இந்து திருமண சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து திருமண சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 நவம்பர், 2021

விவாகரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் செய்யலாமா?

 திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யமுடியாத நிலையில் விரிசல் ஏற்படும் போது அதை தவிர்த்துவிட்டு இன்னொரு துணை வைத்துக் கொள்ளலாமா?

"முடியாது" என்று நமக்கு தெரியும்..அதை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்த பின்னரேயே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடியும் தானே?!!.

அப்படி செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்துக் கொண்டால், அது இருதார மணச் செயல் என்று தண்டிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 494..

அதுவும், அந்த குற்றம் செய்ததாக முதல் கணவனோ அல்லது மனைவியோ போலீசில் புகார் கொடுக்கும்போது தான், அந்த குற்ற நடவடிக்கை தொடங்குகிறது.

முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், சிலர் மறைத்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, அந்த மனைவியை அழைத்து வந்து காட்டும்போது தான் முதல் மனைவிக்கு விவரம் தெரியும்.கணவனை பொருளாராத ரீதியாக சார்ந்திருக்கும் போது கையறு நிலையில், கள்வனாலும் கணவன்…இல்லையில்லை…கல்லானாலும் கணவன்” என்று ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் அவன் இருக்க, அந்த கணவன்மார்கள் அந்த குற்றத்திலிருந்து தப்பித்து வந்தனர்!!.

இப்போது பெண்களுக்கு சிறப்பு சட்டங்கள், சமஉரிமை என்று வந்துவிட,, போதாதற்கு ஒரு குடும்பத்தையே நடத்த திண்டாடும் நிலையில், இரண்டாவது குடும்பமா என்று யோசிக்கும் நிலைக்கு போயினர் ஆண்கள்.!!.

இதில், அந்த திருமணமும் தோற்று போகும் போது, விவாகரத்து கோரி, உரிய காலத்தில் தாக்கல் செய்தாலும், அவருடைய துணை அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு நீண்டுக் கொண்டே போய் உரிய காலத்தில் விவகாரத்து கிடைக்காமல், இன்னொரு திருமண அமைப்பே ஏற்பட முடியாமல் காலம் தாழ்ந்து விடுகிறது.

இதுவே இருவரும் மணமொத்து சேர்ந்து தாக்கல் செய்தால், ஆறு மாதத்தில் மணவிலக்கு பெற்று விடலாம்..

இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்தாலும் "இரு மணம் செய்த குற்ற"த்திற்கு உள்ளக நேரிடும்!!.

இப்படி ஒரு கடுமையான அமைப்பு இருப்பதன் காரணம், திருமண உறவை சீர்குலையாமல் நீடிக்க வைக்க செய்யும் முயற்சியே…

அப்படியே விவாகரத்து கேட்டு மனு செய்தாலும், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கப்படும்.இதில் தோல்வியுற்ற பின்னரே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

இது முடிந்து தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டவர மேல்முறையீடு போய்…

முடிவே இல்லாத தொடர்கதையாகி இளமையை தொலைக்கின்றனர்…அநேகர்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருக்கு தனி சட்டமும், அதில் விவாகத்தை ரத்து செய்வது எளிது மட்டுமல்லாமல் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் (இப்போது இங்கு யாரும் அதை பின்பற்றுவதில்லை) அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு பிரச்சினை இல்லை..இதில் பாதிப்படைவது அந்த பெண்கன் மட்டுமே.!!

கிறித்துவ மதத்தில் அப்போதிருந்தே, விவாகரத்து ஒரு கடினமான நடைமுறை..

விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கினாலும், அதை மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் செல்லும்..நல்லவேளை..இது போன்ற விதி இந்து திருமணத்திற்கு இல்லை.

ஆனாலும் இந்த இரு துணை குற்ற சட்டபிரிவு இருக்கிறதே..

இதை குறித்து சில வினாக்கள்..உங்களிடம் கேட்கவா? விடையை மனதில் குறித்து கொண்டே வாருங்கள்.. கடைசியில் பார்க்கலாம்..

  1. இந்திய தண்டனை சட்டம் என்பது சாதி, மதம், பாலினம், , இனம் மற்றும் தேசியம் போன்ற வித்யாசம் இல்லாமல், , 3, 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு உட்பட்டு, எல்லோருக்கும், பொருந்தக் கூடிய மதச்சார்பற்ற சட்டம் என்னும்போது, . ஒரு செயல் சில பிரிவினருக்குக் குற்றமாகவும் மற்றவர்களுக்கு குற்றம் இல்லாமலும் இருக்க முடியாது இல்லையா?
  2. ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 இந்து மக்களை மட்டும் தானே தண்டிக்கிறது? இது, அவர்களின் தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணத்தின் செயலைத் குற்றமாக்குகிறது. அப்படியானால் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே அது பாகுபாடு காட்டுகிறதே?."
  3. இது, குடிமக்களுக்கு சம உரிமை கொடுக்கும் அரசியலமைப்பபு சட்டப்பிரிவு 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது தானே?.
  4. பிரிவு 494, கிரிமினல் நோக்கம் இல்லாத குற்றம் தானே?. இது கடுமையான பொறுப்புக் குற்றங்களின் வகைக்குள் எப்படி வரும்?..
  5. "ஒரு குற்றமிழைக்கக்கூடிய மன நிலை இல்லாத குற்றத்திற்காக ஒருவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுபவது, தேவையில்லாதது, நியாயமற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா?
  6. அந்த குற்ற வழக்குக்கு விதிவிலக்காக தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் செய்யும் இன்னோரு திருமணத்தின் செல்லுபடியை அங்கீகரிக்கிற. அளவிற்கு, சட்டப்பிரிவு 494, இந்து, கிறிஸ்தவம் அல்லது பிற சமூகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது..இது சமத்துவத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது தானே?.
  7. இந்த குற்றம் உலகளாவியதும் அல்ல என்னும்போது, இருதாரமணச் செயல் குற்றமாக்கப்படக் கூடாத ஒன்று என்பதைத் தானே குறிக்கிறது?.
  8. சுருக்கமாக, குற்றம் எண்ணம் இல்லாததும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு இருதார மணம் குற்றமல்ல என்பது, இருதார மணத்தின் செயலில் உள்ளார்ந்த குற்றவியல் எதுவும் இல்லை என்பதை தானே சுட்டிக்காட்டுகிறது ?
  9. இருதார மணம் என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாக அல்ல.. இருதார மணம் என்பது திருமண வாழ்க்கை தொடர்பான தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதை குற்றமாக்குவது திருமண வாழ்க்கையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கு உதவாது தானே?
  10. திருமணமான ஒருவர் மற்றொருவருடன் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்னும்போது, , திருமணம் போன்ற முறையான ஏற்பாட்டிற்குப் பிறகு இதுபோன்ற கூட்டுவாழ்வு ஏற்பட்டால், அந்தச் செயல் எப்படி குற்றமாகும்.?
  11. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இருதார மணம் ஒரு குற்றமாக தொடர அனுமதிப்பது காலத்துக்கு மாறானது மட்டுமல்ல, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது தானே?

என்ன,..இப்படியெல்லாம் கேட்க முடியுமா? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?

இந்த வினாக்களை எல்லாம் நான் கேட்கவில்லை…

தங்கள்.தரப்பு வாதங்களாக வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளத்தின் மாண்புமிகு உய்ரநீதிமன்றத்தில்.!!

என்னவென்று?

"இந்த இரு தார மணம் என்பது குற்றச்செயல் என்னும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494, குடிமக்களுக்கு சமஉரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

அதுவும் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஒரு பெண்னின் தந்தை என்று தெரிந்தால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்

ஆண்களுக்கு கூட இல்லாத அவசரம் அவசியம் அவருக்கு என்ன என்றால், ..இருக்கிறதே..!!

அவரும், அவரது மகள் மற்றும் பிற உறவினர்கள் ஐபிசியின் பிரிவு 34 , பிரிவு 494 இன் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக கிரிமினல் வழக்கை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் மீதான குற்றம் தான் என்ன? என்கிறீர்களா?

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் தனது மகளுக்கு இன்னோரு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தான்.!!.

இந்த மனுவை சமீபத்தில் விசாரணைகு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

நாமும் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்போம!!

வியாழன், 16 செப்டம்பர், 2021

என் உடல் என் உரிமை எனும் பெண்ணியவாதிகள் சமூக சீர்திருத்தவாதிகளா?

 அவரவர் உடல் அவரவரின் உரிமை. இதில் ஆண் பெண் என வேறுபாடு என்ன? நீங்கள் சொல்வதை பார்த்தால் பெண் தன் உடலை தான் உரிமை கொண்டாடக் கூடாது என்கிறீர்களா? சுத்த அபத்தமாக இருக்கிறது..

இது சம்பந்தமான ஒரு வழக்கு எனக்கு நினைவுக்கு வந்தது.

நடிகை சரிதாவை நமக்கு தெரியும் தானே?

இவர் தாக்கல் செய்த ஒரு மனு இன்றளவும் ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கபடுகிறது.

கேரள நீதிமன்றத்தில் நடிகை சரிதாவின் ் கணவர் வெங்கட சுப்பாராவ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தன உடல் தன உரிமை என்றும் அதனை தனக்கு விருப்பமில்லாதவரோடு பகிர சொல்வது தனது அடிப்படை உரிமையை மீறுகிறது என்று வாதிட்டார். இதனை கேரளா உயர்நீதிமன்றமும் ஏற்றுகொண்டது.

ஆனால் இதே போன்ற இன்னொரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.இரண்டு வேறுபட்ட தீர்ப்புகளால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த வாதம் எற்றுகொள்ளத்தக்கது என்றாலும், குடும்பத்தின் நிலையை சீராக்கவே ஒன்றாக வசிக்க இந்து திருமண சட்டப் பிரிவு 9 ன் கீழ், சேர்ந்து வசிக்க உத்தரவிடப்படுகிறதே தவிர, அவர் விரும்பாதவரோடு சேர்ந்து அவர் உடலை பகிரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்து, அதனால் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்தது.

இப்போது உங்களேக்கெல்லாம் ஒரு கேள்வி….. குடும்ப வன்முறை மற்றும் திருமண கற்பழிப்பு அதிகமாக நடக்கும் நம் நாட்டிலே,மனசு வேறுபட்டாலும், ஒரு நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி தங்கள் விருப்பம்போல வாழ முடியுமா?

ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ
கருத்து தெரிவி…

சனி, 12 ஜூன், 2021

விவாகரத்து வழக்கில் நீதிபதி முன்பு ஆஜராகி நிற்கும் பொழுது பெண் வாழமாட்டேன் என்கிறாள், ஆணோ என் மனைவி தான் வேண்டும், பிரிய மனமில்லை என்கிறான். இப்போது தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்?

 பெரும்பாலும் பெண்ணுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 அப்படி ஒரேயடியாக எடுத்துக் கொள்ள முடியாது. விவாகரத்துக்கு கென்று சில காரணங்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றையாவது நிரூபித்தால் தான் விவாகம் ரத்து ஆகும்.பெரும்பாணமயான் வழக்குகளில் மனரீதியான கொடுமையைத்தான் சொல்வார்கள். அதை நிரூபிப்பது கடினம் என்பதால்தான் இந்த வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும்.இதனால் இரண்டு தரப்பிலும் மனஉளைச்சலோடு இருக்க வேண்டும்.
எதற்கு இந்த நிலையற்ற வாழ்வில் இவ்வளவு மனத்துயரம்? நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டாலும், அல்லது விவாகரத்துக்கொடுக்க மறுத்தாலும், உடன் இரணடு பேரும் சந்தோஷமாக வாழத்தொடங்க முடியுமா? இதில் நீதிமன்றத்தின் பங்கு குறைவே. மற்ற வழக்குகள் போன்றதல்ல இது.
இதைப் புரிந்துக் கொண்டு இரண்டு தரப்பிலும் சுமூகமாக அணுக வேண்டும்..இங்கு ஆண் மணவியோடு தான் வாழுவேன் என்று நீதிமன்றத்தில் சொன்னால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியில் இறங்கி சாதிக்க வேண்டும். இதுகுறித்து கீழே உள்ள பதிவில் சொல்லியுள்ளேன். அதன்படி செயல்படுங்கள். வாழ்த்துக்கள்!!

கள்ளக்காதலை சமூகம் எதிர்க்கிறது, ஆனால் நீதிமன்றம் தண்டனை இல்லை என்கிறது, இது ஏன்?

 

lகள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி!!

நீங்கள் மட்டுமல்ல இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நாள் செய்தித் தாள்களில் இது தான் தலைப்புச் செய்தி என்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு சட்டத்தையும் நீதிமண்றத்தையும் புரிந்துக் கொண்டுள்ளோம் என்பது தெளிவு!!

நாமென்ன…நா…ம ..செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நீதிமன்றத்தின் அனுமதியா வாங்குறோம்?அப்புறமென்ன நீதிமன்றம் அனுமதி கொடுத்துச்சுன்னு…

அதே போல சமூகம் விலக்கிய ஒரு செயலை செய்தா தான் அது குற்றம். அப்புறம் அந்தக் குற்றத்தை ஒருத்தர் செய்தாரா இல்லையா என்பதை விசாரித்து முடிவு செய்வது மட்டும் தான் நீதிமன்றம் செய்யிற வேலை.

இன்னொன்னு… எ..து கள்ளக்காதல்? கணவனோ மனைவியோ இருக்கும்போது இன்னொருவருடன் உடல் ரீதியான தொடர்பில் இருப்பதா? அதை காதல் என்று சொல்லி காதலை கொச்சைப்படுத்தலாமா? காமம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதே போல 18 வயது நிரம்பியவர் சேர்ந்து வாழ்வதை சமூகம் அங்கீகரிக்கிறது இல்லையா. இப்போது லிவ் இன் சகஜமாகி விட்டது.இவை எல்லாம் குற்றச் செயலாக பார்க்கப்படுவதில்லை.யாரும் அவ்வாறு சேர்ந்து வாழ்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோருவதில்லை.

திருமணம் ஆனாலும் #ஈருடல் ஓருயிர் # என்பதெல்லாம் சட்டத்தில் கிடையாது. இருவரும் தனித்தனி நபர்கள் தான். அவர்களை பிணைக்கும் பந்தம் தான் திருமணம். எனவே அந்த பந்தத்திற்கு முரணாக இன்னோருவருடன் தொடர்பில் உள்ளார் என்று அந்த பந்தத்தை அறுத்துக் கொள்ளலாமே தவிர, சமூகம் ஏற்றுக கொண்ட ஒன்று குற்றமாகாது.

இதைத் தான் …இதை.த்தான்..அவங்க சொன்னாங்க!! இப்போ சொல்லுங்க யாரு மாறுனது? நீதிமன்றமா? சமூகமா?

திருத்தம் 1

நீதிமன்றம் இந்த தீர்ப்பு கொடுத்ததற்கு இன்னொரு காரனமும் உண்டு. அந்த பிரிவின் படி இன்னொருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆணுக்கு மட்டுமே தண்டனை, சம்பந்தசப்பட்ட பெண்ணுக்கு கிடையாது என்று இருந்தது. அது பாலின பாகுபாடு என்றாகும். அதே போல மனைவி என்பவள, கணவனின் சொத்து என்பது போலவும், அதை மற்றவர் கொள்வது குற்றம் என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால் முன்பு ஒரு வழக்கில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், மனைவி கணவசனின் சொத்து என்று குறிப்பிட்டதை எதிர்த்து பெண் ஒரு ஜடப் பொருள் அல்ல என்று நாடெங்கும் விமர்சனம் எழுந்ததால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று, அவர் அதை திருத்தி தீர்ப்பு வழங்கினார். ஞாபகம் யாருக்காவது இருக்கிறதா? அன்றைய சமயம் வந்த தீர்ப்பின் follow up தான் இது.

ஒருவரின் சொத்தை இன்னொருவர் கவர்ந்தால் தானே குற்றம்? அது சொத்து இல்லை எனும்போது இன்னொருவர் கையாள்வது எப்படி குற்றச் செயலாகும்? அதை..அதாவது நீங்கள் சொன்னதைத் தான் இப்போது அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


முதலில் நீதிமன்றம் எதற்கு உள்ளது? மனித சமுதாயம் ஒன்றி வாழத் தடையாக இருப்பது குற்றம் எனக் கொள்ளப்பட்டு, அதை செய்பவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தண்டிக்கப் படுகின்றனர். ஆனால் காலம் மாற மாற, சமுதாயத்தால், குற்றம் எனப்படுவதின் வரையறை மாறிக் கொண்டே வருகிறது.

முன்பு விபச்சாரம் செய்வது குற்றம் எனப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை என்ன? விபச்சாரம என்பதும் ஒருவரால்,விரும்பி ஏற்று கொள்ளப்பட்ட தொழில் என்னும்போது , அது குற்றமாகாது என்ற அளவில் சமூகள் லநூட்டம் (?) மாறி விட்டது.

முன்னர் திருமணமாக ஆணும் பெண்ணும் ஹோட்டலில் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது குற்றமாகப் பார்க்கபட்டது. இப்போது அப்படியா? மேஜரான ஆண் பெண் அவ்வாறு தங்குவது குற்றமில்லை என்றானாது. திருமணதிற்கு முன்னர் "லிவ் இன்" உறவில் இருப்பதை சமூகம் தவறாகப் பார்ப்பதில்லை. பிடித்திருந்தால், திருமணம் செய்துக் கொள்கின்றனர். இல்லையென்றால், விலகி விடுகின்றனர்.

அதே போல ஒரு பெண், திருமணமான பின்பு, கணவனின் சொத்து என்று கருதப்பட்டது மாறிவிட்டது. திருமணமானாலும், அவள் தனி மனுஷி தான் என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவளுடைய தனி மனித உரிமைகள், திருமணதிற்கு பின்பும் தொடர்கின்றன. குடும்ப வன்முறைகள் ஆகியவற்றில் இருந்து எதிர்த்து நிற்கும் உரிமை, ஆகிய சமுதாய மாற்றங்கள் நடந்துள்ளன. ஒருவனுக்கு சொந்தமான பொருள் களவு போனால் தானே, அதை கவர்ந்து சென்றவன் கள்வனாவான்? ஒரு பெண் பொருள் என்ற வரையறைக்குள் வராதபோது, கணவனின் சொத்து என்ற விளக்கத்தில் இருந்து வெளியேறுகிறாள். அதனாலேயே, திருமணமான பின்பு, அவள் இன்னொரு ஆணுடன், உறவு வைக்கும்போது, அது தனி மனித செயலாக பார்க்கபடுகிறதே ஒழிய, ஒரு நபரின் சொத்து பறிபோவதாக பார்க்கப்படுவதில்லை,

சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த தீர்ப்பிற்கு இவ்வளவு கவலைப்படும் நாம், அதே போல ஒரு திருமணமான ஆண் அந்த உறவை தாண்டி இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைக்கும்போது, , அந்த வெளி உறவில் உள்ள பெண்ணை குற்றவாளியாக இதுவரை பார்க்கவில்லையே? அதை ஏன் யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை? கணவன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் பெண் குற்றவாளி இல்லை என்னும் நிலையில் தானே இது வரை இருந்தது? அதை மட்டும் சமுதாயம் எதிர்த்துக் கொண்டா இருந்தது? அந்த தவறை செய்வது ஒரு திருமணமான ஆண் என்பதால் சமுதாயம் வாய் மூடி மவுநியாகத் தானே இருந்தது?

திருமணமான ஆணுக்கு ஒரு நியாயம், திருமணமான பெண்ணிற்கு ஒரு நியாயம் என்று இருந்த அந்த ஏற்றத் தாழ்வு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இது வரை திருமணமான ஆண் தவறு செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும் என்று பொங்காத நாம், இப்போது மட்டும் பொங்குவது சரியாகவா உள்ளது?

இன்னொன்று தனி மனித ஒழுக்கம் என்பது நம்மிடம் இருந்து வர வேண்டும்…அதை நீதிமன்றம் தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

என் கணவர் என்னை பிரிந்து 3 மாதங்கள் ஆகிறது. கோர்ட்டில் கேஸ் உள்ளது.இந்த நிலையில் தினமும் அவரிடம் கெஞ்சி என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்ற கனவு வருகிறது. தினமும் அதே கனவு வேறு வேறு இடங்களில் நிகழ்வது போன்று வருகிறது. என்ன காரணம்?

 


அன்பை பிச்சையாக கேட்பது போன்ற கொடுமை உலகில் எதுவும் இல்லை.நீங்கள் அவர் வாழ்க்கையில் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலையில் இருப்பவரிடம் அன்பை இரந்து பெற முயலாதீர்கள். நாம் விரும்புவரால் நிராகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஒரு ஆட்கொல்லி. தயவு செய்து அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் கவனத்தை திருப்பி, உங்கள் கல்வி தகுதியை உயர்த்தும் வழி தேடுங்கள். உங்கள் நிலைக்கேற்ப வேலை தேடுங்கள். இவை இரண்டிலும் சிறப்பாக முடிக்க முனைப்பு காட்டுங்கள்.உங்கள் மீது பிரியம் இருந்தால் அவரே உங்களை தேடி வருவார்.வாழத்துக்கள்.💪

கனவு ஏன் வருகிறது என்று நமக்குத் தெரியும் தானே..நம் அடி மனதில் பதிந்துள்ள ஆசைகள், ஏக்கங்கள் தான் கனவாக வருவது.

தன்னை தன் கணவன் எப்படியாவது ஏற்றுக கொள்ள வேண்டும் , நிராகரித்து விடக் கூடாது என்ற அடிமனத்தின் ஆசையே இந்த கனவுகள்.

ஆனால் அன்பு என்பதன் அடிப்படையே அது பிரதிபலிக்க வேண்டும் என்பதே. நீங்கள் கொடுத்த அன்பு அங்கு பிரதிபலிக்கவில்லை என்னும்போது, அது கணவணா கல்லா ?

அந்த காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று… புல்லில் என்ன இருக்கிறது? ஒன்றுமே கிடையாது. கல்லும் அதே நிலைதான்.அந்த பொருளில் தான் அந்த சொல்வடையும் வந்திருக்கும்..

அந்த ஒன்றுமேயில்லாத கணவனுக்கு சமூகத்தில் அங்கீகாரம் ஏற்படுத்தி கொடுப்பவள் இல்லாள் தான். இல்லாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவர் தான்.

மாடு பிடிப்பவர்களை பார்த்திரூக்கிறீர்களா?ஜல்லிக்கட்டில் பார்க்கலாம்.அது ஓடும்போது பிடிக்கமாட்டார்கள்.அது கொஞ்ச தூரம் ஓட விட்டு, அதனோடு ஓடி, பிறகு பிடிப்பார்கள்.கல்யாணம் செய்வதை மூக்கனாங்கயிரு என்று சொல்வது அந்த அர்த்தத்தில் தான்.

அதே போல தான் கணவனை சிறிது காலம் விட்டு பிடியுங்கள்.அந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் தகுதியை உயர்த்துங்கள். எத்தனை சினிமாவில் வந்துள்ளது…கோபுரங்கள் சாய்வதில்லை..போல

.நம் நிலை உயரும்போது, தரமும் கூடும். அங்கே எதிரொலியும் தெரியும்….. முடிவு எடுப்பது உங்கள் கையில் வரும்.

முயலுங்கள்.வானம் வசப்படும்!!💐💐

இன்னொரு முக்கிய விஷயமும் சொல்லியாக வேண்டும்..அறிவுரை என சொல்ல ஆயிரம் பேர் வரலாம். நான் வாழ்ந்தவன், வயது முதிர்ந்தவன் எனலாம்.ஆனால் அவர் மனைவியே அவர் குறித்து அதுவும் அவர் இளமையாக இருந்தபோது எவ்வளவு கேவலமான கருத்துக் கொண்டிருந்தார் என்ற வாக்குமூலத்தையும் பார்க்க வேண்டும். தன் மீது தன் மனைவியே மதிப்பு வைக்கவில்லை என்னும் போது, அதுவும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள சொல்வது உசுப்பி விடுவது என்றும், மன்னிப்பை கேள் என்றும் ஊருக்கு உபதேசம் செய்வது…..

வெள்ளி, 11 ஜூன், 2021

திருமணம் அவசியமான ஒன்றா?

 முதலில் திருமணம் அவசியமில்லாதது என்றே வைத்துக்கொள்வோம். அதனால் மேலை நாட்டிலே உள்ளது போல லிவ் இன் relationshio லேயே இருக்கலாம்னு முடிவு பண்றோமுன்னு வையுங்க . அது போல வாழ்வதில் என்ன கிடைக்கும்? சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்குமா? நாலு இடத்திற்கு தெரிந்தவர் முன் கூட்டிச் செல்ல முடியுமா?அக்கம் பக்கத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்க முடியாம? குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா அப்படி பிறந்தாலும், அதன் எதிர்காலம் என்ன? இந்த சமூகக் கட்டமைப்ப்பிற்குள் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். பொதுவாக இந்த ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்கள் திருமனம் செய்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது தான் அப்படி வாழ்வார்கள்.

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரியா சக்ரபோர்த்தி தான் சுஷாந்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். திருமணம் என்ற பந்தத்தில் நுழைய விரும்பாமல் இருந்தவர்களின் முடிவையும் பார்த்து விட்டோம்.

சரி திருமணம் செய்வதே காமத்திற்குத தான்னு ஒரு பதிவை பார்த்தேன். இந்த அளவிற்கு மோசமான கருத்து திருமணத்தை பத்தி இருக்கிறது மிகவும் வேதனை தரக் கூடியது. அந்த சுகத்தை கொடுப்பதற்குத் தான், நாமே அந்த பெண்களுக்கு ஒரு பெயரையும் சூட்டி சமூகத்தில் ரொம்ப மதிப்பாக வைத்திருகிறோமே? அப்புறம் திருமணம் என்று தனியாக எதற்கு?

திரூமணம் என்ற பந்தத்தின் அர்த்தம் /புனிதம் தெரியாதவர்கள் பேச்சு… வெற்றுப் பேச்சு..

சரி திருமணம் என்ற பந்தம் நமக்கு கால் கட்டு என்று சொல்கின்ற விலங்கு என்று தெரிந்தும் ஏன் நிறைய பேர் போட்டு கொள்ளத் துணிகிறோம்?

அதன் பின் நம் முன்னோர் வகுத்து வைத்த சூட்சமம் உள்ளது.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு பெற்றோரும் சரி அதன் உடன் பிறந்தவர்களும் சரி அன்பை பொழிகிறார்கள். அது வளர வளர அன்பைப் பெற்று கொண்டே வருகிறது. வாலிபனாகும் போது , இந்த திருமணம் என்ற பந்தத்தின் மூலமாகத தான், இன்னொரு நபருக்கு தன அன்பை முதன் முதலாக கொடுக்கத் துவங்குகின்றான். அந்த அன்பு நம் வாழ்க்கை துணையிடம் ஆரம்பிப்பதற்கு வேண்டுமானால் உடலின் மூலமான ஈர்ப்பு இருக்கலாம். அடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அது அவனுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. வெறுமனே இவனைப் பார்த்து சிரிக்க மட்டும் செய்கிறது. ஆனால் அதைப் பார்த்தாலே அவனுக்கு அன்பு பெருகுகிறது. இப்படி மனைவி, பிள்ளைகள், அதை தாண்டி சுற்றம், மற்றவர் என்று அவன் அன்பை பிறருக்கு வழங்குவது விரிந்து கொண்டே வருவது திருமணத்தின் மூலம் தான்.

பிரமச்சாரியாக இருக்கும் ஒருவன் கிரகஸ்தன் என்ற தகுதியை அடைவது திருமணம் என்ற பந்தத்தில் நுழையும் போதுதான். அதனால் தான் அதற்கு இல்லறம் என்று பெயர் வைத்தார்கள். அன்றிலிருந்து தான் அவனுடைய அறநெறி வாழ்வு துவங்குகின்றது என்றும் அவன் செய்யும் அத்தனை அறச் செயல்களுக்கும் அவள் துணையோடுதான் அவன் செய்ய முடியும். சக்தி இல்லை என்றால் சிவனேன்னு இருன்னு தானே சொல்கிறார்கள். அதனால் தான் சிவன் தன உடலில் பாதியை பார்வதிக்கு கொடுத்தார். திருமாலும் திருமகளை தன மார்பில் இருத்தினார். கடவுள்கள் நமக்கு உணர்த்துவதும் இதைத் தான்

இருவருக்கும் இடையிலான அன்பு தொடர்ந்து படர்ந்து உணர்வு பூர்வமாக மாறி இறுதியில் ஆன்மீக ரீதியாக நிலைக்க வேண்டும். அப்படி உடலாலும் உள்ளத்தாலும், இனைந்து 60 வயதை கடந்தவர்களுக்கு நடத்தப்படும் சஷ்டயப்த பூர்த்தி அதாவது அறுபதாம் கல்யாணம் என்பது . அதை பெரும்பாலும் மறந்தே விட்டோம்.

ஒருவருக்கு 60 வயது முடிந்து 61வது வயது தொடங்கும் போது அவரது ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்த நாளன்று அவருடைய ஜாதகத்தில் நவக்கிரகங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.

அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறுபாகம் துவங்குகிறது என்று பொருள். அன்று முதல் அவர் இன்னொரு புதுப்பிறவி எடுக்கிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஓர் ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம். அதனால்தான், அப்போது மறுபடியும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடத்தி வைப்பது போல, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு நடத்தி வைக்கும் திருமணம் இது. இந்த அறுபதாம் வயதில். சாதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்று, அவர்களுக்கு திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்திருப்பார்கள்.நம்முடைய தமிழ் ஆண்டுகள் 60. ஒருவர் அறுபதை தொடும்போது, ஒருவர் இந்த அறுபது ஆண்டுகளை கடந்திருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.இப்போது அறுபதாம் திருமண தம்பதிகள் புதிய வாழ்க்கையை தொடங்குவதன் அடையாளம். கால ஓட்டத்தில் தொலைத்துவிட்ட நிம்மதியான வாழ்க்கையை, சற்றே நிதானித்து, அனுபவித்து சுற்றங்கள், நட்புகள் இவர்கள் புடைசூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது.இதன் அருமை தெரிந்து தங்கள் பெற்றோருக்கு பிள்ளைகள் அந்த திருமணத்தை உற்சாகமாக நடத்தி வைக்கும்போது, அந்த பிள்ளைகள் குறித்து மனதில் ஒரு கர்வ பெருமை துளிர்க்கிறது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது. அதை வாழ்க்கை துணையுடன் தான் கொண்டாட முடியும் சொற்ப பேர்க்கே அந்த பாக்கியம் கிட்டும். அன்று மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், வருவோர் அனைவருமே மணமக்களின் ஆசீர்வாதம் பெறுவர். ஏனென்றால் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு அவர்கள் ஆசிர்வாதம் பாக்கியமாக கருதப்படும் பண்பாடு நமது.

நம் ஊரில் திருமனம் என்பது இரண்டு உள்ளங்களை மட்டுமல்ல. இரண்டு தரப்பு உறவுகளையும் இணைப்பது. அதனாலேயே மகனின் திருமணமும்,மகளின் திருமணமும் பெற்றோருக்கு முக்கிமான ஒன்று. எனவே அதில் அவர்களுக்கு இல்லாத உரிமை மற்றவருக்கு இல்லை.(விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவையே பொது விதி ஆகாது)

சில விஷயங்களை பொதுவில் பேசும்போது, அது ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்று வரும் போது, நிஜம் சுடும்.

குடித்து விட்டும், சீட்டாடி, பொறுக்கியாய் திரிந்தாலும், சினிமாப்பட ஹீரோயின் காதலிப்பது போல அத்தனை கெட்ட பழக்கத்தையும் மறந்து காதலிக்க வேண்டும், பார்க்கிறவர்களை எல்லாம் கண்ணா என்று கூப்பிட வேண்டும் (பள்ளியிலேயே ஆல் இந்தியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் என்று தான் பிலெட்ஜ எடுத்து பழக்கம்) , கூப்பிட்டவுடன் பெற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சினிமா மாதிரியே கனவு கண்டு கொண்டிருந்தால் எப்படி.? எந்த படத்திலும் அதற்கு பிறகான நரக வாழ்க்கையை காட்டுவதில்லை. குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து பார்த்தால் தெரியும்.

சினிமாவில் நடக்கும் கூத்துக்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு வேலை செய்யாத ஒருவனை தேர்ந்தெடுத்து பெற்றோரை விட்டு விட்டு , ஓடி போய் கல்யானம செய்வதற்கு கல்யாணமே செய்யாமல் இருந்து விடலாம். காதலர் தான கணவர் ஆக வேண்டும் என்றால், பெற்றோர் மனது மாற முயல வேண்டும். தான் தேர்ந்தெடுக்கும் அந்த நல்லவனை, வல்லவனை ஜல்லிகட்டு மாட்டைப் பிடிக்க வேண்டாம், தன பெற்றோரின் மனதைப் பிடிக்கச் செய்ய வேண்டும் ஏனென்றால் நாளைய உனது நல்லது, கெட்டது எதற்கும் அவர்கள் தான் முன் நின்று செய்ய வேண்டும். குழந்தைக்குக் கூடஎந்த பண உதவி செய்யாத, ஓடி போன கணவனுக்காக, எத்தனை இளம் பெண்களை கையில் குழந்தையுடன் பெற்றோரின் துணையுடன் வந்து காத்துக் கிடப்பதை பார்க்கும்போது இப்படி ஒரு திருமணம் இவர்களுக்கு தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.

.அதே போல ஒருவர் தன குழந்தைகளுக்காக மனைவியுடன் வாழ ஒத்துக்கொண்டாராம். பொது வெளியில் தன மனைவியை நாய் என்கிறார். அவர் குழந்தைகள் அவரிடம் என்ன கற்றுக்கொள்ளும்?

இந்த சமயத்தில் ரமண மகரிஷி சொன்னது நினைவுக்கு வருகிறது. பார்க்கும் பொருளும் பார்க்கப்படும் பொருளும் ஒன்று என்று. . மற்ற உயிர் களையே தானாக பார்க்கச் சொன்னபோது, தன்னில் ஒரு பாதியான துணைவியை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டுயதில்லை.

என்ன தேவர் மகன் படத்தில் ஒரு வசனம் வருமே உனக்குள்ளே உலாவிக்கிட்டிருக்கிற மிருகம் எனக்குள்ளே தூங்கிக்கிட்டிருக்குன்னு.

அதே தான். ஒவ்வொரு பெண்ணும் சக்தி . சிவனே என்று சும்மாயிருக்காமல், அவளுக்குள்ளே தூங்கிக் கிட்டிருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பாதீங்கன்னு!?

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிசீலிப்பதாக பிரதமர் அறிவித்தது சரியா? திருமண வயதை உயர்த்தினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

  இது வரவேற்க வேண்டிய அம்சம். 

2018 ல் சட்ட கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில்,  தனக்கு வேண்டிய அரசை தேர்ந்தெடுக்கக் கூடிய பக்குவத்தை ஒருவன் பெற்றிறுப்பான் என்றால், தன வாழ்க்கை துணையையும் தேர்ந்தெடுக்க கூடிய பக்குவத்தை அவன் பெற்றிருப்பான் என்று தான் கொள்ள வேண்டும் என்று திருமன வயதில் ஆண் பெண்ணிற்குள்ள வித்யாசத்தை களைய கோரியது. அப்போதே ஆணிற்குரிய திருமண வயது 18 வயதாக குறைக்கப்படக்கூடும் என்று பேச்சு எழுந்தது.

ஆனால் உண்மை நிலவரப்படி கடந்த சூன் மாதம், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறையால், தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தையின் நலம், ஆகியவற்றிற்கும் வயது, பாலினம், இறப்பு சதவீதம் ஆகியவற்றிற்குக் இடையேயான சம்பந்தம் குறித்து ஆராய்வதற்காக  அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மருத்துவர்களும் கருத்து தெரிவிக்கையில்,  18 வயதில் தாயாகும் ஒரு பெண்னின் இடுப்பு எலும்பு முழுமையாக வளர்ச்சியடையாத காரணத்தினாலும், பிரசவ வேதனையை தாங்கிக் கொள்ளும் திறன் இல்லாததாலும், பெரும்பாலும் பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு அதிகம் நடக்கிறது எனக் கூறுகின்றனர். அதே போல கிராமப் புறங்களில் தான் இந்த கொடுமை அதிக அளவில் நடக்கிறது. 18 வயது ஆனவுடன், பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுவதும், அடுத்த வருடமே அந்த பெண் பிரசவத்தில் இறந்து விடுவதும் அங்கு சகஜமாக நடக்கும் சம்பவமாகி விட்டது. அதிலும் அந்த பெண் இறந்து அந்த குழந்தை உயிர் பிழைத்தாலும், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாய் தான் இருக்கிறது.

என்ன தான் இலவசக் கல்வி, படிப்பு உதவி தொகை, என பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்தாலும், பெற்றோர் தங்கள் பெண்ணை படிக்க வைப்பதில் முனையாமல், தங்கள் கடனை தீர்ப்பதில்(?!) குறியாக இருப்பது தான், விழிப்புணர்வு இல்லாததன் உதாரணம். தன பெண் பிள்ளை நலமாக இருக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர் இதற்கு துணிய மாட்டார்கள். ஆனால் அது போன்ற சமூக மாற்றம் வராத போது, அரசு தான் அந்த கொடுமையை தடுக்க தீர்வு காண வேண்டும்.

அது மட்டுமல்லாது, தற்போது, கலப்பு சாதி திருமணம் என்பது இரண்டு சாதிகளுக்கு இடையிலும்,  சட்டென்று வன்முறையை தூண்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதம் மூலம், அவள் மனம் முதிர்ச்சியுடன், தன்   வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படும். இதனாலும், அரசியல் கட்சிகள் இதனை வரவேற்றுள்ளன. மேலும் நமது உயர் நீதிமன்றமும், ஏற்கெனவே பெண்ணின் திருமண வயதை உயர்த்துமாறு யோசனை தெரிவித்துள்ளது.

எனவே இந்த சட்டம் வருவதை நாம் வரவேற்போம். அதிக அளவில் பெண்கள் படித்து, உயர்வு பெறுவது ஒரு சமூகம் உயர்வதன் அடையாளம் தானே?!

திருத்தம் 1

அதே போல திருமண வயதை உயர்த்தினால் என்ன..சேர்ந்து வாழத் தடையில்லை என ஒரு பதிவு பார்த்தேன். இன்னொரு கேள்விக்கு ஒருவர் அளித்த பதிலில் விவாகரத்து கிடைக்க நாளாகும் என்பதால், நாமாகவே இன்னொரு திருமனம் செய்துக் கொண்டு வாழ வேண்டியது தான் என்கிறார்.

சட்டத்தின் பார்வையில் மேஜரான ஆன் பெண் சேர்ந்து வாழ தடை இல்லை தான். ஆனால் அந்த பெண்ணிற்கு மனைவி என்ற சட்ட அந்தஸது , அதனோடு வரும் உரிமைகள் எதுவும் கிடைக்காது.   அந்த காலக் கட்டத்தில் பிறக்கும் குழந்தையும் illegitimate ஆகிவிடும்.இதற்கு ஒப்புக் கொண்டு வாழும் பெண், அவனுடைய தோழியாக மட்டுமே பார்க்கப்படுவாள்..

பெண்களே..அவர்களை பெற்றோர்களே …கவனம்….

 

திருத்தம் :

இந்த திருமண வயது முடிவு செய்வது குறித்த பிரச்சினை இன்று நேற்றல்ல..... சுமார் 140 வருடங்களாகவே இருக்கிறது . இது குறித்து, சமீபத்தில் படித்த இந்த உண்மை நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே இந்த திருத்தம். 

        முதன்முதலில் இந்த வயது குறித்து 1884ல் தொடரப்பட்டதே மும்பை ருக்மாபாய்  வழக்கு..

        தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மாபாய்,  அவர் 11 வயதாயிருக்கும் போது, 1876லேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறார். ஆனாலும் 19 வயது ஆகும் வரையில் தன் தாய் மற்றும் மாற்றாந்தந்தையுடன் தொடர்ந்து வாழும் இவர், தன் கணவருடன் சென்று வாழ மறுக்கிறார்.இது தான் இந்த புகழ்பெற்ற 1884 வருடத்திய வழக்கு. 

        இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹில் பிணனே, அதற்கான முன்னோடி எதுவும் இல்லை என்பதையும் அதே சமயத்தில், பிரிட்டிஷாரின் சம்மத சட்டத்தை இங்கு அமுல்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.  . ருக்மாபாய திருமணம் நடந்த போது, சிறுமி என்பதால் சம்மதம் அளித்திருக்க முடியாது என்ற அவர் தீர்ப்பு, அப்போதைய கன்சர்வேடிவ் சமுதாயத்தில் எடுபடவில்லை என்பதால் அந்த வழக்கு திரூம்பவும் எடுக்கப்பட்டு, பின்னேயின் தீர்ப்பு மாற்றப்பட்டது.

        ஆனால் ருக்மாபாய் விடுவதாய் இல்லை.The Times என்ற பத்திரிக்கைக்கு hindoo lady என்ற பெயரில் கடிதம் எழுதுகிறார். இராணிக்கும் மனு செய்கிறார்.கடைசியில் இராணியே தலையிட்டு அந்த திருமணத்தை ரத்து செய்கிறார். சர்ச்சைகளை பின் தள்ளி விட்டு, ருக்மாபாய் லண்டனுக்கு படிக்கப் போய் ஒரு மருத்துவராகி, பின்னர் குஜராத்திற்கு திரும்பி வந்து நெடுங்காலம் பிராக்டிஸ் செய்தார்.

        அதை தொடர்ந்து, சம்மத வயதிற்கான சட்டம் இந்தியாவில் 1891இல் இயற்றப்பட்டது. இதன் மூலம் திருமண வயதை பற்றி சொல்லாமல் 'செக்ஸ்' என்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயது 10 லிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இதை பற்றி 1929ல் கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடை சட்டத்தில் (சாரதா சட்டம்),கருத்தில் கொள்ளப்பட்டு திருமண வயது குறைந்தது பெண்களுக்கு 14 என்றும் ஆண்களுக்கு 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. திரும்பவும் அந்த வயது 18 மற்றும் 21 என்று திருத்தப்பட்டு, அந்த சட்டமே 2006ல் குழந்தை திருமண தடை சட்டம் என்று மாற்றப்பட்டு, அந்த வயது நிர்ணயம் அப்படியே வைக்கப்பட்டது. இதில் தான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்த் ஆலோசனையில் அரசு உள்ளது.

        இந்த சம்மத வயதுக்கான சட்டம் 1929ல் கொண்டுவருவதற்கு முன்,  இது சம்பந்தமாக அமைக்கப்பட்ட சம்மதக் கமிட்டி, 1209 பேர்களை இது குறித்து விசாரித்தது. இதில் 761 பேர் வயதை உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அப்போது தான் பெண்கள் கல்லூரிப்  படிப்பை முடித்து முழுமையான வயது வந்தவர் ஆக கருத முடியும் என நினைத்தனர்.

        இந்தியாவை பொறுத்த வரையில், ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பே பெரும்பாலானவருக்கு பாலியல் ரீதியான தொடர்பு இருக்கும் போது, பெண்களை பொறுத்து அது திருமனத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது, திருமண உறவிற்கு வெளியே அவ்வாறு உறவு கொள்வது சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது, மேலும் இன்று live in உறவுமுறையில் திருமண உறவிற்கு முன் இருக்கும் பலரும், அதை வெளியில் சொல்லாமல் தவிர்த்து வருவதும், சமூகம் அதனை ரசிக்கவில்லை என்பதால் தான்.

        அதே சமயம் கொண்டு வரப்பட உள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி, இந்த 21 திருமண வயதிற்கு முன் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது என சொல்கிறது. சட்டத்திற்கு முரணாக திருமண வயதிற்கு முன் நடத்தப்படும் திருமணங்களை தடுத்து நிறுத்தவே இந்த ஷரத்து கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவெனில், கிராமப்புறங்களில் உறவுகளால் செய்யப்படும் இந்த சட்ட முரணான திருமணங்களில், பெண்ணின் சம்மதம் பொதுவாக பெறப்படுவதில்லை. அந்த திருமணமே செல்லாது என்று ஆகும்போது, அந்த திருமணத்தினால் உறவு கொள்ளும் பெண்ணிற்கு எற்படும் பாதிப்புகளுக்கு, எந்த சட்டத் தீர்வும் கிடைக்காது. ஏற்கெனவே சீக்கிரம் திருமணம் செயதுக்  கொடுத்து, தம் கடமையை கழித்து  விட்ட பெற்றோர்களும், செல்லாத திருமணம் என்பதால் கணவன் என்ற நிலையில் அந்த ஆணும் இல்லாத போது, சம்பந்தப்பட்ட இளம்பெண்களின் வாழ்வில் சொல்லொன்ணா துன்பத்தையே இது கொடுக்கும். சட்டவியலாளர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...