ஒரு ஆவணத்தை சரிபார்த்து கையெழுத்திடல் என்பது அந்த ஆவணத்தில் உள்ள அத்தனை விவரங்களுக்கும் அவரையே.பொறுபப்பாளியாக்குகிறது
- அது எத்தனை நபரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும்.
- அதில் ஏதேனும் ஒரு தவறு கீழ்நிலை ஊழியரால் செய்யப்பட்டிருந்தாலும்
எனவே அதனை சரிபார்த்து கையெழுத்திட உரிய கால அவகாசம் எடுத்துக்கொள்ள ஒரு அரசு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு..ஆனால் அந்த கால அவகாசம் என்பது நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அவருடைய அவசர நிர்வாக பணிகளால் அந்த தாமதம் ஏற்பட்டால், அது கணக்கில் வராது.
எப்பொதெல்லாம் அந்த கால தாமதத்திற்கு அவர் பொறுப்பாளியாவார்?
- அந்த ஆவணம் வழங்குவதற்கு சேவைக்கட்டணம் அரசு பெற்றிருக்கும் போது.
- அது எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் என்று விதிமுறைகள் இருந்து, அதில மனுதாரரால் காலதாமதம் ஏற்படாதபோது.
- அந்த காலதாமதத்தினால மனுதாரருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும்போது
மேற்கண்ட சமயங்களில் மனுதாரர் நிவாரணம் அல்லது நஷ்ட ஈடு வேண்டி நீதிமன்றத்தை அல்லது நுகர்வோர் மன்றத்தை அல்லது அரசின் குறை தீர்ப்பு மையத்தையோ அணுகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக