கோரானா தொற்றும் உச்சநீதிமண்றமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோரானா தொற்றும் உச்சநீதிமண்றமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஜூன், 2021

தனியார் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் முழுவதும் கட்ட வேண்டுமா?

 பள்ளி இல்லை..கட்டணமும் இல்லை..

வலைதளத்தில் எங்கே பார்த்தாலும் பெற்றோரின் இந்த போர்குரல் !!

போன கல்வி ஆண்டில் முழு கல்வி கட்டணத்தையும் கேட்டு தனியார் பள்ளிகள் அடம் பிடிக்க, பெற்றோர் கோர்ட்டுக்கு போக, கடைசியில், 75% கல்வி கட்டணம் வசூலிதது கொள்ளலாம் என்றது சென்னை உயர் நீதிமன்றம்.

https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_521.html

இத்தனைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றம் வரை போன வழக்குகளில் 100% கல்வி கட்டணம் பெற்றோர் செலுத்த தான் வேண்டும் என்றும்

ஆறு தவணை முறைகளில் மார்ச் 2021லிருந்து கட்டணத்தை செலுத்தலாம் என்றது…அதுவும் முடியாதவர்கள் பள்ளியோடு பேசிக்கொள்ளுங்கள் என்றது என்றும் செய்திகள் வந்ததே....

https://trak.in/tags/business/2021/02/10/shocking-supreme-court-orders-all-parents-to-pay-100-school-fees-for-lockdown-period/

வாங்கிய கட்டனத்திற்கு, ஒரு பிரேக் அப் விவரங்கள் இல்லை..இத்தனைக்கும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "லாக் டவுன் போது செயல்பாட்டு செலவுகளை பள்ளிகள் சேமித்துள்ளன; பயன்படுத்தப்படாத வசதிகளுக்காக மாணவர்களை வசூலிக்க முடியாது: " என்று சொல்லியுள்ளது.

https://www.livelaw.in/top-stories/schools-have-saved-operational-costs-during-lockdown-cant-charge-students-for-unused-facilities-supreme-court-173546

லாக் டவுன் போது மாணவர்கள் பெறாத வசதிகள், செயல்பாடுகளுக்கான கட்டணங்களைக் கோரும் பள்ளிகள் 'லாபம் ஈட்டுதல்' மற்றும் 'வணிகமயமாக்கல்' செய்வதாக உச்சநீதிமன்றம கண்டனம் கூட தெரிவித்திருந்தது..

ராஜஸ்தான் மாநிலத்தில், போன கல்வி ஆண்டில் 30% கல்விக்கட்டணம குறைவாக தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட, உச்சநீதிமன்றத்திற்கு வந்த தனியார் பள்ளிகளிடம் "2020-21 கல்வியாண்டில் முழுமையான பூட்டுதல் காரணமாக, பள்ளிகள் கணிசமாக நீண்ட காலத்திற்கு திறக்க அனுமதிக்கப்படவில்லை" என்பதை சுட்டிக்காட்டி, " இதன் விளைவாக, பெட்ரோல் / டீசல், மின்சாரம், பராமரிப்பு செலவு, நீர் கட்டணம், எழுதுபொருள் கட்டணம் போன்ற பல்வேறு பொருட்களின் மேல்நிலை மற்றும் தொடர்ச்சியான செலவுகளை பள்ளி நிர்வாகம் சேமித்திருக்க வேண்டும், ”என்று பெஞ்ச் கூறிவிட்டு, "கல்வியை வழங்குவதற்கான தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைத் தணிக்க தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு மாணவர் கூட விடாமல் அவரது / அவள் கல்வியைத் தொடர வாய்ப்பை மறுக்காத வகையில் பள்ளி கட்டணம் செலுத்துவதை மறுபரிசீலனை செய்வது பள்ளி நிர்வாகத்திற்கானது, " என்றது பெஞ்ச் .

மேல்முறையீட்டாளர்கள் (தனியார் உதவி பெறாத பள்ளிகளின் பள்ளி மேலாண்மை) 2016 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டபடி கல்விக்கட்டனம் வசோழிக்கலாம்.ஆனால் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர்களால் பயன்படுத்தப்படாத வசதிகளுக்கு பதிலாக அந்த தொகையில் 15 சதவீதத்தை குறைப்பதன் மூலம் 2020-21 கல்வியாண்டுதங்கள் மாணவர்களிடமிருந்து வருடாந்திர பள்ளி கட்டணத்தை வசூலிப்பார்கள்"என்று பெஞ்ச் கூறியது.

அதே சமயம், கட்டணம் செலுத்தாது அல்லது நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாக எந்தவொரு மாணவரும் ஆன்லைன் அல்லது உடல் வகுப்புகளில் கலந்து கொள்வதைத் தடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டது.

அதனால் உஷாராக, இந்த வருடம் கல்வி ஆண்டு துவங்கும் போதே, 100% கல்வி கட்டணத்தை நிறைய பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்து விட்டன…

தமிழ நாட்டில் போன கல்வி ஆண்டில், அதிகமாக வசூலித்த பள்ளிகள், கோர்ட்டு உத்தரவிட பிறகும் 25% கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டபிறகு தான், அவை வழிக்கு வந்தன..

அதே போல, க்ஸ்ள்விகட்டனம் கட்ட முடியாதவர்கள் தவணை முறையில் கட்டவும் அனுமதிக்கப்பட்டனர்.!!

https://thewire.in/law/madras-high-court-contempt-schools-fee-collection

அதே போல தான் இந்த வருடமும், மாண்புமிகு உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றுமா என்று பெற்றோர் காத்திருக்கின்றனர்..

கல்வி கட்டணம் கட்ட முடியாமல், டி.சி.யாவது கொடுத்து விடுங்கள் என்ற பெற்றோரிடம் கூட, பீஸ் கட்டினால் தான் அதுவும் கிடைக்கும் என்று அடம் பிடிக்கின்றன..

கோரானா தாண்டவத்தில், ஒரு பக்கம் மருத்துவமனைகள் என்றால் மறு பக்கம் இந்த தனியார் பள்ளிகள், பணம் பிடுங்கும் தருணமாக களத்தில் மும்முரமாக உள்ளன..

வெளிநாட்டில் எல்லாம், கல்வியும் சுகாதாரமும் இலவசமாக குடிமக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் போது, இங்கு தடுப்பூசி போடவே பணம் வேண்டும்…

பீஸ் கொடுக்க முடியலைனா, அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டிய து தானே என்கிறார்கள்..

அரசு பள்ளியில் தானே படிக்க வைக்கலாம் தான்..அங்கு படித்தால், 7.5% இட ஒதுக்கீடு நீட்டில் உண்டு…அரசு பணி கிடைக்க கூட வாய்ப்பு உண்டு தான்..

ஆனால் படிப்பின் தரம்?! அது கேள்விக்குறியாக உள்ளபோது, பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்ற யார் தான் விரும்புவார்??

வெள்ளி, 11 ஜூன், 2021

13500 கோடிகளில் மோடி வீடு கட்டுவது உண்மையா?

  அரைகுறையான தகவல்கள் எப்போதும் ஆபத்து!!

நம்மை உணர்ச்சிபூர்வமாக தூண்டி விட நினைப்பவரும் இப்படி அரைகுறை தக்வலை கொடுத்து உசுப்பேற்றி விடுவர்!!

எனவே விவரம் முக்கியம்!!

டெல்லியில் உள்ள அதிகார மையங்களை ஒன்றிணைக்கும் திட்டம் இது..

ரைசினா மலையுச்சியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கும் இந்தியா கேட்டிற்கும் இடைப்பட்ட நிலத்தை உள்ளடக்கியது இந்த திட்டம்..இதில் நான்கு பகுதிகள் உண்டு.

  • முதலாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது.
  • இரண்டாவதாக, தற்போதுள்ள கிட்டத்தட்ட ஒரு டஜன் கட்டிடங்களை இடிப்பது, அவற்றில் சில தேசிய அருங்காட்சியகம் போன்ற முக்கிய கட்டிடங்கள்.
  • மூன்றாவதாக, இன்று டெல்லியின் குடியிருப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் பரந்த பசுமையான இடமான ராஜ்பாத்தின் மூன்று கி.மீ நீள இடத்தில், ஏழு மாடி உயர் அரசு அலுவலகங்களை நிர்மாணித்தல்,
  • நான்காவதாக, பிரதமர் மற்றும் துணை பிரதமருக்கு புதிய குடியிருப்பு மற்றும் அலுவலகத் தொகுதி அமைத்தல்.

முக்கியமாக தற்போதைய பாராளுமன்றக் கட்டடத்தை ‘ஜனநாயகத்தின் அருங்காட்சியகமாக’ மாற்றுவது,!!

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, "அருங்காட்சியகங்கள் இறந்த அல்லது அழிந்துபோன விஷயங்களுக்கு மிகவும் பொருத்தமானவை. தானே" என்கிறார்.

  • இந்தத் திட்டத்தில் ,தற்போது பாதுகாப்பு, நிதி, வீட்டு மற்றும் வெளிவிவகார அமைச்சகங்களை கொண்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக் - இடத்தை- அருங்காட்சியகங்களாக மாற்றுவதும் அடங்கும்,
  • அதே நேரத்தில் அந்த அமைச்சகங்கள் மத்திய விஸ்டாவில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகத் தொகுதிகளுக்கு மாறுகின்றன
  • .2019 ஆம் ஆண்டில் இந்த திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, ​​அழகியல், கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் நிதி அடிப்படையில் இந்த திட்டம் தவறு எனப்பட்டது..அதுவும் ஒரு நூற்றாண்டு பழமையான பாரம்பரிய மண்டலத்தின் தன்மையை சீர்குலைப்பதைத் தவிர, இந்த திட்டம் நகர்ப்புற திட்டமிடலுக்கு எதிரானது எனப்பட்டது...ஏனென்றால், - சுமார் 80 ஏக்கர் - பொது பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு சுற்றுசூழல் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது.எனவே அதை பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை..

மத்திய விஸ்டா திட்டம் "உலகத் தரம் வாய்ந்த" ஒரு நகரத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது, இன்று உலகின் மிக அற்புதமான நகர மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கலை மற்றும் கட்டிடக்கலை என்பது உயரடுக்கு விவகாரங்களாக இருக்கும் இந்தியாவில், பொது மக்கள் அதை பற்றி பொதுவாக பேசுவதில்லை. ஆனால் இன்று இது ஒரு விவாதத்திற்குரிய ஒன்றாகிவிட்டது. இது ரொம்ப அபூர்வமானது.

ஏன்?.

இது நடக்கும் நேரம்..

  • ஏப்ரல் முதல், 11 மில்லியனுக்கும் அதிகமான புதிய கோரானா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
  • மேலும் COVID-19 காரணமாக 94,000 பேர் இறந்துள்ளனர்.
  • மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் உள்ளன.
  • நாட்டில் உள்ள தகனங்களும் கல்லறைகளும் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.
  • ஆனால் இந்த நெருக்கடியின் நடுவில், இந்த ஒரு ‘அத்தியாவசிய சேவை’ இன்னும் தொடர்கிறது.

இது தான் எல்லோரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது..

சரி..இதற்கு செலவிட ஒதுக்கிவைத்த 20,000 கோடி நிதியை, தொற்றுநோயை நோக்கி திருப்பிவிடப்படலாம் என்று வாதிடப்படுகிறதே. அது சரியா?

இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே நேரத்தில் செலவிடப்படுவதில்லை, ஆனால் ஒவ்வொரு கட்டங்களாக செய்யப்படும். அதனால், இந்த திட்டத்தை முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் ரூ .20000 கோடி இப்போது கிடைக்கிறது என்றும் நமது சுகாதார உள்கட்டமைப்பை நோக்கி அதை திருப்பிவிடலாம் என்றும் எண்ணமுடியாது.

ஆனால் மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கில் இருக்க, இந்த பணிகள் மட்டும் நடக்க இது அத்தியாவசிய தேவையா? என்பதே கேள்வி.

டெல்லிவாசிகள் இருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் , தொற்றுநோயின் இந்த உச்ச கட்டத்தின் போது, வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளபோது, நடக்கும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் நிறுத்த கோரினர்.

ராஜ்பாத் மற்றும் இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான சுற்றியுள்ள புல்வெளிகளில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய விஸ்டா அவென்யூ மறு அபிவிருத்தி திட்டத்தில் கட்டுமான நடவடிக்கைகளால் ஏற்படும்/ பரவக்கூடிய அச்சுறுத்தலால், தில்லி மற்றும் அதற்கு அப்பால் உள்ள குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் உல்ளது என்றும், திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிர்கள் உட்பட, திட்டத்தை முன்னெடுக்கும் இடைவிடாத, கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற செயலை எதிர்த்து வாதிட்டனர்.

வழக்கு போட்டவர்களும், மத்திய அரசும் வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக சுகாதாரத்திற்கான உரிமையை அங்கீகரித்திருந்தாலும், தொற்றுநோய்களின் போது கட்டுமானத்தைத் தொடர்வதில் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயங்களை ஒப்புக் கொள்ள மத்திய அரசு மறுத்துவிட்டது.

கடந்த சில வாரங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் இந்தியா பேரழிவிற்கு உட்பட்டது.. ஆனாலும் கட்டுமான பணி நிற்கவில்லை.

இந்த வழக்கில் வாதாடுதல் முடிந்து, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு சுற்று வழக்குகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதே உண்மை!!.

மருத்துவமனையில் இடம் இல்லாமலும், மருந்து கிடைக்காமல் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் இந்த நேரம் இந்த கட்டுமான பணி மட்டும் அவசர அவசரமாக நடக்க காரணம்?

  • இந்த பிரமாண்டமான திட்டத்தின் கட்டிடக் கலைஞர் பிமல் படேல் இதை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மால் போன்றவற்றுடன் ஒப்பிட்டுள்ளார். நேஷனல் மால் சில வழிகளில் இந்தியாவில் ராஜ்பாத் போன்றது, இது அதிகாரத்தின் நடைபாதை.
  • பல ஆண்டுகளாக, நேஷனல் மால் தன்மையிலிருந்து, மத்திய விஸ்டா திட்டம் புறக்கணிக்கப்பட்டதாகத் தோன்றும் அளவுக்கு அதிகமான ‘விளம்பரம்’ கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்..
  • மத்திய விஸ்டா திட்டம் முடிந்ததும், அதன் கட்டிடங்கள் எல்லாவற்றிலும் , திறம்பட வேலி போடப்பட்டு, அதிக பாதுகாப்பு பகுதியாக மாறும்.இது சாதாரணமாக மக்கள் நுழைய முடியாத அதிகார கோட்டையாக மாறும்...இதுவும் நேஷனல் மால் லிருந்து வேறுபட்டது.

ஒவ்வொரு ஆட்சியும் அதன் அடையாளங்களை விட்டுச்செல்கின்றன. ராஜராஜ சோழரின் பிருஹதேஸ்வரர் கோயில், அல்லது அக்பரின் ஃபதேபூர் சிக்ரி, அல்லது நேருவின் சண்டிகர். அது போன்ற எண்ணத்தினால்..இந்த அரசு ஒரு அடையாளத்தை ஏற்படுத்த விரும்பலாம்.அது ஒன்றும் தவறில்லை..

இந்த கட்டிடம் காலம்காலமாக நிலைத்து இருக்கும்போது, அதனுடன் இனிமையான நினைவுகளையே தக்க வைக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி, இந்த பெருந்தொற்று காலத்தில், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைப்பதே!!


செவ்வாய், 8 ஜூன், 2021

கோவிட் சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தலையீடுகளை பாராட்டிய பள்ளி மாணவிக்கு தலைமை நீதிபதி பாராட்டு

 கோவிட நிலைமையை நிவர்த்தி செய்ய போட்ட  உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கேரளாவைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்..


திருச்சூர் கேந்திரியா வித்யாலயாவில் 5 ஆம் வகுப்பில் படிக்கும் பத்து வயது லிட்வினா ஜோசப், அழகான சுருளில் கையால் எழுதப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.

". கோவிட 19 விகிதம் மற்றும் நாட்டில் இறப்பு விகிதம், குறிப்பாக டெல்லியில். நடந்தது குறித்து  தான் கவலை கொண்டதாகவும், ஆக்ஸிஜன் வழங்குவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவுகள் உயிர்களைக் காப்பாற்றியுள்ளன, வீழ்த்தியுள்ளன என்பதில் தான் "மகிழ்ச்சியும் பெருமையும்" கொண்டதாகக் கூறினார். 

அத்துடன் ஒரு நீதிபதி கொரோனா வைரஸுக்கு கவசத்துடன் நொறுக்குவதைக் காட்டும் வண்ண படத்தையும் அவர் இணைத்துள்ளார். அதில், முக்கோணம், லயன் கேபிடல் மற்றும் தேசத்தின் தந்தையின் உருவப்படம் ஆகியவை வரைபடத்தை நிறைவு செய்தன..




இந்த கடிதத்தில் ஈர்க்கப்பட்ட தலைமை நீதிபதி , சிறுமிக்கு மனம் நிறைந்த பதிலை அனுப்பியுள்ளார்..

 "என் அன்பான லிட்வினா,
 உன் அழகான கடிதத்தையும், பணியில் இருக்கும் நீதிபதியின் இதயத்தைத் தூண்டும் விளக்கத்தையும் பெற்றேன்.

 நாட்டில் நடந்த நிகழ்வுகளை நீ கண்காணித்த விதம் மற்றும் தொற்றுநோயைத் தொடர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காக நீ காட்டிய அக்கறை குறித்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

 நீ ஒரு விழிப்புணர்வு, தகவல் மற்றும் பொறுப்புள்ள குடிமகளாக வளருவாய் என்று நான் நம்புகிறேன், நீ தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பைச் செய்வாய்.

 உன்  ஆல்ரவுண்ட் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன் "

 தலைமை நீதிபதி ரமணாவும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் தன் கையொப்பமிடப்பட்ட  ஒரு பிரதியை அவருக்கு அனுப்பினார்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க 9 மாதங்கள் ஆகும் என்று உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்கறிஞ்சர் தாக்கல் செய்துள்ளது உண்மைக்கு புறம்பானதா? ஆலையை திறக்க அனைத்து கட்சி தீர்மானம் நிறைவேறியது பொய்யின் அடிப்படையிலா?

 

சமீபத்தில் கிடைத்த செய்தி.

தமிழக அரசு இன்று கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில்,, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், நான்கு மாத காலத்திற்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க தீர்மானித்தது.

,அதிகரித்து வரும் கோவிட் கேஸ்களுக்கு மத்தியில், சென்ற வாரம் மாண்புமிகு உச்சநீதிமண்றத்தில் இந்த கேசும் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று ஆலையை திறக்க மாநில அரசு மறுப்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என்றுவிட்டது. ஆக்சிஜன் பிளாண்டை திறக்க அனுமதித்தால் தாங்கள் உடன் உற்பத்தி செய்வோம் என்று ஆலை தரப்பில் சொல்லப்பட்டதை அடுத்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கேட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்கள் கொல்லப்பட்டதையும் அதனால் சில நாட்களுக்கு பின்னர், 2018 மே மாதம் இந்த அலகு மாநில அரசால் சீல் வைக்கப்பட்டதையும் அரசு சுட்டிக்காட்டியும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த இக்கட்டான காலத்தில், மற்ற மாநிலங்களுக்காவது இந்த ஆக்சிஜன் உற்பத்தி பயன்படும் என்றது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலை இயங்க, நான்கு மாதங்களுக்கு மின்சாரம் வழங்க அனுமதிக்கப்படலாம் என்றும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தொடர்புடைய உபகரணங்களை பழுதுபார்த்து இயக்க மட்டுமே முடியும், ”என்று கூட்டம் முடிவு செய்துள்ளது.

இந்திய அரசு மக்கள் யாவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா?

 தடுப்பூசி போடுவது என்பது, தொற்று நோய்களால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைப்பதற்கான மிகவும் செலவு குறைந்த வழி. அதுவும் ஒரு பொது நன்மைக்கானது Mஎன்பதால் தான், அனைத்து மேற்கத்திய நாடுகளும் தங்கள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுகின்றன.

இந்த நாடுகள் சோசலிஸ்டுகள் அல்ல. அமெரிக்காவைப் போலவே சந்தை சார்ந்தவை. அவர்களின் மக்கள் தொகையில் பெரும்பான்மை யானவர்களுக்கு 20 டாலர் ஷாட் கொடுக்க போதுமான தனிநபர் வருமானம் இருக்கும்போது கூட , அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

அப்படியானால், இந்தியாவில் நமது அரசு ஏன் வேறுவிதமாக நினைக்கிறது?

ஒரு வலுவான, குறை இல்லாத முறையில் நிர்வகிக்கக்கூடிய வகையில், தடுப்பூசி கொள்முதல் கொள்கை ஏன் இல்லை ?

பொது நன்மை கொடுக்கக்கூடிய ஒன்று, ஏன் சந்தைப் பொருளாக மாறியுள்ளது?

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளின் வேறுபட்ட மற்றும் பல விலை உத்திகளை அது விளக்கவும் முன்வரவில்லை.

இதை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது.!!

நம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தடையற்ற சந்தை சித்தாந்தம் குறித்த அவர்களின் கருத்துக்கள், உயிர்களைக் காப்பாற்றுவதை விடவும், இப்போது நாம் இருக்கும் கொடூரமான குழப்பத்திலிருந்து இந்தியாவை வெளியேற்றுவதை விடவும் அதிக இறக்குமதி செய்வது தான் என்று தான் தோன்றுகிறது.

பாதுகாப்பும் பொது நன்மையும் , நல்ல இலாபத்தை மட்டுமே குறி வைக்கும் சந்தை அடிப்படைவாதிகளிடம் தோற்கக்கூடாது.!!

ஏற்கெனவே, இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதில் இந்த COVID-19 ன் பொருளாதார தாக்கமானது , வருவாயில் குறைவு, உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் பெற முடியா இழப்பு, சிதைந்த ஆரோக்கியம் ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்துடன், பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், நமது தடுப்பூசி நிறுவனங்கள் நியாயமாக, தடுப்பூசி உற்பத்தி செலவில் அல்லது 10% சாதாரண லாபத்தில் வழங்கியிருக்க வேண்டிய தருணம் இது. ஆனால் அதற்கு பதிலாக, நாம் பார்ப்பது விலை நிர்ணயம்.குறித்த சர்ச்சையை.

என்னென்ன குறைபாடுகளை அரசு செய்தது?

  • முன்கூட்டியே கொள்முதல் ஒப்பந்தங்கள் அல்லது ஒரு தேசிய தடுப்பூசி திட்டம் இல்லாதது, எடுத்துக்காட்டாக, உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உத்திகளை விரிவாக வகுக்க வில்லை.

உதாரணமாக, தடுப்பூசி உற்பத்தியை கூட்டக்கூடிய பி.எஸ்.எல் 3 வசதியைக் கொண்ட ஒரு டஜனுக்கு மேற்பட்ட நிறுவனங்களை தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருக்கலாம்

  • அதேசமயம் மாநிலங்கள், மற்ற மருந்து நிறுவனங்களுடன் விநியோகச் சங்கிலியை உறுதீப்படுத்தும் மைக்ரோ திட்டங்களைத் தயாரித்திருக்கலாம்.
  • ஆனால் நம் அரசு, நம் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு நிறுவனங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது.
  • இந்திய சீரம் நிறுவனம் தற்போது ஒரு மாதத்திற்கு 60 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது, இது ஜூலை முதல் 100 மில்லியன் டோஸாக விரிவடையும் என்கிறார்கள் இதில், கோவக்ஸ் மற்றும் பிற கூட்டாளர்களுக்கு ஒப்பந்தக் கடமைகள் வேறு உள்ளன..இதன்படி, ஜூலை 22 க்குள் இந்தியா அதன் தேவையான அளவுகளைக் கொண்டிருக்கக்கூடும்.
  • ஸ்பட்னிக் போன்ற பிற தடுப்பூசிகளின் நுழைவை கணக்கிடப்படாமல் இருந்தால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, இந்தியா 122 மில்லியன் அளவு தடுப்பு மருந்துகளை வெளிநாட்டு கடமைகளுக்கும் உள்நாட்டு தேவைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • இதற்கு நடுவில், அரசாங்கம் வேறு, ஊசி போடும் தகுதிக்கான அளவுகோல்களை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது 964 மில்லியன் அனைத்து பெரியவர்களை உள்ளடக்கியது. இதில், சுகாதார வழங்குநர்கள், முன்னணி ஊழியர்கள், ஆயுதப்படைகள் போன்ற அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட 300 மில்லியன் மக்களுக்கு முழுதும் போட்டிருக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே 600 மில்லியன் டோஸ் தேவைக்கு எதிராக, அவர்கள் 120 மில்லியன் பயன்படுத்தியுள்ளனர் . இப்போது கையிருப்பு எதுவும் இல்லை, ஆனால் சுமார் 500 மில்லியன் டோஸ்கள் தேவை.
  • ஏப்ரல் 20,ல் 18-45 வயதுக்குட்பட்ட 634 மில்லியன் நபர்களும், கூடுதல் இலக்கு என்று சேர்க்கப்பட்டுள்ளது. , அதற்கு ஒரு பில்லியன் அளவு (வீணானது உட்பட) தேவைப்படுகிறது. தடுப்பூசியில் சுமார் 20% கோவிஷீல்ட் ஒரு டோஸுக்கு சுமார் 850-1,000 ரூபாயும், கோவாக்சின் 1,750-2,000 ரூபாயும் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் என்று கருதினால், மாநில அரசுகளுக்கு 800 மில்லியன் டோஸ் தேவைப்படும். எனவே 45% இல் 100% மற்றும் 18-45 வயதுடையவர்களில் 70% பேர் தடுப்பூசிக்கான மொத்த அரசாங்க கோரிக்கை 1.3 பில்லியன் அளவுகளுக்கு வருகிறது.
  • ரூ .150 என்ற அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதால், மத்திய அரசுக்கு சுமார் 19,500 கோடி ரூபாய் வருகிறது. ஒரு டோஸுக்கு ரூ .200 என்ற அளவில், உற்பத்தியாளருக்கு ஒரு சூப்பர் லாபம் ஈட்டுகிறார், இது யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் அரசாங்கங்களால் வாங்கப்படும் மிகவும் விலையுயர்ந்த தடுப்பூசியாகும்.
Bharat Biotech reduces Covaxin price for state govts to Rs 400 per dose
The move to cut the price from Rs 600 per dose follows widespread criticism of Bharat Biotech's pricing policy as it sold Covaxin to the central government at Rs 150 per dose.
  • மொத்தமாக கொள்முதல் செய்வதில் பெறும் விலையின் நன்மை , துண்டு துண்டாக வாங்கும்போது இழக்கிறோம்.. இந்த கஷ்டமான பொருளாதாரத நிலையில் மத்திய அரசு, ஏன் தனது சந்தை சக்தியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
  • தவிர, பல நிறுவனங்களால் பல விலைகளுக்கு வாங்கப்பட்ட தடுப்பூசிகளை மாநில அரசுகள் கையாள்வது பிளாக்மார்க்கெட்டிங், போன்றவற்றுக்கு போதுமான வாய்ப்பை அளிக்கிறது.
  • தமிழ்நாடு பீகாரை விட மூன்று மடங்கு வசதி கொண்டது அது தனி நபர் ஆரோக்கியத்திற்காக ரூ .1,653 செலவிடுகிறது. 25% தனியார் துறை வாங்குவதாகக் கருதியும், 10% வீணாகிறது என்றும் கொண்டால், . அதன் 30 மில்லியன் இளைஞர்களில் 70% பேருக்கு தடுப்பூசி வழங்க மாநிலத்திற்கு சுமார் 1,489 கோடி ரூபாய் செலவாகும். COVID-19 தாக்கத்தை கருத்தில் கொண்டு, தமிழகமும் இந்த பணத்தை மற்ற அத்தியாவசிய செலவினங்களிலிருந்து திசை திருப்ப வேண்டும்.
  • மேற்கூறியவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்வதற்கான தற்போதைய இந்திய அரசின் கொள்கையின் கீழ், தடுப்பூசிகளுக்கான பொது சந்தைக்கு மாநிலங்களை தள்ளுவதால், ஏழை மாநிலங்கள் அதிக கட்டணம் செலுத்துகின்றன. அது மாநிலங்களுக்கு தண்டனை போலவும், அதே வேளையில், மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளன.
  • இதில், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளைத் தவிர, பணம் செலுத்தும் திறன் உள்ளவர்களிடையே ஒரு பிளவு இருக்கும். அதனால் தடுப்பூசிகளை வாங்குவதற்காக, அத்தியாவசிய தேவைகளிலிருந்து தங்கள் பணத்தை திசைதிருப்ப பல ஏழை வகுப்பினரை இது தள்ளக்கூடும், மத்திய அரசின் கொள்கை சமத்துவமற்றது . கடுமையானது.

இந்த 14 மாதங்கள் மத்திய அரசு என்னதான் செய்துக் கொண்டிருந்தது?


What Centre Has Been Doing For Past 14 Months? Madras High Court Questions COVID Management Plan
Court observed that planned action based on expert advise was needed instead of ad-hocism.

வேறு வழியில்லை…

அரசு தன் கொள்கைகளை அவசரமாக திருத்த வேண்டும்.

மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அதை இலவசமாக வழங்குவதற்கும் மத்திய அரசு தனது சந்தை சக்தியைப் பயன்படுத்த வேண்டும். பேரழிவிற்குள்ளான மக்களுக்கு உறுதியளிக்க மத்திய அரசு செய்யக்கூடியது இதுதான்.[1]

படித்தமைக்கு நன்றி

ஸ்ரீஜா

அடிக்குறிப்புகள்


சமூக வலைத்தள போராளிகள் பற்றி உங்களின் கருத்து என்ன?

 இன்றைய தேதியில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் கொண்டே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏன்?

இன்றைய தேதியில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் கொண்டே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏன்?

DD News is Covid ‘positive’. It shows a sanitised version of the pandemic
If you watch DD News, you will not feel “the sense of abandonment”, as BBC World termed it, of a people “left to do what the government should have done”.

அரசுடைமையான மற்றும் சில தனியார் தொலைக்காட்சி சானல்களும், நாளிதழ்களும் கோவிட 19 ன் தாக்கம் குறித்து உண்மையான தகவல் கொடுப்பதில்லை!!

இந்த கோவிட் -19 இரண்டாவது அலையின் போது சிகிச்சைக்கு அவசியமான ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட பலர் வேண்டிய உதவி பெற சமூக ஊடகங்களை தான் நாடுகின்றனர்.

பல பிரபலங்களும் சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கள், வேண்டிய உதவிகள் அவர்களுக்கு கிடைப்பது மற்றும் தகவல்கள் பகிர்வது என்று கைகோர்த்துள்ளனர்.

ஆனால், தன் மாநிலத்தில் உள்ள எந்தவொரு தனியார் அல்லது பொது COVID-19 மருத்துவமனையிலும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் சமூக ஊடகங்களில் "வதந்திகளை" பரப்பும் மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் உதிர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியுள்ளார்..

மேலும், வதந்திகளை பரப்பும் நபர்களை "கண்காணிக்கவும், இதுபோன்ற சம்பவங்களையும் பயத்தை உருவாக்குவதற்காக பற்றாக்குறை பதிவாகியுள்ளதா என்றும் முறையாக விசாரிக்கவும்." ஆதித்யநாத் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.,

சமீபத்தில், உ.பி.யில் உள்ள அமேதி காவல்துறை , ஒரு சிறுவனை "தவறான தகவல்களை பரப்புவதாக" ஐபிசியின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாத்தாவின் உயிரைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் கிடைப்பதற்கான வழிவகைகளை ட்விட்டரில் முறையிட்டவர்.!!

Mother of Man Seen Pleading for Oxygen to Not Be Taken Away Dies; Cops Say Video 'Misleading'
A video showing 22-year-old Anmol Goyal on his knees, begging the police to not take away his mother's oxygen cylinder, has gone viral. The family says the cylinder was theirs.

தொற்றுநோய்களின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் மறு விநியோகத்தில்.COVID19 தொடர்பான சிக்கல்களைக் கையாள்வது குறித்து, நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், தனிச்சையாக ஒரு வழக்கை, கடைசி பணி நாளான ஏப்ரல் 27 அன்று விசாரித்தது .

அப்போது, அரசுகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிரூப்தியடைந்த நீதியரசர்கள் "குடிமக்கள் தங்கள் குறைகளை சொல்ல, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் தொடர்பு கொண்டால், அது தவறான தகவல் என்று கூற முடியாது" என்று குறிப்பிட்டனர்,

இதுபோன்ற எந்தவொரு தகவலையும் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டால், அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதாக நீதிமன்றம் எச்சரித்தது.

ஆக்ஸிஜன் வழங்கல், ரெம்ட்சிவிர் போன்ற மருந்துகளின் கிடைக்கும் தன்மை, தடுப்பூசி விலைக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசின் பதிலை பெஞ்ச் கோரியுள்ளது. மேலும், தடுப்பூசி விலை நிர்ணயம் செய்வதற்கான அடிப்படையை விளக்கவும் அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது.

"ஒருபுறம் மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் மறுபுறம் மாநிலங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை வேறுபட்ட விலை நிர்ணயம் செய்வதற்கான காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டும்" என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு.உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதள போராளிகள் மற்றும் குடிமக்களின் நியாயமான தகவல் பரப்பும் செயலை உச்ச நீதிமன்றமே ஒப்புதல் கொடுத்துள்ளது.

இதில் நான் என்ன கருத்து சொல்ல?

ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்..

வலைத்தளம் தானே நாம் எங்கோ இருக்கிறோம், .எதிரில் தான் ஆட்கள் இல்லையே..என்று நினைத்து மற்றவரை ஏளனமாக எள்ளி நகையாடினால், பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் மாட்டோம்!!

 

பொய்யான தகவல் பரப்புவோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு!!


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...