சனி, 12 ஜூன், 2021

வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளுக்கு ஊடகங்களைப் பயன்படுத்துவதை அறிவுறுத்தலாமா? கூடாதா? ஏன்?

 இது சம்பந்தமான செய்தி ஒன்றை இன்று தான் படித்தேன்.

பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அவர்கள், வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளபோது, நீதிபதிகள் சாதகமான தீர்ப்பு எழுத அழுத்தம் கொடுக்கும் வகையில் மீடியாக்களில் செய்திகள் வருகின்றன என்றும் அவையும் நீதிமன்ற அவமதிப்பு தான் என்று குறிப்பிட்டார்..

Prashant Bhushan contempt case: Attorney General asks SC to look into media publishing material pivotal to sub judice cases

ஒரு பிணை மனு விசாரணைக்கு வரும் தினம், குற்றவாளிக்கு எதிரான செய்தி, அதுவும் ஆவண நகல்களின் படத்தோடு வெளியிடப்படுவதால் குற்றவாளிகளின் உரிமைகள் பாதிக்கப் படுகின்றன என்று தெரிவித்தார்.பார்த்துகோங்க…

அரசாங்க வக்கீல் நியாயமன்னு பட்டால், குற்றவாளிக்கு ஆதரவாவும் பேசுவார்ன்னு…

Prashant Bhushan contempt case: Attorney General asks SC to look into media publishing material pivotal to sub judice cases

மேலும் ரீ பபலிக் டிவியும் இந்தியா டுடே டிவியும் TRP ரேட்டிங்கிற்காக பணம் கொடுத்தன என்றும் குற்ற வழக்கு விசாரணையில் சாதகமான முடிவு எடுக்க கட்டாயப்படுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நமக்கே தெரியும்..மும்பை உயர்நீதிமன்றம் சுஷாந்த் வழக்கில் எந்த போலீசார் விசாரணை செய்யவேண்டும் என விவாதம் நடந்து தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டபோது, எதிர்பார்த்த தீர்ப்பு வர, பொதுமக்கள் ட்விட்டர் மற்றும் மற்ற செயலி மூலமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சொல்லி பெரும்பான்மையோர் விரும்பும் நிலைப்பாடைவெளிப்படுத்தி அதை ஒத்த தீர்ப்பு வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டது இல்லையா?

அதே போல மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற பதிவாளர் குறித்து தவறான வழக்கு போட்டதோடு ம்ட்டுமல்லாமல், விசாரணைக்கு வரும் முன்பே ஊடகத்தில் விளம்பரப்படுத்தியதற்காக வழக்கறிஞரான மனுதாரர் மீது குற்ற வழக்கு தொடரவும் ரூபாய் 5 லட்சம் அபராதமும் போட்டுள்ளது.

எனவே காட்சிகளை காரணங்களை நீதிமன்றத்திலேயே தெரிவிப்பது நல்லது..

அதனால் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஊடகஙகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்பதே என் கருத்து.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...