போலீஸ் விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலீஸ் விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ சோதனை) உண்மையில் பயன் உள்ள ஒன்றா? ஏன் உச்ச நீதிமன்றம் அதனை தடை செய்திருக்கிறது?

 

போலிக்ராப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை 9௦ சதவீதம் வெற்றிகரமானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான அதாரம் இல்லை என தேசிய ஆராய்ச்சி கவுன்சில், சொல்லியுள்ளது. அமெரிக்க மனோவியல் சங்கமும் "பெரும்பான்மையான உளவியலாளர்களும் இந்த சோதனை பொய் சொல்வதை சரியாக கணிக்கிறது என்பதற்கு சிறிதளவு சான்றே உள்ளது என ஒத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்லியுள்ளது.

மான்புமிகு உச்ச நீதிமன்றமும் நார்கோ சோதனை., போலிக்ராப் சோதனைகள் குற்றவாளிக்கு செய்வது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. .குற்ற வழக்குகளில், இவற்றை வலுக்கட்டாயமாக குற்றவாளிக்கு செய்யப்படுவதை அனுமதித்தால் , அது போலிசாரின் நடவடிக்கையின தரத்தை பொறுத்து, வழுக்கும் உச்சியின் முதல் படியாகும்" என்று கூறியுள்ளது. என்றாலும், சம்மதத்தின் பேரில், தகுந்த பாதுகாப்புகளுடன் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


திங்கள், 7 ஜூன், 2021

Postmortem ரிப்போர்ட் வாங்குவதற்கு காவல் நிலையத்திற்கு சென்றால் காவல் நிலையத்தில் fir காப்பியை கேட்கிறார்கள் fir காப்பி தொலைந்து விட்டது அதை எப்படி பெறுவது?

 

  1. முதல் தகவல் அறிக்கையை இப்பொதெல்லாம் ஆன்லைனில் ஏற்றிவிடுகிறார்கள் .அதிலிருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
  2. இல்லையெனில் அது நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருக்கும் அங்கும், அதன் நகலை , மனு செய்து பெறலாம்.

ஆனால் இவை இரண்டிற்கும் குற்ற எண் தெரிந்தால் தான் அது முடியும்.

புகார் கொடுத்தவர் என்ற முறையில், மீண்டும் ஒரு நகல் வேண்டும் என்று காரானதைசொல்லி காவல் நிலயததிற்கே மனு செய்யலாம்.அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மேலதிகாரியிடம் முறையிடலாம்

ஒரு வழக்கில் சாட்சி இருந்தால் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் எண்கிறார்கள். சாட்சி ஏதும் இல்லை உறவினர் இருவர் பெயரை கொடுக்க சொல்கிறார்கள் கொடுத்து விடுகிறீர்கள். விசாரணையின் போது குற்ற நேரத்தில் சாட்சிகள் இல்லை என்று உண்மை சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

 

  1. வழக்கு பதிவு செய்வதற்கு சாட்சி தேவையில்லை…
  2. எப்.ஐ. ஆர். போடுவதற்கு உண்டான பிடிவாரண்ட் போடக்கூடிய அளவிலான குற்றம் நடந்தது தெரிய வரும்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது.காவலரின் பணி.
  3. உடன் அவர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து விடவேண்டும்.
  4. பின், சம்பவ இடத்திற்கு உடன் சென்று, சாட்சிகள் உள்ளனரா என்று விசாரித்து, அவர்களிடம சம்பவம் குறித்து விசாரித்து பதிவு செய்ய வேண்டும்
  5. சாட்சிகள் கொண்டு வருவது புகார்தாரரின் வேலை கிடையாது.
  6. அப்படியே சாட்சிகள் தானாகவே முன்வந்து சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தால், அவற்றை பதிவு செய்யவேண்டியது அவரின் கடமை.
  7. போலீசார் சொல்கின்றனர் என்று சம்பவ சாட்சி என்று நின்று விட்டு, பின்னர் நீதிமன்ற விசாரணையின் போது, அது குறித்து தெரியாது என்று சொன்னாலும், தெரியும் என்றாலும், குறுக்கு விசாரணை செய்யப்படுவார்.
  8. பொதுவாக சாட்சி நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறும்போது, தண்டனை ஏதும் கொடுப்பதில்லை
    1. ஆனால் அவர் அரசு பணியில் இருந்து, சாட்சி சொல்ல அழைக்கும்போது, நீதிமன்றத்தில் மாற்றி சொல்லும்போது, சில சமயம் பின் விளைவுகள் இருக்கும்.
    2. ஆனால் உண்மை அதுவே என்றால் கவலைப்பட தேவையில்லை.
      1. ஒரு குற்ற வழக்கில், குற்றவாளி தரப்பு சாட்சியாக ஒரு அரசு ஊழியர் சாட்சியம் அளித்தார். சாட்சியின் மேலதிகாரியாக குற்றவாளி இருந்தவராம். அவருடைய நல்ல நடத்தை, சம்பவத்தின் போது தான் உடன் இருந்து பார்த்தது, போலீசார் எப்படி பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று சாட்சியம் அளித்தார்.உண்மையில் அந்த சாட்சியின் நேர்மை அரிதானது.💌மற்றவருக்கு பிரச்சினை வரும்போது ஓடி ஒளிபவர்கள் இருக்கும் இன்றைய நிலையில், பின் விளைவுகள் தெரிந்தும், தைரியமாக அவர் முன்வந்து சாட்சியம் அளித்தார். அவருடைய நியாயமான பின்னணி, மற்றும் சாட்சியத்தின் உண்மைத்தன்மை தெரிந்ததால் அரசு தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய சாட்சியம் தான் முக்கிய பக்கபலமாக இருந்து வழக்கிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது!! அவர் குடும்பம் என்றும் நன்றாக இருக்கும் என்று இந்த நேரத்தில் கூட நினைக்கத் தோன்றுகிறது!!💐

சாட்சிகள் போலீஸ் விசாரணையில் போது ஒன்றும், நீதிமன்ற விசாரணையின் போது வேறொன்றும் சொல்வதை தவிர்க்க, சாட்சி விசாரணையை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என்ற சட்டத் திருத்தம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அப்படி வருமாயின், தேவையற்ற பொய் வழக்கு போடுவது குறையும் என்று நம்பலாம்.

ஒரு ஐந்து பேர்‌ சேர்ந்து என்னை அடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கீழே இருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து ஒருவருடைய கழுத்தில் வைத்து தப்பிக்க பார்க்கிறேன். அந்த சமயத்தில் அங்கு வரும் காவல்துறை முதலில் யார்‌ மீது நடவடிக்கை எடுக்கும்?

 கண்ணால் பார்த்ததை வைத்து , போலீஸ் முடிவு செய்து விட முடியாது.

பட உதவி கூகுள்.

அந்த சமயத்த்தில் பார்த்தவுடன், போலீஸ் முதலில் செய்வது..

  • எல்லோரையும் அள்ளிப்போட்டுக் கொண்டு ஸ்டேசனில் போய் சேர்ப்பது..
  • பிறகு "விசாரணையை" ஆரம்பிப்பார்கள்.
  • தப்பிப்பதற்கு, தற்காத்து கொள்வதற்கு தான் நீங்கள் கூர்மையான பொருளை ஒருவர் கழுத்தில் வைத்தீர்கள்.அதுவும் அவர்கள் ஐந்து பேரும் உங்களை அடித்த பிறகு..அது எதிர் வினை தான்..
  • அதனால், முதலில் வினை செய்த அந்த ஐந்து பேர் மீது தான் வழக்கு போட வேண்டும்.

ஆனால், இப்போது எல்லாம் நடப்பது என்னவென்றால், கூர்மையான பொருள் தன்னை காயப்படுத்தி, கொலை செய்ய முயற்சி நடந்ததாக சொல்லி, அவர் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டு, போலீசில் உங்கள் மீது புகார் கொடுப்பார்..

போலீசுக்கென்ன ..அவர்கள் இரண்டு தரப்பு மீதும், ஒரே சம்பவத்தில் விளைவாக எப்.ஐ.ஆர் போட்டு விடுகின்றனர்.

இது போல செய்யாமல், தகுந்த விசாரணை செய்து, யார் மூல காரணம் என்று பார்த்து, தவறு செய்த ஒரு தரப்பு மீது தான் வழக்கு பதிய வேண்டும் என்று மாண்புமிகு உயர்நீதிமன்றமும் சரி, உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்பு சொல்லியாயிற்று….

ஆனால். போலீஸ் கேட்டால் தானே…

  1. ரெண்டு தரப்பு மீதும் கவுண்டர் (அந்த கவுண்டர் இல்லே 😆) கேஸ் போட்டு விடுகின்றனர்..
  2. அதை விட மோசம். என்னவென்றால், ஒரு வழக்கில் மட்டும் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விடுவர்..
  3. இன்னொன்றை அப்படியே ஊறுகாய் போல போட்டு வைத்து விடுவர்..
  4. இது கிராமப்புறங்களில், இரண்டு தரப்பிலும் பெரிய பகையாக மாறி, வெட்டு, குத்து வரைக்கும் போய் விடுகிறது.
  5. சாதாரணமாக இந்த வாய்க்கால், வரப்பு தகராறு போன்றவற்றில், இவை சர்வசாதாரணமாக நடக்கிறது.

இதில் சூத்திரதாரியான போலீஸ், இது போன்ற நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, சரியான நடவடிக்கை எடுத்தாலே நிறைய விஷயங்களில், தேவையற்ற பிரச்சினை குறையும்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் சிக்கும்போது, நம்முடைய புகார் மீது எப்.ஐ.ஆர் தவிர்த்து, வேறு நடவடிக்கை எடுக்காமல், மற்ற வழக்கை மட்டுமே போலீசார் துரிதப்படுத்தினால்,

  • உங்கள் புகாரிலும், இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு வழக்கையும் சேர்த்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுக்கவேண்டும்.
  • உங்கள் புகாரில் இறுதி அறிக்கை அதாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரையில், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடத்த இடைக்கால தடை கோரி பெற வேண்டும்.
  • இல்லையெனில் வெவ்வேறு விதமான தீர்ப்பு இரண்டு வழக்கிலும் வர வாய்ப்புள்ளது.

இந்த சட்ட நடைமுறைகளை நாம் தெரிந்துக் கொண்டு நடப்போமேயானால், போலீசின் சில சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கலாம்.


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...