சனி, 12 ஜூன், 2021

தமிழக அளவில் இந்துசமய அறநிலையத்துறையைப்போல் இந்திய அளவில் இந்து சமய கோயில்களுக்கென்று தனி வாரியம் அமைத்தால் என்ன?

 அதெல்லாம் இருக்கட்டும். இங்கே இருக்கிற அறநிலையத்துறை செய்யுற வேலையப்பத்தி ஒரு பொது நல வழக்கு போடப்பட்டுள்ளது தெரியுமா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் மாங்காடு காமாட்சியம்மன் கோயில் நிதியிலிருந்து நபிது அறநிலையத்துறை அமைச்சரும் கமிசனரும் உபயோகிக்க கார்கள் வங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த கார்களுக்கு உண்டான டீசலுக்கு கோயில் நிதிதான் உபயோகிக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு.

இதே போல இன்னொரு வழக்கு, சமீபத்தில் அரசாங்கம், 20 வசதியான கோயில்கள் நிதியிலிருந்து 10,000 கிராம கோயில்களை புதுப்பிக்க 10 கோடி ரூபாய் வசூல் செய்யுமாறு போட்ட உத்தரவை எதிர்த்து போடப்பட்டதில், இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது மேற்படி இரண்டு வழக்குகளும் ஒன்றாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும் இது குறித்து அரசியல் சாசனத்தின் பிரிவு 25, 26, 27 படி கோயில்களுக்கும் மற்ற வழிபாட்டுத்தளங்களுக்கும் சொந்தமான சொத்தை ஒரு அரசு எடுக்க முடியாது என்று இருந்தாலும் அரசு தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனாலும் அரசு அதன் சட்டத்தையே மதிக்காமல் அதன் விதிமுறைப்படி பொதுமக்களின் ஆட்சேபணைய க் கேட்காமல், தொடர்ந்து கோயில் நிதியிலிருந்து வேறு கணக்கிற்கு நிதியை மாற்றிவருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2011லிருந்து சுமார் 19000 கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்காமல் துறை அழுவல்ர்களே நிர்வகித்து வருவதாகவும் அபிஹா கோயில் வருவாய் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு கம்ப்யூட்டர் வாங்கவும் கட்டிடத்தை பெயிண்ட் அடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வெகு விரைவில் கோயில் நிதியை கொண்டு ஒரு டிவி சாணல் ஆரம்பிக்க அரசு முனைநதுள்ளாதாக நீதிம்ன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த கபாலீஸ்வரர் கோயிலை பற்றி நினைக்கும் போது மாணிக்க வாசகரின் திருவாசகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்லும் அளவிற்குஅந்த ஈஸ்வரனை நினைத்து புலம்பி தன்னை கடைந்தேற வழி காட்டுமாறு பாடுவார்.

அவர் ஏன் அந்த அளவிற்கு புலம்பினார் என்றால் சிவனே நேரில் வந்து இவரை கைலாயத்திற்கு கூப்பிட்டிருப்பார். அமெரிக்கன் எம்பசி ஹை கமிஷனரே வீட்டுக்கு வந்து விசா கொடுத்த மாதிரி!!.

ஆனால் இவர் ஏதும் சொல்லாததால். மற்றவர்களை மட்டும் கூப்பிட்டுக்கொண்டு போயிருப்பார்.

அதன் பிறகு அதன் அருமை உணர்ந்து தான் கதறுவார். இறைவா நானே உன்னை தேடி வந்திருந்தால் உன் அருமை தெரிந்திருக்கும். ஆனால் நீயே வந்து என்னைக் கூப்பிட்டதால் உன் அருமை தெரியாமல் சிறு குழந்தை கையில் கிடைத்த பொற்கிண்ணம் போல தூக்கியெறிந்து விட்டேனே என்று புலம்புவார்.அந்தப் புலம்பலும் கதறலும் தான் திருவாசகம்.

நாமும் அப்படித்தான் …..

சிறு குழந்தையின் கையில் கிடைத்த பொற்க்கிண்ணத்தை தூக்கி எறிந்து விளையாடுவது போல அரசும் அறநிலையத்துறையும் கோயில் நிதியைக் கொண்டு விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.😗

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை பற்றி பேசாமல்,

பொதுவாக இது போன்ற அரசின் மற்றும் அந்த துறையின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.

கோயில்களின் நிதி என்பது நம்மிடமிருந்து பெறப்படும் காணிக்கைகளையும் சேர்த்து என்பதால் நமக்கு அதுக்குறித்த தெளிவான புரிதல் இருப்பது அவசியம்..

ட்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...