தமிழ் மொழியை இன்னொன்று அழிககிறதா என்ற கேள்விக்கு புகு முன், தமிழ் மொழியை அழிக்க வேறொருவர் தேவையில்லை நாமே போதும் என்ற நிலைக்கு வந்த பிறகு, மற்றவரை குறை சொல்வானேன்?!
என்ன ..அதிர்ச்சியா இருக்கா..
நான் எந்த தப்பும் பண்ணலே….அவன் தான்.ன்னு சொல்லி தப்பிக்க முடியாது…
ஏனென்றால் தப்பு நடக்கும்போது கண்டும் காணாமலும் இருப்பவனும் தானே உடந்தை..
பீஷ்மரும் விதுரரும் தப்பு செய்யாவிட்டாலும் குற்றம் சுமத்தப்பட்டது அதனால் தானே…
அப்படி என்ன தப்பு நடந்தது…எனக்கு தெரியாமன்னு கேட்கிறீர்களா..
நமக்கு தெரியாம நம்ம சொத்து களவாடப்பட்டா, குற்றம் நம்ம மேல தானே சொல்லணும்?
தமிழ் மொழி நம்ம சொத்துன்னா, அதை ஓசைப்படாம அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, வாய் மூடி மவுனியாய் இருப்பதும் நாம் தானே..😏
அப்படி என்ன தான் நடந்துருச்சுன்னு உண்மையான ஆதங்கத்தில் கேட்பவர்களுக்கு மட்டும்..
தமிழக அரசுப் பணிகளுக்கு அடிப்படை தகுதிகளாக இருந்தவை
- தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ் நாட்டில் குடியிருக்க வேண்டும்
- தமிழக அரசு நடத்தும் தொகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, இடைக்கால முதல்வர் ஆன திரு பன்னீர்செல்வம் அவர்கள், அந்த கட்டத்தில் ஓசைப்படாமல் முதல் இரண்டு நிபந்தனைகளையும் நீக்கினார்.
இதனால் பலன் கண்டது தமிழ்நாடு மின்சார வாரியம்!! எக்கச்சக்க வட இந்தியர்கள்!!
இன்னமும் நிறைய வருவார்கள்..
நாம் தான் வந்தாரை வாழ வைப்பவர் ஆயிற்றே!!
"மெல்லத் தமிழ் இனி சாகும்"என்னும் நிலையில், "தமிழ் எங்கள் மூச்சு" என்று கதை அளந்துக கொண்டிருக்கிறோம்!!
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கிடில் கைகொட்டி சிரியாரோ!!
படித்தமைக்கு நன்றி..
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக