அறம் தர்மம் நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறம் தர்மம் நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2021

நீதி தேவதையின் கண் ஏன் கட்டப்பட்டுள்ளது?

செல்வம், அதிகாரம், பின்புலம் போன்ற எந்த வித பாரபட்சமும் ,

பார்க்காமல் நீதி வழங்க வேண்டியே நீதி தேவதை தன கண் மூடி இருக்கிறாள். இந்த நீதி தேவதையின் உருவம் 1 நீதிக்கு தேவையான முக்கியமான அம்சம் இது 16 ம் நூற்றாண்டிலிருந்து பயன் பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆட்சி செய்த மனுநீதி சோழன், குற்றம் செய்தது தன மகனே என்று தெரிந்தும் கூட, விதித்த தண்டனையை மாற்றாமல் தேர்காலில் ஏற்றி அவனை கொன்றான். எனவே தான் அவன் சிலை நமது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்திலிருக்கும் நீதிதேவதை பெண்ணாக இராமல், நீதிதேவனாக இருக்கக்கூடாதா? அந்த பெண் உருவம் எப்படி வந்தது? ஏன் கண்கள் கட்டப்பட்டுள்ளது? கையில் தராசு ஏன்? மற்ற நாடுகளிலும் இந்த நீதிதேவதை இடம் பெற்றுள்ளாரா? எல்லா கேள்விக்கும் விடையளிக்க முடியுமா?

 முதலில் நீதி தேவதை ஏன் பெண்ணாக இருக்கிறாள்? ஆணாக இருக்கக்கூடாதா ? என்பதைப் பார்ப்போம்.

இது தான் பெண் தெய்வம் ஜஸ்ட்டியா ரோமானியர்களின் பெண் தெய்வம். கிரேக்க கடவுளுக்கு இணையானவள். ஒழுங்கு, சட்டம், இயற்கை நீதி, மற்றும் பண்பாடு ஆகியவற்றின் புனித வடிவம்.

ஏன் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கிறாள்?

சட்டம் ஒரு குருடு என்பதை உணர்த்தவே . அதாவது சட்டம் எந்த வித்தியாசமும் பார்க்காது. ஏழை பணக்காரன், வலிமையானவன், பலவீனமானவன், சரியானவன், எமாற்றுக்காரன் என்று. அதாவது அவள் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எதிரில் இருப்பவரைப் பார்த்து நீதி வழங்குவது இல்லை என்பதையும் தன்னுடைய ஐம்புலன்களைக் கொண்டும் அல்ல என்றும் உணர்த்தவே. கண்ணும் ஐம்புலன்களும் ஏமாற்றலாம் என்பதால், மனம் சுதந்திரமானது என்பதால் நம்பிக்கை வைக்கக்கூடிய காரண காரியத்தைக்கொண்டும் ஆராய்ந்தும் முடிவு எடுக்கிறாள் என்று உணர்த்தவே.

இதில் சுவாரசியம் என்னவென்றால், 15ஆம் நூற்றாண்டில் தான் நீதி தேவதையின் கண்ணைக் கட்டி இருக்கும் உருவங்கள் புகுத்தப்பட்டன என்று ஆய்வுகள் சொல்கிறது.

அடுத்து தராசு ஏன் வைத்திருக்கிறாள்?

அதை நீதியின் தராசு என்பர். அது, இரண்டு தரப்பையும் சரி சமமாக விசாரித்து, இரண்டு தரப்பிலும் உள்ள சாட்சியங்கள் ஆதாரங்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்வதைக் காட்டுகிறது. இந்த தராசும் எகித்திய பெண் தெய்வம் மாட் என்பதுடன் இருந்த தராசு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று விக்கீபீடியா சொல்கிறது

அடுத்து அவளின் கையில் உள்ள வாள். வாள் அதிகாரத்தின் உருவகம் என்று நமக்குத் தெரியும். ஆனால் நீதி தேவதையின் கையில் உள்ள வாளிற்கு சில சிறப்புகள் உண்டு. அது உடல் வலிமையை விட ஒரு முடிவிற்கான காரனத்திற்கான சக்தியை சுட்டுகிறது. இந்த சக்தியை தான் நாம் சட்டம் என்றும் அதை செயல்படுத்த முனைகிறோம். நீதியை வழங்குவதற்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அதிகாரம் தேவை என்பதை அது உணர்த்துகிறது. மக்களாகிய நாம்தான் அந்த சட்டங்களை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளோம். ஏனென்றால், நாம்தான் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று.நம் விருப்பத்தினால் தான் அது சட்டத்தை அமுல்படுத்துவர்களின் கையில் உண்மையான அதிகாரமாகக் கொடுக்கப்பட்டது. இன்னொன்று கவனித்தீர்களா? அந்த வாளிற்கு இரண்டு முனைகள் உண்டு. அதாவது அந்த காரணமானது சுய விருப்பு வெறுப்பு இன்றி எதிரும் புதிருமாகவும் பயன்படுத்தக்கூடியது என்பதால்.

ஒரே மாதிரி வாதம், கண்ணோட்டம் மற்றும் நோக்கம், தண்டனை கொடுக்க கூடிய வகையில் ஒருவருக்கு எதிராகவும், வேறொரு சூழ்நிலையில் உள்ள மற்ரோருவருவரை காக்கவும் பயன் படும் என்றும் சொல்கிறது. ஒட்டுமொத்தமாக அந்த வாள் உணர்த்துவது ஒன்று தான் அதிகாரம் நடுநிலையுடன் பயன்படுத்தப்படவேண்டும். அந்த அதிகாரத்தை துஷ்ப்ராவ்யோகம் செய்வது அநீதியாகும்; வாளை சுழற்றும்போது குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது போல், நமக்கு பிரியமானவர்களுக்கும் காயம் ஏற்படலாம்; அதேபோல அந்த வாளைஅதாவது அதிகாரம் நீதியாகக் கருத முடியாது. அது ஒரு கருவி மட்டுமே. அது நீதிக்கு பணிந்தாக வேண்டும்.

எனவே ஒட்டுமொத்தமாக, நீதி தேவதை நீதி தர்மத்தை காட்டுகிறது. அதே போல அவளின் நெடிந்துயர்ந்த உருவம், பெண் என்பதால் கருணையைக் காட்டுவதாக அமையாமல், அவரவர் செயலுக்குத் தக்கபடி, கடுமையாகவும் கனிவாகவும் சூழ்நிலைக்கு தக்கவாறு காட்டும். நீதி என்பதை சம உரிமை என்று சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ( மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய கள்ளக் காதல் குற்றமல்ல என்ற தீர்ப்பு) சில சமயம் எல்லோருக்கும் சமமாக தீர்ப்பு வழங்குவது என்பது சிலரிடமிருந்து எடுத்து மற்றவருக்கு கொடுப்பதாகவும் அமையும். எனவே நீதி தேவதை என்ற சின்னம் பாரபட்சமின்றி நீதி வழங்குவதன் பிம்பம். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதருக்காக மட்டும் நியாயம் வழங்குவதாக இல்லாமல், அனைவருக்கும் பொதுவாக, சட்டத்தின் சக்தியுடன், காரண காரியத்தின் பலமுடன் செயல்படுவதை உணர்த்துகிறது. அதை பண்டைய காலத்திலிருந்து அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.



திங்கள், 7 ஜூன், 2021

சட்டப்படி சரியாக இருக்க வேண்டும். நியாயம் தர்மம் மனசாட்சிப் படி தவறாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்பவர்களை அடையாளம் காண்பது எப்படி?

 

  1. எது சட்டப் பூர்வமானது என்று இங்கு நினைக்கிறோமோ அது இன்னொரு இடத்தில சட்டவிரோதம்.அதே போல அங்கு சட்டப்படியானது , இங்கு சட்டவிரோதம். அப்படியெனில் இடத்திற்கு, இனத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருப்பது.

    ஆனால் தர்மம்? அதற்கும் சட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?

    சட்டம் –

    நிஜத்தை நிரூபிக்கக்கூட
    பொய்யை –
    சாட்சிக்கு அழைக்கும்..!

    தர்மமோ –
    நிஜத்தையே
    சோதனைக்கு உள்ளாக்கும்..!

    முன்னது –
    சட்டத்தின் தர்மம்..
    பின்னது –
    தர்மத்தின் சட்டம்..!

    ___கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்

    சரி..கேள்விக்கு வருவோம்…

    எப்படியோ சட்ட விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருந்தாலும், நியாயம், தர்மம் மனசாட்சிப்படி தவறாக /எதிராக நடப்பவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

    நேராக நம் வீட்டிலுள்ள முகக் கண்ணாடி முன்பு போய் சற்று நிற்போம்…அடையாளம் தெரிகிறதா?…

    அதெப்படி… நானா என்று தானே கேள்வி வருகிறது…?

    வரும்...கண்டிப்பாக வரும்.😀..

    மற்றவர் என்றால் நீதிபதியாகவும், தனக்கு என்னும் போது, வக்கீலாகவும் மாறுபவர் தானே நாம்?

    சொல்கிறேன்.

    1. தொழில் செய்பவர்களை எடுத்து கொள்வோம்.பணம் வந்ததாக, செலவு ஆனதாக கணக்கு வழக்கு வைத்திருப்பர்.ஆனால் நியாயம் தர்மம் மனசாட்சிப்படி 100% அப்படியா?
    2. வேலை செய்கிறவரா?அவர் தாக்கல் செய்யும் வருமான வரி கணக்கில் உள்ளது 100% அப்படியா? அரசு கொடுத்திருக்கும் சலுகைகள் கழித்திருப்போம்.அது போல 100% உண்மையாக செலவழித்திருப்போம்?
    3. சரி வீட்டில் திருமணம் என்போம் நிச்சயம் செய்வோம்.சட்டப்படி வரதட்சணை வாங்காதது/கொடுக்காதது போல் தான் இருக்கும்.ஆனால்…?
    4. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்போம்.ஆனால்…..?
    5. சரி நம்மை விடுங்கள்.நாம் தேர்ந்தெடுத்த அரசு, அது மாநிலமோ மத்தியோ, முன்னாளோ இந்நாளோ, பின்னே எப்படி இருக்கும்? அங்கேயும் கணக்கும் செயல்நடைமுறைகள் சட்டப்படியிருக்கும். ஆனால்..……..?..
    6. ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு வெளியே உறவு இருந்தாலும் சட்டப்படி சரி தான்..ஆனால்…?
    7. இந்த காரணத்தை சொல்லி குழந்தையை வளர்க்கும் உரிமையை பெண்ணிடம் இருந்து பறிக்க கூடாது என்கிறது சட்டம்.ஆனால்…….?[1]
    8. இப்போதெல்லாம் முதல் குற்றவாளி, இளங்குற்றவாளி, வயதான குற்றவாளி, பெண் குற்றவாளி என்று இனம் பிரித்து, அவர்களுக்கு சலுகை காட்டப்பட்டு, மன்னிப்பு, சமாதானம், குறைந்த தண்டனை, எச்ச்ரிக்கை விடுத்தல், போன்றவை சட்டத்தால் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.ஆனால் தர்மப்படி…?
    9. கருக்கலைப்பு தெரிந்தே செய்வது சட்டப்படி சரி.ஆனால்..?
    10. கடன் வாங்கிவிட்டு மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது…

    இப்படி பட்டியல் நீண்டுக கொண்டே இருக்கும். அதனால் நிறுத்துவோம்.இங்கே சற்று…

    சரி.. இதில் உள்ள பட்டியலில் ஏதேனும் ஒன்றுக்குள் நாம் வந்துவிட்டோம் தானே!!☺️

    சட்டப்படி தான் நாம் நடந்துக் கொள்கிறோமே, இந்த தர்மம்/நியாயம் எல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று தானே நினைக்கிறோம்.

    உண்மையை சொல்லுங்கள்..

    சட்டத்திடமிருந்து கூட தப்பலாம்.ஆனால் நம் மனசாட்சியிடமிருந்து தப்பிக்கவே முடியாது இல்லையா..

    மனசாட்சியின், தர்மத்தின், நியாயத்தின் விதி தான் என்றும் எங்கும் வியாபித்திருக்கும் நிலையான சட்டம். அதனுடைய நீதிமன்றம் நம்முடைய மனமே.அதுவே குற்றம் எது என்று தீர்மானித்து, உடன் தண்டனை கொடுத்து விடும். .அதே போல நியாய்ப்படி, சரியாக நடப்பவருக்கு,

    என்றும் தர்மம் தலை காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும்…

    சட்டமும் தர்மமும் வெவ்வேறாக இருந்தால் தர்மம் ஒரு நாள் சட்டத்தை தண்டிப்பது உறுதி. தர்மத்தை காக்கத் தான் சட்டமே தவிர சட்டத்தின் போக்குக்கு தர்மத்தை வளைக்க கூடாது.


    அடிக்குறிப்புகள்


பழி வாங்குவதைப் பற்றிய சில உண்மையான அல்லது கற்பனையான கதைகள் எவை?

 உத்தர் பிரதேசம் கோண்டா மாவட்டம் 1982 மார்ச் 12 இரவு.

25 வயதே நிரம்பிய டிஎஸ்பி kp சிங் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கி போடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு வீட்டிற்குள் மறைந்திருப்பதாக கிடைத்த துப்பின் அடிப்படையில் அந்த 2 கொள்ளைக்காரர்களை பிடிக்க போலீஸ் படையுடன் சென்ற டிஎஸ்பி kp சிங் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் போலீசார் உட்பட 12 பேர் இறந்தனர் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அந்த வீட்டின் கதவை தட்டிய டிஎஸ்பி, யாரும்திறக்காமல் போக, திரும்பி இரண்டு எட்டு வைத்திருக்க மாட்டார்..அவருடன் வந்த போலீஸாரே அவரை சுட்டுத் தள்ளினர். சில கிராமத்தினரையும் சுட்டுவிட்டு, ஒரு பொய்யான எநகவுன்டர் கதையை பரப்பி விட்டுள்ளனர் என்று தெரிந்தது.

என்ன ..சினிமா போல இருக்குதா…

இது உண்மை சம்பவம்.[1] .

அந்த காவல் நிலைய ஆய்வாளர் சரோஜ்க்கு எதிரான விசாரணையை நடத்திய டிஎஸ்பி மீது ஏற்கெனவே காழ்ப்புணர்ச்சி இருந்தவருக்கு, அதற்கு பக்கபலமாக அந்த மாவட்ட sp யும் (அவருடைய சொந்தப் பகை) துணை நிண்றது, போலீஸ் மேல்மட்ட நிலையில் நடந்த சதி, நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த பொய்யான என்கவுண்டரில் குறிவைக்கப்பட்ட சிங்கின் மனைவி விபா மட்டுமே தப்பினார்.அவர் சாட்சியம் தான் இந்த வழக்கின் பின்புலமாக இருந்த சதித்திட்டத்தை வெளிக்கொணர உதவியது.

19 போலீசாருக்கு எதிராக சிபிஐ போட்ட இந்த வழக்கில், 10 பேர் விசாரணையின் போதே இறக்க, சிலர் ஓய்வு பெற்று விட, ஒருவர் மட்டுமே தீர்ப்பு சொல்லும்போது பணியில் இருந்தார். சதியில் ஈடுபட்ட மேல்மட்ட காவல் அதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

டிஸ்பி சிங் கொல்லப்பட்டபிறகு, அவரின் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்,கொண்ட குடும்பத்தினருக்கு அடுத்து என்ன நடந்திருக்கும்?

மூத்த மகள் கின்ஜால் சிங், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு தினசரி வருகை தருவதோடு, கடினமாகப் படித்தார். டெல்லியின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் சேர்ந்தார், இதற்கிடையில் அவரது தாய்க்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது நோயுடன் ஒரு தீவிரமான போருக்குப் பிறகு, தனது மகள்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக மாறி, தங்கள் தந்தையின் மரணத்திற்கு நீதி பெறுவர் என்ற மன அமைதியுடன் தான் அவர் கண்ணை மூடினார்.

எத்தனை பெரிய சோகம்…ஆனாலும் …கிஞ்சலும் அவரது சகோதரி பிரஞ்சலும் அவர்கள் அம்மா ஆசைப்பட்டது போல, தங்கள் தந்தையின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்,தங்கள் வாழ்நாள் இலக்கை நோக்கி, தங்கள் சக்தியை முழுதும் அர்ப்பணித்தனர்.

அவர்கள் தாயார் இறந்த பிறகு, கின்ஜால் இறுதித் தேர்வுகளை எழுத தனது கல்லூரிக்கு திரும்பினார். பட்டம் பெற்ற உடனேயே, அவர் தனது தங்கை பிரஞ்சல் சிங்கையும் டெல்லிக்கு அழைத்து வந்தார். ஒன்றாக, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதில் அவர்கள் தங்கள் கவனத்தை முழுவதுமாக செலுத்தினர்.

2007 ஆம் ஆண்டில் இருவரும் . கிஞ்சல் சிங் ஐ.ஏ.எஸ் ஆகவும், அவரது சகோதரி பிரஞ்சல் சிங் ஐ.ஆர்.எஸ் ஆகவும் .யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்

2013 ஆம் ஆண்டில், 31 வருட போராட்டத்திற்குப் பிறகு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்தது, மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

"என் அப்பாவை கொன்னவனை பழி வாங்காம விடமாட்டேன்"னு ஹீரோ சொல்லிட்டு அவரே அருவாளை தூக்கிட்டு போய் வில்லனை போட்டா தான் பழிவாங்கல்"ன்னு சினிமா நம்மை மூளைச் சலவை செய்து விட்டது..😂

இந்தப் பழி வாங்குதல் சிறப்பாக இருக்குல்ல?!


படிமப்புரவு கூகிள்

அடிக்குறிப்புகள்[1] UP fake encounter: 3 cops get death for UP fake encounter in 1982 | India News - Times of India


ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. நீ பணக்காரனாக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவாய் என்று ஏதேனும் தீர்ப்பு வழங்கப்பட்ட சரித்திரம் இருக்கிறதா?

 எத்தனையோ இருக்கிறதே…இதில் என்ன சந்தேகம்?

உதாரணத்திற்கு நமக்கு நன்றாக தெரிந்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அதன் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதே.

ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரரும் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநருமான ராம ராஜு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 8 பேருக்கும் தனித்தனியாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சரி பக்கத்து ஊருக்கு. ஏன் போகணும்?

சென்னையில் மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் `சரவண பவன்' ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரைப் படுகொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாரே அதுவும் மறந்துருச்சா?!

அவர் அதை தடுக்க உச்ச நீதிமன்றம் வரை போனார்..மாற்ற முடிந்ததா?!

அதே போல ..இந்த கோரானா காலத்தை விடுங்கள்..சாதாரண காலத்திலேயே எப்படி வாழ்வு முடிந்தது என்ற மர்மத்தோடே போய் சேர்ந்தாரே முன்னாள் முதல்வர்..சிறைக்கு போவதை தடுக்க முடிந்தது..ஆனால்..?

இங்கே ஏழை, பணக்காரன் என்று எதுவும் வித்யாசம் கிடையாது. ."ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...