மதம் மாறாமல் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் மாறாமல் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

நான் ஒரு இந்து பெண். நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நான் கட்டாயமாக மதம் மாற வேண்டுமா? அப்படியே நான் மதம் மாறாமல் இருந்தாலும் என் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

 இப்போது "லவ் ஜிஹாத் " என்ற மத மாற்ற திருமணங்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட உள்ளதாக சில மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.

இவை எந்த அளவிற்கு சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை என்பது ஒரு சந்தேகமே. ஏனென்றால் மேஜர் வயதை எட்டிய இரு எதிர் பாலினர் முழு விருப்பத்துடன் திருமணம் என்னும் பந்தத்தில் இணையும்போது…எந்த சட்ட ரீதியான தடையையும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

அது நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம உறுதி அளித்துள்ள அடிப்படை சுதந்தரம் மற்றும் தனித்தன்மைக்கு எதிரானது.

சரி அந்த சம்மதம் விரும்பித் தான் செய்யப்படுகிறதா இல்லை அந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு செய்தாளா என்பதை வேண்டுமானால் ஆராயலாம்.

இதோ ஹதியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் அம்மா தீவிர இந்து மத நம்பிக்கை கொண்டவள்.அப்பா நாத்திகவாதியான ஆர்மி ஆபிசர் அவள் அகிலாவிலிருந்து ஹதியாவாக மாறி, ஒரு முஸ்லீம் இளைஞனை திருமணம் செய்தபோது அவள் அப்பா அது செல்லாது என்றும் தன் மகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அந்த மதம் மாறி செய்த திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

ஆனால், அதை எதிர்த்து மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட, இந்த விவகாரத்தில் விசாரித்து அறிக்கை தருமாறு தேசிய புலனாய்வு அமைப்பை உத்தரவு இட்டது.ஹதியா தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் மதம் மாறியதாக உறுதியாக கூற, வழக்கு அவருக்கு ஆதரவாக திரும்பியது…

இந்த தீர்ப்பினால் நாடே கொந்தளித்தது.

இந்த லவ் ஜிஹாத் திருமணங்கள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் இது போன்ற வழக்கில் உத்தரவு போட்டது.இதில் பிறப்பில் முஸ்லிமான பெண் ஹிந்துவாக மாறி, ஒரு மாதம் கழித்து ஒரு ஹிந்து ஆணை திருமணம் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவரை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிட்டது.இன்னொரு வழக்கில், இந்து பெண் முஸ்லிமாக மாறியது குறித்து வாக்குமூலம் பதிவு செய்து, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இவர் மதம் மாறினார் என்று முடிவு செய்தது.

அப்படியானால் கேரளா உயர்நீதிமன்றம் ஏன் திருமணம் செல்லாது என்றது?

1995ல் உச்ச நீதிமன்றத்தில் வந்த சரளா முட்கள் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகளுக்காண  விளக்கத்தை  2000ம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில் கொடுத்தது.

        அந்த வழக்கில், ஒரு இந்து , இரண்டாம் திருமணம் செய்தால் இ.த.ச.பிரிவு 494 பிரிவின் கீழ் குற்றவாளி ஆவதை தவிர்க்கும் பொருட்டு, இஸ்லாம் மதம் மாறி திருமணம் செய்தபோது, அவ்வாறு மதம் மாறுவதாலேயே முன்னர் செய்த திருமணம் ரத்தாகாது என தீர்ப்பு அளித்தது.

மதம் மாறாமல் திருமணம் செய்தால் விளைவுகள் என்ன?

ஒரு ஹிந்து பெண் மதம் மாறாமலேயே ஒரு முஸ்லீம் ஆணை திருமணம் செய்யலாம்.சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்யலாம்.

ஆனால் அந்த முஸ்லீம் கணவனின் சொத்துக்களை பொறுத்து அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது.

அவள் தன் கணவனிடம் இருந்து "மெஹர் "எனப்படும் பணம் பெறலாம். இந்த மெஹர் பணம் திருமனத்தின் போது கணவன் மனைவிக்கு அன்பளிப்பாக கொடுக்க உறுதி கூறுவது .அதற்கு எந்த விதிமுறைகள் கிடையாது.இரண்டு தரப்பும் பேசி முடிவு செய்வது.

ஆனால் அந்த பெண் இந்த மதம் மாறுவதால், அவள் பிறந்த குடும்பத்தில் சொத்துரிமை எதுவும் போகாது.

அதே சமயம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் வாரிசாக உரிமை கோரலாம்.இதில் கவணிக்க வேண்டிய விஷயம் மற்ற குழந்தைகள் பிறப்பினாலேயே மற்ற உறவினர்களின் சொத்தில் தனிப்பட்ட உரிமை பெறும்போது, இவர்களுக்கு அது கிடையாது.

தனக்கு பிடித்த மத நம்பிக்கை கொள்வது, தன் விருப்பப்படியே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது... இவையெல்லாம் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள். அதை தேர்ந்தெடுக்கும் பக்குவம் வரும் போது உங்கள் குழந்தைகள் என்று இல்லை…யாரும் பின்பற்றலாம்.

அதை எந்த சட்டம் போட்டும் தடுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர் மனப்பூர்வமாகத் தான் செய்தாரா என்று உறுதி செய்யலாம்.

ஆனால் மனதில் உறுதி கொண்டு தன் பெற்றோரையே துறக்கத் துணிந்தவருக்கு அது ஒன்றும் கடினம் இல்லையே….

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...