திங்கள், 7 ஜூன், 2021

தாத்தாவின் சுயசொத்தினை உயில்படி அவரின் மூன்று மகன்களும் சரிபாகமாக பிரித்துக் கொள்ள வேண்டியது. ஆனால் மூத்த மகன் இறந்த நிலையில் அவர் வாரிசுகளை தவிர்த்து மற்ற இரண்டு மகன்களும் தமது பங்கை பாகப்பிரிவினை செய்து அவரவர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய முடியுமா?

         தாத்தா A விற்கு மூன்று பிள்ளைகள் B, C, D என்று வைத்துக்  கொள்வோம் அவர்கள் சரிசமமாக பிரித்துக்  கொள்ள உயில் இருக்கும் போது, ஒரு பிள்ளை B இறந்தால்…அவர் பிள்ளைகள் E, F என்று வைத்துக் கொள்வோம்.

(பின்னே நான் கணக்கு படித்தேன் என்று எப்படி ஞாபகப்படுத்துவது 😂)

தாத்தா                       A

                                 /           |                      \

                                B           C                      D

                          /          \        |                       |

                           E          F      C                      D

இந்த இறந்த மகன் B க்கு கிடைக்க வேண்டிய பாகத்தை அவர் பிள்ளைகள் E,, F தங்கள் சித்தப்பா C மற்றும் பெரியப்பா D யோடு சேர்ந்து பெற வேண்டும்.

அவ்வாறு கொடுக்காமல் உயிருடன் இருக்கும் மகன்கள் மட்டும் பிரித்துக் கொண்டால், அது செல்லாது. 

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது

  1. பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அரசு அலுவலகங்களில் உங்கள் ஆட்சேபனை மனுவை உயில் நகல் இருந்தால் அதனுடன் சேர்த்து கொடுங்கள்.  அதன் மூலம், தாத்தாவின் சொத்து உயிலுக்கு எதிராகப் பெயர் மாற்றம் பெறாது.
  2. அடுத்து, சமரச மையத்திலும் மனு கொடுங்கள்.  அவர்கள் இரண்டு தரப்பையும் கூப்பிட்டு சமரசமாக தீர்வு காண்பார்கள்.


முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...