படிமப்புரவு அவதூறு பேசாத கூகிள்
இந்த செய்தியை பார்த்த நிறைய பேருக்கு இதேபோல தமிழ்நாட்டிலும் உண்டான்னு கேள்வி எழுந்துருக்கு.
இருக்கு…இருக்கு இங்கேயும் இருக்கு.
ஒவ்வொரு காவல் நிலயத்திலும் ஒரு சைபர் குற்ற பிரிவு உள்ளது. இதன் மூலம் வழக்கு பதியப்படும்.
சமீபத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளருக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பிய பேஸ்புக் பதிவு போட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுக்கக்கூட மறுத்துள்ளது உங்களுக்கு ஞாபகம். இருக்கிறதா?
இங்குள்ள வலைத்தளங்களில் கோரா உட்பட தனிநபர்களின் மரியாதையைக் குலைக்கும் வகையில் போலியாக செய்திகளை சித்தரித்து வெளியிடுதல், வெறுப்புப்பேச்சு, பொய்யான செய்திகளை பரப்புதல் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன…
அதிலும் அவதூறு என்றால் என்ன என்பதிலேயே நிறைய பேருக்கு குழப்பம் உள்ளது.
என்ன செய்வது…கல்வி வேறு அறிவு வேறில்லையா?
அதிகம் படித்துவிட்டாலே அறிவு மிகுந்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர்.
அது தவறு. உள்ளே போவது கல்வி என்றால் வெளியே வருவது தான் அறிவு…
சரி எது அவதூறு இல்லை?
- வலைத் தளத்தில் பொதுப் பிரச்சினை பற்றி ஒருவர் சொல்லும் கருத்துக்கு மாற்று கருத்து சொல்வது அவதூறு கிடையாது.
- கருத்து சுதந்திரம் என்பது மாற்றுக்கருத்து சொல்பவருக்கும் உண்டு.
- அதை விட்டு விட்டு, " நீ நான் சொன்னதற்கு மாற்றாக சொன்னாயா..... உன்னை பற்றி தனிப்பட்டு பொய்யாக செய்தி சொல்கிறேன் பார் "என்றால் அது அவதூறு.
- அதே போல அரசின் கொள்கைகளை, நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிபதிகள் குறித்து இஷ்டத்துக்கு விமர்சிப்பது, இதெல்லாம் அவதூறு.
- இன்னொன்று…அவர் இப்படி கருத்து சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று சொல்வதும் அவதூரை பரப்பிய குற்றமாகும்.பொறுப்பு துரப்பு என்று போடுவதும் காப்பாற்றாது அதே போல கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன் என்பதும் காப்பாற்றாது.
- கேட்டவருக்கு என்ன உள்நோக்கம் உள்ளதோ, அது இவருக்கும் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும்.
- அந்த பதிவை பகிர்வது, பார்வேர்டு செய்வதும் அவதூறே.
கோராவிலே அதிகமாக தனி நபர் தாக்குதலை பார்க்கிறேன்.ஒருவர் சார்ந்த மதம், ஜாதி, தொழில் குறித்த அவதூறு அதிகம் உள்ளது. அப்படி செய்பவர் யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அது எந்த ஊராயிருந்தால் என்ன…ip. address காட்டி கொடுத்து விடும்…
5 ஆண்டு சிறைத்தண்டனை யாருக்கும் விதிக்கப்பட்டதா? என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?அந்த விவரம் தற்போது இல்லை..வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன.