இது வரவேற்க வேண்டிய அம்சம்.
2018 ல் சட்ட கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில், தனக்கு வேண்டிய அரசை தேர்ந்தெடுக்கக் கூடிய பக்குவத்தை ஒருவன் பெற்றிறுப்பான் என்றால், தன வாழ்க்கை துணையையும் தேர்ந்தெடுக்க கூடிய பக்குவத்தை அவன் பெற்றிருப்பான் என்று தான் கொள்ள வேண்டும் என்று திருமன வயதில் ஆண் பெண்ணிற்குள்ள வித்யாசத்தை களைய கோரியது. அப்போதே ஆணிற்குரிய திருமண வயது 18 வயதாக குறைக்கப்படக்கூடும் என்று பேச்சு எழுந்தது.
ஆனால் உண்மை நிலவரப்படி கடந்த சூன் மாதம், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறையால், தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தையின் நலம், ஆகியவற்றிற்கும் வயது, பாலினம், இறப்பு சதவீதம் ஆகியவற்றிற்குக் இடையேயான சம்பந்தம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மருத்துவர்களும் கருத்து தெரிவிக்கையில், 18 வயதில் தாயாகும் ஒரு பெண்னின் இடுப்பு எலும்பு முழுமையாக வளர்ச்சியடையாத காரணத்தினாலும், பிரசவ வேதனையை தாங்கிக் கொள்ளும் திறன் இல்லாததாலும், பெரும்பாலும் பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு அதிகம் நடக்கிறது எனக் கூறுகின்றனர். அதே போல கிராமப் புறங்களில் தான் இந்த கொடுமை அதிக அளவில் நடக்கிறது. 18 வயது ஆனவுடன், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுவதும், அடுத்த வருடமே அந்த பெண் பிரசவத்தில் இறந்து விடுவதும் அங்கு சகஜமாக நடக்கும் சம்பவமாகி விட்டது. அதிலும் அந்த பெண் இறந்து அந்த குழந்தை உயிர் பிழைத்தாலும், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாய் தான் இருக்கிறது.
என்ன தான் இலவசக் கல்வி, படிப்பு உதவி தொகை, என பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்தாலும், பெற்றோர் தங்கள் பெண்ணை படிக்க வைப்பதில் முனையாமல், தங்கள் கடனை தீர்ப்பதில்(?!) குறியாக இருப்பது தான், விழிப்புணர்வு இல்லாததன் உதாரணம். தன பெண் பிள்ளை நலமாக இருக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர் இதற்கு துணிய மாட்டார்கள். ஆனால் அது போன்ற சமூக மாற்றம் வராத போது, அரசு தான் அந்த கொடுமையை தடுக்க தீர்வு காண வேண்டும்.
அது மட்டுமல்லாது, தற்போது, கலப்பு சாதி திருமணம் என்பது இரண்டு சாதிகளுக்கு இடையிலும், சட்டென்று வன்முறையை தூண்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதம் மூலம், அவள் மனம் முதிர்ச்சியுடன், தன் வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படும். இதனாலும், அரசியல் கட்சிகள் இதனை வரவேற்றுள்ளன. மேலும் நமது உயர் நீதிமன்றமும், ஏற்கெனவே பெண்ணின் திருமண வயதை உயர்த்துமாறு யோசனை தெரிவித்துள்ளது.
எனவே இந்த சட்டம் வருவதை நாம் வரவேற்போம். அதிக அளவில் பெண்கள் படித்து, உயர்வு பெறுவது ஒரு சமூகம் உயர்வதன் அடையாளம் தானே?!
திருத்தம் 1
அதே போல திருமண வயதை உயர்த்தினால் என்ன..சேர்ந்து வாழத் தடையில்லை என ஒரு பதிவு பார்த்தேன். இன்னொரு கேள்விக்கு ஒருவர் அளித்த பதிலில் விவாகரத்து கிடைக்க நாளாகும் என்பதால், நாமாகவே இன்னொரு திருமனம் செய்துக் கொண்டு வாழ வேண்டியது தான் என்கிறார்.
சட்டத்தின் பார்வையில் மேஜரான ஆன் பெண் சேர்ந்து வாழ தடை இல்லை தான். ஆனால் அந்த பெண்ணிற்கு மனைவி என்ற சட்ட அந்தஸது , அதனோடு வரும் உரிமைகள் எதுவும் கிடைக்காது. அந்த காலக் கட்டத்தில் பிறக்கும் குழந்தையும் illegitimate ஆகிவிடும்.இதற்கு ஒப்புக் கொண்டு வாழும் பெண், அவனுடைய தோழியாக மட்டுமே பார்க்கப்படுவாள்..
பெண்களே..அவர்களை பெற்றோர்களே …கவனம்….
திருத்தம் :
இந்த திருமண வயது முடிவு செய்வது குறித்த பிரச்சினை இன்று நேற்றல்ல..... சுமார் 140 வருடங்களாகவே இருக்கிறது . இது குறித்து, சமீபத்தில் படித்த இந்த உண்மை நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே இந்த திருத்தம்.
முதன்முதலில் இந்த வயது குறித்து 1884ல் தொடரப்பட்டதே மும்பை ருக்மாபாய் வழக்கு..
தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மாபாய், அவர் 11 வயதாயிருக்கும் போது, 1876லேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறார். ஆனாலும் 19 வயது ஆகும் வரையில் தன் தாய் மற்றும் மாற்றாந்தந்தையுடன் தொடர்ந்து வாழும் இவர், தன் கணவருடன் சென்று வாழ மறுக்கிறார்.இது தான் இந்த புகழ்பெற்ற 1884 வருடத்திய வழக்கு.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹில் பிணனே, அதற்கான முன்னோடி எதுவும் இல்லை என்பதையும் அதே சமயத்தில், பிரிட்டிஷாரின் சம்மத சட்டத்தை இங்கு அமுல்படுத்த முடியாத நிலையில் உள்ளார். . ருக்மாபாய திருமணம் நடந்த போது, சிறுமி என்பதால் சம்மதம் அளித்திருக்க முடியாது என்ற அவர் தீர்ப்பு, அப்போதைய கன்சர்வேடிவ் சமுதாயத்தில் எடுபடவில்லை என்பதால் அந்த வழக்கு திரூம்பவும் எடுக்கப்பட்டு, பின்னேயின் தீர்ப்பு மாற்றப்பட்டது.
ஆனால் ருக்மாபாய் விடுவதாய் இல்லை.The Times என்ற பத்திரிக்கைக்கு hindoo lady என்ற பெயரில் கடிதம் எழுதுகிறார். இராணிக்கும் மனு செய்கிறார்.கடைசியில் இராணியே தலையிட்டு அந்த திருமணத்தை ரத்து செய்கிறார். சர்ச்சைகளை பின் தள்ளி விட்டு, ருக்மாபாய் லண்டனுக்கு படிக்கப் போய் ஒரு மருத்துவராகி, பின்னர் குஜராத்திற்கு திரும்பி வந்து நெடுங்காலம் பிராக்டிஸ் செய்தார்.
அதை தொடர்ந்து, சம்மத வயதிற்கான சட்டம் இந்தியாவில் 1891இல் இயற்றப்பட்டது. இதன் மூலம் திருமண வயதை பற்றி சொல்லாமல் 'செக்ஸ்' என்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயது 10 லிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இதை பற்றி 1929ல் கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடை சட்டத்தில் (சாரதா சட்டம்),கருத்தில் கொள்ளப்பட்டு திருமண வயது குறைந்தது பெண்களுக்கு 14 என்றும் ஆண்களுக்கு 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. திரும்பவும் அந்த வயது 18 மற்றும் 21 என்று திருத்தப்பட்டு, அந்த சட்டமே 2006ல் குழந்தை திருமண தடை சட்டம் என்று மாற்றப்பட்டு, அந்த வயது நிர்ணயம் அப்படியே வைக்கப்பட்டது. இதில் தான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்த் ஆலோசனையில் அரசு உள்ளது.
இந்த சம்மத வயதுக்கான சட்டம் 1929ல் கொண்டுவருவதற்கு முன், இது சம்பந்தமாக அமைக்கப்பட்ட சம்மதக் கமிட்டி, 1209 பேர்களை இது குறித்து விசாரித்தது. இதில் 761 பேர் வயதை உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அப்போது தான் பெண்கள் கல்லூரிப் படிப்பை முடித்து முழுமையான வயது வந்தவர் ஆக கருத முடியும் என நினைத்தனர்.
இந்தியாவை பொறுத்த வரையில், ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பே பெரும்பாலானவருக்கு பாலியல் ரீதியான தொடர்பு இருக்கும் போது, பெண்களை பொறுத்து அது திருமனத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது, திருமண உறவிற்கு வெளியே அவ்வாறு உறவு கொள்வது சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது, மேலும் இன்று live in உறவுமுறையில் திருமண உறவிற்கு முன் இருக்கும் பலரும், அதை வெளியில் சொல்லாமல் தவிர்த்து வருவதும், சமூகம் அதனை ரசிக்கவில்லை என்பதால் தான்.
அதே சமயம் கொண்டு வரப்பட உள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி, இந்த 21 திருமண வயதிற்கு முன் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது என சொல்கிறது. சட்டத்திற்கு முரணாக திருமண வயதிற்கு முன் நடத்தப்படும் திருமணங்களை தடுத்து நிறுத்தவே இந்த ஷரத்து கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவெனில், கிராமப்புறங்களில் உறவுகளால் செய்யப்படும் இந்த சட்ட முரணான திருமணங்களில், பெண்ணின் சம்மதம் பொதுவாக பெறப்படுவதில்லை. அந்த திருமணமே செல்லாது என்று ஆகும்போது, அந்த திருமணத்தினால் உறவு கொள்ளும் பெண்ணிற்கு எற்படும் பாதிப்புகளுக்கு, எந்த சட்டத் தீர்வும் கிடைக்காது. ஏற்கெனவே சீக்கிரம் திருமணம் செயதுக் கொடுத்து, தம் கடமையை கழித்து விட்ட பெற்றோர்களும், செல்லாத திருமணம் என்பதால் கணவன் என்ற நிலையில் அந்த ஆணும் இல்லாத போது, சம்பந்தப்பட்ட இளம்பெண்களின் வாழ்வில் சொல்லொன்ணா துன்பத்தையே இது கொடுக்கும். சட்டவியலாளர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக