குற்றவாளியின் உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றவாளியின் உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜூலை, 2021

குற்றவாளி என்று தீர்ப்பான பின், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது ஒருவர் இறந்தால் அவர் வாரிசுகள் என்ன செய்ய வேண்டும்?

 பிரிவு 431 சிஆர்பிசியின் கீழ் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் வைத்திருக்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் மரணம்,அத்தகைய மேல் முறையீட்டை பாதிக்காது.

சமீபத்தில் மான்பிமிகு உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கு இது.

கேரள அப்கரி சட்டத்தின் 55 (அ) மற்றும் (ஜி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .1 லட்சம் அபராதமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர்.மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது மேல்முறையீட்டாளர் / குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் இறந்தார். .இதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டாலும்,, கு.வி.மு.ச.பிரிவு 394 ன் படி விசாரணையை தொடர்ந்தது.

பின், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது, "மேல்முறையீடு நிலுவையில் இருந்த போது, மேல்முறையீட்டாளர் இறந்ததால், சிறைத்தண்டனை விதிக்க முடியாததாகிவிட்டது, இருப்பினும், அபராதம் விதிப்பது தொடர்பாக, கீழே உள்ள நீதிமன்றம் எந்த தவறும் செய்யவில்லை " என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது .

இதை எதிர்த்து, ரமேசனின் சட்ட வாரிசு (இறந்தவர்) கிரிஜா என்பவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்..அவரின் வாதம், "சிறை தண்டனையும் அபராதமும் ஒரே குற்றத்திற்கு தான் அளிக்கப்பட்டது.குற்றவாளி இறந்ததால், மொத்த வழக்குமே ரத்தாக வேண்டும் என்றார்.

இதை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதி எம். ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “பிரிவு 431 இல் பயன்படுத்தப்பட்ட வெளிப்பாடு, அதாவது‘ அபராதம் விதிக்கப்பட்டதிலிருந்து முறையீடு தவிர ’பிரிவு 394 சி.ஆர்.பி.சி.

எனவே, தற்போதைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு அபராதத்திற்கு எதிரான மேல்முறையீடாக கருதப்பட வேண்டும், பழைய சட்டத்தின் கீழும் தற்போதைய குற்றவியல் நடைமுறைகளின் கீழும், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிரான மேல்முறையீடு நிறுத்தப்படாது.மேலும் தகுதி அடிப்படையில் மேல்முறையீட்டை தீர்மானிப்பதில் உயர் நீதிமன்றம் எந்த பிழையும் செய்யவில்லை. ”

என்ற உச்சநீதிமன்றம், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அந்த சட்ட வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், மேல்முறையீட்டை விசாரிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது..

இப்போது புரிகிறதா ஏன் முன்னாள் முதல்வர் இறந்தபிறகும், அவரின் மேல்முறையீடு அபராதம் சம்பந்தமாக எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

தண்டனை அடைந்தவரின் சொத்துக்களுக்கு உண்டான சட்ட பூர்வ வாரிசு தான், இந்த அபராதத்தை கட்ட வேண்டும்.

நிறைய பேர், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அரசு கட்டியது என்று நினைக்கின்றனர்..அதுவும் அந்த சமயத்தில் அவர் சார்ந்த கட்சி, ஆட்சிப்பொறுப்பில் இருந்ததால் தான் அந்த எண்ணம் வந்திருக்கும்.உண்மையில், இப்போதைய ஆளும் அரசும் அதை தான் செய்திருக்கும்.

ஏன்?

ஜெயலலிதாவின் இல்லம் அரசு உடமையாக்கப்பட்டதால், அதற்கு அரசு கொடுக்கவேண்டிய ஈடு தான், கோர்ட்டில் கட்டப்பட்டது. அது முறையாக, அவரின் ஸதா வாரிசுகளுக்கு போகவேண்டும்.. அவர்கள் தான் இந்த அபராதமும் கட்டவேண்டும்.அதனால் அந்த சொத்தின் முலம் வந்த பணம் அபராததத்திற்கு நேர் செய்யப்பட்டு ட்ராவில் முடிந்தது!

இது குற்ற வழக்கில் மட்டும் அல்ல..சிவில் வழக்குக்கும் பொருந்தும்!!

புதன், 23 ஜூன், 2021

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான அடிப்படை உரிமைகள் என்னென்ன?

 நம்முடைய அடிப்படை உரிமையை பாதிக்கூடிய வகையில் உள்ள காவல்நிலைய கைதும் காவலில் வைப்பது மற்றும் ஜாமீனில் விடுவிப்பது போன்ற அடிப்படை நடைமுறைகளைபற்றியும் அறுவர் பொலிசாரால் கைது செய்யபட்டால் அவருக்குள்ள அடிப்படை உரிமைகளை பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்


கைது, காவல், பிணை

மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கைது நடவடிக்கையின் போது, காவல் அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டும் இன்று வரை அது முறையாக அமுலாக வில்லை. தற்போது பிரிவு 41 B ஆக கு.வி.மு.ச வில் இனைக்கப்பட்டுள்ளதின்படி, கைது செய்யும்போது, காவல் அதிகாரி தன்னுடைய பெயர் தெளிவாக தெரியுமாறு பார்த்துகொள்ளுமாறும், அதே இடத்தில் கைது குறிப்பானையை தயார் செய்தும், அதில் குடும்ப உறுப்பினர் ஒருவர் சான்றோப்பம் இடவேண்டும். என்றும் அவ்வாறு குடும்ப உறுப்பினர் அங்கு இல்லையேன்றால் கைது நடக்கும் இடத்தில் உள்ள ஒரு மதிப்பான நபரின் சான்றொப்பம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைது குறித்த தகவல் தெரியப்படுத்த வேண்டிய உறவினர் அல்லது நண்பரை தேர்ந்து எடுக்கும் முடிவை குற்றவாளியிடம் கொடுத்து, அவரிடம் கைது செய்த தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினர் கைது செய்யும் சமயத்தில் உடன் இருந்தால் அவரின் சான்றோப்பத்தை கைது குறிப்பாணையில் பெறவேண்டும். அதே போல், கு,வி,மு.ச பிரிவு 50A படி காவலை கைது செய்யப்பட்ட தகவலையும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தையும், அவர் குறிப்பிடும் நபருக்கு தெரியப்படுத்த வேண்டும். என வலியுறுத்’தியுள்ளது

ஆனால் நடைமுறையில் அந்த குடும்ப உறுபினருக்கு தகவல் அனுப்புவது என்பது ஓர வெற்று சம்ரதாயமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. குற்றவாளியின் தாய்க்கு தகவல் சொல்லப்பட்டது என குறிப்பிட்டிருந்ததை ஆராய்ந்த பொது, அது, குற்றவாளியின் கை பெசிக்கே ஒரு குறுந்தகவலாக காவல் அதிகாரியால் அனுப்பட்டுள்ளதும அந்த கைபேசியும் குற்றவாளியிடமே இருந்தது தெரியவந்தது. இது ஒரு தவறான நடைமுறையாகும்.


காவல் நிலயத்தில் அத்துமீறல் நடந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்

  1. காவலத்துறை மாவட்ட தலைவர் SP
  2. மனித உரிமை ஆணையம்
  3. நீதித்துறை நடுவரிடம் தனி புகார்
  4. உயர்நீதிமன்றத்தில் நீதி விசாரணை கோரி மனு

இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும்?

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கீழ்கண்ட உத்தரவுகளை இட்டுள்ளது:

1. காவலில் இருக்கும் கைதி கோரினால், அவருடைய ஒரு நண்பர், உறவினர் அல்லது அவருக்கு தெரிந்தவரோ அல்லது அவர் நலத்தில் அக்கறை உள்ளவரோ அவருக்கு, கைது செய்யப்பட்டதையும் காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்தையும் தெரிவிக்க உரிமை உண்டு. 2. இந்த உரிமை குறித்து கைதி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன தெரிவிக்க வேண்டியது காவல் அதிகாரியின் கடமை ஆகும். 3. வழக்கு குறிப்பேட்டில் கைது குறித்த தகவல் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று பதிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

கட்டாயமாக ஜாமீன் பெறும் உரிமை கைதிக்கு கீழ்கண்ட சமயத்தில் உள்ளது. நடுவர் முன்பு முதன்முதலாக கைது செய்யப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்ட நாள் முதலாக 60/90 நாட்கள் முடிவடையும்போது காவலில் அடைக்கும் அதிகாரமும் முடிவடைகிறது. அந்த 60/90 நாட்கள் முடிவடைந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத போது, பிணையில் விடுவிக்கலாம். இந்த 167(2) பிரிவை கடைபிடிப்பது அவசியாமானது ஆகும். இந்த சட்டபிரிவு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே விசாரணையை எதிர்பார்த்து போலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவர், தேவையில்லாமல் சிறையில் அலைகழிக்கபடவேண்டாம் என்பதற்கே. போலீசார் தங்களின் அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்வதை தடுக்கும் விதத்திலேயும் இந்த விதி கொண்டு வரப்பட்டது[1]. இது குடிமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வரப்பட்டதல்ல. நாட்டு நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் கொண்டுவரப்பட்டது

திங்கள், 7 ஜூன், 2021

முதல் தகவல் அறிக்கையும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் அவருக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

 

முதல் தகவல் அறிக்கை

 ஒருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், காவல்துறை எத்தனை நாட்களுக்குள் அவரை கைது செய்ய வேண்டும்?

FIR பதிவு செய்தாலே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டது புலன்விசாரனை செய்ய வேண்டிய ஒன்றாகவோ, அல்லது குற்றவாளி அதே போன்ற ஒரு குற்றம் செய்ய இருக்கிறார் என்று தெரிந்தாலோ அல்லது அவர்  தப்பித்துப்  போக வாய்ப்புள்ளது என்றாலோ புலன் விசாரனை அதிகாரி கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவரை .கைது செய்யலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அதிகாரம் அந்த அதிகாரிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் அவர் அவ்வாறு கைது செய்யும் போது அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரலாம்.  அல்லது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக வழக்கு போட்டு நஷ்டஈடும் தண்டனையும் கோரலாம்.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு டிரக் ஓட்டுனரை பீஹார் போலீசார் எந்தவித சட்ட நடைமுறையும் பின்பற்றாமல் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு பாட்னா உயர் நீதிமன்றம், மேற்படி மனுதாரரின் 35 நாள் சட்டவிரோத காவலால் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மாநில அரசு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Truck Driver Illegally Detained By Police: Patna High Court Asks Govt To Give 5L CompensationM For Violation Of Fundamental Right

என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டன?

  1. வண்டியை போலீசார் பிடித்தவுடன் ஏன் முதல் தகவல் அறிக்கை போடவில்லை?

அது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது[1]

  1. சட்டவிரோதம் என்றால் ஏன் வண்டியை போலீசார் கைப்பற்றவில்லை?
  2. கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ஏன் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?
  3. புகாரெதுவும் இல்லாமல் , கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலம் இல்லாமலேயே எப்படி போலீசார் நடந்த சம்பவம் இன்னினது என்று ஒரு குற்றம் நடந்ததாக அறிய முடிந்தது?
  4. அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவர் நண்பருக்கோ குடும்ப உறுப்பினருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

5. கைதியிடம் அவர் கைது செய்யப்பட்ட காரணம் கூறாததால் அவர் பிணை மனு செய்ய முடியவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

இவையெல்லாம் குடிமகனுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் என்பதால் அரசு அதை சரி செய்யும் கடமைக்குள்ளானது.

6.கைது நமூணாவில் சரியான விவரங்கள் இன்றி,சாட்சிகள் விவரம் இன்றி தயாரிக்கப்பட்டது.

7.வண்டியின் உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கவில்லை.

இவையெல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளுக்கு எதிரானது.

8.கைது செய்யும்போது உச்சநீதிமன்றம் வகுத்த விதிகள் மீறப்பட்டுள்ளன[2]

இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், லாரி ஓட்டுனர்கள் நீண்ட தொலைவுக்கு குறுகிய காலத்திற்குள் பொருட்களை கொண்டு போய் சேரக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், சரியான உணவு, தூக்கம், சுகாதாரம் இன்றி தங்கள் குடும்பங்களை பிரிந்து வேலை செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் போலீஸாராலும் அரசு தரப்பாலும் நடக்கும் பகல் கொள்ளையிலிருந்து அவர்களை காப்பாற்றவேண்டும்" என்று சுளீர் உத்தரவு போட்டுள்ளது.

நஷ்டஈடு வழங்க உத்தரவு போட்டதோடு அல்லாமல்

  1. தனிப்பட்ட முறையில் மனுதாரருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நீதிமன்றம் அணுகலாம்
  2. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை நடவடிக்கை மூன்று மாதத்திற்குள் எடுத்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
  3. ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை அதன் விவரங்களை மாநில டி ஜி பி.தன் பிரமாண பத்திரத்தின் மூலம் திமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சூப்பரான தீர்ப்பு இல்லே.💪💪💪🙏🙏🙏

  

அடிக்குறிப்புகள்


வழக்கு விசாரணைக்கு தாமதம் ஆகும் போது குற்றவாளிக்கு உள்ள உரிமை என்ன?

  "விரைவான விசாரணை வேண்டும் எண்ற மனுதாரரின் உரிமை மீறப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நான் விரக்தியில் கைகளை அசைக்காமல் இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு அரசு தரப்பு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடாக தரவேண்டும் "

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ​​நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் மகுடத்தில் மற்றொரு வைரக் கல் போன்ற தீர்ப்பு.

தடைசெய்யப்பட்ட அளவிலான போதைப் பொருள்களை வைத்திருப்பதற்காக என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கில். குற்றவாளியான ஆனந்தன் என்பவரின் ஜாமீன் விண்ணப்பத்தை[1] விசாரித்த போது, அரசுத் தரப்பான போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு தேவையற்ற காலதாமதம் செய்ததை கண்டபின், நீதியரசர் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

  • மனுதாரர்-/குற்றம் சாட்டப்பட்டவர் 2018 ஜனவரி முதல் நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
  • வழக்கில் ஜூலை 2018 இல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • வழக்கு நீதிமன்ற கோப்பில் ஆகஸ்ட் 2018 இல் எடுக்கப்பட்டது.
  • குற்றச்சாட்டுகள் டிசம்பர் 2018 இல் வடிவமைக்கப்பட்டன.
  • 2019 ஜனவரியில் விசாரணை தொடங்குகிறது.
  • ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு கூட எடுக்கப்படவில்லை.
  • பெரும்பாலான விசாரணை தேதிகளில், அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை
  • மனுதாரர்-குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் காரணமாக விசாரணையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்பதைக் குறிக்க எதுவும் இல்லை
  • குற்றம் சாட்டப்பட்டவர் எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை.
  • விசாரணையைத் தொடங்காததற்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
  • உயர் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
  • குற்ற வழக்கை ரத்து செய்ய மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
  • சரியான நேரத்தில் விசாரணையைத் தொடங்கவில்லை என்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
  • மனுதாரர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முழு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
  • மேலும், விசாரணையை விரைவுபடுத்தவும், ஆறு மாத காலத்திற்குள்அபிதா வழக்கை தகுதி அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரவும் 2019 நவம்பரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அரசு தரப்பு எந்தவொரு சாதகமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • இந்தப் பின்னணியில், விரைவான விசாரணை வேண்டும் என்ற மனுதாரரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.

மேற்கண்ட விஷயங்களை தீர்ப்பில் குறிப்பிட்ட நீதியரசர், விரைவான விசாரணைக்கு உள்ள மனுதாரரின் உரிமை மீறப்பட்டிருப்பதைக் கண்ட பின்னும், தான் விரக்தியில் கைகளை அசைக்காமல் இருக்க முடியாது.என்றும் வழக்குத் தொடுத்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அதன் தவறுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் எனவே நான்கு வார காலத்திற்குள் இழப்பீடாக ரூ .1.00 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..

மான்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை [2] மேற்கோள் காட்டிய நீதியரசர், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், குற்ற வழக்கில் துரித விசாரணை வேண்டுவது அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிகள் 21ன் கீழ் அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அவ்வாறு உரிமை பாதிக்கப்பட்ட து தெரியவரும்போது, அந்த தண்டனையையோ, குற்றச்சாட்டுகளையோ, வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, ரத்து செய்யலாம் என்று சொல்லியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"கையில் உள்ள வழக்கு என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் ஒன்றாகும். இது கஞ்சாவின் வணிக அளவை உள்ளடக்கியது. எனவே, அதை ரத்து செய்ய முடியாது. சட்டத்தின் 37 வது பிரிவு நிறைவேற்றப்படாததால் ஜாமீனும் வழங்க முடியாது. அதே நேரத்தில், மனுதாரரின் விரைவான விசாரனைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது. " என்ற உயர்நீதிமன்றம், இழப்பீட்டுக்கான தொகை குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவிக்கு செலுத்த வேண்டியது என்றும், விசாரணை நீதிமன்றம் மூன்று மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

[குறிப்பு: ஜாமீன் வழங்குவதற்காக என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 இல் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டை சோதனைகள் இந்த வழக்கில் நிறைவேற்றப்படவில்லை என்ற அடிப்படையில் மனுதாரர்-குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் விண்ணப்பம் மறுக்கப்பட்டது.]

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...