் நடித்தவர்.
இவர் மீதும் இந்த தலை முடி க்ரீம் தயாரிப்பு நிறுவனம் மீதும் திருச்சூர் நுகர்வோர் மன்றத்தில் ஒரு வழக்கு 2012ல் போடப்பட்டது.[1]
புகார்தாரர் 2012 ஜனவரியில் இந்த விளம்பரத்தை பார்த்தாராம். 6 வாரங்கள் உபயோகித்தால், தலை முடி வளர்ச்சி அமோகமாக😀 இருக்கும் என்று இந்த நடிகர் விளம்பரப் படத்தில் சொன்னதை நம்பி , ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் இல்லைங்க.. .சொளையா 376 ரூபாய்
அய்யோ.. இந்த நம்பரே நல்லா இல்லையே😁
கொடுத்து க்ரீம் வாங்கி உபயோகம் பண்ணினா….ஒன்னும் நடக்கலை..அவர் வீட்டிலே, பிரெண்ட்ஸ் எல்லோரும் இந்த க்ரீம் போயி வாங்கினியான்னு கிண்டல் பண்ணினது தான் மிச்சம்.அதுனால ரொம்ப மன உளைச்சல் ஏற்பட்டுருச்சுன்னு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்டார்.
மேனனுக்கு சம்மன் போச்சு..அவரும் ஆஜராகி, சாட்சி சொன்னார்…என்னன்னு.?
"நான் அந்த க்ரீமை உபயோகிச்சதே இல்லை.எங்கம்மா செஞ்சு குடுக்கிற எண்ணையை தான் யூஸ் பன்றேன்"ன்னு😆
அதோடு நிறுத்தினாரா அந்த வெள்ளந்தி மனுஷன்?
"விளம்பரப் படத்திலே என்ன சொன்னாங்கனே எனக்கு தெரியாது. அது அந்த நிறுவனம் சொன்ன கதை."😂
பாவம் அவரு நினைச்சாராம் அந்த க்ரீம் தலைமுடி பராமரிப்புக்கு தான்…தலைமுடி வளர்ச்சிக்குன்னு தெரியாதுன்னு வேற சொல்லி..😃
ஆனால் அந்த விளம்பரத்திலே அவர் சொல்றாரு…"இந்த க்ரீமை உபயோகம் பண்ணினா, ஆறே வாரத்தில் மும்மடங்கு தலைமுடி வளர்ச்சி"🤣
"இது தவறான வாக்குறுதி கொடுத்து நுகர்வோர் எமாற்றப்பட்டிருக்கின்றனர்ன்னு தெரிவித்த நுகர்வோர் மன்றம் புகார்தாரருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்" னு தீர்ப்பு சொல்லியிருக்கு.
"ஆயுர்வேத பொருளோட விளைவுகளை பத்தி புகார்தாரர் கேள்வியெழுப்பலை. அது கொடுக்கிறதா சொன்ன முடி வளர்ச்சியை தான் கேள்வி கேட்டுருக்கார்..அதோட க்ரீம் உறையில், அச்சிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பூதக்கண்ணாடி கொண்டும் படிக்க முடியலை"ன்னு கருத்து தெரிவிச்சுருக்கு.
மேலும் இது போன்ற விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்துற மோசமான தாக்கத்தை குறிப்பிட்ட மன்றம், மீடியாவும் பத்திரிக்கைகளும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது.
கோர்ட்டு இந்த உத்தரவை போன 2019 செப்டம்பரிலேயே போட்டாலும் இப்பதான் அந்த தீர்ப்பு விவரம் கிடைச்சிருக்கு..
அதுல, இனி மேனன், எந்த நுகர்வோர் பொருளையும் உபயோகம் பண்ணாம அந்த விளம்பரத்திலே நடிக்கக்கூடாதுண்னு சொல்லிட்டு, அவரும் அந்த தயாரிப்பு நிறுவனமும் தலா ரூபாய் 10,000யும் அந்த க்ரீம் விற்ற " ஏ ஒன் மருந்துக் கடை" 😂
ரூபாய் 3000த்தையும் நஷ்டஈடா குடுக்கனும்னு உத்தரவு போட்டு இருக்கு.
இதுலே என்ன சிறப்புனா தவறான உறுதி கொடுக்கும் விளம்பரப் படத்திலே நடிக்கும் நடிகரும் பொறுப்பு ன்னு இப்ப தான் சட்டத்திருத்தமே செய்யப்பட்டிருக்கு..ஆனா அதுக்கு முன்னாலேயே இந்த நுகர்வோர் மன்றம் தைரியமா ஒரு முன்னோடி தீர்ப்பு குடுத்திருக்கு…👍
- ஏன்னா…அந்த தீர்ப்பு வழங்கின மன்றத்தில் இருந்தவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீஜா 😂
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
அடிக்குறிப்புகள்
1 கருத்து:
Super Answer
கருத்துரையிடுக