வெள்ளி, 11 ஜூன், 2021

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில், கல்லூரி செல்லாமலேயே கல்லூரியில் முழு கட்டணம் வசூலிப்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.அதை மீறி வசூல் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்த தீர்ப்பின்படி, ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 40% சதவீத கல்விக் கட்டனத்தை வசூலிக்க அனுமதித்த நிலையில் மேலும் 35% கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

கொரானா காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காததால், கல்வி கட்டணத்தை வசூல் செய்ய தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தடை விதித்து, ஏற்கெனவே அரசு உத்தரவு பிரப்பித்தது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்வாகத்தினருக்கு ஜூலை 2020 ல் பிறப்பித்த உத்தரவில் 2020_21 களிவியாண்டிற்குரிய 75 % கல்விக்கட்டனத்தை, பகுதியாக ஆகஸ்ட 2020 க்குள் 40%தையும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள் மீதி 35%யையும் வசூலிக்கலாம் என்று தீர்ப்பளித்திருந்தது.

தற்போது இந்த வருடம் இறுதி வரை கல்விக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில், மீதியுள்ள 35% கல்விக்கட்டனத்தை பிப்ரவரி 2021க்குள் வசூலிக்கலாம் என்றும் இதை கட்ட பெற்றோருக்கு தவணை முறை வழங்கலாம் என்றும் சொல்லியுள்ளது.

அது மட்டுமல்லாமல் நீதிமன்ற உத்தரவை மதியாமல் முழு கல்விக்கட்டனம் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களில் சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளசது.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 32 பள்ளிகள் நீதிமன்ற உத்தரவு மீறி கல்விகட்டனம் வசூலித்ததாக cbse தெரிவித்தும் அதன் முழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிருப்தியுற்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ், முழு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மார்ச் 1ந் தேதி வழக்கு விசாரணையின்போது, கல்வித்துறையின் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

.எனவே முழு கல்விக்கட்டணம் வசூல் செய்யும் கல்வி நிறுவனம் மீது புகார் செய்யுங்கள் 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...