இறந்து தான் "மறக்கப்படுவோம்" என்று இல்லை.
இருக்கும் காலத்திலேயே, நம்மை மற்றவர் சில சமயம் மறந்து விடுவதில்லையா?
கண்ணை விட்டு மறைவது கருத்தில் இருந்தும் மறையும் தானே!!
இது நினைவு அடுக்கில் இருக்கும் ஞாபகங்களின் அழிவு..
நேற்று வரை தேவையாக இருந்த நினைவுகள் இன்று மரணிக்க காரணம் என்ன?
அதை விட முக்கியமான மற்ற நினைவுகள் ஆக்கிரமிப்பதால்..
அந்த புது நினைவுகள் வளர்ச்சி தானே?
ஒரு அழிவிலிருந்து தான் வளர்ச்சி வருகிறது என்பதையும், வளராதது தான் அழிகிறது என்பதையும் ஒத்துக்கொள்கிறீர்களா?
கலீல் ஜிப்ரானின் ஆருயிர் நண்பர் தான் மிகையல் நைமி, இவர் எழுதிய "மிர்தாபின் புத்தக"தை படித்திருக்கிறீர்களா? படிக்கவில்லை என்றால் உடனே படியுங்கள்..
பள்ளியிலும் கல்லூரியிலும் வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை கற்று தருகிறார்களே தவிர, எப்படி வாழ்வது என்று யாரும் கற்றுத் தருவதே இல்லை!!
வாழ்க்கையின் எந்த நிலையில் நின்று கொண்டுருந்தாலும், கை பிடித்து, நம் எல்லை வரை கூட்டி செல்லக் நம் கரம் பற்றுகிறார் மிகையல்.
அவர் தான் சொல்கிறார்
"நீங்கள் தொடர்ந்து அழிந்து கொண்டுதானே வளர்ந்து வருகிறீர்கள்? தொடர்ந்து சிதைவதன் மூலம், நீங்கள் வளர்ந்து கொண்டே வரவில்லையா?
இறந்து போனவர்கள், உயிர் வாழ்பவருக்கான அடிமண்தானே?
உயிர் வாழ்பவர்கள், இறந்து போனவரின் தானியக் களஞ்சியம் தானே?
வளர்ச்சி, அழிவின் குழந்தை என்றால், அழிவு, வளர்ச்சியின் குழந்தை
வாழ்வு, மரணத்தின் தாய் என்றால், மரணமும் வாழ்வின் தாய்தான்.
கால இடங்களின் ஒவ்வொரு புள்ளியிலும் அவை ஒன்றே."
அதனால் நம்மை பற்றிய தரவுகளை மற்றவர் மறந்தாலும் நாம் கவலைப்படத் தேவையில்லை
காலம் மாறி வருகிறது. இப்போது மற்றவர்கள் நம்மை மறந்துவிடுகிறார்களோ இல்லையோ, "என்னை மறந்து விடுங்கள்" என்று கேட்கும் உரிமை நமக்கு உள்ளது…
என்ன ஆச்சரியமா இருக்கா?!
கடந்த மாதம், மான்புமிகு டெல்லி உயர்நீதிமன்றத்தில், அமெரிக்க குடிமகன் ஒருவர், ரிட் மனு தாக்கல் செய்தார்.போதைப்பொருள் மருந்துகள் மற்றும் போதை பொருட்கள் சட்டத்தின் (1985) கீழ் அவர் மீது போட்ட வழக்கில், தான் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை, கூகிள் மற்றும் இந்தியா கானூனின் வலைத்தளங்கள் / இணையதளங்களில் வெளியிடுவதால், அவரது சமூக வாழ்க்கை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியது. என்றும், அதை நீக்க வேண்டும் என்று கேட்டார்.
"மறக்கப்படுவதற்கான உரிமை" ("ஆர்டிபிஎஃப்") கொள்கைகளை நீதிமன்றம் பயன்படுத்தி, .அவர் உரிமைகளைப் பாதுகாக்கும் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. லிங்க் இங்கே...
இது இந்தியாவுக்கு வேண்டுமானால் புதுசு..இந்திய நீதிமன்றங்களுக்கு இதைச் சந்திக்கும் அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. .ஆனால் ஆர்டிபிஎஃப் உலகம் முழுவதும் நன்றாகவே நிறுவப்பட்டுள்ளது,
யு.கே குற்றவாளிகளின் மறுவாழ்வு சட்டம் (1974) , 'ஸ்பென்ட் கன்விஷன் ஸ்கீம்' போன்றவை 'அனுபவித்த காலம்' என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குடிமக்களின் சில குற்றங்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துகிண்றன.
தனிநபர்களின் பாதுகாப்பு குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 1995 உத்தரவிலிருந்து, RTBF இன் ஒரு பகுதியாக உள்ள "அழிப்பதற்கான உரிமை " என்பது, தனிநபர் தரவுகளை செயலாக்குவது, மற்றும் அவற்றின் இலவச இயக்கம் தொடர்பாக உருவாகி, இப்போது அதிக அளவில் செயல்பாட்டில் உள்ளது...
கூகிள் ஸ்பெயின் எஸ்.எல் மற்றும் கூகிள் இன்க். எதிர் ஏஜென்சியா எஸ்பானோலா டி புரோட்டீசியன் டி டேடோஸ் (ஏஇபிடி) மற்றும் மரியோ கோஸ்டெஜா கோன்சலஸ் (2014) ஆகியோர் என்ற வழக்கில், ஆர்.டி.பி.எஃப் கொள்கைகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளில் (ஜி.டி.பிஆர்) நிறுவப்பட்டன ) 2016. இங்கிலாந்தில், ஜிடிபிஆர் தரவு பாதுகாப்பு சட்டம் 1998 இன் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது, தேடுபொறிகள் செலவழித்த தனிப்பட்ட தரவை அகற்ற மறுக்கின்றன என்றால், தகவல் ஆணையர்கள் அலுவலகத்தில் முறையிடும் திறன் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் மாற்றுவதையும் இது நிர்வகிக்கிறது,
இதே போல், இந்த "தனியுரிமைக்கான உரிமையை" "அறிந்துக் கொள்ளும் உரிமை"க்கு எதிராக சமப்படுத்த முயற்சிக்கும் அடுத்த கட்டத்திற்கே மற்ற நாடுகள் சென்று விட, வெகு சமீபத்தில் தான், மான்புமிகு தில்லி உயர்நீதிமன்றம், நிரந்தர தடை உத்தரவு கோரிய ஒரு வழக்கை^ விசாரித்தபோது, ஆர்டிபிஎஃப் கொள்கைகளை தனியுரிமையின் உள்ளார்ந்த அம்சங்களாக அங்கீகரித்தது..
நாம் இன்னமும் தகவல் அறியும் உரிமையையே சரியாக பயன்படுத்துவதில்லை..!!
"மறக்கப்படுவதற்கான உரிமை" உண்மையில் நமக்கு உள்ளதா,?
இந்தியாவின். தரவு பாதுகாப்பு மசோதாவில் ஆர்டிபிஎஃப் கொள்கைகள் இல்லை.,
இருந்தாலும், இந்த உரிமையின் சாராம்சத்தை ஏற்கெனவே நம் உச்சநீதிமன்றம் நீதியரசர் கே.எஸ். புட்டசாமி மற்றும் ஒருவர் Vs யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பலர் (2017) வழக்கில்,தொட்டு காட்டியிருக்கிறது.^
இந்த உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21 வது பிரிவின் ஒரு பகுதியாகப் படிக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள "வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்" கான அடிப்படை உரிமையின் பகுதியாக தனியுரிமைக்கான உரிமை இருப்பதனையும் உறுதிப்படுத்தியது.
குறிப்பாக, மாண்புமிகு நீதியரசர் திரு எஸ்.கே. கவுல் எழுதிய தீர்ப்பில் "ஒரு தனிநபர் தன் தனிப்பட்ட தரவுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கான உரிமை மற்றும் அவரது சொந்த வாழ்க்கையை கட்டுப்படுத்த முடிவது என்பதும் அவரது இருப்பைக் கட்டுப்படுத்தும் உரிமையை உள்ளடக்கும்" என்றார்.
அப்படியென்றால், நமக்குள் ஒரு கேள்வி தோன்றும்..ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும். ரவுடி லிஸ்ட் என்று குற்றவாளிகளின் ஜாதகத்தையே வைத்திருப்பார்கள். அதை நீக்க சொல்லி கேட்க முடியுமா?"ன்னு
அதற்கும் பதில் சொல்லுது அந்த தீர்ப்பு..
ஆர்டிபிஎஃப் நிபந்தனையற்ற உரிமை அல்ல
"அத்தகைய உரிமை, குற்றவாளி தனது கடந்த காலத்தை அழிக்க முடியும் என்பதல்ல. ஆனால் சிறிய, பெரிய தவறுகள் உள்ளன, என்பதால், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நபரின் விவரக்குறிப்பு எண்ணிலடங்காதவரை பதிய வேண்டும் என்றும் கூற முடியாது"
நீதிபதி (ஓய்வு) கே.எஸ். புட்டசாமி வழக்குக்கு முன்பாகவே, பல்வேறு நீதிமன்றங்கள் ஆர்டிபிஎஃப் கொள்கைகளின் கருத்தில் கொண்டுள்ளன.
ஆர்.ராஜா கோபால் வி தமிழ்நாடு (1994) வழக்கில்,^ கைதிகளின் தனியுரிமைக்கான உரிமை உச்ச நீதிமன்றத்தால் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. இதேபோல், பஞ்சாப் மாநிலம் வி குர்மித் சிங் மற்றும் ஆர்ஸ் மற்றும் கர்நாடக மாநிலம் எதிர் புட்டா ராஜா ஆகிய வழக்குகளில், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்க அநாமதேயம் உதவும் என்று உச்ச நீதிமன்றம் கருதியது. ஸ்ரீ வசூநாதன் வி தி ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் இல், கர்நாடக உயர்நீதிமன்றம் பொதுவாக பெண்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்குகளில் ஆர்டிபிஎஃப் கொள்கைகளை அங்கீகரித்தது,
இந்தியா இணைய தள தனியுரிமை பொறுத்து தாமதமாக நுழைந்துள்ளது என்பது உண்மை தான், 2019 ஆம் ஆண்டில் தான், தனிநபர் தரவு பாதுகாப்பு (பிடிபி) மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, ஆர்டிபிஎஃப் தொடர்பாக, ஜி.டி.பிஆர்யில் இருந்து வேறுபடுகிறது.
தனிப்பட்ட தரவை, கீழ்கண்ட சமயத்தில், நிரந்தரமாக அழிக்க ஜிடிபிஆர் அனுமதிக்கிறது:
(i) அதன் அசல் செயலாக்க நோக்கத்திற்காக இது இனி தேவையில்லை;
(ii) ஒப்புதல் திரும்பப் பெறப்படும்போது அல்லது
(iii) செயலாக்கத்திற்கான முறையான காரணங்கள் இல்லாதபோது;
ஆனால் பி.டி.பி மசோதா முதல் நிலையில் மட்டுமே மொத்த அழிப்பை அனுமதிக்கிறது. இதன் கீழ், தரவு உரிமையாளர், நேரடியாக தீர்ப்பளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மூன்றாம் தரப்பினரும் கூட கோர முடியும்.
தனிப்பட்ட தரவைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தடுப்பதற்கான அவர்களின் உரிமை / ஆர்வம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் எந்தவொரு குடிமகனின் தகவல் அறியும் உரிமையையும் மீறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கான பொறுப்பு தரவு உரிமையாளர் மீது தான் உள்ளது.
ஆனாலும், யூ.கே., ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகள் ஆர்டிபிஎஃப்-க்கு ஆதரவாக வலுவாக சாய்ந்த நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா நமது சட்ட மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை மீண்டும் அளவீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது..
பி.டி.பி மசோதா அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் ஆர்டிபிஎஃப், குற்றங்களைத் தடுப்பது என்பது, அதை கண்டறிவதில் உள்ள நலன்களை விட அதிகமாக இருக்கிறதா என்பதை இனி தான் செயலில் பார்க்க முடியும். உள்நாட்டு அல்லது வணிக நோக்கங்களுக்காக தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்பட்டால் , என்ன செய்ய வேண்டும் என்பதையும், ஒரே மாதிரி உத்தரவுக்கு பதில், தீர்ப்பளிக்கும் அதிகாரியின் சுய விருப்பப்படி அந்தந்த வழக்கு அடிப்படையில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்;
டெல்லி உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பினால், வரவிருக்கும் காலத்தில், ரிட் அதிகார வரம்பை அதிகப்படுத்தி, அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் .எப்படியோ, வளர்ந்து வரும் சர்வதேச நீதித்துறையாலும் வரவிருக்கும் இந்திய தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தாலும் மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் .நம் தனியுரிமை இன்னமும் பாதுகாக்கப்படலாம்…நம்மை பற்றிய மோசமான நினைவுகள் அழிக்கப்படலாம்..
ஆச்சரியம் தான்....."நாம் மறக்கப்படுவதற்கான உரிமையை" நிலை நாட்டவே வாழ்க்கை தீவிரமாக எடுக்கப்படவில்லை?!!
https://www.livelaw.in/columns/right-to-be-forgotten-rtbf-rehabilitation-of-offenders-act-1974-176014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக