சனி, 12 ஜூன், 2021

எப்படி என் தாத்தா பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை மாற்ற முடியும்? என் பெயரில் உயில் ஒன்றை வைத்துவிட்டு அவர் காலமானார். ஆனால் என் அத்தை அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது உயிலை மாற்ற முடியுமானால் அதற்க்கு செயல்முறை என்ன?

 உங்கள் கேள்வியில் முழு விவரம் இல்லை. வழக்கு முடியும்போது எந்த மாதிரி உயிலை செயல்படுத்துவது என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறன்.

உயில் எழுதியது செல்லும், எனத் தீர்ப்பு வருமேயானால், உடண் உயிலில் சொன்ன ஷரத்துகளின்படி, அந்த சொத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த உயிலை நிறைவேற்றுபவர் என்று யாரையேனும் உயிலில் நியமித்திருந்தால், அவர் அந்த உயிலை செயல்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இல்லையாயின், அந்த சொத்தை பெறும் நபரே, அதற்கான வேலையை செய்யலாம்.

அல்லது உயில் செல்லாது என்று தீர்ப்பு வரின், நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்[பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...