அறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

நீதி என்றால் என்ன?

 


 நீதி இதுன்னு தெரியறதுக்கு முன்னாலே எது அநீதின்னு சொல்ல முடிஞ்சதுன்னா அதற்கு எதிரானது நீதின்னு சுலபமா சொல்லிடலாம்.

அப்ப சரி…தெரிந்த கேள்வி தான் ..

அநீதி என்றால் என்ன?

நம்மில் யார் தான் அநீதியை பார்த்ததில்லை அல்லது அநீதிக்கு ஆளானதில்லை? சொல்லப்போனால் நாம் அனைவருமே நியாயமாகவும் பாதகமில்லாமலும் நடத்தப்பட ஏங்குகிறோம். இதில் ஆச்ரியம் இல்லை, .

எனக்கு சரியில்லாதது, எனக்கு அநீதியாக தான் தெரியும். ஆனால் சமூகமாக வாழ , தனி நபரின் சுகத்தை பொது நலனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியெனில் சமூகத்திற்கு எதிரானது தானே அநீதி…அப்படியெனில்,

  • சமூகத்திற்கு நல்லது, ஏற்புடையது தான் நீதி.

நிறைய பேர் மற்றவருக்கு நியாயம் பேச வருவர்  .ஆனால் அதுவே தனக்கு என்று வரும் போது, வேறு விதமாக செயல்படுவர்,🤣

அதே போல சிலருக்கு, யாருக்கு நியாயம் சொல்கிறோம் என்பது பொறுத்தும் மாறுபடும். இதெல்லாம் அநீதி.

அப்படியென்றால் எது நீதி?

  • சொல்பவர் யார், சொல்லப்படுவது யாருக்கு என்றில்லாமல் எல்லோரும் பொதுவாக ஏற்றுக்கொள்வது தான் நீதி.

அதனால்தான் நீதி தேவதையின் கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டுள்ளது

  • எல்லோரும் சமம் என்று பாரப்பதே நீதி. ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும்.

அதே சமயம் சமமில்லாதவர்களை சமமாகவும், சமமானவர்களை சமமில்லாமலும் நடத்துவது அநீதி.

இதை நிலை நாட்டத்தான், ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது.

ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகத் தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன.. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ அவன் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

நீதி வேறு.தர்மம் வேறா?

ஒரு குருவிடம் சீடராக இருந்த மாணவர்கள் குருகுல வாசம் முடிந்து, கிளம்பும்போது 'தர்மத்தைக் காத்து நீதி வழி நடந்திடுங்கள்' என ஆசியளித்தார். 'தர்மம் வேறு, நீதி வேறா?' என அவர்களுக்குச் சந்தேகம் வந்தது. அதை குருவிடம் கூறி விளக்கம் கேட்டார்கள்.

'நீதி என்பது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறும். உதாரணமாக முன் விரோதத்தால் சண்டையிட்டு ஒருவனைக் கொல்வது கொலை. ஆனால், எதிரி நாட்டின் வீரர்களோடு சண்டையிட்டுக் கொல்வது கொலையல்ல, வீரம். இப்படி நீதி மாறக் கூடியது. எனவே அதைக் காத்திட முடியாது.

ஆனால், தர்மம் மாறாதது அதனைக் காப்பாற்றுவது அவசியம், என தெளிவு படுத்தினார்.

இந்த நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவும் தான் , ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17ம் நாள் சர்வதேச நீதி நாள் என்று கொண்டாடப்படுகிறது.

  • இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை.
  • நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
  • நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் நாம் உறுதி ஏற்கும் அதே சமயம், நம்முள்ளும். நீதி இருக்க வேண்டுமே… அதற்கு என்ன செய்ய?

எண்ணங்கள் தானே செயலாகி, ஒருவனை நீதிமானாக்குகிறது.

அந்த எண்ணங்களில் என்ன இருக்க வேண்டும்?

சமாதானமும் சகிப்புத்தன்மையும்…

இந்த எண்ணங்கள் சிறுவயதிலேயே பசு மரத்தாணி போல நெஞ்சில் பதியவேணடும் என்று தான், அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்களை ஆரம்பப் பள்ளிகளில், பாடமாக வைத்து, நமக்கு அதன் அர்த்தத்தை விளக்கிச் சொல்வார்கள்.. இது, சிறு வயதிலேயே மனதில் பதிந்து, நல் வழிப்படுத்த உதவும்.

இந்த, ஆத்திச்சூடி'யின் முதல் வாக்கியமே, அறஞ்செய விரும்பு' என்பதுதான்

  • அறம் என்றால் தர்மம். தன்னிடமுள்ள வற்றில் ஒரு பகுதியையாவது தேவையுள்ளவருக்கு தர வேண்டும் என்பது இதன் பொருள். இதனால், மற்றவருக்கு உதவும் ஈகை என்ற உயர்வான குணம் உண்டாகிறது.
  • இதே போல ஆத்திச்சூடியில், அவ்வியம் பேசேல்' என்ற ஒரு நீதியும் உள்ளது. அவ்வியம் என்றால் பொறாமை. பொறாமை கொண்ட மனிதன், பிறரைப் பற்றி
    • பொய்யாக எதையாவது கதையை கிளப்பி விடுவான்.
    • ஏளனம் செய்வான்
    • கடுமையான சொற்களால் தரக்குறைவாக பேசுவான்
    • பயனில்லாத சொற்களை சொல்லிக் கொண்டிருப்பான்.

இந்த நான்கும் நால்வகை குற்றங்களாகும்.

பிறருடைய செம்மையான வாழ்க்கையை கண்டு, பொறாமை ஏற்படுகிறது.

தானும் அப்படி ஒரு உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்ற முயற்சியில்லாமல், , உயர்வாக உள்ளவனைக் கண்டு பொறாமைப்பட்டு ஒரு பயனும் கிடையாது. ஆனால் நம் மனம் தான் புழுங்கி, ஒடுங்கி போகும்.

ஆனால், முயற்சி செய்தால் நம்மாலும். மேலுக்கு வர முடியும். அப்போது, மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்படும்.

இது தான் இந்த நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.

அதனால், ..

நீதியை நாள் தோறும் பழகலாம் வாங்க !!


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...