ஒருவரின் சொத்தை அவரை தவிர்த்து இன்னொருவர் விற்கவேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர் ஒன்று அதற்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.இல்லை இறந்திருக்க வேண்டும்.
பிறப்பு இறப்பு பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்ட நிலை இன்று. ஒருவேளை இறந்தவர குறித்த பதிவு குறித்த காலத்தில் பதிவு செய்யவில்லையென்றாலும் சில நடைமுறைகளை பின்பற்றி அதை வாங்கலாம்.,
இல்லையென்றால் சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, அவரை காணாமா…அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லையா..அப்படியெனில் அவர் இறப்பு குறித்து நீதிமன்ற உத்தரவு பெற என்ன செய்வது என்று இதை பாருங்கள்👎
https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_684.html
உயிருடன் இருப்பவர் சொத்தையே ஆள்மாறாட்டம் செய்து கிரயம் செய்து விடுகின்றனர். அல்லது போலியாக அதிகார பத்திரம், அவர் இறந்துவிட்டால் போலி இறப்பு சான்றிதழ் தயார் செய்து விற்றுவிடுகின்றனரே தவிர, இவை இல்லாமல் சொத்து விற்பனை செய்வது கடினம்.
அப்படியிருக்க …ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும் அந்த சான்றிதழே இல்லாமல் அவர் சொத்தை மற்றவர் விற்கலாமா என்று நீங்கள் கேட்பதை பார்த்தால்….
ஒன்றும் சரியில்லையே….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக