சனி, 12 ஜூன், 2021

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பே அதற்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவை கொலை செய்ய யாருமே ஏன் முயற்சி செய்யவில்லை?

 என்ன ஒரு அஹிம்சாவாதி நீங்கள்!!

அந்த பிரிவினைக்கு அவர் மட்டுமே காரணம் கிடையாது என்று அன்று எல்லோரும் அறிந்ததனால்!!

இந்தியாவின் சுதந்திர வரலாறும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை செய்தால் மட்டுமே சுதந்திரம் தர முடியும் என்ற நிலை உருவான காரணம் பற்றி நீங்கள் படித்ததுண்டா? படித்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை முன் வைத்த முகமது அலி ஜின்னாவிற்கும் நல்லிதயம் உண்டு

நம் நம்பியாரை போல.வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்வில் ஹீரோவாக வாழ்ந்தவர் அவர். அதே தான் ஜின்னாவின் கதையும்!!

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதன் மூலக் காரணம் முஸ்லிம்கள்ன்னு தானே நினைச்சுட்டு இருக்கீங்க?

வெறும் முஸ்லிம்கள் இல்லே. அதுக்கு உணமையான.காரணம் நிலப் பிரபுத்துவம்.

பிரிட்டிஷ்காரங்க நம்மை அவ்ளோ ஈஸியாவா ஆட்சி செஞ்சாங்க?

.உண்மையா அடிமட்ட மக்களோட நெருக்கமா இருந்து அவங்களை பிழிஞ்சி, வரி வசூலிச்சு அதை பிரிட்டிஷ் துரைகளுக்கு கொடுப்பது. அவங்க எல்லைக்குட்பட்ட நிலப் பிரச்சினைசுளை தீர்த்து வைப்பது., பணம் கொடுக்கல் வாங்கல், விவசாயம் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதுன்னு உண்மையான சர்வாதிகார்களா வலம் வந்ததுன்னு பார்த்தா இந்த ஜமீன்தார், ஜாகிதார், சர்தார், கான், நவாப் இப்படிப் பட்டவங்க தான். இவங்க தான் பிரிட்டீஸ்காரங்களை அரசியல் ரீதியாவும் சரி பொருளாதார ரீதியாவும் சப்போர்ட் செஞ்சது. அவங்க சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசு குடுத்த பட்டங்கள் ஏராளம். அதில் ஒண்ணு தான் இந்த "சர்,"பட்டம்.

இந்த பதக்கம், பட்டம் எல்லாம் வாங்கினதிலே 95% ஜமீன்தாரும் நவாபுகளும் தான்.இவங்க இல்லைன்னா ஒரு நாள் கூட பிரிட்டிஷாலே இங்கே இருந்திருக்க முடியாது.

முஸ்லீம் பேரரசு இருக்கும்போது அவங்க முஸ்லிம்களை தானே ஜமீண்தார்களா நியமிச்சிருந்தாங்க. அந்தப்பக்கம் வங்காளம். ராஜஸ்தானில் ராஜ்புத் ஜமீன்தார்கள்.

அவங்க மக்கள் கிட்டேயிருந்து கொள்ளையடிச்சத வச்சு மாட மாளிகை, அரண்மனை,க்விண்டால் கணக்கில் தங்கம், 100 குதிரைகள், யானைகள்ன்னு டாம்பீக வாழ்க்கை வாழ்ந்தங்க.

1920லே சுதந்திர போராட்டம் தீவிரம் அடைஞ்சப்ப, இவங்களுக்கு கவலை வந்துடுச்சு...இன்னும் 10.15 வருஷத்திலே எப்படியும் இங்கிலீஸ்காரங்க நாட்டை விட்டே போகப் போறாங்க.அதுக்கப்புறம் புது அரசு ஆட்சி அமைச்சு…

அதுக்குள்ள கொலைவெறியோட இருக்கிற ஆட்கள் கிட்டேயிருந்து தற்காத்துக்கணும்னு…

காந்தி வெளிப்படையாவே ஜமீன்தார் முறையை எதிர்த்தார்.இதுலே பகத் சிங்லேயிருந்து நேதாஜி வரைக்கும் தீவிரவாதக் கொள்கையுடையவங்க. 1930களிலேயெல்லாம் ஜமீன்தார் முறைக்கு எதிரா குரல் பலமா எழ ஆரம்பிச்சாச்சு..

எப்படியும் காங்கிரஸ் தான் ஆட்சியமைக்கப்போகுது. ஜமீந்தார்களை யாரும் ஆட்சி அமைக்க உதவி செய்யுங்க, வரி வசூலிச்சு குடுங்கன்னு கேட்கப்போறதில்லை. என்ன செய்ய?

அந்த சமயத்தில் முஸ்லீம் ஜமீன்தார்கள் பஞ்சாப, பலுசிஸ்தான்,வங்காளம், சிந்து இந்த இடங்கள்ளே ரொம்ப அதிகாரத்தோட இருந்தாங்க. யாருக்குத் தான் அதை விட மனசு வரும்?

சின்ன நாட்டை மட்டும் பிரிச்சுக் குடுங்கன்னு கேட்டா , அதுவும் அந்த ஜனங்க மட்டும் இவங்க கீழே இருக்கிறோம்னு சொல்லுவங்களா என்ன?

அப்ப வந்த அந்த யோசனை தான் …ரொம்ப பழசு.ஆனா பிரிட்டிஸ்காரன் பயன்படுத்தி ஜெயித்தது.பிரிவினை செய்து ஆள்வது.

அதன்படி முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்க வேண்டியது. அது காங்கிரஸ் கட்சியை எரிச்சல்படுத்தும். ஏற்கெனவே சமயம் பார்த்துக்கிட்டு இருக்கிற பிரிட்டிஸ்காரங்களும் அதுக்கு ஒத்துக்குவங்க.அதிகாரம் அதிகமா இருக்கிற முல்லாகளை தலைமை இடத்திலே வக்கிறதா உறுதி குடுத்துட்டா அந்த ஜனங்களும் சப்போர்ட் கொடுப்பாங்க. மத ரீதியான கலவரம். அதிலே அந்த இடங்களளே இருக்கிற ஹிந்துக்கள், சீக்கியரை அப்புறப்படுத்திட்டா அப்புறம் என்ன தொடர்ந்து அதிகாரத்திலேயே இருக்கலாம்…

இதை முன்னெடுத்து செஞ்சவர் அன்னிக்கு ரொம்பப் பணக்கார நவாபும் வங்காளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வச்சிருந்த நவாப் சர் காஜா சலிமுல்லாஹ் பகதூர்

.1905லே மத ரீதியான வங்காள பிரிவினைக்கு முக்கிய ஆதரவு கொடுத்தவர்.தாக்காவின் நான்காவது நவாப்.அப்போதைய முக்கிய முஸ்லீம் அரசியல்வாதிகளில் ஒருவர்.அவர் தான் டாக்கா பல்கலைக்கழகம்,அசனுல்லா பொறியியல் பள்ளி உருவாக காரணமானவர்.அவர் கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மேலசபை உறுப்பினராக 1906லிருந்து 1907 வரை இருந்தவர்.அதே போல் வங்காள சட்டசபை உறுப்பினராக 1906லிருந்து 1913 வரை இருந்தவர்.1907ல் வங்காளத்தில் முஸ்லீம் லீக்கை தோற்றுவித்து அதன் தலைவராக இருந்தார்.16 அகடோபர்1905 அன்று நடந்த வங்காளப் பிரிவினைக்கு ஆதரவு கொடுத்து நாட்டிலுள்ள முஸ்லீம் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் கட்சி தொடங்க சொல்கிறார். அலிகார் இயக்க தலைவர்கள் அவரை செலவு செய்து கூட்டம் கூட்ட சொல்கிறார்கள்.

அதன்படியே 1906 லே தாக்காவில் ஒரு கல்வி மாநாடு நடக்குது இங்கே👎..

முஸ்லீம் லீக் உருவான அஹ்ஸான் மன்சில்..தாகர் நவாப் குடும்ப அரண்மனை..

சுமார் 2000 பேர் கலந்துக்கொண்ட அந்த மாநாட்டில் உருவானது தான் முஸ்லீம் லீக். அதன் துணைத் தலைவராக அவர தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(AIME 1906)

இரண்டு வருடங்கள் கழித்து, 1908ல் முஸ்லிம்களுக்கு தனி தேர்தல் வேணுன்னு பேச ஆரம்பித்தார்.1909ல் கிழக்கு வங்காள மற்றும் அஸ்ஸாம் பிராந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் ஆனார்.

முக்கிய முஸ்லீம் அரசியல்வாதியான அவர் 1912ல் வங்காளத்தின் இரண்டு மூஸ்லிம் லீக்கினையும் இணைத்து அதன் தலைவர் ஆனார்.அவர நடத்திய கூட்டங்களில் பங்கேற்றவர் அனைவரும் வசதி உள்ளவரே

முஸ்லீம் லீக்கின் செயல் கமிட்டீ லாகூர் கூட்டத்தின் போது…தாடி இல்லாமல் மேற்கத்திய உடையுடன் போஸ் கொடுப்பதை பசுருங்கள்)

ஒரு ஜமிந்தாரின் மகனாகப் பிறந்து இங்கிலாந்தில் படித்து.ஆங்கிலேயர்கள் அணியும் உடை மட்டுமே அணிந்து அந்த வாழ்க்கை முறையை பின்பற்றிய இவரை போன்றவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதில்லை. (ஆனால் ஜின்னாஹ் ஜமிந்தார் இல்லை. அவர் அதற்கு எதிரான கொள்கை கொண்டவர்.)

அதன் பிறகு என்ன செய்தாரா? 1913ல் தனது இளம் வயதிலேயே கல்கத்தாவில் இயற்கை எய்தினார்.

முஸ்லீம் சமுதாய பிரிவினைவாதிகள் எதிர்பார்த்தது போல சிந்து மற்றும் பஞ்சாபில் கலவரம் வெடித்த போது, நமக்கு பாகிஸ்தான் பிரிவினைக்கு ஓத்து கொள்வது தவிர்த்து வேறு வழி இல்லாமல் போனது.

எந்த சாதாரண முஸ்லிமும் இந்த ஓட்டெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.வசதி படைத்தவனே ஓட்டுப்போட்டான். தான் இருக்கும் இந்தியாவில் வசதியோடு இருக்கும்போது ஏன் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூர இடத்திற்கு ஓட வேண்டும்?

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதே புரியும்.அங்கு போனவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே.சிந்தி, பஞ்சாபி, வங்காள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுவர் என்று மூளைச்சாசலவை செய்யப்பட்டனர்.அதை தான் இன்று வரை பாகிஸ்தான் மீடியாவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. அங்கு இருந்த இந்துக்கள் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.துரத்தப்பட்டனர்.

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதே முஸ்லீம் நிலப்பிரபுகளுக்காக. அதனால் தான் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் வருமாறு அவர்கள் கோரவில்லை.

ஜின்னாவிற்கு இஸ்லாம் மதத்தின் மீது அக்கறை இருந்ததா?

Ibn Warraq சொன்னதை படியுங்கள்

"இஸ்ரேல் அந்தக் கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் உருவாக்கியது. மதம் என்கிற பொய்யான காரணத்தைக் கொண்டு , சிந்து, பஞ்சாபி, வங்காள வசதி படைத்தோரால் ப்ரிக்கப்பட்டதே பாகிஸ்தான்.இஸ்ரேல் லோடு ஒப்பிட்டு பேசி பாகிஸ்தான் உருவாக்கத்தை நியாயப்படுத்தாதீர்கள்."

இன்றைய பாகிஸ்தானில் உள்ள 67% விளைநிலங்கள்:“5% விவசாய குடிகளிடம் உள்ளது.( தொழிலார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,பாகிஸ்தான் ) ஜமீன்தார்கள் அரசியலை கட்டுப்படுத்துகின்றனர்.பெரும்பான்மையன அரசியல் தலைவர்கள் ஜமீன்தார்கள் தான். ராணுவத்தில் உயர் பதிவியில் இருப்பதும் அவர்கள் தான்.

பாகிஸ்தான் பிரதமார்களும் முக்கியஸ்தர்களும், அவர்கள் பின்புலமும்

:1] லியாகத் அலி கான் …நவாப்..பஞ்சாபி குடும்பம்..படித்தது ஆக்ஸ்போர்டு யூனிவெர்சிட்டி[1919–1921].

2] சர் காஜா நஜிமுதின்

டாக்கா நவாப் குடும்பம். படித்தது கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி.1934ல் சர் பட்டம் கொடுக்கப்பட்டது.அவர் குடும்பத்திற்கு சொந்தமான 200,000 ஏக்கர் கொண்ட எஸ்டேட்டுகள் கிழக்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் படர்ந்து உள்ளது. ஷில்லாங், அஸ்ஸாம், கொல்கத்தாவில் சொத்துக்கள், வருட வாடகை ,2017 அன்று $ 2,736,497.94. 1960களில், கிழக்கு பாகிஸ்தாநில இருந்த பெரும்பாலான எஸ்டேட்டுகள் பாகிஸ்தானின் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு விட்டன.

3] சாஹிப் ஜாதா முஹம்மது அலி போக்ரா

நவாப் குடும்பம்.."சாஹிப் ஜாதா" என்றால் இளவரசன் என்று பொருள்.

.4] சவுதிரி முஹம்மது அலி

பஞ்சாபி ஜமீந்தார் குடும்பம்.

5] ஹசாய்ன் ஷாஹீத் சுஹராவர்தி..

வசதிபடைத்த வங்காள குடும்பம்…படித்தது ஆக்ஸ்போர்டு யூனிவெர்சிட்டி

.6]இப்ராஹிம் இஸ்மாயீல் ,

குஜராத்தி வசதியான குடும்பத்தின் ஒரே பிள்ளை.

7] சர் பெரோஸ் கான் .

வசதியான பஞ்சாபி ஜமீன்தார் குடும்பம்.1933ல் பிரிட்டீஷிடம் பட்டம் பதக்கம் பெற்றவர்.இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் படித்தார்.

தலைவர் சாஹிபஜாதா ஐஸ்கந்தர் சளி மிர்சா..வங்காள நவசபி குடும்பம்.. கிக் ஜார்ஜ் v சில்வர் ஜூப்ளி மெடல், 1935 பெற்றவர். பிரிட்டிஷ் இந்திய படையில் உயர் பதவி வகித்தார்.

8] Nurul Amin

வசதியான வங்காள அதிகாரியின் மகிஷன்.

9] ஸுலபிகர் அலி பூட்டோ

சிந்தி_பூட்டோ முஸ்லீம் ராஜ்புட் ஜமீந்தார் வசதியான குடும்பம்..ஜினாகத தேவானின் மகன்.அமெரிக்காவிலும் ஆக்சிபோர்டிலும் படித்தவர.

10] முஹம்மத் காண ஜூனிஜு

வசதியும் அதிகாரமும் மிக்க டிந்தி ராஜ்புத் ஜாமீந்தார் குடும்பம். இங்கிலாந்தில் படிப்பு.

11] பெணாசிர் பூட்டோ

சொத்து மதிப்பு 850 மில்லியான் $ . இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் படித்தார்.வசதியான பூட்டோ குடும்பம்

.12] நவாஸ் ஷெரிப்

அறிமுகம் தேவையில்லை. பாகிஸ்தானின் செழுமையானவர்.1.4 பில்லியன் $ சொத்து மதிப்பு.

அவர் அரண்மனை.

பஞ்சடைக்கப்பட்ட சிங்கங்கள்!!

வெளிப்புற தோற்றம்

பாத்ரூம்

உட்புற தோற்றம்

15] ஜெபிருல்லாஹ் காண ஜமாலி

பாலோச்சி ஜமீன்தார் குடும்பம்

.16] சௌதிரி ஷுஜாத் ஹைசைன்

ஜாட் இன ஜமீந்தார் குடும்பம். பாகிஸ்தானின் அதிகாரமுள்ள தொழிலதிபர்..அவருக்கு 50% பங்கு உள்ள இஸ்லாமாபாத், லாகூரில் உள்ள இரண்டு வீடுகளின் மதிப்பு 9.2 மில்லியன் மற்றும் 3.4 மில்லியன்.ரூபாய். அவருக்கு 78 ஏக்கர் விவாசாய் நிலங்கள் ₨. 376,667 மற்றும் 12.5 ஏக்கர் ₨. 4.5 மில்லியன் மசதிப்பு கொண்டதும் உள்ளது. அவருடைய வங்கி கணக்கில் ரூபாய் 53.90 மில்லியன் மற்றும் பங்குகள் ₨. 10.4 மதிப்பு கொண்டதும் உள்ளது

17] ஷவ்கத அஷீஸ்

மதிப்பு : $ 50 மில்லியன்.லண்டனில் வசிக்கிறார்.தொழில் அதிபர்.

.18]யூசுப் ராஜா கிலானி

சிந்தி ஜமீன்தார் குடும்பம்.மதிப்பு $ 0.5 மில்லியன் மூல்டானில் நிலங்கள் ஏக்கச்சக்கம்.

19] ராஜா பர்வீஸ் அஸ்ராபி

சிந்து நிலப்ரபு மகன்.சொத்து மதிப்பு : $ 1.3 மில்லியன்

.20] ஷாஹித் கான் அப்பாஸ்

வசதியான குடும்பம். படித்தது அமெரிக்கா. வேலை செய்தது சவுதி எண்ணெய் நிறுவனத்தில்.சொத்து மதிப்பு : $14 மில்லியன்.பாகிஸ்தானின் பணக்கார பாராளுமன்ற உறுப்பினர்.

21]இம்ரான் அஹ்மதுகான் நீயாஷீ

வசதியான பஷ்டூன் குடும்பம்.இங்கிலாந்தில் படிப்பு.சொத்து மதிப்பு : $ 8.4 மில்லியன்

.இவர் தான் பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர்

இவர் ஒரு நிலப்பிரபு (பிரபு பெண் பால் என்ன?)

தரையில் உட்கார்ந்து இருக்கும் ஆட்கள் அவருடைய வேலையாட்கள்!! அடிமைகளை விட சற்று கூட உரிமைகள் உண்டு..ஆனால் வாய் தான் இல்லை பாவம்…..(ஆயிரத்தில் ஒருவன் பார்க்கலையோ?,😑)

அதனால் பாகிஸ்தான் உருவாக காரணம் இந்த நிலப்பிரபுக்கள், தங்களை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகியோரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே.

உண்மையில் முஹம்மத் அலி ஜின்னாஹ் வெறும் கருவி மட்டுமே..

அவர் வசதியான சொந்த வாழ்க்கையையும் புகழ்பெற்ற உலகத்தை விட்டு வெளியேறி, வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என பலருக்கு ஊக்கமளிப்பவராக இருந்தவர். கூச்ச சுபாவமுள்ளவர், கஞ்சர் எனப் பட்ட அவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவியதில் இருந்து, தனது சொத்துக்களின் பெரும் பங்கை வழங்கிய அந்த காலத்தில் பொதுநலன் விரும்பிய ஒரே தலைவராக திகழ்ந்தார்.

இந்த கல்வி நிறுவனங்களுக்கு சொந்த விருப்பப்படி தனது சொத்துக்களை வழங்கும் முடிவை பாகிஸ்தான் உருவாவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1939 மே 30ஆம் தேதியன்று உயிலாக எழுதி வைத்திருக்கிறார் ஜின்னா.

இதற்கு பிறதுதான் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை மிகவும் வலிமையாக முன்னெடுத்தார் ஜின்னா. தான் நன்கொடை அளிக்கும் ஏ.எம்.யூ பல்கலைக்கழகம் பாகிஸ்தானில் இடம்பெறாது என்பதை அறிந்த பின்னரும், அவர் உயிலை திருத்தவும் இல்லை, மாற்றியமைக்கவும் இல்லை.

சமூக சீர்திருத்தவாதி கோபால கிருஷ்ணா கோகலே. ஜின்னாவின் சத்தியமும், அசாத்திய திறமையும், ஆழ்ந்த ஈடுபாட்டையும் கண்டும் ஹிந்து-முஸ்லீம் சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்வதற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு உகந்தவர் ஜின்னா என்றும் நம்பி, .முஸ்லீம் லீக்கில் இணையுமாறு அறிவுறுத்தினார். கோகலேயின் சொல்லுக்கு இணங்கினார் ஜின்னா. கோகலேவை மிகவும் மதித்த ஜின்னா, 'முஸ்லீம் கோகலே' ஆக விரும்பினார்.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்பு பாலம் ஜின்னா

காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றிய ஜின்னாவின் நம்பிக்கை அப்படியே தொடர்ந்தது, முஸ்லிம் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்க ஜின்னா மறுத்துவிட்டார்.

காங்கிரசிலிருந்து பிரிந்த நீண்ட காலத்திற்கு பிறகும், தேசியத் தலைவராக மதிக்கப்பட்டார் ஜின்னா. நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த அவர், தனது சமூகத்தை முன்நிறுத்த மறுத்துவிட்டார்.

மஹ்மூதாபாத் மன்னர் ஜின்னாவை பற்றிய நினைவுகளை நினைவுகூர்கிறார்: "1926 ல் அவர் 12 வயது சிறுவனாக இருந்தபோது, "நீங்கள் முதலில் முஸ்லீமா அல்லது இந்தியரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளி மாணவனாக இருந்த நான், முதலில் முஸ்லிம், பிறகு இந்தியன் என்று பதில் சொன்னேன். அதை இடைமறித்த ஜின்னா, "என் குழந்தைகளே, முதலில் நீங்கள் இந்தியர்கள், பிறகுதான் முஸ்லிம்கள்" என்று உரத்த குரலில் வலியுறுத்தினார்.

முஸ்லீம் லீக்கில் பிளவு ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, சைமன் கமிஷனை எதிர்ப்பதற்காக பொதுமக்கள் ஆதரவை திரட்டும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

சைமன் கமிஷனுக்கு ஆதரவளித்த முகம்மது ஷபியின் தலைமையின் கீழ் முஸ்லீம் லீக் பிளவுபட்டு, ஒரு தனி கட்சியை அமைத்து, ஹிந்து மகாசபையுடன் கைகோர்த்தது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் எதிர்பார்ப்புகள் தகர்ந்தபோது...

அனைத்து கட்சி மாநாட்டில், ஜின்னாவின் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸை நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியை ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் முறியடித்தபோது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுவதற்கான ஜின்னாவின் நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கிப்போனது.

அதன் பிறகும்கூட மனதளவில் அவர் ஒரு தேசியவாதியாகவே இருந்தார். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருந்து தனிநாடு வேண்டும் என்று கவிஞர் முகமது இக்பால் முன்வைத்த 'பாகிஸ்தான்' கோரிக்கையை கனவு என்றே கூறினார்.

உண்மையில், 1936 வரை, ஜின்னா ஒரு தேசபக்தர் என்பதோடு, தாராளவாத தேசியவாத முஸ்லீம் குழுவை கட்டி எழுப்பமுடியும் என்று நம்பினார். சமுதாயத்தில் இருக்கும் பிற முற்போக்கான சமூகங்களின் மக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து நடக்க முடியும் என்று ஜின்னா நம்பினார்

ஆனால் இரண்டு உலகப் போர்கள், பிரிடாஷாரின் குள்ள நரித்தனம், காங்கிரஸ் கட்சியின் போக்கு, முஸ்லீம் வகுப்புவாதிகளின் தீவிரம் இவையெல்லாம் தான் அவரை இந்தியா பாகிஸ்தான் பிரிவினை கோர வைத்தது.

அவர் முஸ்லீம் சமுதாய மக்களை ஒன்றிணைத்து அவர்கள் உரிமைகளை பெற திசை காட்டியாகத்தான் செயல்பட நினைத்தார். ஆனால் காலம் வேறு விதமாக அவரை அடையாளம் காட்டியது.!!

அவர் இறந்தபோது 'தி ஹிந்து' எழுதிய கட்டுரை இது..

Mohammad Ali Jinnah as ‘The Hindu’ saw him

வரலாறு முக்கியம்னே 😀

1 கருத்து:

Unknown சொன்னது…

எனக்கு இந்த வரலாறு தெரியாது. மிகவும் ஆர்வமாக படித்தேன். நன்று 👌👍👍💐நன்றி 🙏

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...