மக்கள் தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் பற்றி சில குறிப்புகள் எழுத முடியுமா?

 மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பணிக் காலத்தின் சிறப்பை நினைவு கூறா விட்டால் நாம் மன்னிக்கப் படமாட்டோம்.

குற்றவாளி என்று நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றதாசலும் உறுதி செய்யப்பட்டு விட்டால், அவர்களின் கடைசி புகலிடம் ஜனாதிபதியிடம் கருணை மனு அளிப்பது மட்டுமே. இதில் நமது ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் அளவிடமுடியாதது.

மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள பதவி காலத்தில் பரிசீலனை செய்து முடிவு செய்த கருணை மனுக்கள், அதற்கு முன்பு இருந்த நான்கு ஜனாதிபதிகள் முடிவு செய்த ஒட்டுமொத்த மனுக்களை விட அதிகமானது. அவருடைய ஐந்து வருட ஜனாதிபதி பணிக் காலத்தில் 34 கருணை மனுக்களை பரிசீலனை செய்துள்ளார். இதில் 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட யாகூப் மேனனின் இரண்டு கருணை மனுக்களை கணக்கில் கொண்டால் 35 கருணை மனுக்களை பரிசீலனை செய்துள்ளார்!!

இதில் அவர் 31 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதில் முக்கியமானது அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோருடையது.

அவர் பதவி முடிவடையும் போது ஒரு மனுவையும் தீர்க்காமல் விடவில்லை.

பட மூலம் Google Images

இவர் நாட்டின் இந்த உயரிய பதவிக்கு வரும் முன்னர், பல முறை இந்தியப் பிரதமர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போதெல்லாம், அவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை.

முக்கியமாக நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவருக்கு மிக நெருக்கமாகவும், நம்பிக்கைக்கு உகந்தவராகவும் இருந்த திரு பிரணாப் முகர்ஜி தான் அக்கட்சியின் தலைவராகவோ அல்லது மந்திரிசபையை தலைமை வகிக்க தேர்ந்தெடுக்கப்படுவார் என பத்திரிக்கைகள் எழுதின.

ஆனால் என்ன காரனத்தினாளோ அவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை!!

அதேபோல முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகும் அவ்வாறே எதிர்பார்க்கப்பட்டது.. அப்போதும் இல்லை!!

2009 பொதுத் தேர்தலில் காங்கரஸ் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றபோதும், சீனியரான இவரே அக்கட்சியின் தலைவர்ரவார் என ஆருடம் கூறப்பட்டது. அப்போதும் இல்லை.

2012 ல் ஒரு வழியாக, அவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பார்த்தற்கு .

எதிர்பார்த்ததற்கு மாறாக, அவருடைய பதவி காலத்தில், எந்தவித அரசியல் கலப்பு இல்லாமல், பாகுபாடு இல்லாமல், பணி செய்து, நல்ல ஜனாதிபதி என்ற பெயரை பெற்றார்!!

அவர் ஒய்வு காலத்தின்போதும், மனசாட்சியுள்ள இந்தியராக நடந்துக்கொண்டார்.

அவருடைய இந்தக் குணத்தினாலேயே நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' 2019 ;ல் வழங்கப்பட்டது.

அவருடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த நாட்டின் உயரிய பதவியும் பட்டமும்.

[1] Pranab Mukherjee: perpetual PM-in-waiting & master of ironies

[2] Fearless Pranab Mukherjee: Congress’s troubleshooter whose PM dream could never be fulfilled

[3] Pranab Mukherjee — ‘man who knew too much’ but was a Rahul Dravid-like 'wall' for Congress

[4] Troubleshooting minister to popular President: Pranab Mukherjee in politics

[5] Pranab Mukherjee at RSS HQ | ‘Intolerance will only dilute our national identity’

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா

திருத்தம்

கருத்துப் பகுதியில், பிரணாப் முகர்ஜி மக்கள் ஜானாதிபதி அல்ல என்றும் அவரே அப்துல் கலாம் ஐயாவை தான் அப்படி குறிப்பிடுகிறார் என்று சொல்லியுள்ளனர். அப்துல் கலாம் ஐயா மக்கள் ஜனாதிபதி எனபதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதேசமயம், ஒரு கட்சியில் நெடுங்காலம் இருந்துவிட்டு நாட்டின் உயரிய பதவிக்கு போகும் போது, அதற்கு முன்பிருந்தவர்கள் எல்லாம், அந்தக் கட்சியின் சார்புடன் தான் பணி செய்துள்ளனர்.

ஆனால் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள், பதவி காலத்தில், அது ஆளுன் கட்சியோ எதிர்கட்சியோ, யாருக்கு எதிராக இருந்தாலும் சரி, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எந்த செயலும் செய்ததில்லை. மக்கள் பிரநிதிநிதித்துவ சட்டம், 1951ல், தண்டனை பெற்ற சட்டமன்ற / பாராளுமன்ற உறுபினர்களை காப்பாற்றுவதற்காக 2013 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டார்.. அதே போல பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாமலேயே திரும்பத் திரும்ப அவருக்கு அனுப்பட்ட ஒரு மசோதாவிற்காக, அரசுக்கு அறிவிப்பு அனுப்பினார். அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டு பிரதிகள் அவருடைய சூட்கேசில் எப்போதும் இருக்கும். அந்த அளவிற்கு அதை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

அதேபோலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இயங்குவதை அந்த மாநில கவர்னர்கள் தடுக்கும் வண்ணம் செயல்படுவதையும் அவர் அனுமதிக்கவில்லை. ஒரு முறை அவவாறு நடப்பதை கேள்விப்பட்டு, வடக் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு அமைச்சரை கூப்பிட்டு அனுப்பி அவர் விசாரித்ததன் பேரில் அந்த மாநில கார்னர் பதவி விலகவும் நேர்ந்தது.

இவை எல்லாம் தான் அவரையும் மக்கள் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவதன் காரணம்!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...