25 வருடங்கள் இந்திய விமானப் படையில் பணிபுரிந்து விட்டு, 2010ல் பணி ஓய்வு பெற்ற கேப்டன் யூனுஸ் மாலிக் என்கிற மிக்கி மாலிக், தன் பணிக் காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த இந்திய துருப்புகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் பைலட்டாக பணிபுரிந்தவர்.விவிஐபி பிரிவில் இருந்து 2004ல் சுனாKமிக்கு பிறகு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நிக்கோபார் தீவுகளுக்கு, ஏற்றி சென்றுள்ளார்.
இவர் பணி ஓய்வுக்கு பின், கோ ஏர் விமான நிறுவனத்தில் தற்போது பணி புரிந்து வரும்போது, அவர் போட்ட பிரதமரை எதிர்த்த டீவீட்டுகள் வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் பணியிலிருந்தே அவரை நீக்கிய நிறுவனம், இது போன்ற செயல்களால் அவர் பணி விதிமுறைகளை மீறிவிட்டதால் இந்த நடவடிக்கை என்றது.
இந்திய அரசு படைப்பிரிவில் பணிபுரிந்த ஒருவர் அதுவும் 25 வருடங்கள்…கேப்டன் அந்தஸ்தில் இருந்தவர் இவ்வாறு செய்தது ஏற்கத்தக்கதல்ல.
ஓய்வு பெற்றதால் மட்டுமே அவர் மனம் போன போக்கில் பேசிவிட முடியாது.
அதுவும் இல்லாமல் சாதாரண குடிமகனே நாட்டின் உயர் பதவியில் இருப்பவரை விமர்சனம் செய்வது குறித்த வரையறை இருக்க, கண்ணியம் மிக்க பதவியில் இருந்தவர்கள் மோசமாக நடந்துக் கொள்வது சரியில்லாத செயல்..
இதோ கோராவிலே கூட தமிழுக்கு வக்காலத்து வாங்குகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், மற்றவரை நாய்கள் என்று சொல்லி , அந்த தமிழை தான் கேவலப்படுத்தியுள்ளனர்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனாலும் தன் கருத்தை நியாயப்படுத்த, தனி நபரை தரக்குறைவாக விமர்சனம் செய்வது, அன்னாரின் கீழ்மையான குணத்தையே காட்டும்.
அந்த விதத்தில் பார்க்கும் போது, ஒழுக்கக்கேடான ஒரு ஊழியர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் , அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற அந்த நிறுவனத்தின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே!!
