பரம்பரை சொத்து என்ற முறையில், தாத்தாவிற்கு வந்த பாகத்தில், உங்களுக்கு முழு உரிமை உள்ளது.
- சமரச மையத்தை (இது குறித்த விவரம் இந்த களத்தில் உள்ளது) அணுகி, தீர்வு காணலாம் அல்லது
- அவர் எழுதிக் கொடுத்த பத்திரம் செல்லாது என்று முதலில் வழக்கறிஞர் அறிவிப்பு கொடுத்து, தீர்வு கிடைக்காத போது வழக்கு போடலாம்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எனது தந்தை பூர்விக நிலத்தை எந்த வித எழுத்து முறை ஒப்பந்தம் இல்லாமல் அடகு வைத்துவிட்டார். பின்னர் இறந்துவிட்டார், ஆனால் அந்த நிலத்தை எங்களுக்கு அவர்கள் தர மறுக்கின்றனர். நான் என்ன செய்வது? ஏதேனும் சட்ட ஆலோசனை கூற முடியுமா?

- எந்த வித எழுத்து மூலம் இல்லாத அடமானம் செல்லாது.
- எழுதி பதிவு செய்யாததால் வில்லங்கத்தில் அது இடம் பெற வாய்ப்பில்லை
- அதனால் தந்தை சொத்தின் உரிமை மகனுக்கு மாற்ற எந்த தடையும் இல்லை
- உடன் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யவும்
- அடுத்து சொத்தில் விளம்புகை பலகை வைக்கவும்.அதை தடுக்க அவர்கள் வரும்போது, சொத்தை அனுபவிக்க தடுக்கிறார்கள் என போலீசில் புகார் கொடுக்கவும்.
- தேவையெனில் சமரச மையத்தை நாடவும்.சமரச மையம் குறித்து விளக்கம் இதே களத்தில் உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக